துணை என்பதன் பொருள் என்ன?
நானிருக்கிறேன் என்று, எங்கும், எப்போதும்
துணையாக இருப்பது.
இப்படி ஒரு துணை வாழ்க்கைத் துணையாக
கிடைக்க வேண்டுமென்பதுதானே அனைவரின்
கனவு/ஆசை.
நூல்வேலி திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலில்
மனைவிக்கு கணவன் ஊக்கமளிப்பதாக வரிகள்
இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
பாலு அவர்களுடன் தேனிசை தேவதை
வாணிஜெயராம் அவர்கள் இணைந்து
பாடியிருப்பார்கள்.
Get Your Own Hindi Songs Player at Music Plugin
திருமணத்திற்கு பிறகும் பெண்கள் சாதிக்க
கண்டிப்பாக கணவரின் அன்பும், ஒத்துழைப்பும்
அவசியம். அடக்கி வைக்காமல் சுடர் விடும்
விளக்குக்கு தூண்டுகோளாக எத்தனை பேர்
இருப்பார்கள்???
அயித்தானின் அன்பும் அனுசரனையும் தான்
என்னை அதிகம் கற்க வைத்தது. நீச்சல்,
மாண்டிசோரி கல்வி என லிஸ்ட் அதிகம்.
இப்போது வெகு நாட்களாக நான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்த
தஞ்சாவூர் பெயிண்டிங், INTERIOR DECORATION
இரண்டு கோர்ஸும் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அயித்தானும் ஓகே சொல்லிவிட்டார்.(சொல்லாட்டிதான்
ஆச்சரியம் :)) )
என்ன படிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
மீ த யோசிச்சிங்....
உங்க ஐடியாஸ் என்ன ஃப்ரெண்ட்ஸ்.
23 comments:
பர்ஸ்ட்டூ இண்டீரியர் டெக்கரேஷன் படிங்க பாஸ்!
பிறகு பெயிண்டிங்க் படிங்க ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும் :)
//மீ த யோசிச்சிங்....
//
நோஓஓஓஓஓஓஒ
இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!
ரெண்டும் படிங்கங்கறதுக்காக சொன்னேன் பாஸ்
ஆஹா
வாங்க பாஸ் வாங்க.
உங்க ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு.
பாப்போம். இன்னும் என்னென்ன ஐடியாக்கள் வருதுன்னு
//மீ த யோசிச்சிங்....
//
நோஓஓஓஓஓஓஒ
இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//INTERIOR DECORATION //
இதுதான் அக்கா என் சாய்ஸ்.
தஞ்சாவூர் என்றாலும் பெயிண்டிங் பற்றி எல்லாம் தெரியாது.
வேண்டும் என்றால் சொல்லுங்க மாடலாக வந்து நிக்கிறேன் என்னை வரைங்க, ரசிகைகள் கோடி கணக்கில் கொட்டி கொடுத்து அந்த பெயிண்டிங்கை ஏலம் எடுப்பார்கள் அதுக்கு நான் கியாரண்டி:))))
ஆஹா,
இன்னைக்கு ஆணி கம்மியா இருக்கு போல இருக்கே.
பதிவுபோட்ட 10ஆவது நிமிஷத்துல அப்துல்லாவின் கமெண்ட்.
வேண்டும் என்றால் சொல்லுங்க மாடலாக வந்து நிக்கிறேன் என்னை வரைங்க, ரசிகைகள் கோடி கணக்கில் கொட்டி கொடுத்து அந்த பெயிண்டிங்கை ஏலம் எடுப்பார்கள் அதுக்கு நான் கியாரண்டி:))))//
இப்ப நான் சொல்லவேண்டிய டயலாக்.
ஆணியே..... வேண்டாம்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆரம்பமே இப்படியா? ஏன் தம்பி இந்த மர்டர் வெறி
இண்டீரியர் வேண்டாம்.. அது வேலைவாய்ப்புக்காக படிக்கிறவங்களுக்கு தான் ஏற்றது. அதில் கிடைக்கும் திறமையை பயன்படுத்த பெரிய அளவுல வாய்ப்பு கிடைக்காது. உங்க வீட்டையே எவ்ளோ வாட்டி அழகு படுத்துவீங்க.
பெய்ண்டின் படிங்க. பெரிய திருப்தி கிடைக்கும். எப்போவும் எதுனா வரைஞ்சிட்டே இருக்கலாம். வலையேற்றலாம். மிக சிறப்பாக இருக்கும் ஓவியங்களை வணிக ரீதியிலும் பயன்படுத்தலாம்.
வாழ்த்துகள்.
enakku kooda interior decoration thaan first choice appadeenu thonudhu. (Enal, neenga thanjavur painting kaththukittu pathivu pOtteenganaal kodukkara idea seyya mudiyumaanu theriyala , aanaal interior decoration kandioppa enggalukku puriyum :-))
neenga thanjavur painting kaththukittu pathivu pOtteenganaal kodukkara idea seyya mudiyumaanu theriyala , aanaal interior decoration kandioppa enggalukku puriyum //
ஆஹா ம்ம் பாக்கலாம்
சும்மா நச்சுன்னு தீர்ப்பு சொல்லியிருக்கீங்க சஞ்சய். ஊருக்கு போறேன் போயிட்டு வந்து முடிவு செய்யலாம்.
நமக்கெல்லாம் ரொம்ப தூரமுங்க
உங்களுக்கு வாழ்த்துகள்
மாம்ஸ் இஸ் கிரேட் ...
நான் மழைக்கு ௬ட பள்ளி௬டம் போனதில்லை. நல்லா படிச்சி உங்க அயித்தான் பேரை காப்பாத்த வாழ்த்துக்கள்
மாற்றம் பெற்றுள்ள வலைமுகப்பிலுள்ள புகைப்படம் அழகாக உள்ளது.
நானும் ஐடியா சொல்லலாம்னா பெயிண்டிங் முதல் சாய்ஸ்...
நல்லாச் செய்யுங்க!!
இரண்டும் ஒரே நேரத்தில்?..................... திறமைசாலிக்கு இதெல்லாம் தூசி,......
பெயிண்டிங் கத்துக்கங்க.. அதில் ஆத்ம திருப்தியும், யோகா போன்ற மன ஒருங்கிணைப்பும் கிடைக்கும். ஆனா இண்டீரியர் டெக்கரேஷன் என்றால் ஒரு கமர்சியலா மட்டுமே இருக்கும்.
நன்றி ஜமால்
நல்லா படிச்சி உங்க அயித்தான் பேரை காப்பாத்த வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க
மாற்றம் பெற்றுள்ள வலைமுகப்பிலுள்ள புகைப்படம் அழகாக உள்ளது.//
ஆஹா மிக்க நன்றி.
//நானும் ஐடியா சொல்லலாம்னா பெயிண்டிங் முதல் சாய்ஸ்//
ம்ம் மைண்ட்ல வெச்சுக்கறேன்.
இரண்டும் ஒரே நேரத்தில்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கல்லூரி போகும் இளம்பெண்ணா தேவா நான். ரெண்டு பசங்களை பாக்கணும், குடும்பம் இதெல்லாம் போக இருக்கற நேரத்துல ஏதாவது ஒண்ணுதான் செய்ய முடியும்.
முதல்ல பெயிண்டிங்.. அப்பறமும் போரடிச்சா இண்டீரியர்..
பெயிண்டிங் கத்துகோங்க. நம்ம படைப்பைப் பார்த்து நமக்கு வர்ற திருப்தியே தனி.
Post a Comment