Wednesday, April 15, 2009

பிரியமனமில்லாமல் ஒரு பிரியாவிடை!!!

உன்னை இனி காணக்கிடைக்காதாமே!!
இந்த நிலை வரும் எனத் தெரிந்திருந்தால்
உன்னை “அனுப்பி”வைத்திருக்க மாட்டேன்!!!

உன்னைக் காணும் போதெல்லாம்
என் மனசுக்குள் ஒரு மத்தாப்பூ!!
பாந்தாமாக பூந்து பூந்து செல்லும்
உன் அழகே தனி!!


உன்னை வெளிநாட்டில் பார்த்தபோது
“ஆஹா! உன்னை இங்கேயும் விரும்புகிறார்களே!!”
என அகமகிழ்ந்தேன்.
அத்தனை சிறப்பு மிக்க நீ எங்களை
விட்டு பிரியப்போகிறாய் எனக்
கேள்வி பட்டது முதல்
மனதுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது!!!!வாகனம் யோகம் இருக்கிறது என்று ஜாதகத்தில்
இருந்ததா? என்று தெரியாது. ஆனால் மார்ச் 8 2001
மகளிர் தினத்தன்று எங்கள் வீட்டிற்கு வந்தது
மாருதி 800 கார்.மஹாராஷ்டிரா ரெஜிஸ்ட்ரேஷன்
எண்களுடன் (செகண்ட் ஹேண்ட் தான்) எங்கள் முதல் கார்.

அதன்பிறகு மாருது ஜுஜுகி வாங்கினோம்.ஏதோ திரைப்படத்தில் கவுண்டமணி சொல்வார்
“மாருதி மாருதின்னு ஒரு கார் வந்திருக்காம்!!
அதை ஒரு முறையேனும் ஓட்டி பாத்திடணும்”
என்று சினிமாவில் புகழ் பாடும் அளவிற்கு
மாருதி கார் சிறப்பு பெற்றது.


நடுத்தர வர்க்க மக்களின் வாகன யோகத்தை
பூர்த்தி செய்தது மாருதிதான்.

அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகின்ற நிலையில்

11 பெரிய நகரங்களில் மாருதியை எடுக்கப்போகிறார்கள்.
மெல்ல மெல்ல இந்த கார்களின் உற்பத்தியைக் குறைத்து
2016ல் மொத்தமாக முடக்கிவிடுவார்களாம்.
நம் நாட்டின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய புது சட்டத்தால்
இந்த மாற்றமாம். மாருதி ஓம்னியும் இனி சாலையில்
காணக்கிடைக்காது!!!

இதுவரை 2.5 மில்லியன் மாருதி 800 வகை கார்கள்
விற்கப்பட்டிருக்கின்றன. மாருதியைப் பற்றி
பலருக்கும் பலவித நினைவுகள் இருக்கின்றன.
எனக்கும் மாருதியைப் பற்றி கொசுவத்தி இருக்கும்.

உங்களுடைய நினைவுகளையும் பத்திரமா, பதிவா
போட்டு வெச்சுக்கோங்க.

பெரிய பெரிய கார்கள் ஓடும் இடங்களில்
ஜுகுஜுகுன்னு கொசுமாதிரி மாருதி பார்க்கவே
அம்புட்டு அழகா இருக்கும். பார்க்கிங்கிற்கு
வசதி, சாலையிலும் வசதின்னு மாருதியின்
எத்தனையோ நினைவுகள்!!!!


மாருதி இனி நம் நினைவுகளில் மட்டுமே!! :((
16 comments:

நட்புடன் ஜமால் said...

காருக்கேவா!

ம்ம்ம் ...

S.Arockia Romulus said...

ஒரு காலத்துல தமிழ் சினிமால பணக்கார ஹீரோயின காட்டணும்னா மாருதி காரோட தான் காட்டுவாங்க......

ராமலக்ஷ்மி said...

