Thursday, April 23, 2009

ஜாலி ஜாலி ஜிம்கானா!!!!

எப்பவும் பசங்களுக்கு லீவு விட்டா அம்மாக்கள்
லீவுல பசங்களை எப்படி மேய்ப்பது?!!! லீவ்
ஏந்தான் விடறாங்களோன்னு அங்கலாய்ப்பாங்க.

ஆரம்பத்துல எனக்கும் அப்படி நினைப்பு இருந்துச்சுதான்.
அப்புறம் மாறிப்போச்சு. பசங்களுக்கு லீவு விட்டா
நமக்கு கிடைக்கற ப்ளஸ்களை நினைச்சு பாத்து
மாத்திகிட்டேன்.

1. அலாரம் வெச்சு அடிச்சு பிடிச்சு எந்திரிக்க வேண்டியதில்லை.
2. காலை 6.15 மணிக்குள் சமையல், காலை உணவு,
கையில் எடுத்துச் செல்ல(ஷார்ட் ப்ரேகில் சாப்பிட)
ஒரு டிபன் என்று செய்ய தேவையில்லை.

3. அழகா பொறுமையா தூங்கி எந்திருச்சு சமைக்கலாம்.

4. படி படின்னு சொல்லிகிட்டே இருக்காம கொஞ்சம்
ஓய்வா இருக்கலாம்.(ஓய்வு நமக்குத்தான்:))

5. நேரம் கிடைக்கும்பொழுது டூர் அடிக்கலாம்.
(கொளுத்தும் வெயில் என்பதால் இந்த விடுமுறையில்
மட்டும் டூர் போக மாட்டோம்.)

இப்படி நிறைய்ய்ய்ய்......ய + தான்.

இன்றையிலிருந்து பிள்ளைகளுக்கு விடுமுறை.
ஜூன் 10 தான் பள்ளி திறப்பு. அதுவரைக்கும்
ஜாலி ஜாலி ஜிம்க்கானானு ஆட்டம் தான்.

சம்மர் கேம்ப் எல்லாம் சேர்க்கலை. வீட்டிலேயே
நாங்க கொண்டாடறதா முடிவெடுத்திருக்கோம்.

முன்னாடியே சொன்ன மாதிரி ஆஷிஷ் அம்ருதாவுக்கு
வீட்டிலேயே குக்கரி கிளாஸ்,

அவங்களுக்கு விருப்பமான டான்ஸ் கிளாஸில்
சேர்த்தாச்சு.


மே மாதம் என் மாமாக்கள் இருவரும் தங்கள்
குடும்பத்தினருடன் வரப்போறாங்க.

அவங்க கூட அம்மம்மா தாத்தாவும் வர்றாங்க.
அம்மம்மாவை பாத்து 1 வருஷம் ஆச்சு.

சோ, ஜாலி ஜாலிதான்.

பசங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.
யாரும் அவங்கிட்ட சொல்லிடாதீங்க ப்ளீஸ். :)))
(அடுத்த வாரம் சர்ப்ரைஸ் பத்தின பதிவு வரும்)



*****************************



“அக்கா நீங்க இந்த வருஷம் எப்படியும் 1000 போஸ்ட்
போட்டுடுவீங்க” அப்படின்னு அடிக்கடி நிஜமா நல்லவன்
போன்ல சொல்வது நடந்திடும்
போல இருக்கு :)) இது என்னோட 400ஆவது போஸ்டாச்சே!!!

24 comments:

Sasirekha Ramachandran said...

ENJOY ENJOY!!!
surprise பத்தி சீக்ரமா சொல்லுங்க...எனக்கும் ஐடியா கெடைக்கும்ல்ல....

Sasirekha Ramachandran said...

400 க்கு வாழ்த்துக்கள்!!!

Vidhya Chandrasekaran said...

ensoy:)

pudugaithendral said...

வாங்க சசி,

ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல.

ரொம்ப சாதாரணமான விஷயம்தான்.
பதிவு வரும் பாருங்க

pudugaithendral said...

வாழ்த்திற்கு நன்றி சசி

pudugaithendral said...

என்சாயோ என்சாய்தான் வித்யா

ராமலக்ஷ்மி said...

நானூறுக்கும் வாழ்த்துக்கள். உறவினரோடு மகிழ்வாகக் கழியப் போகின்ற நாட்களுக்கும் வாழ்த்துக்கள்:)!

மணிநரேன் said...

குறிப்பிட்ட சில ப்ளஸ்களில்

//படி படின்னு சொல்லிகிட்டே இருக்காம கொஞ்சம் ஓய்வா இருக்கலாம்.(ஓய்வு நமக்குத்தான்:))//

மிகவும் இரசிக்க வைத்தது...;)

selventhiran said...

ஜாலி ஜாலி ஜிம்க்கானானு // ஹா ஹா

S.Arockia Romulus said...

