Wednesday, February 11, 2009

வாழ்க்கைக்கு உதவும் கல்வி: 6

ஒரு விசேஷத்துல 25 வயசு உறவுக்காரப்பொண்ணு
அழுதுகிட்டு இருந்துச்சு. “ஏம்மா! அழுவுறன்னு”
கேட்டேன். “எங்கம்மா திட்டிப்புட்டாங்க,
எல்லாம் உங்களாலத்தான்ன்னு” சொல்லவும்
”நாம் என்ன செஞ்சோம்னு!!” யோசிச்சுகிட்டு
இருக்கறப்ப அவங்க அம்மா அங்க வந்தாங்க.

“ஏன் திட்டினீங்க? என்னாலதான்னு வேற
சொல்றா!” அப்படின்னேன்.”இவளை அடிக்காம
விட்டேனேன்னு சந்தோஷப்படு! விசேஷ
வீட்டுல அம்பாரமா துணி துவைச்சு
காயவெச்சு கிடக்கு, மடிக்க ஆளில்லை.
வாடி மடிப்போம்னு கூப்பிட்டேன், வந்தா.
உம்புள்ளைங்களும் துணி மடிக்கறதைப்பாத்து
வந்து உக்காந்து மடிக்க ஆரம்பிச்சிருச்சு!!

இஸ்திரி போட்டமாதிரி அந்த ஆம்பளப்புள்ள்
சட்டை மடிக்குது. இதுக்கு பனியனை கூட
மடிக்கத் தெரியலை. வயசு ஆகுது 25.
இன்னும் துணி மடிக்க கூடத் தெரியலைன்னு
திட்டினேன். கோபம் வந்திருச்சாக்கும்!!!”
அப்படின்னு சொன்னார்.

இதுல அந்த பொண்ணோட தப்புன்னு (25 வயசுக்கும்
துணி மடிக்கத் தெரியாம இருக்கறது தப்புதான்னாலும்) சொல்வதை
விட அம்மா/அப்பாவோட தப்புன்னு சொல்வேன்.
என் உடல்நிலைக் காரணமாகவும், மாண்டிசோரி
பயிற்சியினாலும் பிள்ளைகளுக்கு துணி மடிக்க
சொல்லிக் கொடுத்திருக்கேன். சின்ன வயசுல
கைகள் வேலை செய்ய பழகாட்டி சோம்பேறித்தனம்
தான் வரும்.

துணி மடிக்கறது பெரியவங்க வேலை. அதுலயும்
குறிப்பா அது பெண்கள் டிபார்ட்மெண்டுன்னு மனசுல
ஆழமா பதிஞ்சு போச்சு. ஆனா இது சிறு பிராயத்திலேயே
கற்றுக்கொடுக்கப் படவேண்டிய விடயம்.

இந்த வாழ்க்கைக்கு உதவும் கல்வியின் உத்தேசமே
ஆண்குழந்தையோ, பெண்குழந்தையோ” தன் கையே
தனக்குதவின்னு” வாழ கத்துக்கும். தன் தேவைகளை
தானே செஞ்சுக்க தெரியறதும் ஒரு கல்விதான்.

அப்படித்தான் அழகா வடிவமைச்சிருக்கார் மாண்டிசோரி
அம்மையார்.


துணி மடிப்பதும் ஒரு கலை. அழகா இஸ்திரி
போட்டா மாதிரி மடிச்சு அலமாரில வெச்சா
அழகா இருக்கும். இடத்தையும் அடைக்காது.

சட்டை மடிப்பது இப்படித்தான்:



துண்டு, நாப்கின் போன்றவற்றை நான்கு ஓரங்களும்
சமமாக சேர்த்து அழகா மடிச்சு வைக்கணும்.

வெயிலில் காயப்போடும்பொழுது சாயம் போகும்
என்பதால் கெட்ட பக்கம்(உல்டா சைடுன்னு சொல்வேன்)
வெயிலில் படும் படி போட்டுவிட்டு அதை அப்படியே
மடித்து வைப்பார்கள் சரி. எடுத்து சரியான பக்கத்துக்குத்
திருப்பி அழகா மடிக்கணும். இதை பிள்ளைகளுக்கு
சொல்லிக் கொடுக்கணும்.

நான் அன்றாடம் துணி மடிக்கும்பொழுது,” எனக்கு
ஹெல்ப் செய் கண்ணா!”ன்னு கூப்பிட்டு உக்காரவெச்சு
துணி மடிக்கச் சொல்லித் தரலாம்.

(இங்க வா! உனக்குத் துணி மடிக்கச் சொல்லித் தர்றேன்.
நாளைக்கு நீ கஷ்டப்படக்கூடாது அப்படின்னு சொன்னா
வரவே மாட்டாங்க, கத்துக்கவும் மாட்டாங்க!!!)

நாப்கின்கள் மடிப்பது தான் பள்ளியில் ஆரம்பப் பாடம்.


ஹோட்டல்களில் வகை வகையாக நாப்கின்களை
மடித்து வைத்திருப்பார்கள். ஒரிகமி மாதிரி
இதுவும் சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள்
ச்ந்தோஷமாக கற்றுக்கொள்வார்கள்.





இந்த மடிக்கும் பயிற்சியின் பயன்கள்:

1. தன்னம்பிக்கை பிறக்கிறது.

2. நாப்கின்களை மடித்து பழகினால் பின்னாளில்
துணிகளை மடிக்க ஏதுவாகிறது.