எங்கள் முதல் காரும் மாருதி 800-தான். எனக்குத் தெரிந்து பெரும்பாலானோருக்கு. அடுத்து ஹுயுண்டாய் ஆக்சண்ட் வாங்கின போதும் இதைப் பிரிய மனமின்றி இரண்டாவது வண்டியாக வைத்திருந்தோம். சிட்டி நெரிசலில் புகுந்து விரையவும் பார்க்கிங் பண்ண தோதாக இருந்ததின் அருமையும் அப்போ இன்னும் புரிந்தது. 2 வருடம் முன் ஹோண்டா சிவிக் [ட்ரைவிங் எவ்வளவு சுலபமோ பார்க்கிங் இடம் கிடைக்க அவ்வளவு சிரமம்] வாங்கின போது ஆக்சண்ட் ரெண்டாவது வண்டியாகிட அருமை மாருதியைப் "பிரியமனமில்லாமல் பிரியா விடை" கொடுத்து நல்லவேளையாக எங்கள் குடும்ப நண்பர் வீட்டுக்கே அனுப்பி வைத்ததால், ஹிஹி அவர் வீட்டுக்குப் போகையில் எல்லாம் அதை பாசத்துடன் தடவிக் கொடுத்து விட்டு வருவேன். அந்த முதல் காரை வாங்கிய போது இருந்த "த்ரில்" பின்னர் அடுத்த வண்டிகளை வாங்கிய போது இல்லவே இல்லை.

அதுசரி இப்போ கிட்டத்தட்ட அதே மாருதி 800 சைசில் சாலைகளை நிரப்பத்தான் Nano ரெடியாகிக் கொண்டிருக்கிறதே?

புதுகைத் தென்றல் said...

காருக்கேவா!//

ஆமாம் அதிலயும் மாருதி ஆச்சே

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ரோமுலஸ்,

ஞாபகம் இருக்கு

புதுகைத் தென்றல் said...

நிறைய் விஷ்யத்துல சேம் பளட்டா இருக்கீங்களே ராமலக்‌ஷ்மி.

ஆயிரம் கார்கள் வந்தாலும் மாருதிக்கு நிகர் வருமா??

புதுகைத் தென்றல் said...

அந்த முதல் காரை வாங்கிய போது இருந்த "த்ரில்" பின்னர் அடுத்த வண்டிகளை வாங்கிய போது இல்லவே இல்லை.//

சத்தியமா இல்லை. அந்த சின்ன காருக்குள் நான், கணவர், கணவரின் அண்ணன், அண்ணி, அக்கா, அவரின் கணவர் அனைவரும் கல்பாக்கத்தில் கணவரின் அண்ணன் மகனுக்கு பெண் பார்க்கப்போனது இன்றும் நினைவில் இருக்கிறது.

சென்ஷி said...

:-))))

வித்யா said...

ஓட்டிப் பழக ஏதுவான வண்டி:)

நாகை சிவா said...

:)

உண்மை தான்...

நானே ஒரு பதிவு போடனும் என்று இருந்தேன் ... அப்படியே தள்ளி போயிடுச்சு.

அப்புறம் மாருதி நம் நினைவில் மட்டுமே என்று சொன்னீங்க.. அங்க தான் சின்ன திருத்தம். மாருதியின் 800 மற்றும் ஆம்னி சீரியஸ் மட்டும் தான் நிறுத்தி இருக்காங்க. மற்ற கார் தொடர்ந்து வரும்.

புதுகைத் தென்றல் said...

ஸ்மைலிக்கு நன்றி சென்ஷி

குசும்பன் said...

//உங்களுடைய நினைவுகளையும் பத்திரமா, பதிவா
போட்டு வெச்சுக்கோங்க. //

சைக்கிளைதான் நாங்க கொசுவத்தி சுத்தமுடியும்:)

புதுகைத் தென்றல் said...

எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க. நான் அதுகூட ஓட்டினதில்லை. :)

புதுகைத் தென்றல் said...

வாங்கசிவா,

மற்ற சீரிஸ் வரும். ஆனா மாருதி 800 புகழ் வேறத்தானே!!

புதுகைத் தென்றல் said...

சைக்கிளைதான் நாங்க கொசுவத்தி சுத்தமுடியும்//

வாங்க குசும்பன்,

சைக்கிள் கொசுவத்தி எல்லோருக்கும் இருக்கும்.

VIKNESHWARAN said...

இங்கு 20 வருடமான கார்களை உபயோகிக்க தடை விதித்தார்கள்... ஆனால் இன்னமும் சில பழைய கார்களுக்கு ரொட் டெக்ஸ் கிடைத்த வண்ணம் தான் இருக்கிறது... ஒன்னும் புரியலை :)