Thursday, November 05, 2009

பாசக்கார நட்புக்களின் அன்புத் தொல்லை ஜாஸ்தியா போச்சு...

வடிவேலு சொல்ற மாதிரி “விட்டுட்டு சாப்டமாட்டங்கேறாங்களேப்பு”!
மாதிரி விட்டுட்டு பதிவெழுத மாட்டேங்கறாங்களேய்யா....
இப்படி சொல்லிக்க வேண்டியதுதான். :)))

ஹுசைனம்மா என்னிய தொடர் பதிவுல கோத்துவிட்டாங்க.
பதிவு எழுதுவீங்களான்னு வேற கேட்டிருந்தாங்க. கேட்டுப்புட்டா
மனசு தாங்காதுல்ல அதான் பதிவு.

1.அரசியல் தலைவர்:
பிடித்தது :வேற யாரையும் பிடிக்காததால் பிடித்த அரசியல்வாதின்னு எடுத்துகிட்டு
இந்த பதில்- எங்க ஊரு முன்னாள் எம்.பி.திரு.முகம்மது கனி.
பிடிக்காதவர்: இவரும் எங்க ஊர் தான். திருநாவுக்கரசு(ராணிஸ்கூல்
ஆண்டுவிழாவுக்கு வந்த மனுஷன், என் இரண்டாவது மனைவியும்
உங்க ஸ்கூல்தான்னு சொன்னதானலையே பிடிக்கல)

2.குடும்பத் தலைவர்:

பிடித்தவர் : M.G.R
பிடிக்காதவர் : வேற யாரு கலைஞர் தான்

3.நடிகர்:

பிடிச்சது: நான் சின்னபுள்ளயா இருந்தப்ப ரஜினி, அப்புறம்
நிலவே மலரே ரஹ்மான், இப்போ அப்பப்ப அஜீத்.
பிடிக்காதவங்க: பெரிய லிஸ்டே இருக்கு. சொல்லி அடி
வாங்குவானேன். :))

4. நடிகை:

ரேவதி- பாந்தமான உடை, அருமையான நடிப்பு,
பானுப்ரியா, நதியான்னு இதுலயும் கொஞ்சம் லிஸ்ட் ஜாஸ்தி.

பிடிக்காதவர்: இப்பத்த எந்த நடிகையையும் பிடிக்கலீங்க.
அப்பல்லாம் குலுக்கு நடிகைகள்னு ஒரு குரூப் இருப்பாங்க.
அவங்க போடற உடை, நடிப்பு எல்லாம் ஐடம் கேர்ள் மாதிரி
இருக்கும். இப்ப ப்ரதான நடிகைகளே அந்த ரேஞ்சுக்கு உடை
உடுத்தி, உரிச்ச கோழிகளாக மட்டும் வலம் வருவதால்.
(நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு கேக்கறாங்கப்பா??)

5.வசனகர்த்தா:

பிடிச்சது: க்ரேஸி.

பிடிக்காதது: இப்பல்லாம் யாரு வசனம்னு கூர்ந்து
பாக்கறதில்லீங்க.

6.இசையமைப்பாளர்:

பிடித்தது: எம்.எஸ்.வீ
பிடிக்காதது: தேவா

7.ஓவியர்:
பிடித்தது: மாருதி
பிடிக்காதவர்: யாருமீல்லீங்க. ஓவியம் எனக்கும்
மிகவும் பிடிக்கும்.

8.எழுத்தாளர்:

பிடித்தது: லட்சுமி அவர்களின் கதைகள், சுபா, பிகேபி,சுஜாதா
பிடிக்காதவர்: செலக்ட் செஞ்சு பிடிச்சவங்க எழுதினது மட்டும்தான்
படிப்பதால் வேற யாரும் தெரியாது.

9.கவிஞர்:
பிடித்தது: அந்தக் கால வாலி.
பிடிக்காதது: பா.விஜய்

10.பதி்வுலகம்:

பிடித்தது: சும்மா வலைப்பூ துவங்கினவங்களையும்
உசுப்பேத்தி உருப்படியா எழுத வைக்கும் நட்புக்கள்.

பிடிக்காதது: கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக
கண்டபடி கமெண்டுவது, நாவடக்கம் இல்லை.. இல்லை
கையடக்கம் இல்லாமல் கமெண்டுவது.

போதும்பா. ம்ம்முடியல

இப்பவே எல்லோருக்கும் விதிமுறைகள்
தெரிஞ்சிருக்கும் என்பதால், இரண்டு
பேரை மட்டும் கூப்பிடறேன்.

ரங்கா

அன்புடன் அருணா

சீக்கிரம் பதிவு போடுங்கப்பு..

35 comments:

தேவன் மாயம் said...

தமிழ்மணத்தில் நீங்களே உங்களுக்கு ஓட்டுப் போட்டுக் கொள்ளவில்லையே ஏன்? உங்களையே உங்களுக்குப் பிடிக்கலையா?

அன்புடன் அருணா said...

விட்டுட்டு சாப்பிடமாட்டேன்னு அடம்பிடிக்கிறீங்களேப்பு!இதோ வந்தூட்டேன்!

நிஜமா நல்லவன் said...

:)

புதுகைத் தென்றல் said...

உங்களையே உங்களுக்குப் பிடிக்கலையா?//

என்னிய எனக்கு பிடிக்கும். இந்தப் பதிவுக்குப்போய் ஓட்டு போட்டு அது முக்கியமான இடுகைகளில் வரணுமா.

உங்களை மாதிரி உபயோகமா எழுதினா சரி. இது தொடர் பதிவு தான்.

புதுகைத் தென்றல் said...

