Sunday, January 18, 2009

விரதம் ஏன் அவசியமாகிறது?

பொழுது விடிஞ்சு பொழுது போயின்னு
ஓடி ஓடி வேலை செய்யற நாம வார
இறுதிக்காக காத்திருப்போம். எதுக்கு?
ஓய்வெடுப்பதற்காகத்தானே!

ஓய்வு நமக்கு களைப்பை நீக்கி,
புது தெம்பைத் தருகிறது. நம்ம
வயிற்றுக்கு ஒரு நாள் ஓய்வு அவசியம்.


நம்ம முன்னோர்கள் எதையும் அவசியமில்லாம
சொல்லிடவில்லை. கடவுள் பக்தி என்று
வைத்தால் பயந்து கொண்டு செய்வோம் என்றே
விரத தினங்களை வைத்தார்கள்.

விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்
என்ன?

விரதம் உண்ணாவிரதம், மொளன விரதம்
அப்படின்னு சில வகைகள் பெரியவங்க
சொல்லியிருக்காங்க.

விரதம் மேற்கொள்வதால் நமக்கு வைராக்யம்
(மன கட்டுப்பாடு) ஏற்படுகிறது.

உண்ணா நோன்பால் வயிறு சுத்தமாகிறது.

நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும்
டாக்‌ஷின்களை வெளியேற்ற விரதம்
உதவுகிறது.

என் அம்மம்மா அடிக்கடி
சொல்லும் வாக்கியம் “லங்கனம் பரம ஒளஷதம்”

உண்ணும் உணவு மருந்தாவது போல்
சில சமயங்களில் உண்ணாமல் இருப்பதும்
மருந்தாகிறது.

அஜீரணத்திற்கு மருந்து எடுத்துக்கொள்வதற்கு
பதில் வயிற்றை காயப்போட்டால் போதும்.

எப்படி விரதம் மேற்கொள்ளலாம்?

3 வேளை உணவை தவிர்ப்பது,
2 வேளை உணவை தவிர்ப்பது,
1 வேளை உணவை தவிர்ப்பது இப்படி
தங்களால் இயன்ற முறையில் செய்யலாம்.

சிலருக்கு வயிற்றைக் காயப் போடவே
கூடாது.(அதிகம் விரதம் இருந்தாலும்
வயிற்றுப்புண் வரும்)

ஒரு நாள் முழுவதும் திரவ ஆகாரமாக
எடுத்துக்கொள்ளலாம். காபி/டீ
குறைவாக எடுத்துக்கொண்டு
பழ ஜூஸ்கள்,கஞ்சி, சூப் வகைகள் குடிக்கலாம்.

வெறும் பழங்களை மட்டுமே உட்கொண்டும்
விரதம் இருக்கலாம்.

GENERAL MOTORS கம்பெனி நிர்வாகம்
தனது ஊழியர்களுக்காக தயாரித்த
டயட் சார்ட் மிகப் பிரபலம். இதுவும்
டிடாக்‌சின் செய்ய உதவுவதாக
கேள்விப்பட்டிருக்கிறேன்.


General Motors: Weight Loss Diet Program

வெஜிடேரியன்களுக்கான ஜீ.எம் டயட்
சார்ட்.

7 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல விடயம் நல்ல பகிர்வு

நட்புடன் ஜமால் said...
This comment has been removed by a blog administrator.
pudugaithendral said...

ஞாயிற்றுக்கிழமை பதிவு போட்டாக்கூட மீ த பர்ஸ்டாக வரும் ஜமாலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

நட்புடன் ஜமால் said...

பாராட்டுக்கு நன்றிங்க.

Anonymous said...

மீ த செகண்டு

நாம் நமக்கு ஓய்வு குடுப்பது போல், உள்ளுப்புகளுக்கும் எப்பவாவது ஓய்வு குடுக்கணுமாம். அப்பத்தான் ரொம்ப நாள் உழைக்குமாம்.

கணினி தேசம் said...

//வெஜிடேரியன்களுக்கான ஜீ.எம் டயட்
சார்ட்.//

எனக்கு விரதம் இருக்க விருப்பம்..
ஒருமுறை இதே ஜி.எம் சார்ட் தான்...நல்லா திட்டமெல்லாம்போட்டு...ஆரம்பித்த முதல் நாளே முடித்துக் கொண்டேன் (அவ்வ்வ்வ்வ்வ்..முடியலை). கொஞ்ச நாள் கழித்து திரும்பவும் முயற்சி செய்யவேண்டும்.


நல்ல பதிவு நன்றி.

அ.மு.செய்யது said...

நல்ல பயனுள்ள பதிவு....

வருடம் முழுவதும் இயங்கும் உடற்சக்கரங்களுக்கு விரதம் தான் ஓய்வளிக்கிறது.