எனக்கு 11 வயது இருக்கும்பொழுது ஏற்பட்ட மூளைகாய்ச்சலின்
போது 6 கிலோ ஐஸ் வைத்து ஜுரத்தை குறைத்து என்னைக்
காப்பாற்றினார்கள்.அதன் பாதிப்போ அதற்கு முந்தைய அம்மை
வார்ப்புக்களின் பாதிப்போ புரியவில்லை. ஆனால் என்
வலது கண் பாதிக்கப்பட்டது. பார்வைக்குறைபாடு.
ஆரம்பமே -3.( எப்படி ஒரு கண்ணில் மட்டும் இப்படி
என்பது அதிசயம். அதைவிட அதிசயம் 4 வருடங்களுக்கு
முன் லேசர் ஆப்பரேஷன் செய்த பொழுது -9.)
சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்து பட்ட வேதனை
தாளாமல் அம்மா லென்ஸ் வாங்கிக்கொடுத்தார்.
லென்ஸ் வைத்துக்கொள்வதை போன்ற கொடுமை
அப்பாப்...
கண்ணைக்கசக்க முடியாது, சினிமா பார்க்க முடியாது(
உத்துப்பார்பப்தால் லென்ஸ் மேலே மாட்டிக்கொள்ளும்,
லென்சோடு பயணம்,தூக்கம் கஷ்டம்)
கண்வலி, தலைவலி அதிகமாகும்பொழுது
அம்மாவிடம் அழுவேன்.
எனக்கு மட்டும் ஏனிந்த நிலை!!! என்று புலம்புவேன்.
அம்மா சொன்னது,”உன்னை விட கஷ்டப்படுபவர்கள்
இந்த உலகில் இருக்கிறார்கள்!”
அதெல்லாம் இருக்காது என்று அந்த அறியாத
வயதில் சொல்லியிருக்கிறேன். அந்த திரைப்படம்
பார்க்கும்வரை என் எண்ணம் அதுவாகத்தான் இருந்தது.
அன்று அம்மா அழைத்துச் சென்ற திரைப்படம்
என்னை மாற்றியது. விபத்தொன்றில் தன்
கால்களை இழந்த நாட்டிய மங்கை மீண்டும்
நாட்டியமாட படும் பாடு...
கட்டைக்கால்கள் கொண்டு நடனமாடியதில்
வலி ஏற்பட காலை எடுக்கும்பொழுது ரத்தம்
பீய்ச்சும்...
அந்த வலிகளைத் தாங்கி தன்னம்பிக்கையுடன்
போராடி தன் லட்சியமாகிய அரங்கேற்றம்
செய்யும் அற்புதமங்கையாக சுதா சந்திரன்
நடித்த மயூரி படமது.
நிஜ வாழ்விலும் அவர் காலை இழந்தவர்
என்பது தெரிந்த பொழுது எனக்கான செய்தி
கிடைத்து போல் உணர்ந்தேன்.
அன்று முதல் அங்கலாய்ப்புக்கள் இல்லை.
ஒரு கதவை மூடிய இறைவன் எனக்கான
மறுகதவை கட்டாயம் திறப்பான்.
பார்வைக்குறைபாட்டிற்காக சோர்ந்து
போய்விடக்கூடாது என்று நிச்சயம் செய்து
உறுதிமொழி எனக்கு நானே எடுத்துக்கொண்டேன்.
”பாடப்பாட ராகம், முனக முனக ரோகம்”
எனும் பழமொழிக்கேற்ப எனக்கு வந்த
வியாதிகள் தடைகள் எல்லாவற்றையும்
தாண்டி மேலே எழும் வரத்தை தன்னம்பிக்கையை
இறைவன் தந்தான்.
நெருப்பிலிருந்து மீண்டு எழும் ஃபினிக்ஸ் பறவையாக
நான் என்னை நினைத்து மீண்டெழுந்த எத்தனையோ
சந்தர்ப்பங்கள்...
இந்தக் கதைகள் இப்போதெதற்கு????
இப்போதும் இவைகளை நினைத்துப் பார்க்க
வைக்கும் சம்பவம்.
10 வருடங்களுக்கு முன் விழுந்து
வலது கை மணிக்கட்டில்
ஏர்லைன் க்ரேக் ஆகி இருந்தது
தெரியாமல் சரியான வைத்தியம்
பார்த்துக்கொள்ளவில்லை.
அதிக வேலை செய்தால்
என் வலது கை வலிக்கும். க்ரேப் பேண்டேஜ்
போட்டு 2 நாள் ரெஸ்ட் கொடுத்தால் சரியாகும்.
இப்படியே ஓட்டிக்கொண்டிருந்தேன்.
2 மாதம் முன்பு வேலைக்காரம்மா 10 நாள்
விடுப்பெடுக்க பயங்கர வேலை கைகளுக்கு.
அதிக வலி எடுத்து உணவை எடுத்து
உண்ணக்கூட முடியாமல் ஆகிவிட
மூட்டுவலி நிபுணரை பார்த்தோம்.
ஸ்பாண்டிலைடிஸ் என்று உறுதி படுத்தினார்.
