Monday, February 23, 2009

வீக் எண்ட் கொண்டாட்டம் .....













பிள்ளைகள் பரீட்சைக்கு தயார்

ஆகிக்கொண்டிருப்பதால் கொஞ்சம் ப்ரேக்

கொடுக்க வெளியே அழைத்து சென்றோம்.





NTR GARDENSசென்றதே

பிள்ளைகளுக்கு ஒரே சந்தோஷம்.


ட்ரையினில் ஒரு ரவுண்ட்,
பவுண்டைன்கள், பச்சை பசேல்
தோட்டம் என மிக அழகாக இருந்தது.

சாமந்தி பூத்தோட்டத்தின் நடுவில்
புகைப்படம் என மகிழ்ந்தனர்.


முன்னாள் ஆந்திர முதல்வரும், நடிகருமாகிய
என்.டீ.ராமராவ் அவர்களின் நினைவு மண்டபத்திற்கு
அருகில் அவரது பெயரால் இந்த இடம்.
மிக அழகாக இருக்கிறது.



போன்சாய் தோட்ட புகைப்படங்களுக்கு

டெசர்ட்


அங்கிருந்து நேராக உறவினர் வீட்டிற்குச்
சென்று விட்டு நாராயணகுடாவில் இருக்கும்
தாஜ்மஹால் ஹோட்டலில் உணவருந்தினோம்.

பக்கத்து கட்டிடம் சினிமா தியேட்டர் எனச்
சொன்னார் அயித்தான். போலாமாப்பா!
என்றனர் குழந்தைகள். பாப்போம் என்று
இருந்துவிட்டார்.

மணி 9.15 வெளியே வந்து தியேட்டரில்
என்ன படம் என்று பார்த்தால் நான்
பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த
சசிரேகா பரிணயம்(சசிரேகா திருமணம்)
ஆஹா, இந்தப் படமா? என்றேன்.
போகலாமா? என்றார் அயித்தான். எனக்கு
பயங்கர ஷாக்.



காரை உள்ளே விட்டார். படம் ஆரம்பித்து
10 நிமிடம் ஆகிறது என்றார்கள். சரி
பார்ப்போம் என்று உள்ளே நுழைந்தோம்.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு
நைட்ஷோ சினிமா... (அதற்கு முன்
வைசாக்கில் “மாவிடாகுலு” (மா+விடாகுலு
எங்கள் விவாகரத்து அல்லது மாவிலை தோரணம்
எனும் பெயர் வரும்படி படம்)
படம் பார்த்தோம்.


தருண், ஜெனிலியா நடிப்பில் கிருஷ்ணவம்சியின்
இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
ஒருமுறை பார்க்கலாம்.

திட்டமிட்டு சில சமயம் போக முடியாமல் போவதுண்டு.
எந்தத் திட்டமும் இடாமல் நேற்று சினிமா
பார்த்தோம். மல்டிப்ளக்ஸுகளில் அதிகம்
பணம் செலவழித்து பார்ப்பதை விட
40ரூபாயில் பால்கனி டிக்கெட் வாங்கி
இந்த மாதிரி தியேட்டர்களில் பார்ப்பதும்
தனி சுகம் தான்..

மொத்தத்தில் சென்ற வார இறுதி
கொண்டாட்டமாக இருந்தது.

(காதுல புகை, வயிற்றெரிச்சல் இதெல்லாம்
பயங்கர வந்து தாக்கப்போகுதுன்னு நல்லாவே
புரிய்து) :)))


27 comments:

அபி அப்பா said...

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

நட்புடன் ஜமால் said...

\\மொத்தத்தில் சென்ற வார இறுதி
கொண்டாட்டமாக இருந்தது.\\

சந்தோஷம் ...

pudugaithendral said...

நன்றி ஜமால்

butterfly Surya said...

மகிழ்ச்சி..

