எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
எப்படி இப்படி எல்லோரும் உஜாலாவுக்கு மாறிட்டாங்க???
சொட்டு நீலம்டோய் உஜாலாவை சொல்லலை.
இப்ப யாரைக் கேட்டாலும் சொல்லும் விடயம்
யோகா& தியானம்.
பள்ளிக்கூடத்துல பசங்களுக்கு யோகா ஒரு பீரியடாவே
கட்டாயமா வெச்சிருக்காங்க.
எனக்கு P.M.S பிராப்ளத்தின் போது சந்திச்ச டயட்டீஷியன்
காலையில் என்னை யோகப்பயிற்சி செய்யச் சொன்னார்.
ஆர்தோ டாக்டரிடம் சென்ற நண்பருக்கு பொழுது
யோகாவை பரிந்துரைத்து மெடிட்டேஷன்
செய்யுங்கள் என்று சொன்னாராம் டாக்டர்.
வாய்ப்புண் என்று மருத்துவரிடம் சென்ற
அயித்தானுக்கு மெடிட்டேஷன் செய்யச் சொன்னாராம்.
(வாய்ப்புண்ணுக்கு வயிற்றுப்புண் மட்டும் காரணமில்ல,
டென்ஷன்(ஆபிஸ் டென்ஷன் தான்னு சொன்னா
நம்பவா போறீங்க!)
சைனஸுக்காக ஆஷிஷை ஹோமியோபதி
மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அவர்
மருந்து கொடுத்து தினமும் யோகா,மெடிட்டேஷன்
செய்யச் சொல்லுங்க. மிகவும் நல்லது.
It will help for personality development also என்றார்.
மருத்துவர்கள், கவுன்சிலிங் எக்ஸ்பர்டுகள்,
உடற்பயிற்சியாளர்கள் என எல்லோரும் பரிந்துரைப்பது
யோகாவைத்தான். அதான் எல்லோரும் உஜாலாவுக்கு
மாறிட்டாங்களான்னு கேக்கறேன்?
அனைவரும் யோகா, தியானத்தை
பரிந்துரைப்பது ஏன்??
யோகா நம் உடலுடன் சேர்த்து மனதையும்
புத்துணர்ச்சியாக்குகிறது. யோகா உடம்பை
மட்டுமல்ல உள்ளூக்குள்ளூம் நம்மை
வலுவாக்குகிறது.
ஈஷா, ஆர்ட் ஆஃப் லிவிங்க் போன்ற இயக்கங்கள்
யோகப்பயிற்சி கற்றுத்தருகின்றன.
இலங்கையில் இருந்த பொழுது ஆர்ட் ஆஃப் லிவிங் பயிற்சியில்
யோகா கற்கும் வாய்ப்பு கிடைத்தது. (ஒரு விஷயம் கேட்கணும்.
இங்கே மட்டும் 5 நாள்பயிற்சிக்கு 3000. முழு நாள் என்றாலும்
அதிகமாக இருக்கு. அங்கே தினம் 3 மணிநேரம் 1 வார பயிற்சிக்கு
1500 ஸ்ரீலங்கன் பணம்தான் கொடுத்தேன்)
யோகா கற்று பயிற்சி செய்ய ஆரம்பித்த பின் புதிதாய்பிறந்ததாய்
உணர்ந்தேன்.எடை குறைப்புக்கு இதை விட மிகச்சிறந்த வழி இருக்கவே
முடியாது.
என்னுள் எத்தனையோ மாற்றங்கள். மன்ச்சோர்வு குறைந்தது.
மெடிட்டேஷன் செய்வதால் டென்ஷன் குறைந்து உடம்பும்
மனதும் லேசானது போலிருக்கும். எந்த வேலையையும்
பொறுமையாக செய்ய உடம்பும், மனமும் ஒத்துழைக்கும்.
”கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை
ஒத்துக்கொள்” என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
யோகக்கலையையும் கற்றுக்கொள்வதாலும் நம்
கவலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
யோகா பற்றிய விக்கிப்பீடியாவுக்கு
தினமும் காலையில் 30 நிமிடம் செலவழித்தால் நாளெல்லாம்
புத்துணர்ச்சியாக இருக்கலாம். எங்கும் எவராலும் பரிந்துரைக்கப்படும்
யோகக்கலையை கற்று ஆரோக்கியாமாக வாழலாம்.