கை விரல்களின் நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ரெஸ்ட் + பிசியோதெரபி தான் மருந்து
என்று சொல்லிவிட்டார்.
பிசியோதெரபி எடுத்துக்கொள்ளலாம்.
ரெஸ்ட் என்பது இல்லத்தரசிகளுக்கு
சாத்தியமில்லாத ஒன்று. தினமும்
பிசியோதெரபி செய்து கொண்டேன்.
ட்ராக்ஷன் வைக்கப்படும். அப்புறம்
கைகளுக்கு கொஞ்சம் பயிற்சி.
ஆனால் வீட்டில் வேலை செய்ய முடியவில்லை.
தோசை ஊற்றக்கூட கைவரவில்லை.
வலது கையால் தண்ணீர் எடுத்துக்குடிக்க
முடியவில்லை. என்னை மட்டுமே சார்ந்து
பழக்கப்பட்ட எனக்கு அடுத்தவர்களை சார்ந்து
கஷ்டப்படுத்த வேண்டிய நிலை. :(((
இந்த நிலையில் அயித்தான் மிகவும் கவனமாக்
பார்த்துக்கொண்டார். 15 நாள் நான் பக்கத்தில்
இருந்து சொல்ல அவரே உணவு தயாரித்து
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினார்.
பிள்ளைகள் இருவரும் மிக்க உதவி
செஞ்சாங்க.
ஒருமுறை தவிர்க்க முடியாத காரணமாக
அலுவல் நிமித்தம் வெளியூர் செல்ல ஏர்போர்ட்
வரை சென்றவர் பயணத்தை ரத்து செய்துவிட்டு
வீட்டிற்கு வந்து என்னை பார்த்துக்கொண்டார்.
கைகளுக்கு கொஞ்சம் முன்னேற்றம் வந்தது.
உப்புமா, சப்பாத்தி, செய்வது சவலாகத்தான்
இருந்தது. இப்போதும் சப்பாத்தி கஷ்டம்.
ஆனால் டீ, உப்புமா கொஞ்சமாக செய்ய முடியும்.
இத்தனைக் கஷ்டங்களுடன் பதிவெழுதித்தான்
ஆக வேண்டுமா? போய் ஓய்வெடுங்கள் என
என்னை அன்பாக ஆன்லைனில் கண்டித்து
நட்புக்களும், உடன் பிறப்புக்களும் என்னை
திக்குமுக்காடச் செய்துவிட்டார்கள்.
கணிணியில் தட்டச்சுவதையும் பயிற்சி
போல் கொஞ்ச நேரம் செய்து பதிவெழுதினேன்.
அதனால் தான் கடந்த 2 மாதங்களாக
1 நாளைக்கு 4 பதிவெல்லாம் போடவில்லை.
ஆனாலும் நான் தொலைந்துவிடாமல்
என் தன்னம்பிக்கைக்கு உறமிட்டது பதிவுக்கள்தான்.
சென்றவாரம் மேற்கொண்ட ரயில்பயணத்தால்
தற்போது கொஞ்சம் பிரச்சனை ஆகியிருக்கிறது.
(மருத்துவரின் அனுமதியின் பேரில்தான்
பயண்ம் செய்தேன்.) முதுகு வலி அதிகரித்துவிட்டது.
அதனால்தான் ஆன்லைனில் கூட யாருடனும்
பேசமால் அன்அவலைபிளாக இருந்து பதிவிட்டேன்.
இந்த நிலையில் விருந்தினர் வந்து சென்ற
பயணாக கைவலி மிக மிக அதிகமாகி
தற்போது கைக்கு 1 வாரம் ரேடியேஷன்
கொடுக்கும் நிலை.
ஆக கொஞ்சம் ரெஸ்ட் தேவை என்பதை
நானே உணர்ந்து மீ த டேக்கிங் ரெஸ்ட்.
:)))
அதுக்காக இந்தக் கடையை பூட்டிட்டேன்னு
நினைக்காதீங்க. என்னால எந்த வேலையையும்
செய்யாம சும்மா உட்கார முடியாது. ஒரு நாளைக்கு
15 நிமிடம் கணிணியில் உட்கார அயித்தான்
பர்மிஷன் கொடுத்திருக்காரு.(ரொம்ப டைப் அடிச்ச
பாத்துக்கன்னு மிரட்டலெல்லாம் ஓவரா இருக்கு. :)) )
இந்தக் கைவலித் தடையையும் தாண்டி வருவோம்ல..
:))))))))))))))
31 comments:
நிம்மதியா ஓய்வு எடுத்திட்டு வாங்க அக்கா.
ஒன்னும் அவசரமில்லை
மராத்தான் தான் ஓடுது
ஓய்வு எடுத்துட்டு பிறகு வந்துடுங்க ...
neengal ezuthungal, velaigalai seyyungal. veandaam endru sollavillai. aanaal ungal kuzantahaigalum kanavarum ungalukkaagave irukkiraargal enbathai ninaivil vaiththu ungal udal nalaththaiyum gavanamaaga konjam paarththukkollungal.
