அம்மா யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமென்றால்
எடுப்பது இண்டல்ண்ட் லெட்டர் அல்ல. பரிட்சைக்கு
எழுதுவோமே அது போல ஒரு பெரிய தாள்.
சில சமயம் 4 பக்கம் கூட வரும். :))
”ரத்னாகிட்டேயிருந்து ராமாயணம் வந்திருச்சுன்னு”
சொல்லிகிட்டேதான் எல்லோரும் லெட்டர் படிப்பாங்க.
அம்மாவோட இந்தப் பழக்கம் தான் என்னிய பதிவெழுத
வெச்சிருக்குன்னுநினைக்கிறேன்.
அப்பாவுக்கு ரதன்ச்சுருக்கமா லெட்டர் எழுதினாத்தான்
பிடிக்கும்.
வீட்டில் பழமொழிகள் சர்வசாதரணமாக உபயோகிப்பாங்க.
அதைக் கேட்டு கேட்டு நானும் இப்போ சொல்ல
ஆரம்பிச்சிட்டேன்.
எனக்குத் தெரிந்த பழமொழிகளை இங்கே கொடுக்கிறேன்.
மாட்டிவிட்ட தூயாவுக்காக இதோ பதிவு.(தெலுங்கு
ஹீரோயின்ல கொஞ்சம் ஓவரு!!!)
டெஸ்டுக்கு படிச்சுகிட்டிருந்த தம்பியை அவனது
ஃப்ரெண்டு வந்து கூப்பிட ரெண்டு பேரும் சேர்ந்து
வெளியில போனாங்க. போனவுங்க ஆளையே காணோம்!!
2 மணி நேரம் கழிச்சு திரும்ப வந்தாங்க.
அம்மா செமையா திட்டினாங்க. ”இல்லம்மா! டீ.எல்.ஸி
ஸ்கூல் க்ரவுண்ட்ல சினிமா ஷூட்டிங் நடக்குதுன்னு
சொன்னாங்க பாக்கப்போனோம். ஒருத்தரையும் காணோம்!”
அப்படின்னு சொல்ல அம்மா சொன்னது
“கேப்பையில நெய் ஒழுகுதுன்னா கேப்பாருக்கு
மதி எங்க போச்சு!!”
(நந்தா படத்துல வரும் பல காட்சிகள் எங்க ஊருதான்.
காலேஜ், புதுகை அரண்மனை(இப்ப கலெக்டரேட்டு),
லொடுக்கு பாண்டி திருடுவது ராஜகோபாலபுரம் ஹவுசிங்
போர்டு. நிறைய்ய படங்களில் எங்க ஊரு வரும்.
இப்போ லேட்டஸ்டா சுசிகுமாரோட ஒரு படத்துல
எங்க ஊரு வாண்டுகள் நடிக்கறாங்களாம்.)
**********************************************
அதிகமாக பிடிவாதம் பிடிப்பவர்களை பாத்து
சொல்லப்படும் பழமொழி “மனுஷன் பிடிச்ச முயலுக்கு
மூணேகால்னு சொல்றவராச்சே”.
***************************************
முனுக்கென்றால் அழுபவர்களைப் பாத்து
சொல்வது “நீலிக்கு கண் நெத்தியிலே!”
****************************************
எங்க பாட்டி சரியான கறார் பேர்வழி.
வீட்டுல வேலை செய்யற மாரி எப்பவும்
ஒரு பித்தளை தூக்குச்சட்டியை தூக்கிகிட்டு
வந்துபாட்டிகிட்ட அடகு வைப்பாங்க. 50 ரூபாய்தான்.
அதுக்கு வட்டி எல்லாம் கணக்கு சரியா வெச்சிருப்பாங்க.
அவங்க சம்பள கணக்குத் தனி இது தனின்னு சொன்னாலும்
அடிச்சு பேசி மாசாமாசம் கரெக்டா வட்டி(2 ரூபாய்தான்)
வாங்கிகிட்டு சீக்கிரமே தூக்குச் சட்டியை மூட்டுக்கச்
சொல்வாங்க. என்ன பாட்டி இவ்வளவு கறாரா
இருக்க?ன்னு கேட்டா பாட்டி சொல்வது
“ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா
இருக்கணும்” ம்ம்ம் இதெல்லாம் நமக்கெங்க தெரியப்போகுது!!
**************************************************
அம்மா கூட பிறந்தவங்க 2 பேர் ஒரு சித்தி, ஒரு மாமா
(சின்ன மாமா ரொம்ப வருஷம் கழிச்சு பொறந்தாங்க)
அம்மம்மா எந்தப் பலகாரம் செஞ்சாலும் அதை 3 பேருக்கும்
சமமா கொடுப்பாங்களாம். எங்கம்மாவுக்கு அம்புட்டா
வெவரம் பத்தாது. தன் பங்கை பத்திரமா டப்பாவுல
போட்டு வெச்சிருவாங்களாம். சித்தியும் மாமாவும்
சேர்ந்து அம்மாவோட பங்கை சுட்டுடுவாங்களாம்.