இன்ப அதிர்ச்சி கொடுத்தவருக்கு வாழ்த்துக்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

:) என்ஜாய்

காதில் புகையோடு....

pudugaithendral said...

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ//

:)))))

pudugaithendral said...

வாங்க வண்ணத்துபூச்சியாரே,

வாழ்த்துக்கு நன்றி அவர் சார்பா நானே சொல்லிடறேன்.

pudugaithendral said...

:) என்ஜாய்

காதில் புகையோடு....//

காதுல புகையெல்லாம் விடவேணாம். அடுத்தமுறை மாமாவை ரிலாக்ஸா வரச்சொல்லுங்க. நாம் எல்லோரும் போவோம்னு மருமகபுள்ள சொல்றாப்ல.

Rajalakshmi Pakkirisamy said...

:) :) :) happy:)

ராமலக்ஷ்மி said...

யப்பா..உள்ளே வரவே முடியல. ஒரே புகை:))! ஒருவாறாக வந்து பார்த்தால் படங்கள் அருமை. பசங்க சந்தோஷம் நம்ம சந்தோஷம். உங்க சந்தோஷம் எங்க சந்தோஷம். ENJOY:)!

Sasirekha Ramachandran said...

\\மொத்தத்தில் சென்ற வார இறுதி
கொண்டாட்டமாக இருந்தது.\\


great.:)

மேவி... said...

santhosam


enjoy life

மறுபடியும் வாசம் வீச போகும் பூ இவள் said...

அக்கா நான் ரொம்ப சின்ன பொண்ணுக்கா!!!!!!!!!!

pudugaithendral said...

நன்றி ராஜலட்சுமி

pudugaithendral said...

பசங்க சந்தோஷம் நம்ம சந்தோஷம்.//
ஆமாம்.
உங்க சந்தோஷம் எங்க சந்தோஷம். ENJOY:)!//

:)) நன்றி

pudugaithendral said...

நன்றி சசிரேகா

pudugaithendral said...

நன்றி மாயாவி

Kumky said...

படிச்சு பார்த்துட்டு பொகை விடுறதுக்குள்ள நீங்களே அதயும் சொல்லி தப்பிச்சுகிட்டீங்களா....என்னா வில்லத்தனம்.

நிஜமா நல்லவன் said...

வார இறுதி கொண்டாட்டமாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.....காதில் புகை வரும் அளவிற்கு ஏதும் இல்லை....!

pudugaithendral said...

என்னா வில்லத்தனம்.//

:))))))))

pudugaithendral said...

வார இறுதி கொண்டாட்டமாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.....காதில் புகை வரும் அளவிற்கு ஏதும் இல்லை....!//

அப்படியா சரி. சந்தோஷம்

:))

நாகை சிவா said...

டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில் நீங்களும்....

http://tsivaram.blogspot.com/2009/02/blog-post_24.html

பாச மலர் / Paasa Malar said...

பரிட்சை முடிந்ததும் மீண்டும் enjoy..hm...பெருமூச்சுதான் வேற என்ன..

pudugaithendral said...

நன்றி சிவா,

pudugaithendral said...

பரிட்சை முடிந்ததும் மீண்டும் enjoy..hm...பெருமூச்சுதான் வேற என்ன..//

வாங்க பாசமலர்,

பரிட்சைமுடிந்து 2 வாரம் விடுமுறை அதற்கு பிறகு ஏப்ரல் கடைசியிலிருந்து ஜூன் 6 வரை விடுமுறை. அந்த வெயிலில் எங்கே போவது?? அதுக்கு முன்னாடியே போயிட்டு வந்திடணும்.

மங்களூர் சிவா said...

\\மொத்தத்தில் சென்ற வார இறுதி
கொண்டாட்டமாக இருந்தது.\\

good. good.

தமிழ் said...

படங்களும் அருமை
படமும் ( Sasirekha Parinayam ) அருமை

வாழ்த்துகள்