Tuesday, July 14, 2009

மும்பை மழையும் என் கொசுவத்தியும்...

மும்பை இந்தப்பெயர் எனக்குள் எப்போதும் கொசுவத்திதரும்.

மும்பையில் மழை என்று செய்தி பார்த்ததும் என்
கொசுவத்தி சுத்தோ சுத்துன்னு சுத்துது. :))

வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று
நம்மால் சொல்ல முடியாது அது போலதான்
மும்பையில் மழைக்காலத்தை கட்டாயம்
சொல்லலாம்..

அலுவலகம் கிளம்பும் முன் என்றால் சரி என்று
வீட்டிலேயே இருந்து விடலாம். ஆனால் ஆபிஸ்
போய்விட்டால் மழை கணமாகினால் டிராக் நிரம்பிவிடு்ம்.
ரயில்போக்குவரத்து இல்லாவிட்டால் வீட்டுக்கு
செல்லவே முடியாது. அதுவும் மாமா வீடு
வசாய். புறநகர் பகுதியில் இருக்கிறது.
போரிவிலி தாண்டி எப்படியும் டிராக்குகள் நிரம்பி
விடும், இல்லாவிட்டால் ரயில் தடம்புரள வாய்ப்பு.
சர்ச்கேட் - தாதர் வரை கூட தண்ணீர் அதிகமாகும்.

மாமாக்களின் அலுவலகமோ அந்தேரிக்கு அருகில்தான்.
அந்தேரியில் தாத்தா(அம்மாவின் மாமா) வீடு இருக்கிறது
அங்கே போய்விடலாம். ஆனால் நான் சர்ச்கேட்டிலிருந்து
அந்தேரி வருவது அப்பாடி......

“மழை அதிகமாச்சு, டிராக் ரொம்பி போச்சு பஸ்
பிடிச்சு வந்திடுன்னு”மாமா மெசெஜ் கொடுத்திருவாங்க.
சர்ச்கேட்- அந்தேரி ரயிலில் 30 நிமிடம் தான்.
பஸ்ஸில் அதுவும் மழை நேர டிராபிக்கில்
4 மணிநேரம் ஆகும்.

கூட இருக்கும் தோழியுடன் மழையில் நடுங்கிக்கொண்டே
பஸ்ஸ்டாண்ட் வரை வந்து பொங்கி வழியும் பஸ்ஸில்
எப்படியோ ஏறி(ஓடும் ரயிலில் ஏறுவது கூட கஷ்டமில்லப்பா..
நிக்கற பஸ்ஸுல ஏறுறதுதான் கம்ப சூத்திரம் :)) )
பசி தாகத்தோட அந்தேரி வந்து சேர்ந்தால் மாமா
சுடச்சுட சாப்பாடு வாங்கி வைத்திருப்பார்.

அடுத்த நாளும் மழை பெஞ்சு ஆபிஸ் லீவு
விடணும்னு பிரார்த்தனையோட தூங்குவேன்.
நம்ம நேரம் இப்படியாகும்..சில சமயம் முதல் நாள் மழையில் நனைஞ்ச
களப்புக்காக ஆபிஸூக்கு மட்டம் போடுவேன்.
“அந்தேரிதானே போன, அப்புறம் ஏன் லீவுன்னு”
அடுத்த நாள் கேட்கும் டேமேஜரிடம் “இல்லையே
வசாய்தான் போனேன்” என்று சொ்ன்னால்
“மாமாவுக்கு போன் வீட்டு விசாரிக்கறேன்”
(இதுக்கு ஸ்கூலே பராவாயில்லை:( ) அப்ப்டின்னு
சொல்வார்.

இதே போன்றதொரு மழை நாளில் பயந்தர்-மிராரோடு
இடையில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு
வசாய்க்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

அந்தேரி வரை டிரையினில் வந்து நான், மாமாக்கள்
எல்லாம் ஷ்டேஷனிலேயே இருந்தோம்.(அந்தேரி
தாத்தா ஊருக்கு போயிருந்தார்) பசி, மழை.
அந்த நேரத்தில் மாமா சாப்பிட அழைத்துச் சென்றிருந்த
ஹோட்டலில் சாப்பிட்டதுதான் என் முதல்
கடாய் பனீர் டேஸ்ட். செம சூப்பர்.

இரவு 11.30 மணி வரை மூவரும் ஷ்டேஷனில்
உட்கார்ந்திருந்து வசாய் செல்லும் டிரையின்
அறிவிக்கப்பட்டதும் வீடு சேர்ந்த பொழுது மணி
1.