எதுக்கு மெடம் விடுமுறை எல்லாம் ஞாயபக பயித்துரீங்க இபத்தான் விடுமுறை கிடைக்கிறதேயில்லையே!!!!ம்......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

1000 க்கு வாழ்த்துக்கள் தென்றல்.. :) லீவைக் கொண்டாடுங்க.. எங்களுக்கு இன்னும் 20 டேஸ் இருக்கு..

நானானி said...

// அம்மம்மா தாத்தாவும் வர்றாங்க.
அம்மம்மாவை பாத்து 1 வருஷம் ஆச்சு.//

அப்புரம் எதுக்கு சம்மர் கேம்ப் எல்லாம்? அவங்களே போதுமே!
நல்லன எல்லாம் சொல்லித்தருவாங்களே!!

வாழ்த்துக்கள் 400 க்கு, 1000 த்துக்கு அட்வான்ஸ்

நிஜமா நல்லவன் said...

/ராமலக்ஷ்மி said...

நானூறுக்கும் வாழ்த்துக்கள். உறவினரோடு மகிழ்வாகக் கழியப் போகின்ற நாட்களுக்கும் வாழ்த்துக்கள்:)!/


ரிப்பீட்டேய்...!

எம்.எம்.அப்துல்லா said...

விரைவில் ”ஆயிரம் போஸ்ட் கண்ட அபூர்வ சிந்தாமணி” ஆக வாழ்த்துகள்.

(எனக்கு இப்பத்தான் தத்திமுத்தி 41 போஸ்ட் வந்துருக்கு)

வல்லிசிம்ஹன் said...

அடடே வாழ்த்துகள் தென்றல். ஏ குட்டீங்களா ஆஷிஷ்,அமிர்தா அம்மா பேச்சைக் கேட்டு,வீட்டுக்குள்ள இருங்க.
உண்மையாவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு தென்றல். இன்னும் நிறையா நூத்துக்கணக்கு ஆயிரக் கணக்கில பதிவுகள் போடணும்.
அம்மம்மா,மாமா,மாமிகளைக் கேட்டதாகவும் சொல்லுங்க.

pudugaithendral said...

குறிப்பிட்ட சில ப்ளஸ்களில்

//படி படின்னு சொல்லிகிட்டே இருக்காம கொஞ்சம் ஓய்வா இருக்கலாம்.(ஓய்வு நமக்குத்தான்:))//

மிகவும் இரசிக்க வைத்தது...//

நன்றி மணிநரேன்

pudugaithendral said...

வாங்க செல்வேந்திரன்,

ஹஹான்னு ஆனந்த சிரிப்பு போல
:)))

pudugaithendral said...

வாங்க ரோமுலஸ்,

கிடைச்ச விடுமுறைகளை எப்படி எல்லாம் கொண்டாடினீங்கன்னு அசை போட்டு பாக்கலாமே!!

pudugaithendral said...

1000 க்கு வாழ்த்துக்கள் தென்றல்.. //

அவ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

ஸ்மைலி எல்லாம் பலமா இருக்கு ஃப்ரெண்ட்.

pudugaithendral said...

அப்புரம் எதுக்கு சம்மர் கேம்ப் எல்லாம்? அவங்களே போதுமே!
நல்லன எல்லாம் சொல்லித்தருவாங்களே!!

வாழ்த்துக்கள் 400 க்கு, 1000 த்துக்கு அட்வான்ஸ்//

வாங்க நானானி,

சம்மர் கேம்ப் எல்லாம் எப்பவும் போட்டதில்லை. நீங்க சொல்ற மாதிரி பெரியவங்க சொல்லிக்கொடுப்பதே நிறைய்ய. பட்டறிவு பெரியவங்களுக்கு ஜாஸ்தியாச்சே!

வாழ்த்துகளுக்கு நன்றி

pudugaithendral said...

ரிப்பீட்டுக்கு நன்றி நிஜமா நல்லவன்.

pudugaithendral said...

”ஆயிரம் போஸ்ட் கண்ட அபூர்வ சிந்தாமணி”

அவ்வ்வ்வ்வ்வ்வ்

(எனக்கு இப்பத்தான் தத்திமுத்தி 41 போஸ்ட் வந்துருக்கு)

அலுவல் காரணமா தேசம்விட்டு தேசம், ஊருவிட்டு ஊரு பறந்துகிட்டு 41 போஸ்ட் ரொம்பவே ஜாஸ்தி.

உங்க ப்ளாக் திருடு போகாமல் இருந்துச்சுன்னா 100 எப்பவோ தாண்டியிருப்பீங்க.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

உங்க மெசெஜ்களை பசங்களுக்கு சொல்லிட்டேன்.

அம்மம்மா, தாத்தா, மாம்ஸ், அத்தைஸ் வந்ததும் அவங்களுக்கும் சொல்லிடறேன்.