Wednesday, January 21, 2009

என் உலகில் இவர்கள்.....

என் வாழ்வில் இந்த ஆண்மகனுக்கும் பெரும்பங்கு
இருக்கிறது.

பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தில் ஒரு
காட்சி. வங்கி அதிகாரியான மொளலி தன்
வீட்டு வேலையைச் செய்வார். ”வீட்டில் நான்
என் மனைவிக்கு கணவன்” என்பார்.

இது என் பெரிய மாமா திரு.சத்தியநாராயணன்
அவர்களுக்கும் பொருந்தும். புதுகையில்
பீ.காம் படித்துவிட்டு மும்பைக்குச் சென்றவர்
B.L, A.C.S என படித்து கம்பெனி செக்ரட்டரியாக
இருந்தார்.

ஆனால் வீட்டில் மிக சிம்பிளாக இருபபார்.
வார இறுதி நாட்களில் நானும் மாமாவும்
சேர்ந்து மொத்த வீட்டையும் கழுவி சுத்தமாக்குவோம்.

முதன் முதலில் டாய்லட்டை மாமாவே
கழுவும் காட்சியைப் பார்த்து,”என்ன? மாமா
இது?” என்றதற்கு,” இதுவும் நம் வீட்டுக்குள்தான்
இருக்கிறது. நாமே கழுவினால் கவுரக் குறைச்சல்
ஆகிவிடாது” என்றார். இன்றும் நான் எங்கள்
வீட்டு டாய்லட்டை சுத்தமாக வைத்திருக்க கற்றது
இவரிடம்.

இது மட்டுமா?
சட்டியிலிருந்து தணலுக்கு!! என்பார்களே அதுமாதிரி
ஆகிவிட்டது என் நிலை. (மும்பையில் நான்
மாமாவீட்டில்தான் இருந்தேன்.)

”மளிகை சாமான் லிஸ்ட் எழுது” என்பதோடல்லாமல்
உடனழைத்துச் சென்று சாமான் வாங்கக் கற்ற்றுக்கொடுத்தார்.

“ஆங்கில நாளிதழ்கள் கட்டாயம் படிக்க வேண்டும்”
(அப்படி படிச்சு அதனால் வந்த வினைதான் இது:))

வீடு சுத்தமாக இருக்க வேண்டும். தூசி இல்லாமல்
துடைக்கவேண்டும். இல்லாவிட்டால்
“டேக் இட் ஈசி பாலிசின்னு “டான்ஸ்
ஆடத்தெரியுது. அந்த டேப்ரிக்கார்டரில்
தூசி இருக்கு. அதைத் துடைக்கத் தெரியலை!!”
என்பது போல நிறைய்யா........

புதுகையில் இருந்த வரை அப்பாவைத் தேடி
யார் வந்தாலும் விவரங்கள் கேட்டுகொண்டு
உள்ளே போய்விட வேண்டும். அதனால் அதிகம்
யாரிடமும் பேசியதில்லை.

அப்படி இருந்த என்னை தனது நண்பர்கள்
வீட்டிற்கு கட்டாயமாக அழைத்துச் செல்வார்.
வரவில்லை என்று சொன்னால் கண்டபடித்
திட்டி அழைத்துச் செல்வார்.” அனைவரிடமும்
பேசிப் பழகினால்தான் நிறைய தெரிந்துக்கொள்ளலாம்”
என்பார். (அது இப்போது அயித்தானின்
அலுவலக நண்பர்களுடன் பேச, அவர்கள்
குடும்பத்தாருடன் அளவளாவ வசதியாய் இருக்கிறது)

அப்பாவைவிட்டு முதன் முதலாக 19 வயதில்
நான் பிரிந்து மும்பை சென்றேன். அடிக்கடி
அப்பா ஞாபகம் வரும். அம்மம்மா மடியி்ல்
தஞ்சமடைந்த பொழுதெல்லாம்,” ஏன்? இங்க
இருக்கறவங்க எல்லாம் மனிஷங்களாத் தெரியலையா?”
என்பார். மாமா அடிக்கடி இப்படித் திட்டும்போதெல்லாம்
அதிகம் வருத்தப் படுவேன்.

அம்மாம்மாவிடம் ஒரு முறை அழுத பொழ்து
அம்மாம்மா சொன்ன வார்த்தை மாமாவைப்
பற்றி புரிய வைத்தது. “மாமா சொல்லும்பொழ்து
அவனை உன் தகப்பனாக நினைத்துப் பார்!!
பாசம் புரியும்! அழமாட்டாய்!” ஆமாம்.
புரிந்தது.

”நீ திருமணமாகி புகுந்த வீட்டில் நல்ல பெயர்
எடுக்க வேண்டும். சத்யா மருமகள் தவறு
செய்துவிட்டாள், அவளால் எங்கள் குடும்பத்தில்
பிரச்சனை என்று பெயர் வரக்கூடாது. அதற்காகத்தான்
உனக்கு இங்கு நல்ல பயிற்சி கொடுக்கிறேன்”
என்றார். (ஆமாம். எனது கருப்பு ரசத்திற்கு
என மற்ற சமையற்கூட சோதனைகளுக்கு
எலிகள் பெரிய மாமா மற்றும் சின்ன
மாமா தானே!!! )

புதுகையிலேயே இருந்திருந்தால் கிணற்றுத்
தவளையாகி இருப்பேன்.
”தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால்
மங்கையர் சூட நகையுமில்லை” எனும்
பாடல் வரிகளுக்கேற்ப
என்னை புடம் போட்டு , மாற்றிய பெருமை
சத்யா மாமாவிற்குத்தான்.


