ஹாய் ஹாய்...
எல்லோரும் நலம்னு நினைக்கிறேன்.
நான் நல்ல படியா பயணம் முடிச்சு வந்திட்டேன்.
சென்ற பதிவில் எங்க போறேன்னு சொல்லிட்டுத்தான்
போனேன். ஆனா சரியா யாரும் கண்டு பிடிக்கலை.
பாட்டுக்கான க்ளூ பார்த்திபன் கனவு படத்தில்
வரும் கடைசி பிட்டில் இருக்கு. அந்த இடம்
கொழும்பு.
ஆமாம் இலங்கைக்குத்தான் சென்றிருந்தேன்.
என்ன திடும்னு???
”நாம எல்லோரும் அங்கே போயிட்டு வந்தா
எப்படி இருக்கும்?” என கேட்டது என் தோழி
அன்னபூ்ரணி.
ஆஹா!!! அப்படின்னு கிளம்பிட்டோம்.
சென்னையிலிருந்து இரு குடும்பமும் ஒன்றாக
கிளம்பினோம்.
ஒரே குடும்பமா!!! என்று விமான நிலையத்தில்
அனைவரும் கேட்கும் வகையில் பிள்ளைகள்
ஒரே குஷி மழையில்.
”ஆமாங்க! எங்க குடும்பம் ரொம்ப பெரிசு!!”
என்று சொல்லிக்கொண்டோம்.
கொழும்பு விமான நிலையத்தை அடைந்ததும்
ரெடியாக காத்திருந்தார் எங்கள் ஆஸ்தான
வேன் டிரைவர். “உங்க எல்லோரையும்
பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு”
என்று அவரும் எங்கள் சந்தோஷத்தில்
கலந்து கொண்டார்.
ஹோட்டலில் செக்கின் செய்து லக்கேஜ்களை
போட்டுவிட்டு பசி வயிற்றைக்கிள்ள
“வண்டியை நேரா சண்முகாஸுக்கு
விடுங்கண்ணே” என்று சொல்ல
அங்கே போய் என்ன ஆர்டர் செய்யலாம்
பிள்ளைகள் யோசிக்கத் தொடங்கினர்.
சண்முகாஸ் கொழும்பு வெள்ளவத்தை
ராமகிருஷ்ணா ரோடில் இருக்கும்
தென்னிந்திய சைவ உணவகம்.
அங்கே வேலை செய்யும் மேனேஜர்
சுரேஷ் அவர்கள் எங்களை கண்டதும்
“எப்படிங்க இருக்கீங்க? எப்ப வந்தீங்க”
என்று கேட்டது செம ஷாக். 1 1/2 வருடத்திற்கு
பிறகும் எங்களை மறக்கவில்லையே..
அயித்தானின் பெயரும் சரியாக ஞாபகம் வைத்திருந்தார்.
அடுத்த நாள் காலை 12.08.09 பயணம்.
எங்கே???
எல்லாம் வல்ல கதிர்காம கந்தனைக் காணத்தான்.
பயண பதிவுகள் தொடரும்ல....
36 comments:
:)
/ஹாய் ஹாய்.../
Hi...HI
வாங்க வாங்க :-)
தொடருங்க தொடருங்க..
/எல்லோரும் நலம்னு நினைக்கிறேன்./
நலமா இருக்கணும்னு நினைக்கிறோம்!
/நான் நல்ல படியா பயணம் முடிச்சு வந்திட்டேன்./
Good!
/சென்ற பதிவில் எங்க போறேன்னு சொல்லிட்டுத்தான்
போனேன். ஆனா சரியா யாரும் கண்டு பிடிக்கலை./
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....பேசாம சொல்லாமலே இருந்திருக்கலாமோ????
/பயண பதிவுகள் தொடரும்ல..../
கலக்குங்க பாஸ்...:)
போற இடத்துக்கு க்விஸ் வச்சிருந்தீங்களா ?:)
பயணக்கட்டுரையா..
அசத்துங்க..
தென்றலில் சுகமாய் பயணிக்க நானும் வந்திருக்கிறேன்.
தொடருங்கள்.."ஜெரி"-மதுரை
தம்பி நிஜம்ஸ் ரொம்ப ஃப்ரீயா இருக்கீங்க போல(அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் மாதிரின்னு சொல்லவே இல்லை)
:)))
வாங்க எஸ்.கே
வாங்க முத்துலெட்சுமி,
ஆமாம் ஆனா யாரும் சரியா கண்டுபிடிக்கலை.
