வேலைக்குபோகும்பொழுது டிபன் பாக்ஸில் சப்பாத்தி
கொடுத்தால் சந்தோஷப்படுவேன்!!!
ஹேண்ட்பாக்கில் வெயிட் அதிகமாக இருக்காதே!!! :))
குழந்தை பிறந்ததும் குழந்தையின் அத்தியாவசியமான
பொருட்கள் கொண்ட பெரிய பேக்கையும் தூக்கிக்
கொண்டு அலையவேண்டி இருந்த போது கஷ்டாமாத்தான்
இருந்துச்சு.
அவர்களும் வளர்ந்த பிறகு ஹாண்ட்பேக் இல்லாமல்
(கடைக்கு, பக்கத்தில் சின்ன தூரமான இடங்களுக்கு)
போகலாம் என்றால் முடியாது. அவர்களுக்குத் தேவையான
பிஸ்கட், இப்படி சில வைக்க வேண்டும்!!
வெளியூர் செல்லும்பொழுது கேமிரா, கூலிங்கிளாஸ்
இப்படி வைத்துக்கொள்ள கண்டிப்பாய் பெரிய ஹேண்ட்பேக்தான்.
ஹேண்ட்பாக்குகலின் காதலினாலும் என்னவோ
கடைக்கு செல்லும்பொழ்து(முக்கியமா இரண்டு
கைகளிலும் பாரம் எடுத்து வரும் நிலையில்)
தோளிலிருந்து ஹேண்ட்பேக் வழுக்கிக்கொண்டே
இருக்கும். இதனால் ஹேண்ட்பேக்குகள் இல்லாமல்
செல்வது எப்படின்னு யோசிச்சு, கழுத்தில் மாட்டும்
செல்போன் பேக் செஞ்சு அதில் காசு, சாவி, போன்
மட்டும் வெச்சுகிட்டு போவேன்.
கழுத்தும் வலிக்குது!!! :((
அதனால் வந்த ஐடியாதான் இது.
ஒவ்வொரு சுடிதாரிலும் சின்ன பை
வெச்சு தைக்கச்சொல்லிடுவேன்.
ரெடிமேட் சுடிதாராக இருந்தாலும்
எக்ஸ்ட்ரா துணி வாங்கிக்கொடுத்து.
(கால் மீட்டர் போதுமே!) ஒரு
பை தைக்கச் சொல்லிவிடுவேன்.
இதனால் கையை வீசிக்கிட்டு கடைக்குபோகலாம்,
வரும்பொழுது கையில் பாரமிருந்தாலும்
ஹேண்ட்பேக்கை பாதுகாக்கும் பயமில்லை!!!
தோள்பட்டை வலியும் கொஞ்சம் குறைஞ்சிருக்கு.
ஹேண்ட்பேக் அவசியமில்லாத இடங்களுக்கு
இது மிகவும் வசதியாக இருக்கு. சில சமயம்
கைப்பையில் அலைபேசியை வைத்துவிட்டு,
மணிஅடிக்கும்பொழுது எங்கே இருக்குன்னு?
தேடும் நிலை இல்லை. என ஏகப்பட்ட ப்ளஸ்கள்.
:)))
கை வீசம்மா! கை வீசு
கடைக்கு போகலாம் கைவீசுன்னு பாடி
கையை வீசிகிட்டுத்தான்( கட்ட பேக் மட்டும்
எடுத்துக்கிட்டு) கடைக்கு, இல்ல
எங்கயும் போறேன்.
ஹேண்ட்பேக் இல்லாம கைய
ஃப்ரீயா வெச்சுகிட்டு பயணிக்கிறது என்ன ஒரு சுகம்!!!
15 comments:
அருமையான யோசனை...:)
வருகைக்கு நன்றி தூயா.
ம் நல்ல யோசனை தான்.....
நன்றி ரோமுலஸ்
சூப்பர் ஐடியா தென்றல் நன்றி. இதே மாதிரி ஒரு பாக்கெட் வச்சு ஒரு புடவை கூட நல்லியில அறிமுகப்படுத்தினாங்களாமே, என் அலுவலக தோழி சொல்லறாங்க :)
இதே மாதிரி ஒரு பாக்கெட் வச்சு ஒரு புடவை கூட நல்லியில அறிமுகப்படுத்தினாங்களாமே, //
ஆமாம் தாரணிப்ரியா. அது பட்டுப்புடவைகளில் இருந்தது.
நமக்கும் அதுக்கும் தூரமாச்சே!!!
ஐ மீன் பட்டுப்புடவைக்கும் எனக்கும் ஆகாது.
:))
\\ஒவ்வொரு சுடிதாரிலும் சின்ன பை
வெச்சு தைக்கச்சொல்லிடுவேன்.\\
நல்லாக்கீதே ஐடியா!
அருமையான ஐடியா !!
ம்ம்ம்ம். நான் இப்ப இதை செயல்படுத்த முடியாது. எனக்குத் தேவையானத விட ஜூனியரின் ஐட்டம் தான் ஜாஸ்தியா இருக்கு ஹேண்ட்பேக்ல:)
நன்றி ஜமால்
நன்றி கணிணி தேசம்
எனக்குத் தேவையானத விட ஜூனியரின் ஐட்டம் தான் ஜாஸ்தியா இருக்கு ஹேண்ட்பேக்ல:)//
:(((. சரி மைண்ட்ல வெச்சு ஃப்யூச்சர்ல உபயோகிச்சுக்கோங்க.
நல்ல யோசனைதான்
நன்றி அமித்து அம்மா
gute idee :) :)
Post a Comment