Tuesday, May 12, 2009

ஆங்கிலப்படங்களும் நானும்

ஆங்கிலபடங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது
என் சத்யா மாமாதான்.

முதலில் நான் பார்த்த படம் HONEY I SHRUNK THE KIDS.

அந்த படத்தின் பெயர் ஞாபகத்திலேயே இல்லை.
திருமணத்திற்கு பிறகு INDEPENDENCE DAY, SPEED,
FREE WILLE,ஆகிய படங்கள் பார்த்திருக்கிறேன்.

அருமையான படங்கள். ஒவ்வொன்றும் ஒரு ரகமாக
மகிழ்விக்கும்.

ஆனால் எனக்கு மிகவும் பிடித்த படமென்றால்
அது Eddie Murphy நடித்த DADDY DAY CARE தான்.



வேலைபறி போன இரண்டு இளைஞர்கள் க்ரச்
நடத்த முடிவு செய்கிறார்கள். அதில் ஏற்படும்
கஷ்ட நஷ்டங்களை நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள்.




தன் மகனுக்கு நல்லதொரு டேகேர் செண்டர் கிடைக்காமல்
போகவே எடி மர்ஃபி டேகேர் செண்டர் நடத்த விரும்புவார்.

மேலும் கதைக்கு விக்கிபிடியா.

இந்தப் படம் வெளிவந்த பொழுதுதான் நான் எனது
மாண்டிசோரி பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தேன்.
என் வகுப்பு இருக்கும் நாட்களில் அயித்தான்
பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டார்.

டேடி டே கேரராக பார்த்துக்கொண்டதால்தான்
தடையின்றி என் பயிற்சி முடிக்க முடிந்தது.



முடிந்தால் இந்தப் படத்தை பாருங்கள்.
உங்களுக்கும் பிடிக்கும்.

10 comments:

butterfly Surya said...

அறிமுகத்திற்கு நன்றி.

இந்த பதிவை பேரண்ட்ஸ் கிள்ப்பிலும் இடலாம்.

வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

அவசியம் பார்த்திடுவோம் அக்கா

வல்லிசிம்ஹன் said...

தென்றல் ,நீங்கள் சொன்ன இரு படங்களுமே சுவையானவை.
பிள்ளைகளைப் பார்த்துக் கொண்ட உங்க்கள் கணவருக்குப் பாராட்டுகள்.

Thamira said...

என்ன அருமையான சப்ஜெக்ட்.! எனக்கு உடனே அதை பாக்கணுமே..

pudugaithendral said...

வாங்க வண்ணத்துப்பூச்சியாரே,

குழந்தைகளுக்கான படத்தை பற்றி பேரண்ட்ஸ் கிளப்பில் எழுதுவது நீங்க தான்.

நீங்கதான் இதற்கு சரியான ஆள். சீக்கிரம் பதிவு போடுங்க

pudugaithendral said...

ஆஹா ஊருக்கு வந்தாச்சா ஜமால்,

கண்டிப்பா பாருங்க

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

உங்க பாராட்டை ஸ்ரீராமுக்கு சொல்லிட்டேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஃப்ரெண்ட்,

என் கிட்ட இருந்த சீடி மிஸ்ஸான வருத்தத்துல இருக்கேன். :((

cheena (சீனா) said...

நல்ல அறிமுகம் - வாய்ப்புக்கிடைத்தால் பார்த்து விடுகிறேன்

pudugaithendral said...

பாத்துட்டு சொல்லுங்க சீனா சார்.