நாட்டில் இல்லை இல்லை உலகில் பொருளாதார
நிலை அவ்வளவு நல்லா இல்லை.
வேலை இருக்குமா? பறிபோகுமா? எனும் அச்சம்.
சம்பள உயர்வு போய் சம்பளம் குறைப்பு,
ஆள்குறைப்பு இப்படி பல பிரச்சனைகள்.
இருக்கறவனுக்கு இருக்கறது பிரச்சனை!
இல்லாதவனுக்கு இல்லைன்னு பிரச்சனை!
இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும்
மத்தியதரக் குடும்பத்திற்கு என்றும் பிரச்சனைதான்.
ஐடி கம்பெனிகளில் தடலாடியாக ஆள்குறைப்புச்
செய்து வருகிறார்கள். நாளிதழில் படித்தேன்
வருத்தமாக இருந்தது. ஒருவர் பாவம்
தனக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது
என்று அனைவருக்கும் இனிப்பு வாங்கிக்
கொண்டு அலுவலகம் சென்று அனைவருக்கும்
கொடுத்திருக்கிறார். இனிப்பு விநியோகம்
முடித்து தனது இருக்கையில் அமரும் வரை
காத்திருந்து,”உனது பணிக்காலம் முடிவடைந்தது!
என செட்டில் மெண்ட் கவரை நீட்டியிருக்கிறார்கள்”
அதிர்ச்சியில் மாரடைப்புவந்ததாம்!
என் அனில் அண்ணா அடிக்கடி சொல்வார். நாம்
வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு நாம் ஒரு
சொத்தாக இருக்க வேண்டும்.”இவன் இல்லையென்றால்
இயங்குவது கடினம் எனும் அளவிற்கு தனது
தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்”
அப்பொழுதுதான் எந்த பிரச்சனை வந்தாலும்
நிர்வாகம் நமக்கு சாதகமாக இருக்கும் என்று.
சத்தியமான வார்த்தை. இந்த இடத்தில் எனது
தனிப்பட்ட கருத்தினை பகிர்கிறேன்.
பொதுவாக வேலை கிடைக்கும் வரை
“வேலை மட்டும் கிடைக்கட்டும்!
அப்புறம் பார்” என்று சவடால் விடுவார்கள்.
அப்புறம் போரடிக்கும். THIS IS NOT MY
CUP OF TEA என்று வேறு வேலைத் தேடுவார்கள்.
(கல்யாணமானா பொண்டாட்டியை
அப்படி பாத்துக்கணும், இப்படி பாத்துக்கணும்னு
பிளான் போட்டு வெச்சிருப்பாங்க. கல்யாணத்துக்கு
அப்புறம் அதான் கல்யாணம் ஆயிடிச்சே,’இங்கதான்
இருப்பா எப்ப வேணாம்!!! கவனிச்சுக்கலாம்
என்று பாராமலே இருந்து விடுவார்கள்)
கிடைத்த வேலையில் முழு ஈடுபாட்டுடன்
வேலை செய்து, தனது அறிவுத்திறனை
வளர்த்துக்கொண்டு தன்னை முன்னேற்றிக்
கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவசியம்.
எல்லா இடத்திலும் ப்ரச்சனை இல்லாமல்
இருக்காது. சிலருக்கு உயரதிகாரிக்கு
”மண்டையில் மசாலா இல்லை” ஆனாலும்
அவன் எனக்கு பாஸ் என்ற நினைப்பு இருக்கும்.
(சில சமயம் அது உண்மையாகவும் இருக்கும்)
ஆனால் ஒரு விடயம் மறக்கக் கூடாது. அந்த
பாஸ் ஏதோ ஒரு விடயத்தில் நம்மை விட
சிறந்தவன்(மஸ்கா அடிப்பது, போட்டுக்கொடுப்பது,
என எதில் வேண்டுமானாலும். ஸ்ட்ரேடச்ஜி
என்பார்களே!) அதனால்தான் அவனால்
பாஸாக வர முடிந்தது.
