சென்றவாரம் மழையால் நனைந்த ஹைதை
இந்த வாரம் இசைமழையால் நனைந்தது.
நேற்று பாரேட் க்ரவுண்டில் 1.6 லட்சம்
பாடகர்கள் இணைந்து அன்னமாச்சாரிய
கீர்த்தனைகள் பாடினார்கள்.
பாடல்களால் பரமனை குளி்ர்வித்த
அன்னமாச்சரியரின் 601ஆவது ஜன்மதினத்திற்காக
இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல புகழ்பெற்ற பாடகர்கள் இணைந்து
பாடினார்கள்.
வீட்டுக்கு அருகேதான் பாரேட் க்ரவுண்ட்
என்பதால் பால்கனியிலிருந்தே பாடல்களை
கேட்டேன். பாவமுலோனா, பிரம்மகடிகின
பாதமு,தந்தநாநா,என பல பாடல்கள்
கேட்டேன். மொட்டைமாடிக்கு சென்று
நாங்கள் நால்வரும் இசைமழையில் நனைந்தோம்.
இந்த நிகழ்ச்சியில் ஒருமுக்கிய விடயம்.
இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனையில்
இடம்பிடித்துள்ளது.
1937ஆம் வருடம் 60,000 மக்கள் இணைந்து
தங்களது தேசிய கீதத்தை இசைத்ததுதான்
இதற்கு முந்தைய உலக சாதனை. அந்த
சாதனையை முறியடித்து அன்னமாச்சாரியாவுக்கு
ஆராதனை செய்துள்ளனர்.
அன்னமய்ய படக்குழுவினர் சிலர், பாலமுரளி
கிருஷ்ணா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில்
பங்குபெற்றனர்.
****************************************
அருமையான அன்னம்மய்ய பாடல் பார்க்க
தவறாதீர்கள்.
ப்ரம்மம் ஒகடே பர ப்ரம்ம ஒகடே
*****************************************
நேற்று நான் கண் திறக்குமுன்னரே பரிசுகள் மற்றும்
வாழ்த்து அட்டைகளுடன் வந்து பிள்ளைகள்
இருவரும் ”ஹேப்பி மதர்ஸ் டே” வாழ்த்து
சொன்னார்கள். முதல் நாளே அப்பாவை
அழைத்து சென்று பரிசு வாங்கிவந்து
சர்ப்ரைஸாக கொடுத்தார்கள்.
அருமையான வார்த்தைகள் அடங்கிய
வாழ்த்து அட்டைகள். சூப்பர் செலக்ஷன்.
**************************************
சர்ப்ரைஸாக இருவரையும் லஞ்சுக்கு
அழைத்து சென்றோம். அதைப் பற்றி
விரிவாக பதிவு போட்டு வயிற்றெரிச்சலைக்
கொட்டிக்கொள்ள வேண்டாமா!!! :))
******************************
வேறு என்ன பெயர் வைப்பது என்று
யோசித்து மண்டை காய்ந்து தென்றல் அப்டேட்ஸ்
என்றே வைத்துக்கொண்டேன். அமித்து அப்டேட்ஸ்
பதிவு போடும் அமித்து அம்மா
“ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி”
****************************
7 comments:
//வேறு என்ன பெயர் வைப்பது என்று
யோசித்து மண்டை காய்ந்து தென்றல் அப்டேட்ஸ்
என்றே வைத்துக்கொண்டேன்//
ம்ம் !
சரி
ஒ.கேய்
//சென்றவாரம் மழையால் நனைந்த ஹைதை
இந்த வாரம் இசைமழையால் நனைந்தது.//
வாரம் வாரம் மழை பெஞ்சுக்கிட்டிருக்கு அதைப்பத்தியே பதிவும் போட்டிக்கிட்டிருக்கேன்!
ஸோ ப்ளாக்கையும் மழைன்னு மாத்திக்கிறேன் !
அமித்து அம்மா “ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி”
//1937ஆம் வருடம் 60,000 மக்கள் இணைந்து
தங்களது தேசிய கீதத்தை இசைத்ததுதான்
இதற்கு முந்தைய உலக சாதனை. அந்த
சாதனையை முறியடித்து அன்னமாச்சாரியாவுக்கு
ஆராதனை செய்துள்ளனர்.//
வாழ்த்துக்கள் உங்களுக்கும் அந்த சாதனையில் கொஞ்ச்சூண்டு பங்கு இருக்கு
வீட்ல இருந்துக்கிட்டே பாட்டு கேட்டீங்கள்ல :)))
வாங்க ஆயில்யன்,
வீட்டிலேர்ந்து பாட்டை கேட்டது மட்டுமல்ல கூடவே பாடினதனால 1.6 லட்சம் பேர்ல என் பேரையும் சேத்துக்க சொல்லி மனு போடலாம்னு இருக்கேன்.
:)))
//வேறு என்ன பெயர் வைப்பது என்று
யோசித்து மண்டை காய்ந்து தென்றல் அப்டேட்ஸ்
என்றே வைத்துக்கொண்டேன்//
சரி
ப்ரம்மம் ஒகடே பர ப்ரம்ம ஒகடே
இந்தப் பாட்டு எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காதுங்க.
அருமையான பாட்டை இந்த இடுகையில் கொடுத்த உங்களுக்கு நன்றிகள் பல.
அருமையான பாடல்....சுதா ரகுநாதன் பாடினால் அப்படியே மெய்மறந்து போவோம்
Post a Comment