Wednesday, April 15, 2009

வாழ்த்துவோம் வாருங்கள்!!!

15.04.09 தேதியிட்ட ஆனந்தவிகடனை புரட்டிக்கொண்டிருந்தேன்.

ஒரு கவிதை!!! அட நம்ம உடன்பிறப்புக்களைப்
பத்தில்ல எழுதியிருக்காக?!!! அப்படின்னு
படிச்சு முடிச்சு எழுதினது யாருன்னு பார்த்தா
நமக்குத் தெரிஞ்ச பேரா இருந்துச்சு.

எதுக்கும் ஒரு முறை கன்ஃபர்ம் செஞ்சுக்கலாம்னு
ஆன்லைனில் இருந்தவரிடம் கேட்டதும்
கன்ஃபர்ம் ஆகிடுச்சு. கவிதைக்குச் சொந்தக்காரர்
நாம் அறிந்த நண்பர் செல்வேந்திரன்.

கற்றதனால் ஆய பயன் - இந்தக் கவிதை மேலே
சொல்லியிருக்கும் இதழில் 34ஆம் பக்கம் வந்திருக்கு.

எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று..
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்.....





இப்படி போகிறது கவிதை.
முழுதும் படிக்க ஆனந்தவிகடன்
வாங்கிக்கொள்ளவும்.

மனமார்ந்த பாராட்டுக்கள் செல்வேந்திரன்.

14 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்


அவசியம் படிக்க முயல்கிறேன் ...

சென்ஷி said...

:-))

இங்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

கவிதா | Kavitha said...

வாழ்த்துக்கள் !!

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

கடந்த வெள்ளியன்றே நான் கண்டேன் தென்றல் விகடனிலே.

உங்க பக்கத்து வீட்டுப் பக்குவத்தில் இவர் பெயரினைப் பார்த்திருக்கிறேன் முன்பே என்பதால் எனக்கு பதிவர்தான் எனத் தெரிந்திருந்தது.

ஆனால் ஏன் யாரும் வாழ்த்துப் பதிவு வெளியிடவில்லை, அல்லது நான்தான் பார்க்கவில்லையோ என நினைத்திருந்தேன். இப்போது உங்களுடன் இணைந்து வாழ்த்துகின்றேன் நானும்.

அருமையான கவிதை செல்வேந்திரன். வாசித்ததுமே பிடித்தது.

அமுதா said...

நானும் படித்தேன். செல்வேந்திரனுக்கு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

பதிவர்கள் பெயரைப் பத்திரிகைகளில் காண்கையில் நாம் அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவேது?

இந்தியாவைத் தாண்டி உடனடியாக விகடனை வாங்கிட இயலாத, இணையத்தில் சந்தா செய்திராத நண்பர்களுக்காக இதோ ஸ்கேன் செய்து அனுப்பியிருக்கிறேன் தனி மடலில். வெளியிடுங்கள் தென்றல்.

pudugaithendral said...

ஆனால் ஏன் யாரும் வாழ்த்துப் பதிவு வெளியிடவில்லை,//

பார்த்தா பதிவு போட்டுடுவோம்ல:)) நான் இன்றைக்குத்தான் பார்த்தேன் ராமலக்‌ஷ்மி

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் - இருவருக்கும் உங்களுக்கும் செல்வேந்திரனுக்கும் ;)

Anonymous said...

அவரு பேரே விகடன் செல்வேந்திரன்.
பிளாக்கராகும் முன்பே பத்திரிக்கையாளர்.

அவரது இந்தக் கவிதை மிகப் பிரபலம்.

அடிக்கிற தண்ணிக்கு
அங்கங்கே கடை இருக்கு

குடிக்கிற தண்ணிக்கு
குடமெல்லாம் தவமிருக்கு


”முடியலத்துவம்” அப்படிங்கிற பெயர்ல நெறைய எழுதியிருக்கார். விகடன்ல இருந்து கூப்பிட்டு கேட்டு வாங்கிப் போடும் பதிவர் அவர்.

அவர் நம்மோடு இருப்பது நமக்குப் பெருமை.

கணினி தேசம் said...

வாழ்த்துகள் செல்வேந்திரனுக்கும்

செய்தி பகிர்ந்த உங்களுக்கும்.

Thamira said...

அண்ணாச்சி சொன்னத கேட்டீங்கல்ல.. தல நம்ப தோஸ்த்து.. மறுக்கா ஒரு வாழ்த்துகள் அவருக்கு.!

மங்களூர் சிவா said...

இங்கயும் வாழ்த்திக்கிறேன்.

வாழ்த்துக்கள் செல்வா!

நானானி said...

வாழ்த்துக்கள் செல்வேந்திரன். வாழ்த்திய புதுகைத் தென்றலுக்கும் வாழ்த்துக்கள்.

இதற்கு பதில் கவிதை 22.4.09 விகடனில் பி.ஜி.கதிரவன் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.