அயித்தானின் அண்ணன் மகள் திருமணத்தின் போது
நடந்ததுஇது. பெண்ணிற்கு நகை வாங்க
கடைக்குச் சென்றிருந்தோம்.
நகைகள் வாங்கும்போது கையிருப்பு கொஞ்சம்
பற்றாக்குறையாக இருந்தது. திட்டமிட்டதுக்கு மேல்
அத்தை(அண்ணன் மனைவி) தாலிக்கொடியும் 3 பவுனுக்கு
வாங்கியிருந்தார்.
”தாலிக்கொடி மட்டும் அப்புறம் வாங்கிக்கொள்ளலாம்”
என மாமா முடிவு செய்த பொழுது சிரிப்புடன் அத்தை
”அதையும் இப்பவே வாங்கலாம்”, என்று சொல்ல
மாமா எப்படி பணம் கட்டுவது என யோசித்துக்கொண்டே
தன் க்ரெடி கார்டை எடுப்பதற்குள் அத்தை சிரிப்புடன் தன்
கைப்பையிலிருந்து ஒரு பர்ஸை எடுத்து நகைக்கடைக்காரரிடம்
கொடுத்து ,” எத்தனை எடை? என்ன விலைக்கு
எடுப்பீர்கள் என பார்த்து சொல்லுங்கள் ”!!என சொல்ல
அனைவருக்கும் ஆச்சரியம்.
அத்தை கொடுத்த பர்ஸிலிருந்து விழுந்தது
அத்தனையும் தங்கக் காயின்கள். 20/25 காசுகள் இருக்கும்.
ஒன்று, இரண்டு கிராம் எடைகள் இருந்தன.
3 பவுன் தாலிக்கொடி வாங்க அந்த பணம்
போதுமானதாக இருந்தது. சந்தோஷத்துடன்
வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தோம்.
“எப்படி இப்படி சேர்த்து வைத்தாய்?” என மாமா
கேட்க அத்தை சொன்னது ஆச்சரியமாக அதே
சமயம் உபயோகமான தகவலாகவும் இருந்தது.
ஆசிரியையாக வேலை பார்த்த அத்தை தன்
கைச்செலவில் மிஞ்சும் பணம், உறவினர்கள்
கொடுக்கும் பணம் ஆகியவை சேர்ந்ததும்
தங்கக்காசாக வாங்கி வைத்துவிடுவாராம்.
இப்படி கொண்டி உள்ள காசுகள் கோர்த்துக்கொள்ள
உதவும். ஆனால் அவை திருப்பி கொடுக்கும்பொழுது
விலை குறைவாக போகும்.
பதிலாக இப்படி ப்ளையின் காசுக்கள் வாங்குவதுதான்
சிறந்தது என்று ஒரு கடைக்காரர் சொல்லிக்கொடுக்க
அதே போல் சேர்த்து வைத்ததாகச் சொன்னார்.
எனக்கும் இது நல்ல யோசனையாகப் பட்டது.
தங்கத்தில் முதலீடு செய்வது மிக நல்லது. கஷ்டபட்டு
சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்து லாபம் ஈட்டினால்தான்
பணம் பெருகும். நிலம்,வீட்டில் முதலீடு செய்வது
சாலச்சிறந்தது. அதற்கடுத்தாக வருவது தங்க முதலீடு.
தேவைப்படும்போது பணமாக மாற்ற ஏதுவானதும் கூட.
என் தோழி ஒருவரிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்த
பொழுது அவரும் இதை ஆமோதித்து தன் கருத்தைச் சொன்னார்.
தனது மகள்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டமெல்லாம்
வைக்காமல் அதற்கு ஈடான தொகைக்கு தங்கக் காசுகள்
வாங்கி வைத்துவிடுவாராம்.
நல்ல நாள், பெரிய நாள் என எல்லா நாட்களுக்கும்
உடைகள் எடுக்காமல் சில சமயம் தங்கக்காசாக
வாங்கி வைத்துவிடுவாராம்.