வளைய வந்தால்தான் வலையா?.
எப்போது வந்தாலும் அன்புள்ளங்கள் ஆதரவு உண்டு.கை குணமான பின் கணிணி பக்கம் வரவும்.வலியை தாங்கும் வலிமை ஆண்டவன் அருள்வானாக !!
:(
நிச்சயம் வெகு விரைவில் குணமாகி முன்பிலும் அதிக உத்வேகத்துடன் வருவீர்கள்.
கண்டிப்பா ஓய்வு எடுத்துக்கறேன் எஸ்.கே. நன்றி
ஓய்வு எடுத்துட்டு பிறகு வந்துடுங்க ...//
:))) நன்றி
ஆமாம் மஞ்சூர் ராசா,
நீங்க சொல்வது ரொம்ப சரி. அக்கறையான தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி
வலியை தாங்கும் வலிமை ஆண்டவன் அருள்வானாக !!//
இப்படி அன்பு உள்ளங்கள் சுத்தி இருக்கும்போது கவலையென்ன.
மிக்க நன்றி ராஜா
வருத்தப்படதேவையில்லை வெயிலான்.
இதெல்லாம் பாசிங்க் க்ளவுட்ஸ் மாதிரி
:)))))))))))
நன்றி அறிவிலி,
தன்னம்பிக்கைக்கு மேலும் உறம் சேர்க்கும் பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள்
//எனக்கு 11 வயது இருக்கும்பொழுது ஏற்பட்ட மூளைகாய்ச்சலின்
போது
//
எனக்கு எப்பவும் வராது. காரணம் மூளை இருந்தால்தானே!!!
வளைய வந்தால்தான் வலையா?.
//
சமீபத்தில் நான் இரசித்த பின்னூட்டத்தில் இது நம்பர் 1.
விரைவில் குணமடைவீர்கள்.அந்த தன்னம்பிக்கை உங்களிடம் ஏராளம் உண்டு.
வலை நட்பூக்கள் எங்கே போய்விடப்போகிறோம்....ஓய்வெடுத்து வாருங்கள்.....
சீக்கிரம் சரியாகி வந்து வழக்கம் போல கலக்க பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் எங்க எல்லா சார்பாகவும் இருக்கு. வாங்க தென்றல் :)
சீக்கிரம் குண்மாகி வாங்க!!!!
வளைய வந்தால்தான் வலையா???
என்னமா யோசிக்கறீங்கப்பு!!!!!!
நல்லா ஓய்வெடுத்திட்டு வாங்க... மீண்டும் தென்றலாக பதிவுலகை வலம் வரலாம். தன்னம்பிக்கை உள்ளவரை எதுவும் ப்ரச்னை இல்லை.
அறிவிலி said...
நிச்சயம் வெகு விரைவில் குணமாகி முன்பிலும் அதிக உத்வேகத்துடன் வருவீர்கள்.
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
எனக்கு எப்பவும் வராது. காரணம் மூளை இருந்தால்தானே!!!//
:)
நன்றி கும்க்கி
நன்றி தாரணிபிரியா
நன்றி தராசு
கண்டிப்பாய் வந்து எழுதுவேன் அமுதா.
வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி கோஸ்ட்
/
கும்க்கி said...
விரைவில் குணமடைவீர்கள்.அந்த தன்னம்பிக்கை உங்களிடம் ஏராளம் உண்டு.
வலை நட்பூக்கள் எங்கே போய்விடப்போகிறோம்....ஓய்வெடுத்து வாருங்கள்.....
/
அப்படியே வழிமொழிகிறேன்.
nandri siva
ரொம்ப ஸாரிங்க!
நடப்பே தெரியாம மொக்கையா இருந்திருக்கேன்.
இப்ப எப்படி இருக்கீங்க?
கையை பாத்துக்குங்க!
எனக்கு கார்ப்பல் டனல் சிண்ட்ரோம் வந்து
15 நாள் ஒரு வேலையும் பாக்காம இருந்தேன்.
அப்புறம்தான் சரியாச்சு!
ப்ளீஸ்ங்க ! பாத்துக்குங்க!
அன்பான அய்த்தான் இருக்கும்போது ஏன் கவலை!?
தூள் கிளப்பலாம்!
வாங்க சுரேகா,
இப்ப கொஞ்சம் பரவாயில்லை. அதிகமா செய்ய முடியாது. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து செய்யறேன்.
பிசியோதெரபி தொடருது
உங்க உடம்பையும் நல்லா கவனிங்க.
நீங்க சொன்னாப்ல அயித்தான் இருக்க கவலை ஏன். :)))))))
தென்றல் அல்ல. புயல். உண்மையில் சொல்லப்போனால் நீங்கள் ஒரு உத்வேக மனுஷி. இந்தப் பதிவைப் படிக்கையில்நம்பிக்கை ஊட்டுவதாய்உள்ளது. உடல் நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள். தமிழ் உலகம் என்றுமே இருக்கும்.
fundoo நன்றி இப்போது கைவலி குறைஞ்சிருக்கு. முன்னேற்றம்
Post a Comment