Tuesday, April 21, 2009

SPEED-WEDNESDAY!!!!

ஒரு புதன்கிழமை மும்பை போலிஸ் கமிஷினர் ப்ரகாஷ் ராதோடுக்கு
வரும் தொலைபேசியில் சீட்டின் நுனிக்கு வர ஆரம்பித்தால்
படம் முடியும் வரை நம் நிலை அதுதான்.

தனது பர்ஸ் தொலைந்ததாக கம்ப்ளையண்ட் செய்யவந்த
நச்ருதின் ஷா, அந்த போலிஸ் ஸ்டேஷன் டாய்லட்டில்
ஒரு பையை வைத்துவிட்டுச் சென்று, அருகே இருக்கும்
கமிஷன்ர் அலுவலகத்திற்கு போன் போட்டு தான் குண்டு
வைத்திருப்பதாகச் சொல்கிறார்.

போலிஸ் கமிஷனர் பிராகாஷ் ராத்தோடாக அனுபம் கெர்.
வில்லனாகவும் பாசமிகு தந்தையாகவும் இவரது
நடிப்பை பார்த்திருக்கிறோம். மிடுக்கான போலிஸ்
கமிஷனராக பின்னியிருக்கிறார்.

நஸ்ருதின்ஷாவின் போன் காலை ஏதோ பைத்தியக்கார
வேலையாக நினைக்கிறார், தனது ஆட்கள் அந்த
ஆர்டி எக்ஸை போலிஸ் ஷ்டேஷனில் கண்டுபிடித்தபொழுது
தனது எண்ணத்தை மாற்றிக்கொள்கிறார்.

எங்கே? என்ன செய்தி கிடைக்கும் என காத்திருக்கும்
செய்தி சேனல்காரர்களில் ஒருவரை பிடித்து
அவரையும் அந்த இடத்திற்கு அனுப்பி வைத்து
நிலமையை டீவியில் பார்க்கிறார் நஸ்ருதின் ஷா.அதன் பிறகு முதலமைச்சர் தலையிட்டு பிரகாஷ்ராத்தோடை
தீவிரமான இந்த நிலமையை கையாளச் சொல்கிறார்.


ராத்தோட் தனது படையில் இருக்கும் மிகச் சிறந்த
போலிஸ்காரர்களான Arif (Jimmy Shergill) and Jai (Aamir Bashir)
துணையுடன் எப்படி நிலமையை கையாள்கிறார்?
அங்கே ஏற்படும் எதிர் பாராத திருப்பங்கள் என்னன்னென்ன?
போன்ற மர்மமுடிச்சுகள் நாம் சற்றும் எதிர் பாராதவை.


அந்த போலிஸ் ஷ்டேஷன் தவிர மேலும் 5 இடங்களில்
தான் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அந்த இடங்களைச்
சொல்ல வேண்டுமெனில் கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதிகள்
4 பேரை தான் சொல்லும் இடத்திற்கு கொண்டு வரவேண்டும்
என நிர்பந்திக்கிறார் நஸ்ருதின்ஷா.

மிக ப்ரயத்தனப்பட்டு கைது செய்த அந்த கொடூர தீவிரவாதிகளை
இவரிடம் ஒப்படைக்கத்தான் வேண்டுமா? என யோசிக்கும்
பொழுது அதைத் தவிர வேறு வழியில்லாமல் அந்த நால்வரையும்
ராத்தோடின் சிறப்பு போலிஸ் இருவர் அழைத்துச் செல்கின்றனர்.

அதில் ஒருவர் முஸ்லிம். தீவிரவாதிகள் நால்வரும் முஸ்லிம்தான்.
அவர்களில் ஒருவன் ஆரிப் இடம்(போலிஸ்காரர்)கூட இருக்கும்
ஜெய்(போலிஸ்) போட்டுதாக்கிவிட்டு தங்களை தப்பிக்க
வைக்கச் சொல்கிறார். எங்கே அப்படி நடந்துவிடுமோ என
மனம் பதைக்கிறது.

அவர்களை அழைத்துச்
செல்ல யாரும் வரவில்லை. மாறாக அங்கே இருக்கும் பெஞ்சில்
அவர்களை அமர வைக்கச் சொல்கிறார் கான்ஃப்ரன்ச் காலில்
அவர்களுடனும், கமிஷனருடனும் தொடர்பில் இருக்கும்
நஸ்ருதின் ஷா!!!!