இப்பொழுது இருக்கும் பொருளாதாரப் பிரச்சனையில்
பணத்தை மிச்சம் பிடிப்பது மிகக் கடினம்.
செலவுதான் அதிகமாகிறது. இந்த ரெஷ்ஷன்
நேரத்தில் எப்படி எல்லாம் மிச்சம் பிடிக்கலாம்?
பட்ஜட்டில் துண்டு விழுந்து கொண்டிருந்த
இடத்தில் இப்போது போர்வை விழுகிறதே!
என்ன செய்யலாம்? என குழம்பிக்கிடக்கிறார்கள்
குடும்பத் தலைவரும், தலைவியும்.
பேச்சிலர்கள் எப்படி பணத்தை மிச்சம் பிடிக்கலாம்
என? சக பதிவர் செல்வேந்திரன் பதிவிட்டிருக்கிறார்.
மிக அருமை.
இப்படி நாமும் யோசித்தால் பணத்தை
மிச்சம் பிடித்து பர்ஸை பாதுகாக்கலாம்.
இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில்
மிச்சம் பிடிக்காவிட்டாலும் அதிகம்
செலவழிக்காமல் இருப்பது புத்திசாலித்தனமாச்சே!!
பினாத்தல் சுரேஷ் அவர்களின் இந்தக் கதையையும்
படிச்சிருப்பீங்க. படிக்காதவங்களுக்கு இங்கே.
23 comments:
தேவையான தருணத்தில் அவசியமான பதிவு..
நன்றி வண்ணத்துப்பூச்சியாரே.
நல்ல அறிவுரைகள்.
மிக நல்ல பதிவு.
\\இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில்
மிச்சம் பிடிக்காவிட்டாலும் அதிகம்
செலவழிக்காமல் இருப்பது புத்திசாலித்தனமாச்சே!!\\
சத்திய வார்த்தைகள்:)
ரகுவுக்கு ரிசஷன் காரணமாக 10% சம்பளம் கட். இருந்தாலும் வழக்கம் போலவே எந்த பிரச்சனையுமில்லாமல் வண்டி ஒடுகிறது. திட்டமிடுதல் என்பது ரொம்ப அவசியம். அவசியத்தை உணர்ந்தாலே போதும் எல்லா பிரச்சனையையும் சமாளித்துவிடலாம்:)
நல்ல சிந்தனைதான் தோழி.!
பத்திரமா இருக்குமா ...
இருக்கறவனுக்கு இருக்கறது பிரச்சனை!
இல்லாதவனுக்கு இல்லைன்னு பிரச்சனை! இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் மத்தியதரக் குடும்பத்திற்கு என்றும் பிரச்சனைதான்.\\
சரியாச்சொன்னேள்
\\“வேலை மட்டும் கிடைக்கட்டும்!
அப்புறம் பார்” என்று சவடால் விடுவார்கள்.
அப்புறம் போரடிக்கும். THIS IS NOT MY
CUP OF TEA என்று வேறு வேலைத் தேடுவார்கள்.\\
தவிர்க்க இயலவில்லையே
அறிவுரைல்லாம் சொல்லவில்லை.
பகிர்ந்துகொண்டேன் ராமலக்ஷ்மி.
மிக்க நன்றி.
வாங்க வித்யா,
வருகைக்கு மிக்க நன்றி.
நல்ல சிந்தனைதான் தோழி.//
நன்றி நண்பரே
பத்திரமா இருக்குமா ...//
இருக்க வைக்க வேண்டியதுதான் நம் கடமை
\\“வேலை மட்டும் கிடைக்கட்டும்!
அப்புறம் பார்” என்று சவடால் விடுவார்கள்.
