இரவில் மின்விளக்குகளுடன் கோவில் ஜொலிப்பது
தெரிந்தது.
அன்னவரத்தை அடைந்ததும் அங்கேயே ஒரு
அறைஎடுத்து தங்கினோம்.
அந்தேரிதாத்தாவிற்கு தெரிந்த பண்டிதர் அங்கே
இருந்ததால் தாத்தா அவர்களிடம் எங்களுக்குத் தேவையான
உதவிகள் செய்யச் சொல்லியிருந்தார்.
அடுத்த நாள் காலை 7.30மணிக்கு கோவிலுக்கு வந்துவிடும்படி
சொன்னார் அந்தப் பண்டிதர்.
கோவிலின் விசேடம் என்ன வென்று பார்த்துவிடலாம்.
இங்கே உறையும் இறைவன் ஸ்ரீ வீரவேங்கட சத்யநாராயண
சுவாமி. இது சிவகேசவ ஷேத்திரம்.(சிவனும், விஷ்ணுவும்
இணைந்து காட்சித்தரும் இடம்)

இரவில் மின்னும் பின்புறக் கோபுரம்


ஸ்தலபுராணம் என்ன எனத் தெரிந்து கொள்ள வேண்டாமா?
மலையின் மீதமர்ந்து மேனகை தவம் புரிந்து விஷ்ணுவி்டம் பெற்ற
வரத்தால் இரண்டு ஆண்மக்களை பெறுகிறாள்.
பத்ரா, ரத்னாகர் என்று பெயரிட்டு வளர்க்கிறாள்.
பத்ரா தவம் புரிந்து விஷ்ணுவின் வரம்பெற்று
பத்ராசல மலையாகிறான். அங்கே ராமர் கோவில் கொண்டுள்ளார்.
தனது உடன்பிறப்புடன் போட்டியிட்டு ரத்னாகர்
தானும் தவம் புரிந்து விஷ்ணுவை மகிழ்வித்து
வீரவேங்கட சத்யநாராயணனாக அமர்ந்து அருள்
பாலிக்க வேண்டுகிறார்ன். ரத்னாகர் ரத்னகிரி மலையாகிறான்.
அந்த ரத்னகிரி மலையில் மேல் அமர்ந்து
பக்தர்களுக்கு அனின வரம்( வேண்டிய வரம்)
கொடுத்து அருள் பாலிப்பதால் அந்த இடம்
அன்னவரம் ஆயிற்று. சத்ய்நாராயணர் மீசையுடன்
இருக்கிறார்.
இந்தக் கோவிலின் அமைப்பு ஒரு ரதத்தைப்போல இருக்கிறது.

இந்தக் கோவிலில் என்ன சிறப்பு??
அடுத்த பதிவில்........
13 comments:
ஆன்மிகப் பயணக்கட்டுரையா..ரைட்டு:)
ரொம்ப பக்தி போல
ஆமாம் வித்யா,
வருகைக்கு மிக்க நன்றி
பக்தியும் வாழ்வில் வேண்டுமே ரோமுலஸ்
வருகைக்கு நன்றி
யக்கோவ்!
எது எழுதினாலும் ஒரு சுவாரஸ்யமான தொடரும் போடுறியளே எப்படி!
தலப்புராணம் & போட்டோக்கள் சிரமம் பாரமல் நிறைய தகவல்கள் சேகரிக்கப்பட்டு கோர்க்கப்பட்டிருக்கிறது !
நன்றி பாஸ்! எதிர்காலத்தில் அந்த பக்கம் வந்தா கோவில் போக உதவும் :)
நிஜமா நல்லவனோட சேர்ந்து தூயாவும் ஸ்மைலி போட ஆரம்பிச்சிட்டாங்கய்யா..
சுவாரஸ்யமான தொடரும் போடுறியளே எப்படி!//
புதுகை ப்ளாக்கர்களின் தலைவர் சுரேகாவிடம் கற்றதுதான்.
எதிர்காலத்தில் அந்த பக்கம் வந்தா கோவில் போக உதவும் //
அதற்காகத்தான் கொஞ்சம் விரிவா பதிவிட்டது.
நன்றி ஆயில்யன்
எனக்குத் தெரிஞ்சதெல்லாம் அயனாவரம் தான் :)
Pics and narration very nice.
Keep rocking.
நானும் குறிச்சிக்கிறேன்.. வரும்போது பார்ப்பதற்கென்று. .. :)
படங்களுடன் அருமையாக விவரித்திருக்கிறீர்கள் தென்றல்.
அதிலும் இரண்டாவது படம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.
Post a Comment