Monday, June 29, 2009

மனதுக்கு இதமளிக்கும் தருணங்கள்

ஊர்ல எங்க குடும்பத்துக்கு சொந்தமான பள்ளிக்கூடம்
இருந்தது. அதை இப்ப வேறவங்களுக்கு கொடுத்திட்டாங்க.
அரசு உதவி பெறும் பள்ளியில அதுவும் ஒண்ணு.


எங்க அம்மாவகையில் பலரும் அங்கே ஆசிரியர்கள்.
என் தாத்தா(அம்மாவின் அப்பா) சுந்துசார். தாத்தா
பேரைக்கேட்டாலே நடுங்குவாங்க எல்லோரும்.
ஆனா அந்த பயத்துக்கு சமமா மரியாதை, அன்பும் இருக்கும்.

தாத்தா ஊர்ல நடந்து போகையில பாதி பேர் சல்யூட்
வெக்காம போகமாட்டாங்க. சைக்கிளில் போறவங்க
கூட இறங்கி தள்ளிகிட்டு தாத்தாவை கடந்து போயிட்டு
அப்புறமாத்தான் சைக்கிளில் ஏறுவாங்க.

ஊர்ல நிறைய்ய பேரு தாத்தாவோட மாணவர்கள்தான்.
சமீபத்தில ஹைதைக்கு தாத்தா வந்திருந்தாரு.
இங்க இருக்கற ரிடையர்டு டி.ஜி.பி அவரோட முன்னாள்
மாணவர்னு போன் நம்பரைத்தேடி, பேசினாரு.

அம்மா அதே பள்ளியில கிளார்க்கா வேலை செய்வதற்கு
முன்னாடி ஆரம்பபள்ளி ஆசிரியை. ரத்னா டீச்சருக்குன்னு
ஒரு தனி மரியாதையே இருக்கும்.

எங்க சித்தியும் அங்கே வேலைபாத்தவங்கதான். என் முதல்
குரு சித்திதான். இவங்களுக்கு கிடைக்கற மரியாதை
அப்ப பிரமிப்பா இருக்கும். கடைக்கு போகும்போதெல்லாம்
டீச்சர்னு யாராவது வந்து பேசும்போது, கொஞ்சம் எரிச்சலா
இருக்கும்.

”இதெல்லாம் ரொம்ப ஓவரால்ல இருக்கு” அப்படின்னு
கூட நினைச்சிருக்கேன். நானும் ஆசிரியையை வேலை
பாப்பேன்னு நினைக்கலை. (நான் நினைச்சது கல்லூரிப்
பேராசிரியை வேலை ஆச்சே!!)

ஆனா இந்திராகாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில 2 வருஷம்
டீச்சரா வேலைப்பார்த்தேன். கிட்டத்தட்ட ஹெச்எம் போஸ்ட்.
(புகழ் பெற்ற பள்ளியின் குடும்பத்தில் வந்தவள் என்பதால்
கொடுக்கப்பட்டாலும், பிறகு அதற்கு தகுதி உடையவளா
என்னை மாத்திக்கிட்டேன்)

அந்த வேலையை விட்டுட்டு மும்பை போயிட்டேன்.
அதற்கப்புறம் திருமணமாகி புதுகை சென்றபோது
பழநியப்பா காம்ப்ளக்ஸில் இருக்கும் புதிதாக வந்திருக்கும்
அரிசிகடையில் அரிசி வாங்க நான்,அம்மா,அப்பா
சென்றிருந்தோம். அங்கே உட்கார்ந்திருந்த அம்மிணி
எங்களைப்பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றாங்க.

அப்பா, அம்மா இவங்க கூட இருக்கும்போது
இதெல்லாம் சகஜம் அப்படின்னு இருந்துட்டேன்.
”டீச்சர் நீங்களும் உட்காரு்ங்க!!” அப்படின்னு
தனது சுழல் நாற்காலியைகொடுத்து உட்காரச்சொன்னாங்க.
நான் டீச்சரா வேலைப்பார்த்ததையே மறந்திட்டேன்.