நஸ்ருதின் ஷா குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களை
அழைத்துச் சென்றுவிட்டு 3வரை மட்டும் அங்கே விட்டுவிட்டு
1வரை தன்னுடன் பிடித்துக்கொள்கிறார் ஆரிஃப்.(அப்போதுதான்
மற்ற குண்டு வைப்பு இடங்களை தவறாமல் தெரிந்து
கொள்ள வேண்டும் என்பதற்காக.)

இங்கே நடப்பதும், அதன் பிறகு காட்சிகளும்
நாம் முற்றிலும் எதிர் பாராதவை.

தன்னை common stupid manஆக அறிமுகம்
செய்து கொண்டு நஸ்ருதின்ஷா கிளைமேக்சில்
பேசும் வசனங்கள் ஒரு சாமான்யனின் பேச்சாகவே
இருக்கிறது.
SPEED ஆங்கில படத்தைப் போல சஸ்பென்ஸ்களால்
நிறைந்த படம் இந்த WEDNESDAY.

அதனால்தான் இந்தப் படத்தை தமிழில் தாயாரிக்கிறார்கள் போல.
கமலஹாசனும், மோகன்லாலும் நடித்து தயாராகப்போகிற
படத்தில் தெலுங்கு ஹீரோ விக்டரி வெங்கடேஷும்
நடிக்கப்போகிறாராம்.

தரம் குறையாமல் தமிழில் வருகிறதா என பொருத்திருந்து
பார்ப்போம்!!!

19 comments:

SK said...

me the firste :))))))))))

SK said...

இந்த படம் பத்தி நிறைய பேரு சொல்லி இருக்காங்க. :) பாக்கணும்..

இந்த வார இறுதில பாத்துடறேன் :) :)

S.Arockia Romulus said...

kamal will do better.....

இராகவன் நைஜிரியா said...

// தரம் குறையாமல் தமிழில் வருகிறதா என பொருத்திருந்து
பார்ப்போம்!!! //

நம்பிக்கைதான் வாழ்க்கை. அதற்காக இவ்வளவு நம்பிக்கை எல்லாம் ரொம்ப ஜாஸ்திங்க..

ஒரு படத்தை எவ்வளவு மோசமாக கெடுக்க முடியுமோ அவ்வள்வு கெடுத்து கொடுப்பார்கள்.

ராமலக்ஷ்மி said...

இந்தப் படத்தை நானும் பார்த்திருக்கிறேன். தமிழில் தயாரிக்கப் படுவது நல்ல விஷயம்.

வித்யா said...

நானும் பார்க்கிறேன்:)

ரங்கன் said...

lets see.. will kamal do better or not..

but a good review..!!
thank u..!!!

thevanmayam said...

இந்தப் படம் ஓடுகிறதோ இல்லையோ கமலின் நடிப்பைப் பார்க்க கட்டாயம் போகலாம்!!

thevanmayam said...

தமிழில் ஹிட் ஆவதற்கும் நல்ல படத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு!!

புதுகைத் தென்றல் said...

வாங்க எஸ்.கே,

கட்டாயம் பாருங்க.

புதுகைத் தென்றல் said...

வாங்க ரோமுலஸ்,

கமல் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் என் கருத்தைச் சொன்னேன்.

புதுகைத் தென்றல் said...

நீங்க சொல்வதும் சரிதான் இராகவன்.

புதுகைத் தென்றல் said...

ஸ்டார் வேல்யூ, புண்ணாக்கு எல்லாம் பார்த்துத்தானே ந்ம்மவர்கள் படம் எடுப்பார்கள்!!!!

புதுகைத் தென்றல் said...

பாத்துட்டீங்களா ராமலக்‌ஷ்மி?? ம்ம்

புதுகைத் தென்றல் said...

கண்டிப்பா பாருங்க வித்யா

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி ரங்கன்

புதுகைத் தென்றல் said...

கமலின் நடிப்பைப் பார்க்க கட்டாயம் போகலாம்!!//

கதையின் களம் தமிழ் நாட்டுக்கு பொருந்துமா என்பதுதான் சந்தேகம்!!!

ஹிந்தியில் எடுக்கப்பட்டதின் கதைக் களம் மும்பை தொடர் குண்டு வெடிப்பு.

மும்பை குண்டு வெடிப்பை பத்தி தமிழில் எடுக்கும் பொழுது கொஞ்சம் தரம் குறையலாம். பார்ப்போம்

புதுகைத் தென்றல் said...

தமிழில் ஹிட் ஆவதற்கும் நல்ல படத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு!!//

அதுவும் சரிதான் தேவா.

மங்களூர் சிவா said...

தமிழில் வரட்டும் பார்த்துடுவோம்.