எங்க போனேன்னுஒரே மண்டை குடைச்சலா இருந்துச்சா?
:))
சஸ்பென்ஸை உடைச்சிடறேன்
நான் போய் பேசியது என் பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் அந்தப் பள்ளியில் கணிணிபயிற்சி மிக பிரபலம் லண்டன் எடெக்ஷல் கோர்ஸ் பட்டம்
கிடைக்கும் அங்கே கணிணி கற்பது ஒரு வரம் போல் அனைவரும் நினைப்பார்கள்
அந்த பள்ளி பற்றிஆஷிஷின் ஆட்டோ கிராப் . :))
25 கணிணி வைத்து ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனி கணிணியில் பயிற்சி கொடுப்பார்கள்.
இன்பச் சுற்றுலாவாக அங்கே அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தேன். 1 மணி நேரம் போதும் என்று சொன்னதும் அவர்களும் ஆனந்தமாக
ஒத்துக்கொண்டார்கள். (இலவசமாக)
இங்கு அழைத்துச் சென்றதால் என்ன பயன்?
ஒண்ணா ரெண்டா ஒவ்வொருவருக்கும் பலன்.
நான் வேலை பார்த்த பள்ளிக்கு:
1. சுற்றுலான்னு பார்க்குக்கு கூட்டிகிட்டு போகாம
கம்ப்யூட்டர் செண்டருக்கு கூட்டிகிட்டு போ்ற ஸ்கூல்னு பேரு!
2. சுற்றுலாவிற்காக அதிகம் பணம் வசூலிக்கவில்லை
என நல்ல பெயர்.
3. கொடுத்த காசுக்கு உபயோகமா கூட்டிகிட்டு
போனாங்க என புகழாரம்.
பெற்றோர்களுக்கு:
1. குறைந்த செலவில் பிள்ளைகள் சுற்றுலா சென்றது.
2. சுற்றுலா என்ற பெயரில் வெயிலில் வாட விடாமல்
ஏசி அறைக்குள் அவர்கள் அமர்ந்திருந்தது.
3. அம்மாம் பெரிய ஸ்கூல் நடத்தும் கம்புயூட்டர்
சென்டரில் என் பிள்ளையுக் உக்காந்திருச்சுல்ல எனும்
பெருமை!!!
குழந்தைகளுக்கு:
1. தனக்கென ஒரு கம்ப்யூட்டர். தான் தொட்டு
பார்த்து கற்க, மகிழ 1 மணி நேரம்.(வீட்டில்
இது சாத்தியமில்லை)
2. அப்சார்பன் மைண்ட் என மாண்டிசோரி அம்மையார்
சொல்வார். எதைக் கொடுத்தாலும் கற்றுக்கொள்ளும்
வயதில் கணிணியின் அறிமுகம்.
3. பெருமை பொங்க அவர்கள் அங்கே அம்ர்ந்திருந்தைப்
பார்க்க வேண்டும்!!
அந்த கணிணி மையத்துக்கு:
1. தனது பள்ளியின் பெயர் பொறித்த தொப்பி,
கணிணியின் பாகங்கள் அச்சடித்த பேப்பர் எல்லாம்
கொடுத்தார்கள். இது பெற்றோரை மிகவும்
கவர்ந்தது.
2. இலவச விள்ம்பரம்.
எங்களுக்கு அதாவது ஆசிரியைகளுக்கு:
1. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
2. 2 பிள்ளைக்கு ஒரு கணிணி ஆசிரியை என
பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
3. நாங்கள் நோகாமல் நோன்புகும்பிட்டு
மகிழ்ந்துகொண்டிருந்தோம்.
4. முதன் முறையாக இப்படி ஒரு இடத்திற்கு
பிள்ளைகளை அழைத்துச் சென்ற ஆசிரியைகள்
என்ற பெருமை முகத்தில் பொங்கியது எங்களுக்கு.
5. இந்த ஐடியாவிற்காக எனக்கு பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து, பெற்றோர்களிடமிருந்து, சக ஆசிரியைகளிடமிருந்து பாராட்டோ பாராட்டுத்தான்.
6. சொல்ல மறந்துவிட்டேனே!! என் குட்டி பிள்ளைகள் முகம் நிறைய அந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்ட பொழுது அந்தக் குழந்தைகளின் முகத்தில் பார்த்த சந்தோஷம் சொல்லி புரியாது!!!
