Tuesday, October 20, 2009

நல்ல நேரம்

நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்
சீரியல்கள் கையில் நான் சிக்கவில்லை. :)))

அதுக்காக டீவியே பாக்குறதில்லைன்னு பொய்யும் சொல்லமாட்டேன்.

நல்ல ப்ரொக்ராமா இருந்தா கண்டிப்பா பாப்பேன்.

இப்ப நான் சொல்ல வந்தது NDTV GOOD TIMES.
சேனல்ல வர்ற நிகழ்ச்சிகள் நல்லா இருக்கு.




காலையில் No Kidding ஒவ்வொரு பெற்றோரும்
பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. காலையில் வேலையில்
இருப்போமேன்னு சொல்றவங்க இருக்கவே இருக்கு
வலைத்தளம்.


சமையல் ஒண்ணும் கம்ப சூத்தரமில்லைன்னு நான்
சொல்லலை இந்த டீவி நிகழ்ச்சி சொல்லுது.
கண்டிப்பா பாருங்க. வித்தியாசமான சமையல்
குறிப்புக்கள் நல்லா இருக்கு.



அப்பா! இவங்க ரெண்டு பேரும் அடிக்கற லூட்டி
சிம்பிளி சூப்பர்ப்...
தினமும் இரவு 8 மணிக்கு HIGHWAY ON MY PLATE.



எங்க என்ன ஷ்பெஷல்னு சொல்வது இந்த ஷோ.
நேத்து ஜோத்பூர்ல ஒரு கடையில இவங்க பண்ண
ஆர்டரை பாத்து பக்கத்துல இருந்த ஒருத்தர்
அடிச்ச கமெண்ட்,”எங்களுக்கும் ஏதும் மிச்சம் மீதி
வைங்கப்பா!!!” :)))



Join Rocky, Mayur இவங்க ரெண்டு பேரும் ஹைவேக்களில்
கிடைக்கும் சாப்பாடு, அந்தந்த ஊரின் ஷ்பெஷல் போன்றவற்றை
சொல்லும் விதமா இருக்கற இந்த ப்ரொக்ராம் நல்லா இல்ல
இல்ல.. ரொம்பவே நல்லா இருக்கு.



வேற எந்த ப்ரொக்ராம் நல்லா இருக்குன்னு
பாத்துட்டு சொல்றேன்.

இப்ப chak le India பாக்க லேட்டாகிடுச்சு வர்றட்டா

:)))))))))))

14 comments:

Sanjai Gandhi said...

:)

சக் லே இந்தியா? சக் தே இந்தியா?

சக் தே இந்தியா மிக அருமையான உணர்வுப் பூர்வமான படம்.. சாருக் கனக் கச்சிதமாக நடித்திருக்கும் படமும் கூட. அதில் சிலர் நிஜ ஹாக்கி வீராங்கனைகளாம். நீங்கள் சொல்வது வேறு நிகழ்ச்சியா?

pudugaithendral said...

சக் லே இந்தியா. இது உணவுத் தொடர்பான ஒரு ப்ரொக்ராம்

Vidhya Chandrasekaran said...

:)

cheena (சீனா) said...

அன்பின் புதுகைத்தென்றல்

நல்ல வேளை - நான் டீவீ பக்கம் போவதில்லை - கணிணியே துணை

நல்வாழ்த்துகள்

pudugaithendral said...

ஸ்மைலிக்கு நன்றி வித்யா

pudugaithendral said...

கணிணியே துணை//

வாங்க சீனா சார்

அதுவும் சரிதான்.

தாரணி பிரியா said...

நம்ம டமில் தொலைக்காட்சி பார்த்தாதான் பொது அறிவே வளரும் தெரியுமா தென்றல். குறிப்பா மெகா தொடர்கள் :).

தாரணி பிரியா said...

//நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்
சீரியல்கள் கையில் நான் சிக்கவில்லை. :)))//

தப்பிச்சுட்டீங்க. பாத்திங்கன்னா ரொம்ப கஷ்டமுங்க. எங்க வீட்டில எல்லா சீரியலும் தொடர்ந்து ஒடிக்கிட்டேதான் இருக்குது :(. சரி பெரியவங்க‌ ஆசையை கெடுப்பானேன் விட்டுடறது.

pudugaithendral said...

நம்ம டமில் தொலைக்காட்சி பார்த்தாதான் பொது அறிவே வளரும் தெரியுமா தென்றல். குறிப்பா மெகா தொடர்கள்//

ஹா..ஹா...ஹா

pudugaithendral said...

சரி பெரியவங்க‌ ஆசையை கெடுப்பானேன் விட்டுடறது.//

ஒன்ணும் செய்ய முடியாது தாரணிப்ப்ரியா. வீட்டுக்கு வந்திருந்த உறவினரின் பேத்தி எல்லா சீரியல்கள் பெயர் நேரம் தெரிந்து வைத்திருந்து பாட்டி,தாத்தாவுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள்.

”பெரியவர்களாச்சே ஒன்ணும் செய்ய முடியலை. அவங்களோட சேர்ந்து எம்பொண்ணும் கெட்டுப்போறா, கூப்பிட்டா சீரியல் பாத்துட்டு வர்றேன்னு சொல்றா!!” என்று புலம்பினார்கள் அவரின் மகனும் மருமகளும்.



:((((((((

ஷங்கரலிங்கம் said...

நல்ல இருக்குங்க! பாக உந்தி!

pudugaithendral said...

நல்ல இருக்குங்க! பாக உந்தி!//

நன்றி :))

Thamira said...

தாரணி பிரியா said...
நம்ம டமில் தொலைக்காட்சி பார்த்தாதான் பொது அறிவே வளரும் தெரியுமா தென்றல். குறிப்பா மெகா தொடர்கள் :)
//

Ripeetu.!

pudugaithendral said...

வாங்க ஃப்ரெண்ட்,

போன வாரம்தான் கார்பரேட் கம்பர் கிட்ட எங்க நம்ம ஃப்ரெண்ட் ஆதியை காணோம்னு.

வருகைக்கு நன்றி