Tuesday, January 20, 2009

சர்ச்கேட், ஃப்ளோரா ஃபவுண்டைன், ஸ்டாக் எக்சேச்ஞ் கட்டிடம்...

எனது ஞாபக அடுக்குகளில் மும்பைக்கு ப்ரத்யேக
இடமுண்டு.

மும்பை பற்றிய என் முந்தை பதிவு:
அம்ச்சி மும்பை:

அன்றாடம் வசாய் டு சர்ச் கேட் வரை என் பயணம்.

வசாய் டு சர்ச்கேட்/ சர்ச்கேட் டு வசாய் லோக்க்கல்
டிரையின் பயணம் எத்தனை இனிமையானதோ
அதே இனிமை சர்ச்கேட்டு - மும்பை சாமாச்சார்
மார்க் வரை.



நான் வேலை பார்த்த அலுவலகம் இருந்தது
மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டிடத்திற்கு எதிரில்.


சர்ச்கேட்டிலிருந்து ஃப்ளோரா பவுண்டன் வந்து
அங்கிருந்து நேராக (டாடா ஹவு்ஸா?
இந்தியா ஹவுஸா? ஞாபகம் இல்லை)
அதைத் தாண்டி வலது பக்கம் திரும்பினால்
அந்த ப்ராம்மாண்ட கட்டிடம்.



1993 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு
சம்பவத்தின் நிழல் கூட இல்லாமல்
புது வடிவத்தோடு இருக்கும் அந்தக்
கட்டிடத்தை பார்க்கும்போதெல்லாம்
பெருமையாக இருக்கும்.



மாலை 6 மணிக்கு அலுவலகம் முடிந்ததும்
அதே பாதையில் நடந்து சர்ச்கேட் சென்று லோக்கல்
ட்ரையின் பிடிக்க வேண்டும். 6.38 டிரையின்
பிடித்தால் வீடு சேர 8 மணி ஆகிவிடும்.

அப்போதெல்லாம் பசி தாங்க மாட்டேன்.
ஃப்ளோரா பவுண்டனுக்கு எதிரில் ஒரு கடையில்
வடா பாவ் நன்றாக இருக்கும். அது அல்லது
சர்ச் கேட் ஸ்டேஷனுக்கு வெளிப்புறம்
(மரைன் டிரைவ் செல்லும் பக்கம்) கையேந்தி
பவனில் நம் தமிழ் நாட்டுக்காரர்கள் தோசைக்
கடை வைத்திருப்பார்கள். உடன் தோழிகள்
யாரும் இருந்தால் அங்கே சென்று பட்டர்
தோசை சாப்பிட பிடிக்கும்.

தோழிகள் உடனில்லை என்றால்
சர்ச்கேட் ஷ்டேஷன் சப்வேக்கு முன்னால்
ஒருவர் மிக சுத்தமாக பேல்பூரி, தஹிபூரி,
எல்லாம் விற்பார். ஒரு ப்ளேட் 5 ரூபாய்.

இப்படி ஏதாவது ஒன்று சாப்பிட்டால்தான்
வீடு செல்லும் வரை தாங்கும்.

சில நேரம் எனக்காக என் ட்ரையின்
தோழிகள் பார்சலுடன் காத்திருப்பார்கள்!!!

சர்ச்கேட்டிலிருந்து ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டமாக பயணம். தாதரில்
சில தோழிகள் ஏறுவார்கள். “இதோ
உனக்காக கொண்டுவந்தேன்” என்று
ஏதாவது கொண்டுவருவார்கள்.

வசாய் ஷ்டேஷனிலிருந்து வீட்டுக்கு
செல்ல 15 நிமிடம் ஆகும். வீட்டிலிருந்து
ஷ்டேஷன் வர 2 ரூபாய் தான். அதுவே
ஷ்டேஷனிலிருந்து வீட்டுக்கு போக
7 ரூபாய்!!! கட்டுப்படியாகுமா???
நடராஜ சர்வீஸ்தான். வழியில்
அடுத்தநாளைக்குத் தேவையான காய்கறிகளை
வாங்கிக்கொண்டு போய் அம்மம்மாவிடம்
கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு
சின்ன மாமாவிடம்” வாங்கிகட்டிக்கொள்வேன்!” :)

காலையில் முதலில் கிளம்புவது சின்னமாமா,
அடுத்து நான், கடைசியாக பெரியமாமா கிளம்புவார்.

இரவு வீடு திரும்பும் போதும் சின்ன மாமாதான்
முதலில் வருவார். (புதன் கிழமைகளில் மட்டும்
கராத்தே வகுப்பெடுக்க அந்தேரி( ஒரு இடம்)
தாத்தாவீட்டிற்கு செல்வார்) எனக்கப்புறம் பெரிய
மாமா வருவார். 3வரும் அதே வழியில்தான்
வருவோம். ஆனால் நான் மட்டும் காய்கறி
வாங்கி வருவேன் என்று அம்மம்மா பாராட்டுவார்.
(பெரிய மாமா கம்பெனி செக்ரட்டரி ஆதலால்
தாமதமாக வரும் வாய்ப்பு இருப்பதால்
அவருக்கு எக்ஸம்ப்ஷன். இந்த மாமாவைப்
பற்றி இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் பதிவு
வரப்போகுது)

புயலோ, மழையோ வேற எந்த
நிகழ்வோ மும்பையின் வாழ்வை
முழுவதுமாக ஸ்தம்பிக்கச் செய்யாது.

அந்த நகரத்தைப் பார்த்துதான் எழுந்து
நிற்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன்.

