Thursday, January 22, 2009

நான் வியக்கும் இளைஞர்!!!

அதிக முறை பயணம் செய்ய ஏதுவாய் இருக்கும்
என்பதால் லோக்கல் ட்ரையினில் சீசன் டிக்க்கெட்
எடுக்கும் வசதி உண்டு.

மற்ற ஊர்களுக்கும் அடிக்கடி பயணிக்கற
இந்த இளைஞருக்காக
சீசன் டிக்கெட் கொடுக்கச் சொல்லி தர்ணா
செய்யலாமான்னு இருக்கோம்.

மும்பை, சென்னை, பெங்களூர்ன்னு
தாத்தா சுத்திகிட்டே இருப்பாரு. ஒவ்வொரு மாதமும்
இந்த இடங்களை கட்டாயம் விசிட் செய்வாரு்.
சில சமயம் இந்த லிஸ்டில் ஹைதையும்
சேர்ந்து கொள்ளும்.


ஓய்வே இல்லாமல் எறும்புபோல் அப்படி ஒரு ஓட்டம்.

இவர் அந்தேரி தாத்தா என எங்களால்(பேரன்/பேத்திகளால்)
அழைக்கப்படும் இவர்தான் அந்த இளைஞர்.
வயது அதிகமில்லை 85 தான்.


(அந்தேரி மும்பையில் ஒரு இடம். பலவருடங்களாக
தாத்தா(என் அம்மாவின் தாய்மாமா)
அங்கே வசித்ததால் தாத்தாவின் பெயரோடு
அந்தேரி ஒட்டிக்கொண்டுவிட்டது. தாத்தா இப்பொழுது
அந்தேரியில் வசிப்பதில்லை. ஆனாலும் அந்தேரி
தாத்தா தான்!!! )

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து மும்பையில்
INCOME TAX DEPARTMENTல் OFFICERஆக பணிபுரிந்தவர்.
அந்த மிடுக்கும், கம்பீரமும் தாத்தாவிடம் மிகவும்
பிடித்தமானது. பார்க்கத்தான் கரடு முரடாக
தெரிவார். உண்மையில் மிருதுவான மனிதர்.

தனக்கு வாரிசு இல்லாவிட்டாலும் தன் அக்கா மற்றும்
தங்கையின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக
பார்க்கும் நல்ல மனது. 12 வருடங்களுக்கு முன்
தன் துணையை இழந்த பிறகு முற்றிலும்
தன்னை பணியோடு(அலுவலக வேலையில்லை,
தன்னை ஒரு அமைப்போடு சம்பந்தப் படுத்திக்கொண்டு
எந்த ஒரு ஆதாயமும் பெறாமல் சேவை
செய்கிறார்) பி.எல் படித்திருப்பதால் சில
சமயம் கம்பெனிகளுக்கு சட்ட ஆலோசகராக
இருக்கிறார். (எம்.எஸ். அம்மாவிற்கு தாத்தா
சட்ட ஆலோசகராக அவ்வப்போது வேலை
பார்த்ததுண்டு)


எல்லாவற்றிலும் மிதமாக இருக்கும் தாத்தா
எடுத்துக்கொண்ட வேலையில் மட்டும் பம்பரமாகவே
சுற்றுவார். ”இந்த வயதில் இப்படி சுற்றி ஆகவேண்டுமா?”
என்று நாங்கள் கேட்டால்,”என்னால் 4 பேருக்கு
நல்லது நடக்குது. என் உடம்பை பத்தி கவலைப்பட
கூடாது. நன்றாகத்தான் இருக்கிறேன்”, என்பார்.
உழைக்க வயது ஒரு தடையல்ல என்பது தாத்தாவின்
எண்ணம்.


அளவானச் சாப்பாடுதான் தாத்தாவிடம் எனக்கு
மிகவும் பிடித்த விஷயம்.

8 மணி அடித்தால் ஏகாக்‌ஷரம் +4 மாரி பிஸ்கட் வேண்டும்.
(வேறு ஒன்னுமில்லை! ஏகாக்‌ஷ்ரம் என்றால்
ஒற்றை எழுத்து. அதாங்க டீ. :))

11 மணி அளவில் சோறு குறைவு, காய்கறி கொஞ்சம்
அதிகம் எனும் சாப்பாடு.