மழை கொட்டே கொட்டென்று கொட்டியது.
டிராக் ரொம்பி லீவு. இரண்டு நாளைக்கு
வீட்டில் கார்டு, அரட்டை, அந்தாக்‌ஷரின்னு
ஒரே அட்டகாசம்தான்.

இப்பயும் மும்பையில் மழை. மழைதரும்
அசொளகர்யங்களையும் மீறி மும்பை மழை
எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

17 comments:

வண்ணத்துபூச்சியார் said...

இங்கு சென்னையில் தினமும் மழை
"வரும் ஆனா வராது""ன்னு வெறுப்பேத்துது..

ஆனா மழை பதிவு வந்த நேரமாவது ஏதாவது நடக்குதா பார்க்கலாம்..?

ஜானி வாக்கர் said...

நல்லா சுத்தறாங்கப்பா கொசுவர்த்திய, நாள் தான் சுத்திஇருக்கு

எம்.எம்.அப்துல்லா said...

எம்.பி.ஏ படிக்கும் போது மும்பை எல்&டி யில் பிராஜக்ட் செய்ய வந்தேன். ஒரு விநாயகர் சதுர்த்தி நேரம். வானத்தைக் கிழித்ததுபோல கொட்டிய மழை என்னால் மறக்கவே முடியாது.

ரங்கன் said...

ஆத்தா..

ஒரு மழைக்கே இவ்ளோ கொசுவத்தியா?

இன்னும் ஹிஸ்டரி இருக்கும் போல!!

புதுகைத் தென்றல் said...

ஆடி மாதம் சென்னையில மழையா???

என்ன ஜோக் அடிக்கறீங்க வண்ணத்துப்பூச்சியாரே,

கார்த்திகை மாசம் கருக்கல் கண்டால் கூட மழை பேஞ்சுச்சுன்னா அதிசயம்

புதுகைத் தென்றல் said...

நன்றி ஜானி

புதுகைத் தென்றல் said...

விநாயகசதுர்த்தியின் விசர்ஜன் முடிஞ்ச்சா தான் மும்பையில் மழை விடும்னு ஒரு கணக்கு இருக்கு அப்துல்லா.

அதுவரை ஆனந்த மழைதான்

புதுகைத் தென்றல் said...

ஒரு மழைக்கே இவ்ளோ கொசுவத்தியா?

இன்னும் ஹிஸ்டரி இருக்கும் போல!!//

ஹி ஹி பாஸ்ட் இஸ் ஹிஸ்டரி என்பதால் கைவசம் நிறைய்ய இருக்கு ரங்கன் :)))))))))))

மங்களூர் சிவா said...

இங்கு மங்களூரில் கடந்த ஒன்றரை மாதமாக மழை பெய்துவருகிறது ஏறக்குறைய தினமும் குறைந்தது ஆறேழு மணி நேரம். ரோடில் சிறிது தண்ணீர் நிற்பது இல்லை (எல்லாம் கடலுக்கு ஓடீடுது).

ஆபீஸ்க்கு நடந்து போனாலே 15/20 நிமிசம் பைக்ல 5 நிமிசம். வீட்டம்மா ஆபீஸ்க்கு நடந்து போனா 40 நிமிசம் பைக்ல 10 நிமிசம்.

மும்பை மழை டிவில பாக்கீறதுக்கே ரொம்ப கொடுமையா இருக்கு :((((

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மழையில நனைந்தா அது ஒரு சுகம் தான்

நல்ல பதிவு

என்ன நம்ம பக்கம் ஆளையே காணோம்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா,
அந்த மாதிரி கஷ்டங்களை எல்லாம் அனுபவித்ததனால் இப்போது வாழ்வு எனக்கு சுகமா இருக்கு.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஸ்டார்ஜன்,

இரண்டு வலைப்பூ இருக்கா?? எதுன்னு புரியாம திரும்ப வந்திட்டேன்

புதுகைத் தென்றல் said...

நன்றி செய்தி வளையம்

நாகா said...

நான் அந்தேரி கிழக்கில் இருந்தேன். மேடான பகுதியாதலால் எங்கள் ஏரியா தப்பிவிடும், ஆனால் தெரியாமல் மின் ரயில் நிலையம் சென்றால் அந்த வழியில் உள்ள அனைத்து மாட்டுப் பண்ணைகளின் கழிவுகளும் இடுப்பளவு மழை நீரில் கலந்து, அய்யோ.. :) என் மும்பை நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி..

புதுகைத் தென்றல் said...

வாங்க நாகா,

கொசுவத்தி சுத்திடிச்சாக்கும் :))

நாங்க அந்தேரி வெஸ்ட். (இப்ப அந்த வீடு இல்ல. வித்துட்டாங்க)

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்