இது எப்பவும் வாடிக்கை. அம்மம்மா சொல்வாங்களாம்.
“கொடுத்தப்பையே சாப்பிட்டிருக்க வேண்டியதுதானே!
இப்ப உள்ளதும் போச்சுடா லொள்ளக் கண்ணா”ன்னு
உக்காந்திரு! :)
*****************************************
தம்பிகிட்ட ஒரு வேலை செய்யச் சொன்னா போதும்
அந்த வேலை கண்டிப்பா நடக்காது.
இதோ செய்யுறேன், அதோ செய்யறேன்னு
போட்டு வெச்சிட்டு ஐயா மேட்ச் பாப்பாரு.
அம்மா அடிக்கடி சொல்லும் பழமொழி.
“உதடு தேயுறதற்கு உள்ளங்கால் தேயலாம்”
இவன் கிட்ட சொல்லுவதற்கு பதில்
நானே போய் செஞ்சிடலாம். :))
சூதனமான புள்ள.
தெரிஞ்சதை எழுதிட்டேன் தூய்ஸ்
பழமொழிகளை மறக்காமல் பதிவாக்க விரும்புறவங்க
யார் வேணாம் பதிவு போடுங்கப்பா. எனக்கு
ஒரு லிங்க் மட்டும் கொடு்ங்க.
(யாரையும் மாட்டிவிட்டு திட்டு வாங்க
நான் ரெடியில்லை. :))))))
28 comments:
ஆகா, அதற்குள் பதிவா சிஸ்ஸி??!!!
இருந்தாலும் கடைசி வரியில என்னை திட்டிட்டிங்களே ??
கிகககி
இருங்க மறுபடி ஒரு தொடர்பதிவில மாட்டி விடுறேன்..
ஆஹா அதுக்குள்ளே பின்னூட்டமா
ஏதும் சமைக்கலையா தங்காச்சி
\\தெலுங்கு
ஹீரோயின்\\
ஹா ஹா ஹா
தெலுங்கு ஹீரோயின் தெலுங்க பழமொழி சொல்லுவாங்கன்னு பார்த்தேன்
இருந்தாலும் கடைசி வரியில என்னை திட்டிட்டிங்களே //
நான் உங்களை திட்டலை தூய்ஸ்.
என்னிய மத்தவங்க திட்டிடக்கூடாதுல்ல
அதான் :)))
இருங்க மறுபடி ஒரு தொடர்பதிவில மாட்டி விடுறேன்..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தெலுங்கு பழமொழி சொல்லுவாங்கன்னு பார்த்தேன்//
நான் சொல்லுவேன் அது எல்லோருக்கும் புரியணும்ல
:))))))))
ஏதும் சமைக்கலையா தங்காச்சி//
அதெல்லாம் கரெக்டா கண்டுபிடிச்சு சமைச்சிட்டாங்க.
http://thooyaskitchen.blogspot.com/2009/03/blog-post_26.html
பாருங்க
உள்ளதும் போச்சுடா லொள்ளக் கண்ணா”ன்னு
உக்காந்திரு! :)
//
தென்றல் , இது உள்ளதும் போச்சுட நொள்ள கண்ணா" இல்லையா நாங்க அப்படித்தான் சொல்லுவோம்.. :)
“நீலிக்கு கண் நெத்தியிலே!”//
இதுக்கும் நீலீ கண்ணீர் வடிக்கறா பாரு ன்னு சொல்லுவாங்க.. :)
இது உள்ளதும் போச்சுட நொள்ள கண்ணா//
எங்க அம்மம்மா சொன்னது மருவி போயிருக்கலாம்.
நீலீ கண்ணீர் வடிக்கறா பாரு//
ஓஹோ. கேள்விப்பட்டதில்லை.
இப்படி பல விடயங்கள் இருப்பதாலேயே இந்தத் தொடரில் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
நன்றி கவிதா.
கழுதை கெட்டா குட்டிச் சுவர் "
சில நபர்களில் சில இடங்களில் தொடர்ந்தது இருக்கக் கூடும் என்பதை சூசகமாகச் சொல்லும் வார்த்தை இது.
"நொண்டிக் குதிரைக்கு சருக்குனது சாக்கு"
வேலையில் சாக்குப் போக்கு சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டு சோம்பி இருப்பவர்கள் .
"ஆடத் தெரியாதவளுக்கு தெரு கோணல்"
சிலருக்கு சில விசயங்களில் ஞானம் இல்லாவிட்டால் கூட அதை வெளிக் காட்டாமல் அது சரியில்லை இது இப்படி இருக்க வேண்டும் என நொள்ளை சொல்லிக் கொண்டிருப்பார்கள் கூடவே இப்படி இருப்பதால் தான் என்னால் முடியவில்லை இல்லா விட்டால்
நரியைப் பரி ஆக்கி விடும் வல்லமை எனக்குண்டு" என வீண் பந்தா செய்பவர்களை இப்படிச் சொல்லலாம்.