அப்புறம் போரடிக்கும். THIS IS NOT MY
CUP OF TEA என்று வேறு வேலைத் தேடுவார்கள்.\\
தவிர்க்க இயலவில்லையே//
:))))
/(கல்யாணமானா பொண்டாட்டியை
அப்படி பாத்துக்கணும், இப்படி பாத்துக்கணும்னு
பிளான் போட்டு வெச்சிருப்பாங்க. கல்யாணத்துக்கு
அப்புறம் அதான் கல்யாணம் ஆயிடிச்சே,’இங்கதான்
இருப்பா எப்ப வேணாம்!!! கவனிச்சுக்கலாம்
என்று பாராமலே இருந்து விடுவார்கள்)/
ஹஸ்பண்டாலாஜி ப்ரொபசர் சொன்னா சரியா தான் இருக்கும்...:)
/*இவன் இல்லையென்றால்
இயங்குவது கடினம் எனும் அளவிற்கு தனது தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் */
நிறுவனம் இருக்கணுமே நாம இருப்பதற்கு :-))
நல்ல பதிவு
ஹஸ்பண்டாலாஜி ப்ரொபசர் சொன்னா சரியா தான் இருக்கும்...:)//
:))))))))))))))
நிறுவனம் இருக்கணுமே நாம இருப்பதற்கு//
வாங்க அமுதா,
சத்யம் கம்பெனில பாருங்க. ராமலிங்க ராஜு எபிசோடிற்கு பிறகு கம்பெனி சீயிஓவாக அங்கே முன்பு வேலைப் பார்த்துக்கொண்டிருந்தவரைத்தான் எடுத்திருக்கிறார்கள்.
நம் உழைப்பு நமக்கு நல்ல பெயரைத் தருமே.
நல்ல பதிவு
நன்றி அமுதா
நான் கையாளுகின்ற வழிமுறை..
என்ன செலவு செய்தாலும் கணக்கு எழுதுவது, பின் மாதக் கடைசியில் அதை அலசி ஆராய்வது..
அப்படி செய்யும் போது அந்த செலவு நமக்கு தேவையா, இல்லையா என்று புரிந்துவிடும்.
செலவுகள் கட்டுக்குள் இருந்தாலே, வளமான வாழ்வு கிட்டும்
வாங்க இராகவன்,
நானும் உங்களை மாதிரிதான். ஆனா மொத்தமா கணக்கெழுதி பட்ஜட் போட்டு அதை தனித்தனி கவர்ல வெச்சு செலவு செய்வேன்.
அந்த பட்ஜட்டை ஒவ்வொரு மாசமும் தாண்டாமல் பாத்துக்குவேன்.
உங்களுடை கருத்துக்களை பகிர்ந்த்தற்கு நன்றி
சலுகைகள் குறைப்புன்னாய்ங்க ஒழிஞ்சி போங்கடான்னு உட்டுட்டேன்... சம்பளக் குறைப்புங்கறாய்ங்க... இனிமே நாந்தான் குரைக்கனும்...
ஐடி கம்பெனிகளில் தடலாடியாக ஆள்குறைப்புச்
செய்து வருகிறார்கள். நாளிதழில் படித்தேன்
வருத்தமாக இருந்தது. ஒருவர் பாவம்
தனக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது
என்று அனைவருக்கும் இனிப்பு வாங்கிக்
கொண்டு அலுவலகம் சென்று அனைவருக்கும்
கொடுத்திருக்கிறார். இனிப்பு விநியோகம்
முடித்து தனது இருக்கையில் அமரும் வரை
காத்திருந்து,”உனது பணிக்காலம் முடிவடைந்தது!
என செட்டில் மெண்ட் கவரை நீட்டியிருக்கிறார்கள்”
அதிர்ச்சியில் மாரடைப்புவந்ததாம்!
கொடுமைங்க..
தேவா..
செல்வேந்திரன் பதிவு ஏற்கனவே படித்து இருக்கிறேன். மிக நல்ல அவசியமான பதிவும் கூட.
love your job not your company.
Post a Comment