விட்டுட்டு சாப்பிடமாட்டேன்னு அடம்பிடிக்கிறீங்களேப்பு!இதோ வந்தூட்டேன்!//

தாங்க்ஸ்

புதுகைத் தென்றல் said...

:)//

தங்க்ஸ் ஊர்ல இல்லையே தம்பி, தெகிரியமா பின்னூட்டம் போடுங்க
:))))

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...

:)/

ரிப்பிட்டேய்ய்ய்ய்! :)

S.Arockia Romulus said...

தேவா ஏன் புடிக்க‌ல‌? அக்கா?

புதுகைத் தென்றல் said...

நீங்களுமா பாஸ், சரி நடத்துங்க

புதுகைத் தென்றல் said...

தேவா ஒரு காப்பி கிங் என்பது என் அபிப்ராயம் ரோமுலஸ்

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...

:)/

ரிப்பிட்டேய்ய்ய்ய்! :)/


ரிப்பிட்டேய்ய்ய்ய்!

வித்யா said...

:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஊரே பத்து போட்டுக்கிட்டிருக்குது.. ஹிஹி.!

எம்.எம்.அப்துல்லா said...

//எங்க ஊரு முன்னாள் எம்.பி.திரு.முகம்மது கனி //

அக்கா அவர் முன்னாள் எம்.எல்.ஏ., நாட் எம்.பி.//பிடித்தது: சும்மா வலைப்பூ துவங்கினவங்களையும்
உசுப்பேத்தி உருப்படியா எழுத வைக்கும் நட்புக்கள் //

அந்த வேலையைத்தானே எனக்கு பண்ணுனீங்க :)

புதுகைத் தென்றல் said...

நன்றி வித்யா

புதுகைத் தென்றல் said...

ஊரே பத்து போட்டுக்கிட்டிருக்குது.. //

:))))))))

புதுகைத் தென்றல் said...

அவர் முன்னாள் எம்.எல்.ஏ., நாட் எம்.பி.//

அந்த அளவுக்கு இருக்கு நம்ம அரசியல்
அறிவு!! :)))

ஹுஸைனம்மா said...

அக்கா, அழைப்பை ஏற்றதற்கு நன்றி.

//பிடித்தது: சும்மா வலைப்பூ துவங்கினவங்களையும்
உசுப்பேத்தி உருப்படியா எழுத வைக்கும் நட்புக்கள்.//

அக்கா, போங்கக்கா, ரொம்பப் புகழ்றீங்க என்னை!!

//பிடிக்காதது: கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக
கண்டபடி கமெண்டுவது, நாவடக்கம் இல்லை.. இல்லை
கையடக்கம் இல்லாமல் கமெண்டுவது.//

ஆமாக்கா, என்னா அலம்பறை பண்றாங்கக்கா..

மங்களூர் சிவா said...

/
விட்டுட்டு சாப்பிடமாட்டேன்னு அடம்பிடிக்கிறீங்களேப்பு!
/

அம்புட்டு பாசக்கார பயலுக நாங்க
:))

புதுகைத் தென்றல் said...

அக்கா, போங்கக்கா, ரொம்பப் புகழ்றீங்க என்னை!!

:)))

ஆமாக்கா, என்னா அலம்பறை பண்றாங்கக்கா//

கவுண்டபெல் மாதிரி கொசு தொல்லை தாங்கலியே நாராயணான்னு சொல்லிகிட்டு அடுத்த பதிவு போட வேண்டியதுதான்.

:)))

புதுகைத் தென்றல் said...

அம்புட்டு பாசக்கார பயலுக நாங்க//

அதான் தெரியுமே. இந்த உறவு, நட்புக்களை கொடுத்ததாலேயே பதிவுலகம் ரொம்ப பிடிக்கும்

S.Arockia Romulus said...

யாரு தான் காப்பி அடிக்க‌ல‌ அக்கா?
oscar ர‌ஹ்மான் கூட‌ காப்பி தான்.....
"என்ன‌ விலை அழ‌கே?" "த‌ங்க‌ ப‌த‌க்க‌த்தின் மேலே" ‍வின் காப்பி தான்....

கோமதி அரசு said...

//சும்மா வலைப்பூ துவங்கினவங்களையும் உசுப்பேத்தி உருப்பிடியா எழுத வைக்கும் நட்புக்கள்//

ஆம் ,உண்மை.

நட்புக்கள் தான் எழுத வைக்கின்றன.

butterfly Surya said...

:) :) nice. தொடர்பதிவு ஆரமிச்சாச்சா..?? நடத்துங்க..

தாரணி பிரியா said...

10 வதா சொன்னது பிடிச்சு இருக்கு தென்றல்

நட்புடன் ஜமால் said...

பிடித்த நடிகர், நடிகையர் - சேம் தாட்ஸ்

புதுகைத் தென்றல் said...

"என்ன‌ விலை அழ‌கே?" "த‌ங்க‌ ப‌த‌க்க‌த்தின் மேலே" ‍வின் காப்பி தான்...//

உண்மைதான்னாலும் என்னவோ தேவா அச்சு அசல் அப்பட்ட காபி. ஹிந்தில அன்னுமாலிக் மாதிரி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி கோமதி அரசு

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி சூர்யா

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ஜமால்.
கடப்பாரை குறைஞ்சிடுச்சா

புதுகைத் தென்றல் said...

நன்றி தாரணிப்பிரியா

cheena (சீனா) said...

பரவால்ல - எழுதணும்னு எழுதிட்டீங்க - பரவா இல்ல - நல்வாழ்த்துகள் புதுகைத் தென்றல்

கோபிநாத் said...

நீங்களும் போட்டாச்சா! ! ! குட் ;)

புதுகைத் தென்றல் said...

நன்றி சீனா சார்

புதுகைத் தென்றல் said...

நன்றி கோபி