யாருன்னு தெரியாம நான் குழம்பிகிட்டு இருக்க
“ உங்க ஸ்டூடண்ட் சிவரஞ்சனியோட அம்மா நான்”
அப்படின்னு அறிமுகம் செஞ்சுகிட்டாங்க. வகுப்புக்கு
வந்து வீட்டுக்கு செல்லும் வரை வாயேத்திறவாத
பேசாமடந்தையாக, எழுதச்சொன்னால் கண்ணீர்விட்ட
ரஞ்சனி நினைவுக்கு வந்தாள்.

கடைசியில் அவளை
எப்படியோ எழுத வைத்து, சிரிக்க வைத்தும் சாதனை
புரிந்திருந்தேன். ”இப்போ 2ண்ட் ஸ்டாண்டர் மொளண்ட்
ஜியான்ல படிக்கிறா டீச்சர்! என் மகளைப்பத்தி
கவலைப்பட்டுகிட்டு இருந்தேன். நீங்க அவளை மாத்தினீங்க!!”
என்று பாராட்டு பத்திரம் வாசிக்க அம்மா,அப்பாவுக்கு பெருமை.

அம்மாவுக்கும், தாத்தாவுக்கும்
கிடைத்த மரியாதை எனக்கும் கிடைத்த பொழுது அந்த நிமிடம்
ஆசிரியரின் பணி மகத்தானது, அதில் கிடைக்கும் திருப்தி
வேறெந்த பணியிலும் வராது என்பதை புரிந்து கொண்டேன்.
இலங்கையில் மாண்டிசோரி பயிற்சி முடித்து
ஆசிரியையாக ஒரு பள்ளியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த பொழுது,
ஒரு மாணவன். ”பென்சில் எடு என்று சொன்னாலே கண்ணில் கண்ணீர்
முட்டும். மதியம் கொண்டுவரும் ப்ரட்டை சாப்பிடவே மாட்டான்.
அவனை திட்டி, கொஞ்சி, கெஞ்சி சாப்பிட வைத்தேன். மெல்ல
மெல்ல எனக்கு நண்பனாகி என் கைப்பிடித்து எழுத துவங்கினான்.”
வீட்டிற்கு போய் அம்மாவிடம் என்னைப்பற்றி அதிகம் பேசுவானாம்.

பயிற்சி முடிந்து நான் வேலையை விட்டு வந்தபிறகு ஒரு நாள்
துணிக்கடை ஒன்றில் அந்த பையனின் அம்மாவைப் பார்த்தேன்.
“ஹாய் மேடம்!” என ஓடி வந்து கட்டிக்கொண்டு பேசினர்.
துணிக்கடையில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க,பக்கத்தில்
இருந்த தன் தோழியிடம்,”என் மகன் இன்று ஒழுங்காக
படிக்க, சாப்பிட இந்த ஆசிரியைதான் காரணம்” என்று
அறிமுகப்படுத்த மற்றவர்களும் என்னை சிநேகமாக பார்த்து
சிரித்தார்கள்.

நான் வேலையை விட்ட பிறகு கூட என்னிடம்
படித்த துளசி எனும் மாணவன் எனக்காக வாழ்த்துஅட்டை +
பூங்கொத்து ஒன்று தன் கையால் செய்து பள்ளியில் கொடுத்து
என்னிடம் சேர்க்கச் சொன்னதாக ஒரு ஆயாம்மா கொண்டுவந்து
என் வீட்டில் கொடுத்துவிட்டுப்போனார்.
தன் மாணவன் உயர்ந்த நிலையில் இருக்கிறான் எனும்
பெருமை ஆசிரியருக்கே உரியது. பெற்றவர்களைப்போல
அந்த வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கும் இருக்கிறது.

தன் பணியின் தன்மை உணர்ந்து, தன்னை அர்பணித்துக்கொண்ட
ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறம் தாழ்த்தி வணக்கங்களை
தெரிவித்துக்கொள்கிறேன்.

