Friday, April 03, 2009

சங்கட்டி.. சங்கடங்கள்...சந்தோஷங்கள்

பள்ளி விடுமுறைக்கு ஒரு முறை என் அத்தை
வீட்டுக்கு சென்றிருந்தேன். சித்தூருக்கு பக்கத்தில்
ஒரு சின்ன ஊர் அது. மாமா தெலுகு பண்டிடாக
அங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் அத்தை வித்தியாசமான உணவை
சமைத்துக்கொடுத்தார். கொதிக்கும் வெந்நீரில்
போட்டு எடுத்த அந்த உருண்டைக்கு தொட்டுக்கொள்ள
புளியஇலை குழம்பு. செம் ருசியாக இருந்தது.

அந்த உணவுக்கு பெயர் சங்கட்டி.
கேப்பை மாவில் செய்யப்படும் உணவு.
ஆந்திரா ஷ்பெஷல். அதன் பிறகு சங்கட்டியை
அடிக்கடி நினைத்துக்கொள்வேன். அத்தையை
தவிர வேறு யாருக்கும் அதைச் செய்யவும்
தெரியாது. அதன் பிறகு நான் அத்தையின்
ஊருக்கு செல்லவும் இல்லை. :((

சென்ற டிசம்பரில் ஹைதை பேகம்பேட் ஏரியாவில் இருக்கும்
லைஃப் ஸ்டைல் கட்டிடத்தில் இருக்கும்
மால்குடி உணவகத்துக்கு அயித்தான் அழைத்துச் சென்றார்.

தென்னிந்திய உணவுவகள் கிடைக்கும் இடம் அது.
சவேரா ஹோட்டலின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும்
அமைப்பு. பழங்கால கிராம வாழ்க்கையை சித்தரிக்கும்
ஓவியங்கள் அழகாக இருக்கும். மெனு கார்டில்
ஒவ்வொரு மாநிலசிறப்பு உணவுவகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு
கொடுத்திருந்தார்கள். பார்த்துக்கொண்டே வந்த எனக்கு
அந்த மெனு கார்டில் சங்கட்டி இருக்க கண்டு ஆச்சரியம்!!!!

சங்கட்டியும், பூண்டு குழம்பு ஆர்டர் செய்தேன்.
“சும்மா டேஸ்ட் பாருங்க”! என அயித்தானுக்கும்
பிள்ளைகளுக்கும் ஒரு ஸ்பூன் கொடுத்தேன்.
அவர்களுக்கும் அந்த ருசி பிடிக்க இன்னொரு ப்ளேட்
ஆர்டர் செய்தோம்.

அப்பொழுது முதல் மாதம் ஒருமுறை மால்குடி
சென்று சங்கட்டி+ பூண்டுகுழம்பு/வடைகறி சாப்பிடுவது
வழக்கம். நாம சந்தோஷமா இருந்தா அது
பொறுக்குமா???

ஆரம்பத்தில் இருந்தது போல இல்லாமல் அவர்களின்
சேவை தரம் குறைய ஆரம்பித்தது. சுடச்சுட சாப்பிட்டால்
தான் ருசியாக இருக்கும். சூடு ஆறி வரண்டு போன
நிலையில் உணவை பரிமாறினார்கள். காலம் தாழ்த்தி
உணவு வர ஆரம்பித்தது. ”அறவருத்த சாப்பாட்டுக்கு
விருவிறுத்த பட்டினி பரவாயில்லை” என அப்பா
அடிக்கடி சொல்வார். காசு கொடுத்து சாப்பிடும் பொழுது
ருசி,தரம் குறைவானால் அங்கே செல்லவே
வேண்டாம் என முடிவெடுத்தோம். என் சங்கட்டி
ஆசை அதோ கதியாகிப் போனது. லைஃப்ஸ்டைல்
பக்கம் செல்லும் போதெல்லாம் “வீ மிஸ் யூ சங்கட்டி”
என பிள்ளைகள் சொல்வார்கள்.


என் அம்மம்மாவுக்கு ஒரு பழக்கம். எந்த ஒரு
உணவுவகையையும் ஹோட்டலில் சமைப்பது போல
வீட்டிலும் சமைத்து அசத்துவார். அவரின் அபிமான
பேத்தியாகிய நானும் அசத்த வேண்டும் என்று
பிள்ளைகளுக்காக சங்கட்டி செய்யக் கற்க வேண்டுமென
யோசித்தேன். அத்தையின் செய்முறையை விட
ஈசியாக சங்கட்டி தயாரிக்கலாம் என அறிந்தேன்(நன்றி
மா டீவியின் “ மா ஊரி வண்ட”( எங்க ஊரு சமையல்)

சர்ப்ரைஸாக பூண்டு குழம்பு, சங்கட்டி செய்து
டின்னருக்கு கொடுத்தேன். என் முதல் சங்கட்டி
மிகச் சரியாக வந்து மால்குடி சங்கட்டியையும்
ருசியில் தோற்கடித்துவிட்டதாக அயித்தான்
பாராட்டினார். பிள்ளைகள் ,”மால்குடி போகாவிட்டாலும்
இனி சங்கட்டி கிடைக்கும்” என சந்தோஷ பட்டனர்.