சாயந்திரம் 4 மணி வாக்கில் ஏகாக்‌ஷ்ரம் அல்லது
ஹார்லிக்ஸ்.

இரவு 8 மணி வாக்கில் இட்லி,தோசை, சப்பாத்தி
ஏதாவதுஒரு வகையில் 3 மட்டும் தான்.

ஃபேன் கூட இல்லாமல் தூங்கிவிடுவார்.

பட்டுப்புடவை, வரதட்சனைக்கு நோ போன்ற
எங்களின் கொள்கைகளுக்கு ஆரம்ப கர்த்தா
அந்தேரி தாத்தாதான்.( இந்த கொள்கைக்காக
2000ஆம் வருடம் என் சின்னமாமாவின்
திருமணத்தின் போது மங்கையர் மலரிலிருந்து
வந்து பேட்டி எடுத்து எங்கள் மொத்த
குடும்பத்தினரையும் போட்டோ எடுத்து
போட்டிருந்தார்கள். )


85 வயதில் தன் நலத்தையும் பாராமல்
பொது நலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த
இளைஞருக்கு ஆண்டவன் நல்ல ஆரோக்கியத்தை
வழங்க வேண்டுமென்பதே என் பிரார்த்தனை.

****************************************

அடுத்தது யாருன்னு அடுத்த பதிவுல தெரிஞ்சிக்கலாம்.

இவரைப் பற்றி சொல்லாவிட்டால் “என் உலகில்
ஆண்கள்” பகுதி முழுமை பெறாது. யாரு?????

வெயிட்டுங்கோ.....

11 comments:

நட்புடன் ஜமால் said...

\\இவர் அந்தேரி தாத்தா என எங்களால்(பேரன்/பேத்திகளால்)
அழைக்கப்படும் இவர்தான் அந்த இளைஞர்.
வயது அதிகமில்லை 85 தான்\\

அழகா சொல்லியிருக்கீங்க ...

pudugaithendral said...

வாங்க ஜமால்,

மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

\\இவரைப் பற்றி சொல்லாவிட்டால் “என் உலகில்
ஆண்கள்” பகுதி முழுமை பெறாது. யாரு?????\\

கட்டுறை-ல சஸ்பன்ஸ் வக்கிரது நீங்க மட்டும் தான் ...

pudugaithendral said...

கட்டுறை-ல சஸ்பன்ஸ் வக்கிரது நீங்க மட்டும் தான் ...//

:))))))))))

ராமலக்ஷ்மி said...

இன்னும் பல்லாண்டு தாத்தா நலமாய் வாழ உங்களுடன் நாங்களும் வாழ்த்துகிறோம்.

எங்கள் அம்மா வழி தாத்தா இலங்கையில் வசித்து திரும்பிய பிறகும் கொழும்புத் தாத்தா என்றே எங்களால் அழைக்கப் பட்டார்கள்:)!

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

தாத்தாக்களுக்கு பேர் வைப்பதில் தனி சுகமே இருக்கு.

என் மகனும் தன் தாத்தாவிற்கு பெயர் வைத்திருக்கிறான். :)))

“என்னடா தம்பி பெயர் இது என்றால்”?

தாத்தா என்னை அப்படித்தான் அழைப்பார். அதனால் தாத்தாவின் பெயரும் அதுதான்” இது எப்படி இருக்கு? :))))))

ராமலக்ஷ்மி said...

//தாத்தா என்னை அப்படித்தான் அழைப்பார். அதனால் தாத்தாவின் பெயரும் அதுதான்” இது எப்படி இருக்கு? :))))))//

நல்ல பதில்:)))))!

Sundar சுந்தர் said...

இதுவும் அருமை!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்... ஏக்காஷ்ரம் நல்லா இருக்கே..:)

pudugaithendral said...

நன்றி சுந்தர்.

pudugaithendral said...

வாங்க கயல்,

ஏகாக்‌ஷ்ரம் மட்டுமல்ல ஸ்ம்ருதவர்ணோஸ்திமிகம் கூட இருக்கு. (காபிதான். என் தோழியின் கணவர் சொல்லித் தான் தெரியும்)

:)))))))))