”என் மகள்கள் பெரிதானதும் அவர்களுக்கு பிடித்தமான,
அப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ற நகைகள் வாங்கிக்கொடுக்க
இந்த காயின் கலெக்ஷன் உதவும். இப்போதைய தேவைக்கு
2 தோடு, 1 செயின், 1 நெக்லெஸ் வாங்கியுள்ளேன்” என்ற
போது ”ஆமாம்!! இதுவும் நல்லாத்தான் இருக்கு” என
நினைத்தேன்.
ஐடியா நல்லா இருக்குல்ல..
இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி போன்ற வங்கிகள்
தாமே தங்கக் காசுகளை விற்கின்றன. அவற்றை வாங்க
மாதாந்திர சேமிப்புத் திட்டமும் இருக்கிறது. சேமிப்புக்கு
சேமிப்பும் ஆச்சு, தங்கம் வாங்கினாப்லயும் ஆச்சு.
FAILING TO PLANNING IS PLANNING TO FAIL
என்று எங்கோ படித்திருக்கிறேன்.
திட்டமிட்டு் வாழ்வோம். நம் முதல் செலவு சேமிப்பாக
இருக்கட்டும்.
இனி உங்கள் வீடுகளிலும் காசு மழை கொட்டட்டும்..
16 comments:
நான் நெனச்சேன்.. நீங்க சொல்லிட்டீங்க
ஏங்க்கா வீட்டம்மாவ கூப்பிட்டு உங்க பதிவ படிக்க சொல்லுவேன்.அதுக்கும் பர்சுக்கும் சேத்து வச்சிட்டீங்களே ஆப்பு..
நல்ல தகவல்
நல்ல பகிர்தல்
(நிறைய வந்தா சொல்லுங்கக்கா ..)
வருகைக்கு நன்றி ஜீவ்ஸ்
உங்க மனைவி உங்க நல்லதுக்குத்தான் நகை வாங்குறாங்கன்னுசந்தோஷமா பர்ஸை அவங்கிட்ட கொடுங்க கும்க்கி.
:)))
நிறைய வந்தா சொல்லுங்கக்கா ..)//
நிறைய்ய காசா...
அம்ருதாவுக்கு நான் ஏன் கஷ்டபட்டு சேக்கணும் அதான் மாமாக்கள் இம்புட்டு பேரு இருக்கீங்கள்ல. :)))))
நல்ல யோசனை, இன்று முதல் செயல் படுத்த முயற்சிக்கிறேன்.
தென்றல்,
அவங்க வீட்டுக்காரருக்கு எவ்வளவு மன நிம்மதி கொடுத்து இருக்காங்க உங்க பெரியம்மா. இந்த மாதிரி பெண்மணிகள் தானே வீட்டுக்க்குத் தேவை!!!
ரொம்பத் தேவையான பதிவும்மா.
அதே போலக் கல்வைத்த நகைகளைவீட ப்ளெயின் தங்க நகைகள் மதிப்பு அதிகம்.
வாங்க நீலமலை,
வருகைகும் உங்க முடிவுக்கும் மகிழ்ச்சி.
வாங்க வல்லிம்மா,
ஆமாம் நீங்க சொல்வது சரி. கல் வெச்ச நகை அழகுக்குதான்.
நானும் இன்னிலிருந்து ஏதாவது பிளாஸ்டிக் காசுகள் கிடைக்கிறதா என பார்க்கிறேன்..
ஹிஹி.. சும்மா தமாசுக்கு.! நிஜமாவே நல்ல ஐடியாதான்.!
தங்கமாஆஆஆஆஆஆஆஆஆஅ
சிறு துளி பெருவெள்ளமாக அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஃப்ரெண்ட்
தங்கமே தங்கம்!!!
:))) (மருமகளுக்கும் சேத்து வைக்கலாம் தங்கச்சி)
இந்த பதிவெல்லாம் அதிகமா சம்பாதிப்பவங்கலுக்கு, நீ எஸ்ஸாகுடா சுப்பு :((((((((
அதிகமா சம்பாதிப்பவங்களுக்கு இல்ல சுப்பு,
கஷ்டபட்டு சம்பாதிச்சதை சேமிக்க நினைக்கறவங்களுக்கு ஒரு ஐடியா இந்தப் பதிவு.
Post a Comment