சங்கட்டி செய்முறை இங்கே:

20 comments:

Anonymous said...

recipe enge???

S.Arockia Romulus said...

அடடா!! என்னோட ஆசைய வேற தூண்டிட்டீங்களே!!! நான் இனி சங்கட்டிக்கு எங்கே போவேன்???

pudugaithendral said...

சாப்பிடவாங்க ப்ளாக்கில் பதிவு போட்டு
அதன் லிங்கை இந்தப் பதிவில் கொடுத்திருக்கேன் தூயா.

pudugaithendral said...

வாங்க ரோமுலஸ்,

சங்கட்டி சாப்பிட எங்க வீட்டுக்கும் வரலாம், இப்ப ஏதும் மாத்தம் இருக்கானு மால்குடியில போய் பாத்து அங்கையும் சாப்பிடலாம்.

ஆயில்யன் said...

//நானும் அசத்த வேண்டும் என்று
பிள்ளைகளுக்காக சங்கட்டி செய்யக் கற்க வேண்டுமென
யோசித்தேன்//

அட ஆண்டவா....! :)))

ஆயில்யன் said...

//மிகச் சரியாக வந்து மால்குடி சங்கட்டியையும்
ருசியில் தோற்கடித்துவிட்டதாக அயித்தான்
பாராட்டினார்//

அயித்தான் எப்பவுமே இப்படித்தான்
பெருந்தன்மையா எதையாச்சும் சொல்லி மாட்டிப்பாங்க போல....!

ஆயில்யன் said...

//,”மால்குடி போகாவிட்டாலும்
இனி சங்கட்டி கிடைக்கும்” என சந்தோஷ பட்டனர்.
//

அங்க கிடைக்கிற பலாக்காவை விட இங்க சுமார செஞ்சுக்கொடுக்கிற ஆயில்யனோட, கலாக்கா பரவாயில்லன்னு ஒ.கே சொல்லிட்டாங்க போல :))))))))

pudugaithendral said...

அயித்தான் எப்பவுமே இப்படித்தான்
பெருந்தன்மையா எதையாச்சும் சொல்லி மாட்டிப்பாங்க போல....!//

இப்படி ஏதாவது பின்னூட்டம் போடாட்டி
சாப்பிட்டது செமிக்காதோ பாஸ்.

(சரி இன்னைகு வெள்ளிக்கிழமை வெந்தும் வேகாமலும் ஏதோ சமைச்சு சாப்பிட போறீங்க, நல்லா செமிக்கட்டும் :)) )

நட்புடன் ஜமால் said...

சங்கட்டியா

சங்கடம் வராதே!

pudugaithendral said...

சங்கடம் வராதே!//

சத்தியமா வராது.

Kumky said...

சோதனை முயற்சியில் வெற்றி பெற்ற கையோடு ரெசிப்பி போட்டு லிங்கையும் கொடுத்திட்டீங்க...இனி யார் யார் வீட்டுல சங்கட்டிகளும் சங்கடங்களும் உருவாக போகுதோ....

அமுதா said...

சங்கட்டி... புதுசா இருக்கு... செஞ்சு பார்த்திட வேண்டியது தான்...

SK said...

ம்ம்ம் புது வகை அசத்தி புட்டீங்க.

ராமலக்ஷ்மி said...

//சாப்பிட வாங்க//

இந்த வலைப்பூ சென்று சங்கட்டி, பூண்டு குழம்பு சாப்பிட்டு வந்தாச்சு:), செய்முறைகளுக்கு நன்றி.

pudugaithendral said...

இனி யார் யார் வீட்டுல சங்கட்டிகளும் சங்கடங்களும் உருவாக போகுதோ....//

:)))))))))

pudugaithendral said...

செஞ்சு பார்த்திட வேண்டியது தான்...//

செஞ்சி பாத்திட்டு சொல்லுங்க அமுதா.

pudugaithendral said...

புது வகை அசத்தி புட்டீங்க//

நன்றி

pudugaithendral said...

சங்கட்டி, பூண்டு குழம்பு சாப்பிட்டு வந்தாச்சு:), //

ஆஹா சந்தோஷம் ராமலக்‌ஷ்மி.

மங்களூர் சிவா said...

பிள்ளைகளும் அயித்தானும் நலம்தானே!?!? (சங்கட்டி சாப்பிட்ட பிறகு)

:)))))))))))))










(திட்டாதீங்க பிலீஸ்)

மங்களூர் சிவா said...

/
புதுகைத் தென்றல் said...

அயித்தான் எப்பவுமே இப்படித்தான்
பெருந்தன்மையா எதையாச்சும் சொல்லி மாட்டிப்பாங்க போல....!//

இப்படி ஏதாவது பின்னூட்டம் போடாட்டி
சாப்பிட்டது செமிக்காதோ பாஸ்.
/

ஐயையோ இதையே எனக்கும் ரிப்பீட்டிடாதீங்க


:))))))))))))