Tuesday, November 03, 2009

ஆள் பாதி ஆடைபாதி பாகம்:2

ஆண்களின் உடையில் அதிக டிசைன்ஸ், வெரைட்டி
கிடையாது. வித விதமாக போட்டு அழகு பார்க்கவாவது
ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று பலரும் நினைப்பார்கள்.

பெண்களுக்கென்று இருக்க்கும் வெரைட்டி பத்தி ஒருபதிவில்
சொல்லிவிட முடியுமா???
அத்தனை டிசைன்ஸ், வைரட்டி....

சுடிதார், ஸ்கர்ட்-ப்ளவுஸ், பேண்ட் - ஷர்ட் என எத்தனையோ
இருக்கு. நான் இங்கே பேசப்போவது சேலையை பத்தியும்
ப்ளவுஸ் பத்தியும் மட்டும்.

சேலை - இந்த உடையில் மிக கண்ணியமாக நான்
கருதுவது காலஞ்சென்ற பாரதப் பிரதமர் இந்திரா காந்தி
அவர்கள் தான். நமது நாட்டின் பாரம்பரியத்தை பரைசாற்றும்
அவரது உடைகளில் அவரது கம்பீரம் தெரியும்.சேலைதான் மிக பாந்தமான உடை, பாரம்பரியமான உடை
இதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் அந்த சேலை
அணியப்படும் விதத்தில் அந்த கண்ணியம் காற்றில் போய் விடுகிறது.லோ ஹிப் சேலை ஹாட்டாக காட்டும், ஆனால் அதுவே
பார்ப்பவர்களுக்கு தவறான மெசெஜையும் தருகிறதே!!!!
சேலையையும் அழகாக உடுத்தினால் ஒரு மெஜெஸ்டிக்
லுக் வரும்.எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் அதென்னவோ
பெண்கள் ரவிக்கை விடயத்தில் மெனக்கெட மாட்டார்கள்.
”ரவிக்கைக்கு துணி எவ்வளவு எடுக்கற?” என்ற கேள்வியில்
அவர்களது எடை, சைஸ் தெரிந்துவிடும் என்பதால்
”75 பாயிண்ட் போதும்பா!” எனக்கு என்பார்கள்.

கட்டம், வட்டம், ஜன்னல், கதவு என எல்லா மாடல்களும்
பளவுஸில் பார்க்கலாம். அதெல்லாம் கூட சரி ஆனால்
அந்த ப்ளவுசின் உயரம், உள்ளாடையின் அளவுக்குத்தான்
இருக்கும். என்ன கொடுமைங்க இது???

இதனால் ஏற்படும் அசொளகரியங்கள் பல. கையை மேலே
தூக்கினால் பளவுசும் மேலே ஏறும். கொஞ்சம் இறக்கம் வைத்து
தைத்து போட 25 பாயிண்ட் அதிகமாக அதாவது 1 மீட்டர்
துணி எடுத்தால் தான் என்ன??????????????????

ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பு போடும் ப்ளவுஸ்கள்
பார்த்து இருப்பீர்கள். உண்மைத் தமிழன் அவர்களின்
பதிவிலிருந்து சுட்ட இந்த புகைபப்டத்தை பாருங்கள்.
(இதுவும் குஷ்புதான்) புடவை அணியும் போது பின் புறம்
சேலை ப்ளவுஸ் இரண்டும் சேர்ந்து இடுப்புத்
தெரியாத படி இப்படி இருக்க வேண்டும்.


டிசைன் செய்யப்பட்ட அதே சமயம் கொஞ்சம் இறக்கம்
கூட வைத்த இந்த ப்ளவுஸ் எவ்வளவு நல்லா இருக்கு.

இந்த மாடல்களும் அருமை.மேலை நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் அணிந்திருக்கும்
விதத்தை பாருங்கள்.
சேலை - விசேச நாட்களுக்கு கட்டுவோம். அதையும்
அழகாக கட்டி அழகாக கம்பீரமாக வளைய வரலாம்.

சேலையில் தான் ஒரு பெண்ணின் முழு அழகும்
வெளிப்படுகிறது என்று எங்கோ, எப்போதோ படித்திருக்கிறேன்.

12 comments:

ரங்கன் said...

சேலையின் கண்ணியமும் அதன் பாங்கும் உணர்ந்து அணிந்துகொண்டால் அந்த பெண்ணின் பெருமையே தனி என்பது என் கருத்து..!!

தனக்கானாதாக உணவும்,பிறர்கானதாக உடையும் இருக்க வேண்டும் என்று எதோ புத்தகத்தில் படித்த ஞாபகம்.அதை சொல்லிதரும் பதிவுகள் இவை..!!

நல்ல பகிர்வு புதுகைத்தென்றல்!!

Jeeves said...

நூல் சேலைங்கறதை சில பேர் தப்பா புரிஞ்சுக்கறாங்க. அதை வெறும் நூலா ஒரு பக்கத்துல இருந்து மறுபக்கத்துக்கு போட்டுக்கறாங்க.

ஹ்ம்ம்ம்....
> சேலையில வீடு கட்டவா சேர்ந்து ரசிக்க
> செந்தமிழ் நாட்டு தமிழச்சியே ( ஹலே லோ.. நீங்க சொல்ல வர ஆளு ஜெர்மன் காரவுங்க.. )
> பட்டுச் சேலை காத்தாட.. பருவமே நீ (தெரிஞ்சே தான் பிரிச்சு போட்டிருக்கேன் ) கூத்தாட
> பட்டுவண்ணச் சேலைக்காரி... என்னைத் தொட்டு வந்த சொந்தக் காரி
> காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வச்சு
> சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
> கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு ( கட்டெறும்புக்கு பதில் ரெண்டு தேளை கொண்டு விட்டிருக்கலாம் )


இப்போதைக்கு சேலை பத்தி நினைவுக்கு வந்த பாட்டு இவ்வளவு தான். இந்தப் பாடல்களையும் அலசி தொவச்சு போடறது ?

ஆகாயமனிதன்.. said...

தாயை போல பிள்ளை...
நூலை போல சேலை...

தாரணி பிரியா said...

எனக்கு சேலை ரொம்பவே பிடித்த உடை. கல்லூரியில வேலை செய்யறதால தினமும் சேலை கண்டிப்பா கட்டணும் அப்படின்றது என்னோட சந்தோசங்கள்ல ஒண்ணு.

எம்.எம்.அப்துல்லா said...

குஷ்பூ படத்துல இடுப்பே தெரிஞ்சு இருக்கலாம்.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ரங்கன்

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜீவ்ஸ்,

பாட்டும், கமெண்ட்ஸும் கலக்கல்

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

அருமையா சொல்லியிருக்கீங்க ஆகாயமனிதன்

புதுகைத் தென்றல் said...

தினமும் சேலை கண்டிப்பா கட்டணும் அப்படின்றது என்னோட சந்தோசங்கள்ல ஒண்ணு././

மகிழ்ச்சியா இருக்கு தாரணி

புதுகைத் தென்றல் said...

குஷ்பூ படத்துல இடுப்பே தெரிஞ்சு இருக்கலாம்.//

டிசம்பரில் ஊருக்கு வர்றேன். இந்த முறை கண்டிப்பா உங்க தங்க்ஸை மீட்டிட வேண்டியதுதான்.

:)))))))

ஹுஸைனம்மா said...

//எம்.எம்.அப்துல்லா said...

குஷ்பூ படத்துல இடுப்பே தெரிஞ்சு இருக்கலாம்.//

அதே.. அதே..

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ஹுசைனம்மா