Friday, April 03, 2009

கலக்கிய லெட்டர்......

என் கல்லூரி வாழ்க்கை அல்பாயுசில் (ஒரே வருடத்தில்)
முடிந்தாலும் நான் அந்த ஒரு வருடத்தில் நான் அடித்திருக்கும்
கொட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல..

ஆங்கில இலக்கியத்தில் பல சுவாரசியங்கள் இருந்தாலும்
நான் மிக ரசித்தது PHONETICS.

பேச்சுவழக்காக நாம் செய்து கொண்டிருக்கும் பல
தவறுகளைத் தெரிந்து திருத்துக்கொண்டிருக்கிறேன்.

டூர் தவறு டுவர்(our அவர் என்று சொல்கிறோமே)
டைரக்டர் தவறு டிரைக்டர் சரி
பைனான்ஸ் தவறு பினான்ஸ் சரி

இப்படி நிறைய்ய சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆங்கில இலக்கியத்தில் PHONETICS உச்சரிப்புக்களுக்கு
ஒவ்வொரு symbol உண்டு. உதாரணமாக GOAT SOUND WORDS என்போம்.
may,hay,way,say போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும்
பொழுது மே, ஹே, வே, சே என ஆட்டின் குரல்
போல் உச்சரிப்பது தான் சரி. அதை நாம் உணர
ப்ரத்யேகமான symbol இருக்கும். அந்தந்த இடத்தில்
அந்தந்த symbol பார்த்து உச்சரிப்போம். வேடிக்கையாக
இருந்தது.


இந்தப் பாடம் முடிந்ததும் கல்லூரி விடுமுறை
விட்டார்கள். நான் படித்தது பள்ளத்தூர் கல்லூரியில்.
என் தோழிகள் அனைவரும் காரைக்குடியிலிருந்து
வந்து படித்தார்கள். புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு
அனைவருக்கும் வாழ்த்து அனுப்ப நினைத்தேன்.
அதுவும் கொஞ்சம் வித்தியாசமாக!!!!!

போஸ்ட் கார்ட் வாங்கி வந்து அழகாக ஸ்கெட்ச்
பேனாவால் வரைந்து மல்ட்டி கலரில் பொனடிக்
சிம்பல்களுடன் வார்த்தை ஜாலம் செய்து
கார்ட் அனுப்பி வைத்துவிட்டு ஆனந்தமாக இருந்தேன்.

கல்லூரி திறந்து முதல்நாள். காலை 9 மணிக்கு
பஸ்ஸை விட்டு நான் இறங்கியதும் கல்லூரி
வாசலிலேயே காத்திருந்த என் தோழி விசாலாட்சி
“அடியேய், அடுத்த பஸ்ஸை பிடிச்சு அப்படியே
ஊருக்கு போயிடு!!!எல்லோரும் கொலை வெறியோடு
உனக்காக காத்திருக்காங்க”ன்னு சொல்ல அப்படி
என்ன செஞ்சிட்டோம்னு!!! யோசிச்சுகிட்டே
கிளாஸுக்கு போனேன்.

நான் பொனடிக்ச் சிம்பல்களுடன் அனுப்பியிருந்த
வாழ்த்தை பார்த்து பலரின் பெற்றோர்கள்
“என்னவோ ஏதோ! யாரோ அனுப்பியிருக்காங்க”
எனும் ரீதியில் திட்டி தீர்த்துவிட்டார்களாம்.
அவர்களுக்கெல்லாம் புரிய வைக்க எங்கள்
பாட நோட்டை காட்டி பொனடிக்ச் பாடங்கள்
எடுத்து புரிய வைத்தார்களாம்.

எல்லோரும் சேர்ந்து செம கும்மு கும்மிவிட்டார்கள்!!:(((

ஆனால் வித்தியாசமாக வாழ்த்தனுப்பி பொனடிக்ஸ்
புகழ் பரப்பியதற்காக கல்யாணி மேடம் மட்டும்
என்னை பாராட்டினார்கள். அதற்கப்புறம் தான்
அவர்களின் கும்மி நின்றது. :)))

****************************************

20 comments:

SK said...

me the first pottukkaren :)

SK said...

அம்புட்டு நல்லவங்களா நீங்க.

pudugaithendral said...

வாங்க எஸ் கே,

அம்புட்டு நல்லவங்களா நீங்க//

:)))))))

அபி அப்பா said...

அய்யோ ஏதோ சம் மூட் அவுட்ல இருந்தேன்!(பிரியானி கருகி போச்சு) செம கூல் பதிவு இது! டபார்ன்னு ஒரு சிரிப்பு சிரிச்சேன்! அப்படியே என் பிரந்த்ஸ் கூட நான் சிரிச்சோன்ன சிரிச்சுட்டாங்க! வாவ்! நி நல்லவன் சொன்ன மாதிரி நீங்க சின்ன துளசி ரீச்சர் தான்!