கொஞ்ச நாளைக்கு மற்ற வகுப்பு பிள்ளைகளிடம் "we played with computer" என்று உதார் விட்டு அவர்களின் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள். :))))
”எப்படிப்பா? இப்படி? சூப்பர் ஐடியா? என என் சக ஆசிரியைகள் பாராட்ட
“எல்லாம் இந்தியமூளை!!” என காலரைத்தூக்கி விட்டுக்கொண்டேன்.
என்னை அடிக்க(விளையாட்டாகத்தான்) எல்லோரும் என் மேல் பாய்ந்தார்கள். இருக்காதே பின்னே, சக ஆசிரியைகளில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர், என் தோழியும் அசிஸ்டென்ட் டீச்சருமாகிய தாஹிரா பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.:))))
48 comments:
அட இதுதான் சஸ்பென்ஸா
நல்ல முயற்சி தான்.
நன்றி ஜமால்
புதுசா டெம்ப்ளேட் சேஞ்ச் செஞ்சு ரிப்பேர் வேலை நடந்துகிட்டு இருக்கு. சீக்கிரமே சரி செஞ்சிடுவேன்.
அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்தருள வேண்டுகிறேன்.
சத்தியமா... இது மாதிரி இருக்கும் அப்படின்னு கற்பனை பண்ணி பார்க்கவேயில்லை.
இதெல்லாம் எங்க லிஸ்ட்ல வராதுங்களே....
நீங்க சொன்னீங்கன்னு, சூப்பர் ஆணிக்கு நடுவுல ஒரு பெரிய லிஸ்ட்டே தயார் பண்ணி வச்சு இருந்தேங்க...
நல்லா ஏமாந்தாச்சு...
நல்ல பயனுள்ள ஐடியா.. பாராட்டுகள்..
டெம்ப்ளேட் கலக்கல் டீச்சர்.. ஸாரி.. மேடம்.. இல்ல டீச்சர்னே இருக்கட்டும்
//என் குட்டி பிள்ளைகள் முகம் நிறைய அந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்ட பொழுது அந்தக் குழந்தைகளின் முகத்தில் பார்த்த சந்தோஷம் சொல்லி புரியாது!!!//
புரியுதுங்க. அருமையாக யோசித்து குழந்தைகள் முகத்தில் ஆனந்தம் வரவழைத்து பெற்றோரிடம் அப்ளாஸ் வாங்கிய கையோடு சக டீச்சர்கள் காதில் இந்திய மூளையைப் பற்றிச் சொல்லி புகையும் வர வழைத்து விட்டீர்கள்:)))!
/*எப்படிப்பா? இப்படி? சூப்பர் ஐடியா? */
எப்படிங்க இப்படி எல்லாம். சூப்பர். பாராட்டுக்கள்.
ஆஹா வாங்க ராகவன்,
கற்பனைக்கு எல்லாம் அப்பாற்பட்டு இருப்பதுதானே ஆசிரியையாக எங்க வேலை.
நன்றி வெண்பூ.
மேடம்.. இல்ல டீச்சர்னே இருக்கட்டும்//
ஆஹா.......
வாங்க ராமலக்ஷ்மி,
அந்தக் குட்டி முகங்களில் சந்தோஷம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டும்.
பாராட்டுக்கள்.//
நன்றி அமுதா
அட இதுதான் சஸ்பென்ஸா
நல்ல முயற்சி தான்.
சத்தியமா... இது மாதிரி இருக்கும் அப்படின்னு கற்பனை பண்ணி பார்க்கவேயில்லை.
இதெல்லாம் எங்க லிஸ்ட்ல வராதுங்களே....
நீங்க சொன்னீங்கன்னு, சூப்பர் ஆணிக்கு நடுவுல ஒரு பெரிய லிஸ்ட்டே தயார் பண்ணி வச்சு இருந்தேங்க..
நல்லா ஏமாந்தாச்சு...
நல்ல பயனுள்ள ஐடியா.. பாராட்டுகள்..
டெம்ப்ளேட் கலக்கல்
பதிவை படிக்காமலே கமெண்ட் போட்டுட்டேன்....
வாங்க நிஜமா நல்லவன்,
:))))))))))))))))))))))))))))
சரி நான் பதிவை படிக்க போறேன்....:)
/Blogger புதுகைத் தென்றல் said...
வாங்க நிஜமா நல்லவன்,/
வரவேற்புக்கு மிக்க நன்றி!
/எங்க போனேன்னுஒரே மண்டை குடைச்சலா இருந்துச்சா?