3.முக்கியமா கண் பார்த்து கைகள் செய்யும்
பயிற்சி. இது வாழ்க்கைக்கு மிக முக்கியமான
பயிற்சி. ( என் அம்மாம்மா அடிக்கடி சொல்வது
கண்ணு பார்க்கணும், கை செய்யணும். சொல்லிக்
கொடுத்து செஞ்சா மண்டைல ஏறாது!!!)

(விடுமுறையில் எப்படி மேய்ப்பது? சம்மர் கேம்பில்
போடலாமான்னு யோசிப்பதை விட இந்தச்
சின்ன சின்ன விஷயங்களை வீட்டில்
கற்றுக் கொடுக்கலாமே!!)

18 comments:

இராகவன் நைஜிரியா said...

Me the first

இராகவன் நைஜிரியா said...

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் மாதிரி...

இந்த வலைப்பூவில் எப்படியாவது ....

மீ த பர்ஸ்ட் போட்டுவிடணும்

இராகவன் நைஜிரியா said...

நீங்க சொல்லி உள்ளது மாதிரி, எனது அன்னையும் எனக்கு பல விசயங்களை கத்து கொடுத்துள்ளார். அதில் இந்த துணி துவைப்பது, வெயிலில் உலரவைப்பது, பின் இஸ்திரி போடுவது (அ) மடித்து வைப்பது என சொல்லி கொடுத்துள்ளார்.

அவர் சொல்லும் அழகும் நீங்கள் சொல்வது மாதிரிதான், சிறு வயதில், ராகவா என்று ராகம் போட்டு அழைத்து, வேலையைச் சொல்லுவார்.

என் அம்மாவின் நினைவு தினமான இன்று அவரை ஞாபகப் படுத்திவிட்டீர்கள். நன்றி புதுகை.

அ.மு.செய்யது said...

ஆஹா...எப்படிங்க இப்படி..இதுவரைக்கும் துணி மடிப்பது எப்படினு
யாரும் ஒரு பதிவ போட்ருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்.

கொஞ்சம் இல்ல..ரெம்பவே வித்தியாசமான ஆனா பயனுள்ள பதிவு..

நட்புடன் ஜமால் said...

\\இந்த வாழ்க்கைக்கு உதவும் கல்வியின் உத்தேசமே
ஆண்குழந்தையோ, பெண்குழந்தையோ” தன் கையே
தனக்குதவின்னு” வாழ கத்துக்கும். தன் தேவைகளை
தானே செஞ்சுக்க தெரியறதும் ஒரு கல்விதான்\\

அழகா சொன்னீங்கக்கா

நட்புடன் ஜமால் said...

நானும் இதுவரை சட்டையை மடிப்பதில்லை

(சோம்பேறித்தனம்தான்)

நீங்க போட்ட பட விளக்கம் மிக உதவி

pudugaithendral said...

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் //

வாழ்த்துக்கள் ராகவன் நீங்க தான் இன்னைக்கு மீ த பர்ஸ்டு.

pudugaithendral said...

நீங்க சொல்லி உள்ளது மாதிரி, எனது அன்னையும் எனக்கு பல விசயங்களை கத்து கொடுத்துள்ளார்.//

அந்த அன்னைக்கு என் வணக்கங்கள்.

நட்புடன் ஜமால் said...

\\இராகவன் நைஜிரியா said...

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் மாதிரி...

இந்த வலைப்பூவில் எப்படியாவது ....

மீ த பர்ஸ்ட் போட்டுவிடணும்\\

அண்ணா சற்றே கண் அசந்துட்டேன்

pudugaithendral said...

ராகவா என்று ராகம் போட்டு அழைத்து, வேலையைச் சொல்லுவார்.//

இதுக்கு சேம் ப்ளட் சொல்லிக்கணும்

நானும் ஆஷிஷா என்றுஅழைப்பேன்.

pudugaithendral said...

என் அம்மாவின் நினைவு தினமான இன்று அவரை ஞாபகப் படுத்திவிட்டீர்கள்//

pudugaithendral said...

இதுவரைக்கும் துணி மடிப்பது எப்படினு//

கொஞ்சம் இல்ல..ரெம்பவே வித்தியாசமான ஆனா பயனுள்ள பதிவு..//

மாண்டிசோரி பயிற்சிகளும் வித்தியாசமானவை ஆனால் அது தரும் பலன் சொல்லில் அடங்காது.

வருகைக்கு நன்றி செய்யது.

pudugaithendral said...

அழகா சொன்னீங்கக்கா//

நன்றி ஜமால்

pudugaithendral said...

(சோம்பேறித்தனம்தான்)

நீங்க போட்ட பட விளக்கம் மிக உதவி//

ஆஹா இதுவேறயா,

ஒழுங்கா சட்டையை மடிச்சு அதை படம் பிடிச்சு பதிவா போடுங்க தம்பி

அமுதா said...

நீங்க போட்டிருக்கிற படத்தை எல்லாம் பார்த்துட்டு நானும் துணி மடிப்பேன் அப்படீனு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு. நான் முதல்ல இப்படி மடிக்க கத்துக்கறேன் :-))

மங்களூர் சிவா said...

இனிமேவாச்சும் கஸ்டப்பட்டு கத்துக்கிறேன்
:((

pudugaithendral said...

வாங்க அமுதா,

பதிவை எதிர்பார்க்கிறேன்.

pudugaithendral said...

கத்துக்க வயது ஒரு தடையில்லை சிவா.
ஆல் த பெஸ்ட்