மும்பையைவிட்டு வந்து 14 வருடங்கள்
ஆகிவிட்டன. ஆனாலும் மும்பை என்றால்
மனதுக்குள் சந்தோஷ கொசுவத்திதான்,
ஊ லல்லா பாட்டுதான்!!!

மும்பைக்கடுத்து என்னை மிகவும்
கவர்ந்த, பாதித்த இடங்கள் ஹைதையும்
கொழும்புவும்தான்.

19 comments:

நட்புடன் ஜமால் said...

மும்பை போனதேயில்லை

உங்கள் மூலியமாவது தெரிஞ்சிக்க வேண்டியது தான் ...

அ.மு.செய்யது said...

//அந்த நகரத்தைப் பார்த்துதான் எழுந்து
நிற்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன்.
//

//அந்த நகரத்தைப் பார்த்துதான் எழுந்து
நிற்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன்.
//

உணர்வுப் பூர்வமான வரிகள்.

அருமையான பதிவு.

நட்புடன் ஜமால் said...

\\சில நேரம் எனக்காக என் ட்ரையின்
தோழிகள் பார்சலுடன் காத்திருப்பார்கள்!!!\\

ரொம்ப நல்லவங்க ...

நட்புடன் ஜமால் said...

\\காய்கறிகளை
வாங்கிக்கொண்டு போய் அம்மம்மாவிடம்
கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு
சின்ன மாமாவிடம்” வாங்கிகட்டிக்கொள்வேன்!\\


ஹா ஹா ஹா ...

நட்புடன் ஜமால் said...

\\கராத்தே வகுப்பெடுக்க அந்தேரி\\

அம்மாடியோவ் ...

நட்புடன் ஜமால் said...

\\ஹைதையும்
கொழும்புவும்தான்.\\

கொழும்புமா ...

சீக்கிரம் சுத்துங்க (கொசு வ ...)

புதுகை.அப்துல்லா said...

//மும்பைக்கடுத்து என்னை மிகவும்
கவர்ந்த, பாதித்த இடங்கள் ஹைதையும்
கொழும்புவும்தான்.
//

யக்கா....மும்பைக்கு அப்புறம் நீங்க போனதே அந்த ரெண்டு ஊரு மட்டும்தான??
:))))))

pudugaithendral said...

மும்பை போனதேயில்லை //


அப்படியா?

pudugaithendral said...

உணர்வுப் பூர்வமான வரிகள்.

அருமையான பதிவு.//

நன்றி செய்யது.

pudugaithendral said...

ரொம்ப நல்லவங்க ...//

ரொம்பவேன்னும் சொல்லலாம் ஜமால்.

கொழும்புமா ...

சீக்கிரம் சுத்துங்க (கொசு வ ...)//

கொழும்பைப் பத்தி சுத்தி கண்டன மெயில்கள் வாங்கி அப்புறமா சுத்தறதை நிப்பாட்டினேன்.

:(((

புதுகை.அப்துல்லா said...

//கொழும்பைப் பத்தி சுத்தி கண்டன மெயில்கள் வாங்கி அப்புறமா சுத்தறதை நிப்பாட்டினேன்.

//

ஜமால் புதுசுனால அந்த அரசியல்ல நீங்க மாட்டி படாய்பட்டது அவருக்கு தெரியாது :))

pudugaithendral said...

மும்பைக்கு அப்புறம் நீங்க போனதே அந்த ரெண்டு ஊரு மட்டும்தான??//

(பல ஊர்கள் பார்த்திருக்கிறேன்.)

மும்பை,ஹைதை, சென்னை, கொழும்பு இவைகள் நான் வாழ்ந்த இடங்கள்.

சென்னை எபிசோட் மட்டும் எனக்கு சோக கீதமாகிவிட்டதால் என் ஃபவரேட் லிஸ்டில் சென்னை இல்லை.

நட்புடன் ஜமால் said...

\\புதுகை.அப்துல்லா said...

//கொழும்பைப் பத்தி சுத்தி கண்டன மெயில்கள் வாங்கி அப்புறமா சுத்தறதை நிப்பாட்டினேன்.

//

ஜமால் புதுசுனால அந்த அரசியல்ல நீங்க மாட்டி படாய்பட்டது அவருக்கு தெரியாது :))
\\

அப்டியா ...

வேண்டாம் வேண்டாம் அரசியல் ...

ராமலக்ஷ்மி said...

//
அந்த நகரத்தைப் பார்த்துதான் எழுந்து
நிற்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன்.//

இப்போதும் அந்த பெருநகரம் ஒவ்வொரு இடையூறிலிருந்தும் அப்படித்தான் எழுந்து நிற்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல அது கற்க வேண்டிய பாடம்.

எனக்கும் மும்பை பிடித்தமான நகரம். திருமணத்துக்கு பின் முதலிரண்டு வருடங்கள் மும்பையை ஒட்டிய தானேயில் இருந்தோம்.

pudugaithendral said...

வேண்டாம் வேண்டாம் அரசியல் ...//

:))))

pudugaithendral said...

ஆஹா நீங்களும் அம்ச்சி மும்பைன்னு சொல்ற ஆளுதானா.

சந்தொஷம் ராமலக்‌ஷ்மி.

நிஜமா நல்லவன் said...

/ நட்புடன் ஜமால் said...

மும்பை போனதேயில்லை

உங்கள் மூலியமாவது தெரிஞ்சிக்க வேண்டியது தான் .../

rippeettu poda vendiyathu thaan...:)

Sundar சுந்தர் said...

நல்ல அனுபவங்கள் உங்களுக்கு. பகிர்தலுக்கு நன்றி!

pudugaithendral said...

தங்களின் வருகைக்கும் மிக்க நன்றி சுந்தர்.