Tuesday, February 10, 2009

சிரித்து வாழ வேண்டும்....

கடு கடு சிடு சிடு முகத்தோடு தான் இருப்பேன்.
”எள்ளும் கொள்ளும் வெடிக்கற மாதிரியே எப்பவும்
முகத்தை வெச்சுக்கோ!” என்று அம்மா திட்டுவார்.

அம்மாவுக்கு என்ன தெரியும். வீதியில் நான் படும்
பாடு. கேலி பேசும் பையன்கள், ரோட்டோர
ரோமியோக்களின் பார்வையில் தப்பிக்க இந்த
முகமுடி அணிந்து கொண்டேன் என்று சொன்னால்
என்னைத் தான் இன்னமும் திட்டுவாங்க.

எங்க ஊருல எல்லோருக்கும் என்னிய தெரிஞ்சிருந்தது
பிரச்சனையாவே இருந்துச்சு. அவனுங்க ஏதோ
பேசிகிட்டு போனாக்கூட மத்தவங்க என்னையும்
சேத்து திட்டுவாங்க. வீட்டுல போய் உங்க
பொண்ணை இந்த மாதிரி கிண்டலடிச்சாங்கன்னு”
போட்டுக்கொடுத்திடுவாங்க. அதனால கடு கடு
சிடு சிடுன்னுஇருந்தா கோபக்கார பார்ட்டின்னு
ஒதுங்கி நிப்பாங்கன்னு என் முகத்தையே
மாத்திகிட்டேன். :(

என் அம்மம்மா ஒரு நாள் என்னைப் பக்கத்தில்
இருத்தி,”ஏன் கண்ணா? முகத்தை கடு கடுன்னு
வெச்சுக்கற? என்றதும் பொங்கி என் சோகக் கதையைச்
சொன்னேன்.

”அதுக்காக உன் முக அழகை கெடுத்துக்கலாமா?
சிரிச்சா முகம் களையா இருக்கும். உன் முகத்தில்
சிரிப்பு எப்பவும் தவழணும். சிரிச்ச முகத்துக்கு
மேக் அப் தேவையே இல்லை. இந்தக் கடுகடுப்பு
முகத்தில் எப்பவும் தங்கிட்டா, எல்லோருக்கும்
உன்னைப் பத்தி தப்பான அபிப்ராயம் வந்திடும்மா!”
என்றார்.

நான் மிகவும் மதிக்கும் அம்மம்மா சொல்லி
மறுக்க முடியாமல் முகத்தில் புன்னகை எனும்
நகையை ஏற்றேன். அம்மம்மா சொன்னது
போல் எந்த ஒப்பனையும் இல்லாமல் முகம்
அழ்கானது!! (எனக்கு நான் அழகு. அதை
மற்றவரும் ஆமோதிக்க வேண்டும் என்பதில்லை)
இதனால் மனதில் தெம்பும் அதிகமானது
போல் ஆனது. சீக்கிரமே புதுகை விட்டு
மும்பை கிளம்பியதில் ரோட்டோர ரோமியோக்களின்
தொந்திரவும் குறைந்தது.

ஆனால் முகத்தில் சிரிப்பு மட்டும்
எப்போதும் இருந்தது. சிரிக்க கற்றுக்கொண்டேன்.

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

இந்தப் பாட்டை மறக்க முடியுமா?




பாட்டு நல்லா இருக்குல்ல. நல்ல அர்த்தம்
நிறைந்த பாட்டு.

சரி சிரிச்சா என்ன ஆகும்? அது எப்படி நமது
முகத்தை அழகாக்கும்?


வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னு
சொல்வாங்க. நோயே இல்லாத பொழுது நாம்
சந்தோஷமா இருப்போம்ல.

இடுக்கண் வருங்கால் நகுக- அப்படின்னு
நம்ம வள்ளுவ பெருந்தகை சொல்லிருக்காரு.

இன்பத்தை கொண்டாடிவிட்டு துன்பத்தில்
சோகமாகிவிடக்கூடாது. அந்த நேரத்திலும்
சிரிக்கணும். இதெல்லாம் சாத்தியமான்னு
கேக்கறீங்களா? மனதிருந்தால் மார்கமா இல்லை?

சொல்வது ஈசி, செய்வது கஷ்டம்.ஆமாம்
யாரு இல்லைன்னு சொன்னாங்க? செய்வது
கஷ்டம் தான். செய்ய ஆரம்பிச்சா பின்னாடி
பழகிடும். அப்படித்தான் எனக்கும் பழகிடிச்சு.
என் முகமே என் மன நிலையைக் காட்டிக்கொடுக்கும்
கண்ணாடி. இலங்கையில் ரம்போடா ஆஞ்சநேயர்
கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது படித்த
ஒரு வாக்கியம் என்னிய மாத்திடுச்சு.

உள்ளங்கள் அழுதாலும்! உதடுகள் சிரிக்கட்டும்

இதுதான் அந்த வாக்கியம்.


இந்தப் பாட்டும் அருமையா இருக்கும்.

Get Your Own Hindi Songs Player at Music Plugin



SMILIE

நாம் சிரிக்கும் பொழுது முகத்தின் தசைகள் விரிந்து
அது ஒரு உடற்பயிற்சியாக ஆகிறது. சீரான
ரத்த ஓட்டம் ஏற்படுவதால் முகம் அழகாகிறது.


