வலையுலக வீராங்கனைன்னு சொன்னா மிகையாகது.
கிட்டத்தட்ட 950 பதிவுகள், தவிர இணையத்தில்
வேற இடங்களிலும் எழுதியிருக்காங்க. ஆமாம்
நம்ம துளசி டீச்சர் தான். அவங்க ஹைதைக்கு வந்திருந்தாங்க.
திங்கள் அன்று வந்தாங்க. அலுவலகம் விட்டு
வரும்போது அயித்தான் போய் கோபால் சார்,
துளசி டீச்சர் இருவரையும் வீட்டுக்கு அழைச்சுகிட்டு
வந்தார். ஆன்லைன்ல முடிஞ்சபோது ஹாய் சொல்லி
பேசியிருக்கேன், வாழ்த்து சொல்லியிருக்கேன். இப்படி
துளசி டீச்சராவது பழக்கம். கோபால் சாரை முதலில்
சந்திக்கறேன். ஆனா சிரிச்ச முகத்தோட ஹாய் சொல்லி
பேசினது ரொம்ப சந்தோஷமான அதிர்ச்சி.
எனது ஷ்பெஷல் மசாலா டீ போட்டுக்கொடுத்தேன்.
(தேக்சாவுல தானே கொடுத்தீங்கன்னு ஆதி வந்து
கேக்கறதுக்குள்ள சொல்லிடறேன். இப்ப சின்ன
கப் வாங்கிட்டேன். :)) )
இரவு உணவுக்கு சட்னீஸ் போனோம். அங்கே
ஷ்பெஷல் சிரஞ்சீவி தோசா.விஜயவாடா
பாபாய் ஹோட்டல் இதெல்லாம் அங்கே
ஷ்பெஷல். இந்த ஹோட்டலைப்பற்றிய என்
முந்தைய பதிவு.
புதன்கிழமை ”லேடிஸ் டே அவுட்”.
நானும் துளசி டீச்சரும் மட்டும் சார்மினார்
போனோம். ரொம்ப சந்தோஷமா இருந்தது
அவங்களோட பேசினது, போட்டோ எடுத்து
கிட்டது எல்லாம்.
சென்னையில மட்டுமில்ல இங்கயும் சில
சமயம் பதிவர் சந்திப்பு நடக்குத்துன்னு சொல்லி
வயிற்றெரிச்சலை கொட்டிக்கத்தான் இந்தப் பதிவு.
ஆஷிஷ், அம்ருதா, நான், துளசி டீச்சர்
நாங்க நாலு பேரும் சந்திச்சது பதிவர் சந்திப்பு தான்.
:))))))))))
_________________________________________________
கடந்த நவம்பர் 11ஆம் தேதியோடு வலைப்பூ துவங்கி
2 வருடம் முடிஞ்சது. ஆதரவு தரும் அனைத்து
உள்ளங்களுக்கும், நட்புக்களுக்கும், உறவுகளுக்கும்
என் நன்றிகள்
26 comments:
///இரவு உணவுக்கு சட்னீஸ் போனோம். அங்கே
ஷ்பெஷல் சிரஞ்சீவி தோசா.விஜயவாடா
பாபாய் ஹோட்டல் இதெல்லாம் அங்கே
ஷ்பெஷல்.//
பதிவர் சந்திப்பு வயிற்றெரிச்சலை விட இதுதான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப :)))))))
**********
ஆஷிஷ், அம்ருதா, நான், துளசி டீச்சர்
நாங்க நாலு பேரும் சந்திச்சது பதிவர் சந்திப்பு தான்.
***********
கலகல!!
//கடந்த நவம்பர் 11ஆம் தேதியோடு வலைப்பூ துவங்கி
2 வருடம் முடிஞ்சது.//
3ம் வருடம் தொடங்குதுன்னு சொல்லுங்க பாஸ் :))))
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் !!
பதிவர் சந்திப்பு வயிற்றெரிச்சலை விட இதுதான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப /
அப்பாடி சந்தோஷமா இருக்கு.
:)))))))))
நன்றி ஃபண்டூ
வாவ்... வாழ்த்துக்கள்! அப்ப எனக்கும் 2 வருஷம் ஆகியிருக்கணுமே!
மிக மிக மகிழ்ச்சியான நிகழ்வு! துளசி டீச்சர் வந்து போனது! ரொம்ப ஜாலியா இருந்திருப்பீங்க! அவுங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
கலக்குங்க!