:))/
கதிர்காமத்தில் இருக்கிற முருகன் மேல ஆணையா இல்லைங்கோ...:)
/சஸ்பென்ஸை உடைச்சிடறேன்/
அது என்ன காங்க்ரீட் கட்டிடமா உடைக்க???
நம்ம மூளைக்கு எட்டலயே...?
சரி, அது இருந்தாதானே.
கலக்கிட்டீங்க டீச்சர்.
எங்களுக்கும் இருந்தாங்களே....
லக்கி ஸ்டூடண்ட்ஸ்.
/
நான் போய் பேசியது என் பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்த பள்ளியில்
/
அது சரி லீவ் போடாமல் உங்க பிள்ளைகளை பள்ளியில் போய் இப்படி கூட வழி இருக்குதா...:)
/1. சுற்றுலான்னு பார்க்குக்கு கூட்டிகிட்டு போகாம
கம்ப்யூட்டர் செண்டருக்கு கூட்டிகிட்டு போ்ற ஸ்கூல்னு பேரு!/
ம்ம்ம்...நீங்க கூட நல்ல பேரு வாங்கி இருப்பீங்களே...
/2. சுற்றுலாவிற்காக அதிகம் பணம் வசூலிக்கவில்லை
என நல்ல பெயர்.
/
அப்படின்னா...இதுக்கு முன்னாடி போன சுற்றுலாவில் எக்கச்சக்க வசூலா..:)
/3. கொடுத்த காசுக்கு உபயோகமா கூட்டிகிட்டு
போனாங்க என புகழாரம்./
ரைட்டு...கண்டிப்பா இதுக்கு முன்னாடி போன சுற்றுலாவில் பாட்டு கிடைச்சிருக்கும் போல....:)
வாங்க நிஜமா நல்லவன்,
இன்னைக்கு ரொம்ப சாவகாசமா வந்திருக்கீக போலிருக்கு.
படிக்காம கமெண்ட், படிச்சு கமெண்டுன்னு கலக்கறீங்க.
எங்க ஊரு பக்கம் ஒரு சொலவடை சொல்வாங்க.
ஆதாயம் இல்லாத செட்டி ஆத்துல இறங்கமாட்டாருன்னு. அது மாதிரி எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தனக்கு ஆதாயம் இல்லாவிட்டால் எந்தப் பள்ளி நிர்வாகமும் அதைச் செய்யாது.
\\புதுகைத் தென்றல் said...
எங்க ஊரு பக்கம் ஒரு சொலவடை சொல்வாங்க.
ஆதாயம் இல்லாத செட்டி ஆத்துல இறங்கமாட்டாருன்னு. அது மாதிரி எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தனக்கு ஆதாயம் இல்லாவிட்டால் எந்தப் பள்ளி நிர்வாகமும் அதைச் செய்யாது.\\
ஹா ஹா ஹா
சூப்பர்...நல்ல ஐடியா ;)
வழக்கம் போல அழகுப்பதிவு.. பெருமை பிச்சுக்குது..
அப்புறம் அழகான டெம்ப்ளேட். ஒரு வழியா முந்தைய பதிவுகள் லிஸ்ட் நான் கேட்டது போல வெச்சுட்டீங்க போலயிருக்குது.. வாழ்த்துகள்.!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
கலக்குறிங்க போங்க......நல்ல விஷயம் தான்.
வாங்க கோபி,
நன்றி.
அட இதுதான் சஸ்பென்ஸா
நல்ல முயற்சி தான்.
சத்தியமா... இது மாதிரி இருக்கும் அப்படின்னு கற்பனை பண்ணி பார்க்கவேயில்லை.
இதெல்லாம் எங்க லிஸ்ட்ல வராதுங்களே....
சூப்பர். பாராட்டுக்கள்.
பெருமை பிச்சுக்குது..//
ஆமா தாமிரா,
என்னுடைய அந்த அனுபவம் அலாதியானது. ஒருத்தரிடம் பாராட்டு வாங்கினாலே சந்தோஷமா இருக்கும். அம்புட்டு பேரும் பாராட்டினது வானத்துல மிதக்கற மாதிரி இருந்துச்சு.
அப்புறம் அழகான டெம்ப்ளேட். ஒரு வழியா முந்தைய பதிவுகள் லிஸ்ட் நான் கேட்டது போல வெச்சுட்டீங்க போலயிருக்குது.. வாழ்த்துகள்.!
ஐடியாவுக்கு நன்றி
நன்றி வலைப்பூக்கள்
வாங்க சிவா,
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி
Post a Comment