வரும் ஜூலை7ஆம்தேதி குரு பொளர்ணிமா.

நமக்கு வாழ்வில் ஏதேனும் கற்க உதவிய எவரும்
நமக்குகுருவே. எனக்கு சொல்லித்தந்த அனைத்து
உள்ளங்களுக்கும் என் வணக்கங்களும், மனமார்ந்த
நன்றிகளூம்.

10 comments:

நட்புடன் ஜமால் said...

\\நான் வேலையை விட்ட பிறகு கூட என்னிடம்
படித்த துளசி எனும் மாணவன் எனக்காக வாழ்த்துஅட்டை +
பூங்கொத்து ஒன்று தன் கையால் செய்து பள்ளியில் கொடுத்து
என்னிடம் சேர்க்கச் சொன்னதாக ஒரு ஆயாம்மா கொண்டுவந்து
என் வீட்டில் கொடுத்துவிட்டுப்போனார்.\\

நெகிழ்ந்த தருணம் ...

ஜானி வாக்கர் said...

நெகிழ்ச்சியான தருணங்கள் உள்ளடக்கிய பதிவு.

5வது படிக்கும்போது ட வு ச ர் கிழிய அடிவாங்கிய அனுபவம் ஏனோ என் மனத்தில் வந்து போனது உங்கள் பத்திவை படித்து முடித்ததும்.

மங்களூர் சிவா said...

மிக இனிமையான பதிவு.

/
எழுதச்சொன்னால் கண்ணீர்விட்ட
ரஞ்சனி நினைவுக்கு வந்தா'ல்'.
/
ள்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ஜமால்

புதுகைத் தென்றல் said...

5வது படிக்கும்போது ட வு ச ர் கிழிய அடிவாங்கிய அனுபவம் ஏனோ என் மனத்தில் வந்து போனது//

டெர்ரரா இருந்தாலும் அப்ப டீச்சர்கள் இன்னொரு பெற்றோராவே இருந்தாங்க.

புதுகைத் தென்றல் said...

நன்றி, மாத்திடறேன் சிவா.

அமுதா said...

/*தன் மாணவன் உயர்ந்த நிலையில் இருக்கிறான் எனும்
பெருமை ஆசிரியருக்கே உரியது. பெற்றவர்களைப்போல
அந்த வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கும் இருக்கிறது.

*/

உண்மை. தோழி ஒருவர் தன் பெண் படிப்பதே இல்லை, படிப்பில் நாட்டமில்லை என்று வருத்தப்படுவார். ஆனால், வகுப்பு ஆசிரியர் ஒருவர் பொழிந்த அன்பில் அவள் படிப்பில் நாட்டம் கொள்ள ஆரம்பித்து நன்கு படிக்கிறாள். ஆசிரியரின் பங்கு மிக இன்றியமையாதது.

/*தன் பணியின் தன்மை உணர்ந்து, தன்னை அர்பணித்துக்கொண்ட
ஆசிரியர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணக்கங்களை
தெரிவித்துக்கொள்கிறேன்*/
நானும் எனது வணக்கங்களை
தெரிவித்துக்கொள்கிறேன்

நானானி said...

அன்புள்ள தென்றல்! உங்கள் கேள்விகள் தொடருக்கு பதிலளித்திருக்கிறேன். பார்த்து விட்டு, படித்து விட்டு மதிப்பெண்கள் போடவும்.

R.DEVARAJAN said...

விஜயவாடாவிலுள்ள நலிவடைந்த
பழமையான தமிழ்ப்பள்ளி ஒன்றிற்குப் புத்துயிர் தருவது தொடர்பாக ஆலோசனை கேட்டுள்ளனர். தாங்கள் உதவ முடியுமா ?

அரசிடமிருந்து என்ன உதவிகளைப்பெற முடியும் ?

தேவ்
rdev97@gmail.com

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்