Monday, October 19, 2009

ஆயுளைக்குறைக்கும் ஒரு சொல்!!!!

100 வயது வாழ்வதை தீர்க்காயுசுன்னு சொல்வாங்க.
வாழும் காலத்தில் நோய் நொடி இல்லாமல் வாழ்வதும்
தீர்க்காயுசு மாதிரிதான். நோய் நொடியைவிடவும்
கொடியது இந்தச் சொல்.

இதைச் சொல்லாதவங்களே
கிடையாது?? குழந்தைக்கும் கூட இது உண்டு
ஆச்சரியமா இருக்கா?





படத்தை பாத்தா நம்மையாரோ மறைஞ்சிருந்து போட்டோ
பிடிச்சிட்டாங்கப்பான்னு நினைக்கத் தோணுதா??

வாங்க வாங்க. இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.

மன அழுத்தம் இது தான் அந்தச் சொல். குழந்தைகளுக்கும்
ஸ்ட்ரெஸ் உண்டு என்பதை நாம் புரிந்துக்கொள்ளனும்



இதனால வர்ற பாதிப்பு பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.
நம் அன்றாட வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும் வித்தை
மன அழுத்தத்துக்கு ரொம்பவே தெரிஞ்சிருக்கு.


சில பேர் மன அழுத்தம் அதிகமா இருக்கும் போது
அதிகமா சாப்பிடுவாங்க இல்லாட்டி சாப்பிடவே மாட்டாங்க.


தூக்கமின்மை,மலச்சிக்கல், வாய்ப்புண், அல்சர், பேதி,
தலைவலி, முதுகுவலி எல்லாம் மன அழுத்தம்
தர்ற கொடைதான்.


”எல்லாம் தெரியும் சாமி. யோகா, உடற்பயிற்சி,
மெடிட்டேஷன், பாட்டு இதெல்லாம் செய்ய நமக்கு
நேரமில்லை, இப்படியே இருந்திட வேண்டியதுதான்”
அப்படின்னு சொல்லிட்டா எப்ப்பூடி???

5 நிமிஷம் நேரம் ஒதுக்க முடிஞ்சா போதும்.
எளிதான பயிற்சி இருக்கு. 5 நிமிஷமா ட்ரை செஞ்சு
பாக்கறேன்னு சொல்றீங்களா? சரி அடுத்த பதிவுல
கண்டிப்பா சொல்றேன்.

அதுக்கு முன்னாடி ஒரு டெஸ்ட் செஞ்சு பாத்து
உங்க மன அழுத்தம் எந்தளவுக்கு இருக்குன்னு
பாத்து வெச்சுக்கோங்க. இல்லத்தரசி, வேலைக்குப்போறவங்க,
போகாதவங்க, பெரியவங்க, சின்னவங்க, எல்லோரும்
ஒருமுறை இந்த டெஸ்ட் செஞ்சு பாத்துகிட்டா நல்லது.

எங்க போய் டெஸ்ட் செய்ய? எனக்கு நேரமில்லைன்னு
ஓடாம, அப்படியே கம்ப்யூட்டர் பக்கத்துலேயே உக்காந்து
இந்த டெஸ்டை முடிச்சிடுங்க.

இங்கயும் டெஸ்ட் செஞ்சு பாக்கலாம்.

அடுத்த பதிவுல சந்திக்கறேன்.

11 comments:

pudugaithendral said...

mic testing

butterfly Surya said...

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்...

Vidhya Chandrasekaran said...

நல்ல பதிவு.

கோபிநாத் said...

ஆகா...அங்க போயி பார்க்கிறேன்!

pudugaithendral said...

நாளை காலையில் பதிவும் வரும் சூர்யா

pudugaithendral said...

நன்றி வித்யா

pudugaithendral said...

பாத்துட்டு நாளைக்கு வாங்க கோபி

இராகவன் நைஜிரியா said...

நன்றி. எனக்கு மன அழுத்தம் இல்லை என்றுச் சொல்லிட்டாங்க.

pudugaithendral said...

மிக்க சந்தோஷம் இராகவன்.

இந்த நிலை எப்போதும் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கறேன்

cheena (சீனா) said...

அன்பின் புதுகைத் தென்றல் - சென்று பார்த்தேன் - ராகவன் கட்சியில் சேர்த்து விட்டார்கள்

நல்ந்தானே நல்வாழ்த்துகள்

pudugaithendral said...

ராகவன் கட்சியில் சேர்த்து விட்டார்கள்//

வாங்க சீனா சார். எல்லோரும் ராகவன் கட்சிக்கு தாவிடனும் அதான் என் விருப்பம்.

ரொம்ப நல்லா இருக்கேன் சீனா சார்