Thursday, July 30, 2009

கதம்ப மாலை 30.7.09

ஏப்ரல் 95க்கு பிறகு தனியே தன்னந்தனியே
என் பயணம் சமீபத்தில் நடந்தேறியது.
சென்னைக்கு பயணம் என்பதால் கொஞ்சம்
இண்ட்ரஸ்ட் இல்லாமல்தான் வந்தேன்.
மும்பை-சென்னை ரயில்பயண நேரம்
போல் நீண்டதாக இல்லாமல் இருக்கும்
ஹைதை-சென்னை பயணம். அதனால்
பெரிதாக வித்யாசம் இல்லை.
இதற்கு முந்தைய என் தனி சென்னைப்
பயணங்கலின் போது என்னை வரவேற்க
சென்னையில் யாரும் வந்திருப்பார்கள்.
இந்த முறை நானே ஆட்டோ பிடிச்சு
என் தோழிவீட்டுக்கு
சென்று அங்கிருந்து திருமண மண்டபம்
எல்லாம் போய்வந்துட்டோம்ல.
****************************************


(ஏதோ நேரம் நல்லா இருந்து
ஆட்டோ அண்ணன்கள் தகராறு செய்யாம
வந்ததாலதான் பயணம் இனியதாய்
இருந்துச்சுன்னு நினைக்கறேன்)

சென்னை செண்ட்ரலில் தகராறு
செய்யாமல் ஆட்டோ கிடைத்தது
என் முன் ஜென்மத்து நல்வினையோ!!!!
:))))))))))))

இவங்க அடாவடியால் மக்கள் கஷ்டப்படக்கூடாது
என்பதால் PRE PAID AUTO கவுண்டரை
செண்ட்ரல் ஷ்டேஷனில் ஆரம்பிச்சிருக்காங்க.
(அவங்க நடுவுல தகராறு செஞ்சா மொபைலை
எடுத்து போலிசுக்கு போன் போடறேனு பயம்
காட்டணுமாம் :)) )

****************************************

சமீபத்திய சென்னை- ஹைதை ரயில் பயணத்தில்
நடந்தது இது.

என்னுடம் பயணித்த சக பயணி
தென்னக ரயில்வே ஆடிட்டர் போலிருக்கிறது.(அவரது
தொலைபேசி பேச்சுக்களிருந்து தெரிந்துகொண்டேன்)
தன்னிடமிருந்த மற்றொரு போனில் பெரிதாக
பாடல்களைக் கேட்டுக்கொண்டு வந்தார்.
மனிதருக்கு இங்கிதம் இருக்கும். நிறுத்தி
விடுவார் என பார்த்தேன். ம்ஹூம்.. :(

பொறுத்து பொறுத்து பார்த்து
“எக்ஸ்க்யூஸ்மி, பாட்டு கேப்பதா இருந்தா
சவுண்டை குறைச்சு கேளுங்க, இல்லாட்டி
ஹெட்போன் வெச்சுக்கோங்க. எனக்கு
டிஸ்டபர்ன்ஸா இருக்கு” என்று சொன்னேன்.
ஐம் சாரி” என்று பாட்டை நிறுத்தினார்.
*****************************************

அதிசயமாக 7.30 வணிவாக்கிலேயே ஆர்டர்
கொடுத்திருந்த உணவு வந்துவிட்டது.
திருமண வீட்டு அசதி + பயங்கர கழுத்து
முதுகுவலியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன்.
சாப்பிட்டுவிட்டு 8.30 மணி வாக்கிலேயே
என் அப்பர் பர்த்தில் ஏறி படுத்து விட்டேன்.
(ரயில் அதிகாலை 5.15க்கெல்லாம் ஹைதையை
அடைந்துவிடும்)

எனக்கு எதிர் பர்த் பையன் அவருக்கு மிடில்
பர்த். அவரும் சாப்பிட்டுவிட்டு அந்த
ஆடிட்டரிடம்(அவருடையது லோயர் பர்த்)
தான் படுக்க விரும்புவதாக கூறியதுதான்
தப்பு. ஐயா ஆரம்பித்தார் அவரது
பேருரையை.

“நோ!நோ! 9 மணிக்கு குறைந்து
பர்த் போடச்சொல்லி நிர்பந்திக்கக்கூடாது.
அது இது என்று அந்த பையனுக்கு 30 நிமிடம்
லெக்சர் கொடுத்து 9 மணிக்கு பர்த்
போட பர்மிஷன் கொடுத்தார்.

இதற்கெல்லாம் சட்டம் பேசத் தெரிந்த இவருக்கு
வண்டியில் பாடலை அலற விட்டுக் கேட்க
கூடாது என்பது தெரியவில்லை...

*********************************
அம்ருதா ஆஷிஷ் இருவருக்கும் சென்ற வருட
முழுப்பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால்
அவர்கள் விரும்பும் விளையாட்டுச் சாமான்
வாங்கித் தருவதாக சொல்லியிருந்தோம்.
ஆஷிஷ் ஹாட்வீல்ஸ் டர்போ ட்விஸ்டர்
கார் செட் கேட்க, அம்ருதா தனக்கு பார்பி
செட் வேண்டுமென்றாள். சரி என்று
சொல்லியிருந்தோம்.