"அற்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியிலே குடை பிடிப்பான் "
தற்பெருமை தலைக்கனங்களை இப்படிச் சொல்லலாம் .
"நிண்ட நேர்ஷின பெத்தம்மா கெம்ப்ப எத்துகுனி நீலகு போயிந்தண்டே "இது தெலுகு பழமொழி இதன் தமிழ் வழக்கு -"மிக நேர்த்தியாக செயல்களைச் செய்பவள் எனப் பெயரெடுத்த பாட்டி கூடையை எடுத்துக் கொண்டு தண்ணீருக்குப் போனாளாம்"
இன்னொரு தெலுகு பழமொழி
"மகா மகா தேவன்டு மாண்டு கெஞ்சிகி ஏடுஸ்துந்தன்டெ ஆண்டுமாறின தேவன்டு அரிட்டி பண்டுகு ஏடுஸ்துந்தண்டே "
மகா மகா தேவர்கள் எல்லாம் வடிகஞ்சிக்கு வழி இன்றி அழும் போது (ஆண்டுமாறின தேவன்டு) இதற்க்கு தமிழில் என்ன அர்த்தமென்று சொல்லத் தெரியவில்லை வாசிப்பவர்கள் இதை மகா பெரிய தேவர்களுக்கெல்லாம் கடை நிலையில் இருக்கும் தேவன் என்று எடுத்துக் கொள்ளலாம் கிட்டத் தட்ட "சனியன்"என்றாலும் சரியாகத் தான் இருக்கும் .அப்பேர்ப்பட்ட கீழ் நிலையைத் தரும் தேவன் வாழைப் பழத்திற்காக அடம் பிடித்து அழுததாம் .
இதைப் படித்து விட்டு யாராவது என்னை திட்ட வேண்டாம்.
வாங்க மிஸஸ்.டவுட்,
தமிழ், தெலுங்கு இரண்டிலும் பழமொழிகள் கொடுத்து கலக்கிட்டீங்க.
மிக்க நன்றி
சம்பவங்களைக் கோத்து பழமொழிகள் அழகாகச்சொல்லிட்டீங்களே!!!
'சட்டியில் இருந்தது அகப்பையில் வருது....!'
சட்டியில் இருந்தது அகப்பையில் வருது//
நானானி கைவசம் நிறைய பழமொழிகள் ஸ்டாக் இருக்கும் போல இருக்கே. பதிவிடுங்களேன்.
//நட்புடன் ஜமால் said...
தெலுங்கு ஹீரோயின் தெலுங்க பழமொழி சொல்லுவாங்கன்னு பார்த்தேன்
புதுகைத் தென்றல் said...
நான் சொல்லுவேன் அது எல்லோருக்கும் புரியணும்ல
:))))))))
//
புதுகை அக்கா..
உங்களுக்கு பழமொழிகள் மட்டுமல்ல, பல மொழிகள் தெரியுமென்று சொல்லுங்க....
உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா
உதடு தேய உள்ளங்கால் தேயலாம்
எங்கம்மாவும் சொல்லி கேட்டிருக்கேன். நல்ல பதிவு.
பழமொழிகளுடன் படிக்கத் தந்த சம்பவங்கள் கூடுதல் சிறப்பு. ரசித்தேன்.
நல்ல பழமொழிக் கோர்வை..பல மலரும் நினைவுகள் வந்து போயின கலா..
எல்லாமே நான் கேள்விப்பட்டவைதான். அப்புறம் அது 'நொள்ளக்கண்ணா'தான்.!
எனக்கு புடிச்சவை.....
1) எழவு வீட்டுக்கு போற எல்லோருமா தாலியறுப்பாங்க
2)கூர மேல சோறு போட்டா 1000 காக்கா....
http://www.tamilnation.org/literature/proverbs.htm#அ
"பழமொழிகள்.." Link
உங்களுக்கு பழமொழிகள் மட்டுமல்ல, பல மொழிகள் தெரியுமென்று சொல்லுங்க....//
வாங்க கீழைராசா,
அப்படியும் சொல்லலாம்.
தாய் மொழி தெலுங்கு, பிறந்த வளர்ந்தமொழி தமிழ், ஆசையுடன் கற்ற ஹிந்தி, பிள்ளைகளுக்காக 6 மாதம் ஃப்ரென்ச் என கொஞ்சம் கொஞ்சம் தெரியும். பீட்டரும் வரும்ல. :))
எங்கம்மாவும் சொல்லி கேட்டிருக்கேன். நல்ல பதிவு.//
அப்படியா, நன்றி சிவா
ரசித்தேன்//
நன்றி ராமலக்ஷ்மி
பல மலரும் நினைவுகள் வந்து போயின கலா..//
நன்றி பாசமலர். அடிக்கடி கொசுவத்தி சுத்தி விட்டுடறேன் போல :))
அது 'நொள்ளக்கண்ணா'தான்.!//
தகவலுக்கும் வருகைக்கும் நன்றி ஃப்ரெண்ட்
பழமொழிகள் லிங்கிற்கு நன்றி ரோமுலஸ்
Post a Comment