அக்கா மகள் தானே நமக்கென்ன என
இருந்துவிடாமல் என்னையும் தன் மூத்தமகளாய்
(மாமாவிற்கு 2 பெண் குழந்தைகள்) நினைத்து
பாசம் காட்டியதை என்னவென்று சொல்வது.

காட்பரீஸ் சாக்லேட் விளம்பரம் ஒன்று
வரும். அது வந்தால் உடனே.”...

இங்க பாரு உன்னோட ஃப்வரிட்” என்பதிலாகட்டும்,
நான் அல்சர் வந்து அவதி பட்ட பொழுது
தான் கண்ணீர் சிந்தியதிலாகட்டும் இவர் மாமாவா?
அப்பாவா? என குழம்பியிருக்கிறேன்.



இப்போது ஒவ்வொரு தந்தையர்
தினத்திற்கும் நான் மறக்காமல் போன் செய்து
வாழ்த்துச் சொல்லும் இன்னொரு தந்தை
என் பெரிய மாமா.

தனது திருமணத்தின் போது மாமா
ரொம்ப கண்டீஷன் போட்டார்.
1. மாப்பிள்ளை அழைப்பு ஊர்கோலம்
கிடையாது.
2. பெண்ணிற்கு தங்கள் விருப்பம் போல்
சீர் செய்யலாம். நாங்கள் ஏதும் கேட்க
மாட்டோம்.வரதட்சணை கிடையாது.

3. எனக்காக ஒரு தியாகம் மட்டும்
மணமகள் செய்யவேண்டும். அது
திருமணத்தின் போதும், அதற்குப்பிறகும்
பட்டுப்புடவை உடுத்தக் கூடாது.

மாமாவின் இதே கண்டீஷன்களில்
2,3 மட்டும் நானும் என் திருமணத்தின்
போது போட்டேன். அப்பா திட்ட,
மாமாதான் சப்போர்ட் செய்தார்.

அயித்தானும் வரதட்சினை வேண்டாம்
எனும் கொள்கையோடு இருக்க,
நான் பட்டுப்புடவை கட்ட மாட்டேன்
என்றதற்கு ஒத்துக்கொண்டார்.

எனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை
பார்க்கும் பொழ்து இந்த இரு பாசக்கார தகப்பன்களுக்குள்
பெரிய சண்டையே வந்தது!!!! (அதைப் பற்றி
அப்புறமா சொல்கிறேன்)

அடுத்த பதிவு ஒரு 85 வயது இளைஞரைப்
பற்றியது

14 comments:

Sundar சுந்தர் said...

அருமை!

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு!

புதுகை..டெம்ப்ளேட் லுக் நல்லாருக்கு!! :-)

pudugaithendral said...

நன்றி சுந்தர்.

pudugaithendral said...

மிக்க நன்றி சந்தனமுல்லை.

நட்புடன் ஜமால் said...

\\வீட்டில் நான்
என் மனைவிக்கு கணவன்\\

நல்ல விஷயம்.

நட்புடன் ஜமால் said...

டாய்லட் கழுவறது நல்ல விடயம் தான்.

சுத்தம் துவங்கும் இடம் அங்கிருந்துதான்

ஒரு மனிதன் நிஜமாகவே தனியாக இருக்கும் இடம் அது ஒன்று தான்.

ராமலக்ஷ்மி said...

உங்கள் ‘மும்பை’ பற்றிய பதிவில் சொன்னதை வைத்து அடுத்து மாமாவைப் பற்றிதான் சொல்லப் போகிறீர்கள் என ஊகித்திருந்தேன்:)! வாழ்க்கையில் பல விஷயங்கள் முதலில் புரிவதில்லைதான். மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கற்றுக் கொண்ட விஷயங்களையும் அன்பை அக்கறையை உணர்ந்ததையும் இன்று அவரை தந்தையாய் மதிப்பதையும். மனமார்ந்த பாராட்டுக்கள்.

pudugaithendral said...

ஒரு மனிதன் நிஜமாகவே தனியாக இருக்கும் இடம் அது ஒன்று தான்.//

ஆமாம் ஜமால்,

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,
நான் தந்தையாய் நினைப்பதை விட
மாமா இன்றளவும் தன் மகளாகத்தான் வைத்திருக்கிறார்.

எம்.எம்.அப்துல்லா said...

எப்படி நேற்றே நான் நீங்க அடுத்த மாமாவைப் பற்றிதான் சொல்ல போறீங்கன்னு கண்டுபுடுச்சேன்!!!!

Vidhya Chandrasekaran said...

கொடுத்து வைத்தவர் நீங்கள்:)

வெண்பூ said...

வித்தியாசமான பதிவு தென்றல்.. சாதாரணமா அப்பா, கணவர், தாத்தா, நண்பர் என்றுதான் எதிர்பார்ப்போம். தாய்மாமா பற்றி உங்களை எழுத வைத்த அவருக்கு பாராட்டுகள்..

pudugaithendral said...

வாங்க வெண்பூ,

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க. தாய்மாமா என்ற உறவும் சித்தப்பன் பெரியப்பன் உறவு போல் தந்தை, மகள் உறவு தான்.

என் மாமா எனக்கு இன்னொரு தந்தை.

M.Rishan Shareef said...

நல்லதொரு பதிவு !