ஆஷிஷ்க்கு டர்போ ட்விஸ்டர் வாங்கி
விட்டு அம்ருதாவுக்கு என்ன விதமான
செட் தேவையோ அவளையே அழைத்துச் சென்று
வாங்குவதாக ப்ளான். அவளைக் கடைக்கு
அழைத்துச் செல்ல நேரமில்லாமல் போக
சென்றவாரம் அழைத்துச் சென்று என்ன
வேண்டும்? என்று கேட்டோம்.

பார்பி பக்கம் சென்றவள், சுத்தி சுத்தி
வந்தாள். பார்பியை விட்டு அவள்
கையில் எடுத்தது ரோலர் ஸ்கேட்டரை.

”பார்பிதானே கேட்டாய்? இப்ப இதை
எடுத்திருக்க?” என்று கேட்டதற்கு
அம்ருதாவின் பதில்,”பார்பி இன்னும்
கொஞ்ச நாள்தான் விளையாடலாம்மா,
ரோலர் ஸ்கேட்டர்னா நான் எப்ப வேணாம்
விளையாடலாமே!!!”

யோசிக்கும் தன்மை, மனமுதிர்ச்சி
இதை இயற்கையே பிள்ளைகளுக்கு
அந்தந்த சமயத்தில் வழங்கிவிடுகிறது.
**********************************

என்னுடைய வலைப்பூவைத் தொடரும்
அந்த 75ஆவது நபருக்கு என் மனமார்ந்த
நன்றிகள்.
***********************************

22 comments:

நட்புடன் ஜமால் said...

இங்கும் கலவையா

மிக்ஸிங்க நல்லாயிருக்கு

நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

இங்கும் கலவையா

மிக்ஸிங்க் நல்லாயிருக்கு/

Repeattuuuuu...!

pudugaithendral said...

நன்றி ஜமால்

pudugaithendral said...

நன்றி நி.நல்லவன்

SK said...

இதான் மொதோ மொறையா தனியா போறீங்களா :) என்னது இது எல்லாம்..

SK said...

நல்லாவே பயணம் ..

pre paid taxi or call taxi.. நல்லாவே இருக்கு சென்னைல

butterfly Surya said...

தொடர்ந்து கதம்ப மாலை மணம் வீசட்டும்.

Thamira said...

நல்லாருந்தது பிரென்ட். ஆனா கடைசி பகுதி தவிர பிற அனைத்தையும் ஒரே பதிவாக எழுதியிருந்தாலும் சரிதான். கதம்பம் இல்லை, ஒரே நிகழ்ச்சிதான்.

அமுதா said...

/*யோசிக்கும் தன்மை, மனமுதிர்ச்சி
இதை இயற்கையே பிள்ளைகளுக்கு
அந்தந்த சமயத்தில் வழங்கிவிடுகிறது*.
உண்மை தான்

மங்களூர் சிவா said...

பயணம் இனிமையா இருந்ததா?

கோபிநாத் said...

ரைட்டு..குட் ;))

டிரீட் எப்போ! ;))

நாஞ்சில் நாதம் said...

/// யோசிக்கும் தன்மை, மனமுதிர்ச்சி
இதை இயற்கையே பிள்ளைகளுக்கு \\


வளர்பு முறைகளும் கூட ஒரு காரணம்

pudugaithendral said...

இதான் மொதோ மொறையா தனியா போறீங்களா//

14 வருஷத்துக்கப்புறம் மொதோ தபா பயணம் :))

pudugaithendral said...

வருகைக்கு நன்றி வண்ணத்துப்பூச்சியாரே

pudugaithendral said...

வாங்க ஃப்ரெண்ட்,

நீங்க சொன்னதை மைண்ட்ல ஏத்திட்டேன். அடுத்த தடவை மிக்சிங் சரியா செய்யறேன்

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அமுதா

pudugaithendral said...

நல்லா இருந்துச்சு சிவா

pudugaithendral said...

ஆஹா இதுக்கெல்லாமா ட்ரீட்டு

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

:)))))))))))))

pudugaithendral said...

வளர்பு முறைகளும் கூட ஒரு காரணம்//

ஆமாம்னு சொல்லலாம். வருகைக்கு ந
ன்றி

துபாய் ராஜா said...

கலர்கலரான கதம்பமாலை.அருமை.

Vetirmagal said...

நமஸ்தே.

கடந்த சில வாரங்களாக ஊரில் இல்லாததால் பதிவுகளே பார்க்க முடியவில்லை. இப்போது படிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

எனக்கும் இரயில் பயணத்தில் , துணைப் பயணிகளின் தொல்லை ;-)

பங்களூரு ஜதராபாத் வருகையில், ஒரு 'டப்பர்வேர்' பெண்கள் கும்பல், அமர்க்களம். எல்லா தென்னிந்திய மொழிகளிலும் அரட்டை. அந்தரங்க செய்திகளும் கூட! படுத்த பின்னும் கூட ஒரே கத்தல்.
கொஞ்சம் கடுமையாகவே எடுத்து சொல்ல வைத்து விட்டார்கள் 45-50 வயது பெண்மணிகள!

பொது இடத்தில் மற்றவர்கள் பற்றி கவலைப் படாதவர்கள் எந்த மாதிரி குழந்தைகளை வளரத்திருப்பார்கள்
என்று நான் யோசித்து கொண்டேன்.

pudugaithendral said...

வாங்க வெற்றிமகள்,

ரொம்ப நாளா ஆளைக்காணோமேன்னு நினைச்சேன்.

உங்களுக்கும் என் போல ரயில் பயண அனுபவமா

இவங்களை எல்லாம் என்ன தான் செய்ய் முடியும்??