Monday, March 23, 2009

கண்ணீர் துடைத்த கைகளுக்கு......

அழுவது எனக்கு பிடிக்கது. பெண்கள் அழுதே காரியத்தை
சாதித்துக்கொள்வார்கள் என்று எங்கே என்னையும்
அந்த லிஸ்டில் சேர்த்துக்கொள்வார்களோ என்று
அழமால் யோசித்து செயல்படுவேன்.

அழுகைக்கு பதில் கோபம் பல சமயங்களில்
வரும். ஆனால் என்னால் மிகவும் தாங்க முடியாத
தருணங்களில் மட்டுமே என் அழுகை.

மாமாவின் பிரிவு தந்த வலி, துயர் என்னை
மிக அழவைத்தது. ஷ்ரத்தாஞ்சலி என தலைப்பு
வைக்க நினைத்து மாமாவின் பதிவு
கண்ணீர் அஞ்சலி என தலைப்பாயிற்று.

எனக்கு யாருக்கும் நன்றி சொல்லித்தான் பழக்கம்.
நன்றி சொல்லாமல் இருக்கத் தெரியாது.
(இது என்னை அறிந்தவர்கள் மிக நன்றாக
அறிந்திருப்பர்)நன்றி சொல்வது நல்லது என்பது
என் அபிப்ராயம். சின்ன விஷ்யங்களுக்கு கூட
நன்றி சொல்வேன்.

என்னை பத்திரமாக வீடு சேர்த்த ஆட்டோ டிரைவர்,
என எல்லோருக்கும் சொல்வேன். நிறைய முறை
அயித்தானுக்கும் நன்றி சொல்லியிருக்கிறேன்.


சின்னச் சின்ன விஷய்ங்களுக்கே நன்றி
சொ்ல்பவள், பெரிய விடயங்களுக்கு
நன்றி சொல்லாவிட்டால் எப்படி???


பிரார்த்திக்க வேண்டுகிறேன் என பதிவிட்ட
நேரத்தில் அனைவரும் வந்து என்னுடன்
சேர்ந்து மாமாவுக்காக பிராத்தித்தனர்.

அப்துல்லா மறுபடியும் பதிவிட்ட நேரத்திலும்
பலர் வந்து பிரார்த்தனை செய்தனர்.

அடிக்கடி போன் செய்து நிலமை அறிந்து
கொண்ட அப்துல்லா, ஜமால்,நிஜமாநல்லவன்
ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.


ஆன்லைனில் பார்த்தபோது,”மாமா
எப்படி இருக்காங்க?” என்று கேட்ட
அன்பு நெஞ்சங்கள்...

எஸ்.எம்.எஸ்ஸில் எனக்குத் தைரியம்
சொன்ன அன்பு நெஞ்சங்கள்.

அனைவருக்கும் நன்றி

கண்ணீர் அஞ்சலி பதிவிட்ட 10 நிமிடத்தில்
அபி அப்பா போன் செய்தார்.
பேசி கொஞ்ச நேரத்தில் போன் செய்து
”பிள்ளைகளுக்கு முதலில் வயிற்றுக்குக்
கொடுங்கள்” என சொன்னார்.(அப்படியே
செய்தேன் அபி அப்பா).

ஜமால், ஜீவ்ஸ், நர்சிம், தாமிரா
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மாமாவுக்காக பிராத்தித்த, நான் துயரத்தில்
அழுத நேரத்தில் என் கண்ணீர்
துடைக்க நீண்ட கரங்களுக்கு என் மனமார்ந்த
நன்றிகள்.


12 comments:

ராமலக்ஷ்மி said...

நீங்களே சொன்னாற் போல மாமா உங்களுக்குத் தெய்வமாக இருந்து வழி காட்டுவார். உங்கள் முகத்தில் தைரியம் கண்டால்தான் குழந்தைகளும் தேறுவார்கள்.

நட்புடன் ஜமால் said...

நட்பு அதற்குத்தானே அக்கா!

அமுதா said...

அவர் உங்களுக்கு தெய்வமாக துணை நிற்பார். காலம் தான் வலியைக் குறைக்கும் மருந்து.

சந்தனமுல்லை said...

மீண்டு வந்ததது கண்டு மகிழ்ச்சி!

இராகவன் நைஜிரியா said...

நல்ல நட்பு என்பது கஷ்டமான காலங்களில் உதவி செய்வதற்க்காகத்தான்.

உங்கள் கஷ்டத்தில் பக்கத்தில் இருந்து உதவ முடியாவிட்டாலும், உங்கள் மனக் கஷ்டத்தில் இருந்து விரைவில் விடுபட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

pudugaithendral said...

ஆமாம் ராமலக்‌ஷ்மி,

நான் தைரியம் பெற்றுவிட்டுவிட்டேன்.

pudugaithendral said...

நட்பு அதற்குத்தானே அக்கா!//

ஆமாம் ஜமால்,
சில நட்புக்கள் பல உறவுகள் தந்தது இந்த வலையுலகம்

pudugaithendral said...

ஆமாம் அமுதா.

pudugaithendral said...

மீண்டு வந்ததது கண்டு மகிழ்ச்சி!//

:))

pudugaithendral said...

நல்ல நட்பு என்பது கஷ்டமான காலங்களில் உதவி செய்வதற்க்காகத்தான்.//

ஆமாம் இராகவன்.
உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்புன்னு
வள்ளுவர் வாக்கே இருக்கே!!

எம்.எம்.அப்துல்லா said...

இறப்பு செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். எனது உணர்வுகளையும் சொல்லிவிட்டேன்.

http://mmabdulla.blogspot.com/

SK said...

:(