(யானைகள் இங்கு துன்புறுத்தபட மாட்டாதுன்னு கும்பகோணம் கோவில்ல மாட்டியிருந்த போட்டோவுக்கு ரீச்சர் "கோபால் அப்படி எல்லாம் போர்டு போடாம 35வருஷாமா காப்பாத்திகிட்டு இருக்கார்"ன்னு ஒரு கமெண்ட் வேற)படிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலி! அது போல உங்க இந்த பதிவும்!!!!

அபி அப்பா said...

அப்பாடா ஜமாலை ஏமாத்தியாச்சு இப்பவும்:-))

நிஜமா நல்லவன் said...

எனக்கு புரியாத தெரியாத மொழி பற்றி என்னமோ சொல்லுறீங்க....அதனால அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கிறேன்...:)

நட்புடன் ஜமால் said...

\\வார்த்தைகளை உச்சரிக்கும்
பொழுது மே, ஹே, வே, சே என ஆட்டின் குரல்
போல் உச்சரிப்பது தான் சரி\\

யக்கோவ் ...

தேவன் மாயம் said...

நான் படித்தது பள்ளத்தூர் கல்லூரியில்.
என் தோழிகள் அனைவரும் காரைக்குடியிலிருந்து
வந்து படித்தார்கள். புத்தாண்டு மற்றும் பொங்கலு///

வாங்க!!
நம்ம ஊரு அம்மா!

தேவன் மாயம் said...

ஆங்கிலப் பாடம் எடுங்க!!!
படிக்கிறோம்!

எம்.எம்.அப்துல்லா said...

நீங்க அப்பவே அப்படித்தானா...சரி...சரி..

:))

pudugaithendral said...

குபீர் சிரிப்புக்கு பஞ்சமே இல்லாமல் பதிவெழுதும் உங்களையே சிரிக்க வெச்சிட்டேன் என்பதில் பெருமையா இருக்கு அபி அப்பா.

pudugaithendral said...

(யானைகள் இங்கு துன்புறுத்தபட மாட்டாதுன்னு கும்பகோணம் கோவில்ல மாட்டியிருந்த போட்டோவுக்கு ரீச்சர் "கோபால் அப்படி எல்லாம் போர்டு போடாம 35வருஷாமா காப்பாத்திகிட்டு இருக்கார்"ன்னு ஒரு கமெண்ட் வேற)//

துளசி டீச்சரை அடிச்சுக்க ஆளேது. நான் அவங்களின் ரசிகைதான்.

pudugaithendral said...

அதனால அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கிறேன்//

அட்டெண்டென்ஸ் மார்க்ட் நிஜமா நல்லவன்

pudugaithendral said...

வாங்க ஜமால்,
என்னாச்சு?

pudugaithendral said...

வாங்க!!
நம்ம ஊரு அம்மா!//

ஆமாம் தேவா நீங்க வலைச்சர ஆசிரியரா இருந்தப்பவே ஆஹா நம்ம பக்கத்து ஊர் காரருன்னு சொல்லி பின்னூட்டம் போட்டேன்.

ஆச்சி காலேஜ்ல நான் படிக்கும்போதுதான் பள்ளத்தூரில் நாடோடித் தென்றல் படம் எடுத்துக்கினு இருந்தாக.

pudugaithendral said...

ஆங்கிலப் பாடம் எடுங்க!!!
படிக்கிறோம்!//

அட நீங்க வேற! ஆசையோட ஆங்கில இலக்கியம் படிச்சதெல்லாத்தையும் விட என்னை இப்ப முழுமையா ஆக்கரமிச்சிருக்கிறது மாண்டிசோரி தான்.

pudugaithendral said...

நீங்க அப்பவே அப்படித்தானா..//

எப்பவுமே அப்படித்தான் அப்துல்லா.

மாறிட்டா சாமி குத்தமாயிடுமில்ல. :)))))

Thamira said...

அழகு..! (கொஞ்சம் லேட்டாயிருச்சு வர்றதுக்கு.. அதுக்குள்ளாற எத்தனை பதிவு போட்டீங்களோ.. இனிதான் செக் பண்ணணும்..)

pudugaithendral said...

கொஞ்சம் லேட்டாயிருச்சு வர்றதுக்கு.. அதுக்குள்ளாற எத்தனை பதிவு போட்டீங்களோ.. இனிதான் செக் பண்ணணும்//

:)))))))) ஒரு நாளைக்கு 4 பதிவெல்லாம் போடலை ஃப்ரெண்ட். அதனால ஈசியா படிச்சிடலாம்

வருகைக்கு நன்றி

மங்களூர் சிவா said...

நண்பிகளுக்கு அவங்க வீட்டில் கிடைத்த அனுபவங்களை எல்லாம் பதிவா போடுங்க ஜாலியா இருக்கும்.


\\வார்த்தைகளை உச்சரிக்கும்
பொழுது மே, ஹே, வே, சே என ஆட்டின் குரல்
போல் உச்சரிப்பது தான் சரி\\

கொஞ்சம் டெரராதான் இருக்கும் போல
:)))))))