18 comments:
வாய்ப்புண் என்று மருத்துவரிடம் சென்ற
அயித்தானுக்கு மெடிட்டேஷன் செய்யச் சொன்னாராம்.
(வாய்ப்புண்ணுக்கு வயிற்றுப்புண் மட்டும் காரணமில்ல,
டென்ஷன்(ஆபிஸ் டென்ஷன் தான்னு சொன்னா
நம்பவா போறீங்க!)\\
வயிற்றுப்புண்ணுக்கே டென்ஷனும் ஒரு காரணி தானே
எந்த வேலையையும்
பொறுமையாக செய்ய உடம்பும், மனமும் ஒத்துழைக்கும்.\\
இது தான் அதனின் பெரும் வெற்றி
நானும் உஜாலாவுக்கு மாறிட்டேன் :))))))))))
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜமால்
ஆஹா அப்படியா சுப்பு,
சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள்
யோகசனம் செய்த உடன் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பது உண்மைதானா ?..
நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க.
http://sinekithan.blogspot.com/
ராத்திரி படுக்க லேட்டாகுது,காலையில் நமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குளிக்கவேண்டும்,இங்கே அதற்கெல்லாம் நேரமில்லைங்க!நன்மை என்று தெரிந்தும் செய்யமுடியவில்லை முயற்சித்து பார்க்கிறேன்.
அக்பர் அலி HR
துபாய்
ஆமாம் தென்றல், உஜாலா உடலுக்கும் உள்ளத்துக்கும் உன்னதமானது. நல்ல பதிவு.
வாங்க அக்பர்,
அதைப்பத்தி தெரியலை கேட்டுத்தான் சொல்லணும்.
என்னையும் ரொம்ப பேர் பயமுறுத்திகிட்டு இருந்தாங்க. குண்டலினி தியானம் செய்யும்போது யோகா செஞ்சா தடை பட வாய்ப்பு இருக்குன்னு. குண்டலினியோட ஒரு வடிவம் தான் யோகாவுல வர்ற தியானம்னு அப்புறம்தான் தெரிஞ்ச்சுச்சு.
விசாரிச்சு சொல்றேன்
நேரம் இல்லைன்னு சொல்வது தப்பு.
எல்லாத்துக்கு நேரம் இருக்கு. ஒரு நாள் செஞ்சு பாருங்க. அப்புறம் பழகிடும் அக்பர் அலி
வருகைக்கு நன்றி
வாங்க ராமலக்ஷ்மி,
வருகைக்கு மிக்க நன்றி
நல்ல பதிவிற்கு நன்றி.
எல்லோரும் சொல்லியாச்சு புதுகை...ஆனாலும் என்னால உஜாலாவுக்கு மாற முடிலியே!!!
நல்ல பதிவுக்கா:)
/
வாய்ப்புண் என்று மருத்துவரிடம் சென்ற
அயித்தானுக்கு மெடிட்டேஷன் செய்யச் சொன்னாராம்.
(வாய்ப்புண்ணுக்கு வயிற்றுப்புண் மட்டும் காரணமில்ல,
டென்ஷன்(ஆபிஸ் டென்ஷன் தான்னு சொன்னா
நம்பவா போறீங்க!)
/
என்ன டார்ச்சர் பண்ணீங்க அயித்தானை?
:)))))))))))
யோகா நானும் 6 மாதம் பயின்றேன். இப்ப ரெகுலரா செய்யறதில்லை :((
ஆரம்பிக்கணும்.
அண்ணாத்த அப்டியே கொஞ்சம் நம்ம பக்கமா வந்து பாத்துகினு போன குஜாலாருக்கும் தல.
ponmaalaipozhuthu.blogspot.com//
:) அழைப்பே நல்லா இருக்கு தம்பியோவ். ஆனாலும் ஒரு சின்ன திருத்தம். புதுகைத் தென்றல் அண்ணாத்தே இல்லை. நான் ஒரு பெண்மணி. வர்றேன். வந்து படிக்கறேன்
ஆனாலும் என்னால உஜாலாவுக்கு மாற முடிலியே//
சீக்கிரம் மாறிடுங்க அருணா. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டம் தான். அப்புறம் இனிமையா இருக்கும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் (உங்க உஜாலாவுக்கு மாறிட்டேன் பதிவை சீக்கிரம் எதிர் பாக்கிறேன்)
Post a Comment