Wednesday, March 18, 2009

அம்பாசிடரும் ஆஷிஷும்

இந்தியா வரும்பொழுது அப்பா கார் எடுத்துக்கொண்டு
ஏர்போர்ட் வந்துவிடுவார். ஆஷிஷ் மட்டும்
டென்ஷனாகவே இருப்பான். தாத்தா என்ன
கார் கொண்டு வருவாரோ!!! என்பதுதான்
டென்ஷனுக்குகாரணம்.


அப்பா எப்போதும் அம்பாசிடர் கார்தான் கொண்டுவருவார்.
பலவிதத்தில் அது சொளகரியமான வண்டி.
ஆஷிஷுக்கு இந்தக் கார் சுத்தமாக பிடிக்காது.
இதையும் காண்டசாவையும் கார் வகையாகவே
சேர்க்கமாட்டான். :(( யானை மாதிர் இருக்குப்பா!
என்பான். அவனுக்கு பிடித்தது ஃபெராரி தான்.

ஒரு சுமோ கொண்டுவந்தால் என்ன தாத்தா?
என்று அப்பாவிடம் செல்ல சண்டை நடக்கும்.





அம்பாசிடரில் ஏறும்போதெல்லாம் முகத்தை சோகமாகவே
வைத்துக்கொண்டுதான் ஏறுவான்.

கொழும்புவில் சடனாக அம்பாசிடர் கார் பார்த்தபொழுது
ஆச்சரியாமாக இருந்தது. அங்கே ஒரு அமைச்சர்
அம்பாசிடரை மிக விரும்பி வாங்கி வைத்துக்கொண்டார்.
அதிவிரைவில் அம்பாசிடருக்கு ஒரு ஷோரும் வேறு
வந்துவிட்டது.

R.A.DEMEL MAVATHAI எனும் ரோட்டில்
H.S.B.Cக்கு எதிரில் அந்த ஷோரூம்.
அந்தப் பக்கம் போகும்போதெல்லாம்
கண்ணை மூடிக்கொண்டுவிடுவான். :))




1948ஆம் ஆண்டு துவங்கி ஓடிக்கொண்டிருக்கிறது
அம்பாசிடர். இதுதான் நம் இந்தியாவின் முதல்
கார் எனும் பெருமை இருக்கிறது.Amby என்று
முதலில் அழைக்கப்பட்டு அம்பாசிடர் என
பிறகு மாற்றப்பட்டது.

ower steering, multi point fuel injection, company fitted CNG, enough space for leg room, comfortable arrangement of seating, sturdy and tough structure, 5 speed gear box
, easy repair ability etc. என ப்ளஸ்கள்
அம்பாசிடருக்கு. இதெல்லாம் அயித்தான்
எடுத்துச் சொல்லி நம் இந்தியத் தயாரிப்பு
என பெருமை கொள்ளடா மகனேன்னு சொன்னதற்கப்புறம்

இப்போது முகத்தை மூடிக்கொள்வதில்லை.


ஆஷிஷின் முந்தைய கார் பதிவில்
அவனுக்கு ஹைபிரீட் கார் பற்றி எப்படித்
தெரியும்? என்று கேட்டு பதிவு போடச் சொல்லியிருந்த
பரிசலாருக்காக இதோ:

ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் கார் & பைக் ஷோ
பார்த்து தெரிந்து கொண்டானாம்.

இது என் 375ஆவது பதிவு

8 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஷிஷ்க்கு பேவரைட் கார் தான் என்று எனக்கு தெரியுமே!

நட்புடன் ஜமால் said...

375ஆ இது

வாழ்த்துகள்

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துகள்!

Iyappan Krishnan said...

500 kku advance vazththukkal

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

அம்பாசிடர் கார் சின்ன வயதில் எனக்கு அதன் மேல் ஒரு வெறுப்பு இருந்தது. ஆனால் இப்போ இல்லை. உண்மையிலே இந்திய சாலைகளுக்கு ஏற்ற தரமான வண்டி அது.

நான் முதன் முதலாக கார் ஒட்டியது அதில் தான். கை கியர்... ம்ம்ம்ம் நல்ல பதிவு...

375 - பதிவுலக லாரா (2) நீங்க தான் ... வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் :)

pudugaithendral said...

நன்றி ஜமால்

நன்றி நிஜம்ஸ்

நன்றி ஜீவ்ஸ்

நன்றி ராமலக்‌ஷ்மி

நன்றி சிவா

நன்றி தூயா