இந்தப் பதிவுக்காக தேடும்பொழுது
ஹேப்பி ஃபேஸ் யோகான்னு இந்த வீடியோ
கிடைச்சது. பாருங்க.



இந்தப் பாட்டின் ஒலி வடிவம் கிடைக்கலை.
அதான் வரிகள்.
பாடியவர்கள்: என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்
சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு
கருப்பா வெளூப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு இது
களையை நீக்கி கவலையைப் போக்கு மூளைக்குத்தரும் சுறுசுறுப்பு

துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில் துலங்கிடும் தனி செழிப்பு

பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப் பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு -
அதன்
பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது காதறுந்த பழம் செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு



வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும்??!!


இதமான புன்னகை என்றென்றும் இதழ்களில் தவழட்டும்.

22 comments:

butterfly Surya said...

சிந்திக்க வைக்கும் "சிரிப்பு"

Vidhya Chandrasekaran said...

:))))))))))))))))))))))))

நட்புடன் ஜமால் said...

பிறரை பார்த்தும் சிரித்து வாழ்ந்திட நினைக்காதே

தோல்வி பெறுவாய்

நட்புடன் ஜமால் said...

அம்மாவுக்கு என்ன தெரியும். வீதியில் நான் படும்
பாடு. கேலி பேசும் பையன்கள், ரோட்டோர
ரோமியோக்களின் பார்வையில் தப்பிக்க இந்த
முகமுடி அணிந்து கொண்டேன் என்று சொன்னால்
என்னைத் தான் இன்னமும் திட்டுவாங்க.\\

ஹா ஹா ஹா

நல்லாயிருக்கே ...

நட்புடன் ஜமால் said...

இப்படியே பிகருங்க செய்தால் நாங்க் இன்னா செய்றது

நட்புடன் ஜமால் said...

\\எனக்கு நான் அழகு. அதை
மற்றவரும் ஆமோதிக்க வேண்டும் என்பதில்லை\\

இத சொல்லனும்ன்னு தேவையுமில்லை

நட்புடன் ஜமால் said...

\\வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும்??!!\\

சுப்பர் பன்ச்

pudugaithendral said...

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே

pudugaithendral said...

சொன்னதும் சிரிச்ச வித்யாவுக்கு நன்றி

pudugaithendral said...

பிறரை பார்த்தும் சிரித்து வாழ்ந்திட நினைக்காதே

தோல்வி பெறுவாய்//

கலக்கல்

pudugaithendral said...

\\வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும்??!!\\

சுப்பர் பன்ச்//

நன்றி ஆனால் இது என் சொந்த சரக்கல்ல. இரவல் வாங்கினேன். பாட்டில் வரும் வரிகள்

ராமலக்ஷ்மி said...

//இதமான புன்னகை என்றென்றும் இதழ்களில் தவழட்டும்.//

தவழ்ந்தால்.. வாழ்வும் இனித்திடும்.
நல்ல பதிவு. சிரிப்பைப் பற்றிய பாடல் வரிகளின் பகிர்வும் நன்று.

pudugaithendral said...

நல்ல பதிவு. சிரிப்பைப் பற்றிய பாடல் வரிகளின் பகிர்வும் நன்று.//

நன்றி ராமலக்‌ஷ்மி

நிஜமா நல்லவன் said...

/வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்/

அப்ப நோய் இல்லாதவங்க சிரிக்க வேண்டியதில்லையா???

நிஜமா நல்லவன் said...

/சிரிச்சா என்ன செலவா ஆகும்??!!/

நாட்டுல பல பேரு அப்படித்தான் நினைக்குறாங்க...:)

pudugaithendral said...

அப்ப நோய் இல்லாதவங்க சிரிக்க வேண்டியதில்லையா???//

குசும்பன் பிளாக் பக்கம் போயிட்டு வந்தீகளா?

சந்தனமுல்லை said...

:-)) இந்த சிரிப்பு போதுமா?!! நல்ல பதிவு!

//நிஜமா நல்லவன் said...

/சிரிச்சா என்ன செலவா ஆகும்??!!/

நாட்டுல பல பேரு அப்படித்தான் நினைக்குறாங்க...:)
//

:-))))

pudugaithendral said...

:-)) இந்த சிரிப்பு போதுமா?!! நல்ல பதிவு! //

இன்னும் கூட சிரிக்க்லாம் தப்பில்லை.

:)))))))))))))

நன்றி

நானானி said...

//(எனக்கு நான் அழகு. அதை
மற்றவரும் ஆமோதிக்க வேண்டும் என்பதில்லை)//
அதே...அதே...!தன்னம்பிக்கையான ஸ்டேட்மெண்ட்!!!
எடுத்துக் கொடுத்த பாடல்களின் வரிகளும் நன்று. குறிப்பாக கலைவாணர் அவர்களின் அமரத்துவம் பெற்ற பாடல்!!!!!
நன்று...நன்று!!!

pudugaithendral said...

வாங்க நானானி,

தன்னம்பிக்கை மேல்தான் என் நம்பிக்கை.

தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

அமுதா said...

:-))

மங்களூர் சிவா said...

:)))))))))))))))))))))))))