Tuesday, March 03, 2009

வாழ்க்கைக்கு உதவும் கல்வி:8

சில வீடுகளில் காலைநேரம் பிள்ளைகளைத் தயார்
செய்வதிலே பரபரப்பாக இருக்கும்.

ஒருவர் ட்ரெஸ்போட்டுவிட, ஒருவர் பால் குடிக்கவைக்க
(ப்ரெக்ஃபாஸ்டா மூச். காலையில் பால் குடிக்க வைப்பதே
பெரும்பாடு எனும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்)
ஒருவர் சாக்ஸ் மாட்ட என எல்லாம் முடித்து
அந்தக் குழந்தை தயாராகும் பள்ளிக்கு.

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அந்தக்
குழந்தை பள்ளிக்கு செல்ல உதவுவதாக
நினைக்கிறார்கள், உண்மையில் அந்தப் பிள்ளையின்
வளர்ச்சிக்கு தடைகல்லாக இருக்கிறார்கள்.






ஷூ போட்டுக்கொள்ள, லேஸ் கட்டக் கற்றுக்கொள்ளும்
இந்த விளம்பரத்தை அனைவரும் ரசித்திருப்போம்.
நம் வீட்டுக் குழந்தைக்கு ஷூ லேஸ் கட்டத்தெரியுமா?
என்று யோசித்திருப்போமா?




வளர்ந்தா கத்துக்கப்போறான்னு!” சொல்வாங்க.

தனது வேலையைக் கூடச் செய்து கொள்ளத்
தெரியாத பிள்ளை அடுத்தவரைச் சார்ந்துதான்
இருக்கும். அதனால் தான் பல வீடுகளில்
மனைவி ஷூ பாலிஷ் எல்லாம் போட்டு
ரெடியாக வைக்க வேண்டும்.

இந்த நிலை நம் வீட்டு குட்டி பாப்பாக்களுக்கு
வரக்கூடாது. ஷூ போடக் கற்றுக்கொடுக்க்வேண்டும்.
பராமரிப்பு மிக முக்கியம் என்பதால்
ஷூ பாலிஷிங் செய்யவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.







கற்பதனால் கறை ஏற்படத்தான் செய்யும். அதனால் கறை நல்லது
என்பதாக சர்ஃப் எக்சல் விளம்பரம் சொல்வது உண்மை.

கற்க விடுங்கள்.

2 comments:

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நாள் ஆச்சே ...

நட்புடன் ஜமால் said...

\\கற்பதனால் கறை ஏற்படத்தான் செய்யும். அதனால் கறை நல்லது
என்பதாக சர்ஃப் எக்சல் விளம்பரம் சொல்வது உண்மை.

கற்க விடுங்கள்.\\

மிகச்சரி ...