வாங்க ஜெரி,
உங்க முதல் வருகைக்கு நன்றி.
மதுரை நம்ம பக்கத்து ஊருகாரவுக.
வருகைக்கு நன்றி.
//சென்ற பதிவில் எங்க போறேன்னு சொல்லிட்டுத்தான்
போனேன். ஆனா சரியா யாரும் கண்டு பிடிக்கலை.
//
ஒழுங்காப் பாருங்க. நான் கரெக்ட்டா பதில் சொல்லி இருக்கேன் :)
வாங்க வாங்க
கை வலி எப்படி இருக்கு ...
”ஆமாங்க! எங்க குடும்பம் ரொம்ப பெரிசு!!”
என்று சொல்லிக்கொண்டோம்.
]]
உண்மை தானுங்களே அக்கா ...
தொடரும் போட்டாச்சு
எத்தனை பதிவோ
யக்கா ஒரு நாளைக்கு ஒன்னு போடுங்க
நாங்களும் நாலு ப்லாக்கை பார்க்கனும்.
/ புதுகைத் தென்றல் said...
தம்பி நிஜம்ஸ் ரொம்ப ஃப்ரீயா இருக்கீங்க போல(அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் மாதிரின்னு சொல்லவே இல்லை)/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
வாங்க...வாங்க! கலக்குங்க!
ஊருக்குப் போயிட்டு வந்தா பயணக்கட்டுரை தொடரும்தான்.. இது தெரியாதா எங்களுக்கு? தனியா வேற சொல்லணுமாக்கும்?
Welcome Back...
ஓ. அதுதான் கொஞ்ச நாளா பதிவு எதுவும் காணோமா :)
வந்தாச்சா!!! வாங்க!! தமிழ்மக்கள் எப்படி இருக்காங்க!!!
ராஜபக்ஸே சந்திச்சீங்களா??
:)))))
ஒழுங்காப் பாருங்க. நான் கரெக்ட்டா பதில் சொல்லி இருக்கேன் //
:)))))))))))
கை வலி எப்படி இருக்கு ...//
ஒருவாரம் முழு ரெஸ்ட். அதனாலே இப்ப ஓகே
யக்கா ஒரு நாளைக்கு ஒன்னு போடுங்க//
ஆமாம் எனக்கும் கை வலி வரும்.
நன்றி அருணா
ஊருக்குப் போயிட்டு வந்தா பயணக்கட்டுரை தொடரும்தான்.. இது தெரியாதா எங்களுக்கு? தனியா வேற சொல்லணுமாக்கும்?//
:))))))))
நன்றி வண்ணத்துப்பூச்சியார்
அதுதான் கொஞ்ச நாளா பதிவு எதுவும் காணோமா//
ஆமாம் + கை வலி
தமிழ்மக்கள் எப்படி இருக்காங்க!!!//
நான் வடக்குக்கு போகலை, கொழும்பு, கதிர்காமம் பக்கம் தான் போனேன்.
ராஜபக்ஸே சந்திச்சீங்களா??//
அவர் எல்லாம் சந்திக்க வேண்டிய ஆளா என்ன???
//புதுகைத் தென்றல் said...
ராஜபக்ஸே சந்திச்சீங்களா??//
அவர் எல்லாம் சந்திக்க வேண்டிய ஆளா என்ன???
//
இது பதில்.
இலங்கையா இலக்கு. பிள்ளைங்களுக்குப் பள்ளி லீவா.
இலங்கை மிக அழகா இருக்கு. கதிர்காமத்துக்காரனையும் உங்க வழியாப் பார்க்கப் போவது சந்தோஷம்.
பிள்ளைங்களுக்குப் பள்ளி லீவா//
வாங்க வல்லீம்மா,
என் பிள்ளைகளுக்கு லீவு அதிகம் இல்லை. கோகுலாஷ்டமி, ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளுடன் 3 நாள் விடுப்பு எடுத்து சென்றோம்.
அயித்தானுக்கு போர்ட் மீட்டிங். நான் ஊர் சுற்றிங் :)))
கதிர்காமப் பதிவு போட்டாச்சு
Post a Comment