//இரவு உணவுக்கு சட்னீஸ் போனோம். அங்கே
ஷ்பெஷல் சிரஞ்சீவி தோசா.விஜயவாடா
பாபாய் ஹோட்டல் இதெல்லாம் அங்கே
ஷ்பெஷல்.//
எனக்கு வயிற்றெரிச்சல் வரலையே, ஏன்னா நான் யுத்து நாகர்ஜீனா ஓட்டல் போனேனே
3ம் வருடம் தொடங்குதுன்னு சொல்லுங்க பாஸ்//
ஆமாம் பாஸ் நன்றி
அப்ப எனக்கும் 2 வருஷம் ஆகியிருக்கணுமே!//
ஆமாம். உங்களுக்கும் வாழ்த்துக்கள் சுரேகா, டீச்சர் வந்து ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு
வலைப்பூவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
துளசி டீச்சர்ம் கோபாலும் மிக மிக சுவாரசியமானவர்கள்..
Made for each other சொல்லுவாங்களே...
அது.. 100% உண்மை..
Hapy 2nd anniversary
PUTHAITH THENDRAL !!!
aama MLA PESARAT sapitu irukiingala
athu oru spl item oru kalathula
தென்றல், முதலில் வாழ்த்துகளைப் பிடியுங்கள்.
துளசியும் நீங்களும் சந்திச்சதே பதிவர் மீட்டிங் தான்.
அதுவும் சட்னி'' யில்.
நல்ல கார சாரமா இருந்திருக்குமே.
நானும் வரேன்பா.
அப்பவும் ஒரு கை பார்த்துடலாம்.:))
நன்றி ரோமுலஸ்
ஆமாம் சூர்யா ரொம்ப கரெக்டா சொன்னீங்க.
வருகைக்கு நன்றி
எம் எல் ஏ பெசரட்டு இப்பவும் இருக்கு.
சாப்பிட்டோம். (என்னென்ன சாப்டோம்னு சொன்னா வயிற்றெரிச்சல் சாஸ்தி ஆகிடும்னு வெளியில சொல்லலை)
நல்ல கார சாரமா இருந்திருக்குமே.
நானும் வரேன்பா.
அப்பவும் ஒரு கை பார்த்துடலாம்//
வாங்க வாங்க,
ரொம்ப எஞ்சாய் செஞ்சேன்.
ஆவலோட காத்திருக்கேன். வாழ்த்துக்கு நன்றி.
//எனது ஷ்பெஷல் மசாலா டீ போட்டுக்கொடுத்தேன்.
(தேக்சாவுல தானே கொடுத்தீங்கன்னு ஆதி வந்து
கேக்கறதுக்குள்ள சொல்லிடறேன். இப்ப சின்ன
கப் வாங்கிட்டேன். :)) )//
நல்லா சுதாரிப்பாதான் இருக்கீங்க
நல்லா சுதாரிப்பாதான் இருக்கீங்க//
:))))))))))
வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி
/ஆயில்யன் said...
///இரவு உணவுக்கு சட்னீஸ் போனோம். அங்கே
ஷ்பெஷல் சிரஞ்சீவி தோசா.விஜயவாடா
பாபாய் ஹோட்டல் இதெல்லாம் அங்கே
ஷ்பெஷல்.//
பதிவர் சந்திப்பு வயிற்றெரிச்சலை விட இதுதான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப :)))))))/
Repeattttttttttttttuuuuuu...!
ஆஹா....வாழ்த்துக்கள்!
நன்றி அருணா
ஆண்டு நிறைவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
உங்கள் அன்புக்கு நன்றிப்பா.
சின்ன அம்மிணி சொல்லியபிறகுதான் உங்க 'வீட்டுக்கு' வந்து பார்த்தேன்:-)
கணினிகிட்டே ஒரு வாரமா வரலை!
Hi Mrs Thenral
இதான் first visit உங்க ப்ளாக் க்கு. Taramati baradari(SPELLING) நு net ல பாருங்க:))வாசவி engineering college பக்கத்துல, இப்ராஹிம் பாக் ல. மாதாபூர்ல இருக்கீங்கன்னா ரிங் ரோட் புதுசா போட்டிருக்காளே அது வழி வந்துடலாம். உம்... ஹைதி ஆ.. சரி இந்தமாதிரி நெட் ல பேசறவங்களோட வந்தா நேரிலும் பேசலாம் தானே அப்போ? விகடன் ஃப்பெரண்ட்ஸ் club ஆ? விவரமா அப்புறமா வந்து படிக்கறேம்மா .
நன்றி துளசி டீச்சர்,
நானும் மறந்தே போயிட்டேன் வலைப்பூவின் பிறந்த நாளை
:))
வாங்க ஜெயஸ்ரீ,
துளசி டீச்சர் லிங்க் கொடுத்திருந்தாங்க. அதுல பாத்தேன். நான் இருப்பது செகந்திராபாத்தில். கண்டிப்பாய் பேசலாம்.
எனக்கு மடலிடுங்களேன். pdkt2007@gmail.com
Post a Comment