Monday, November 16, 2009

பயம் போச்சே!!.. போயிந்தே!!... இட்ஸ் கான்....!!!

”அம்மா, எப்ப சைகிள் வாங்கித் தர்றீங்க” - இந்தியா
வந்தது முதல் ஆஷிஷ், அம்ருதா என்னிடம் அடிக்கடி
கேட்டது இதுவாத்தான் இருக்கும்.

புது இடம், ஊரு, ””டிராபிக்”” இதெல்லாம் எனக்கு
பயம். நான் வண்டி ஓட்ட இல்லீங்க. ஆஷிஷ் அண்ணா
கொழும்புவில் ஒவ்வொரு முறை சைக்கிளை வெளியில்
எடுக்கும் போது “ கத்தி ரத்தம் பார்க்காம உறையில்
போகாது” ரேஞ்சுக்கு காயம் பட்டு வருவதும், அப்படியே
அள்ளிக்கொண்டு நான் அப்பொலோ ஓடியது,
எமர்ஜென்சியில் ஆஷிஷுக்கு ப்ரிவிலேஜ் கார்ட் கொடுப்பதாக
சொன்னதும் சத்தியம்.!!!

அங்கயே அப்படின்னா??? இங்க எப்படி? ஹைதையில்
கரெக்டா ராங் ரூட்ல வருவாங்க. அங்கேயாவது
வீட்டிலேயே வண்டி பழக இடம் இருந்தது. இங்கே
மெயின் ரோட்டில்தான் ஓட்டணும். :((

அதனாலேயே 1 1/2 வருடமா சைக்கிளைப்பத்தி
கேட்கும்போதெல்லாம் “பார்க்கலாம்” என்பதை மட்டும்
பதிலாக தந்தேன்.

சென்ற மாதம் ஆஷிஷ் அண்ணா டீன் ஏஜுக்குள்
அடிஎத்து வைத்துவிட்டார்.” பிறந்த நாள் பரிசாக
சைக்கிள் வாங்கிக் கொடுக்கலாமா?” என் அயித்தானிடம்
கேட்டேன். கூடவே என் பயத்தையும் சொன்னேன்.

“ம்ம்.. வாங்கிக்கொடுப்போம், பழையபடிதான் நடக்குதுன்னா
சாவியை வாங்கி வெச்சிடு” அப்படின்னு சொல்லிட்டார்.

அன்னபையா விரும்பிய சைக்கிள், தங்கச்சிக்கு லேடிபேர்ட்
சைக்கிள்(நான் இந்த சைக்கிள்தான் வேணும்னு கேட்டிருந்தேன்,
ஆனா அம்மா வாங்கி வந்தது ஹெர்குலிஸ்)வாங்கி
கொடுத்ததும் கொள்ளை சந்தோஷம்.

ஆனால் எனக்குள் திக் திக் திக் திக் தான்...

நான் சைக்கிள் ஓட்டப்போறென்னு சொன்னதுமே...
சாமி கும்பிட ஆரம்பிச்சு, ரெய்கி ப்ரொடெக்‌ஷன்லாம்
போட ஆரம்பிச்சேன்.

”ஆஷிஷ் வீக் எண்ட்ல நம்மெல்லாம் சேர்ந்து சைக்கிளிங்
போவோம்னு” அக்கம் பக்கத்து வாண்டுகளெல்லாம் சேர்ந்து
தீர்மானம் போட்டாங்க.

ஒரு நாள் நான் பார்க்ல வாக்கிங் போய்கிட்டு இருக்கும்போது
பாத்தா மழலை பட்டாளங்கள் சத்தம் போட்டு, பேசி சிரிச்சிகிட்டு
சைக்கிளில் போய்கிட்டு இருந்தாங்க. எல்லாம் தெரிஞ்ச முகமா
இருக்கேன்னு கிட்ட போய் பாத்தா எல்லாம் நம்ம அக்கம் பக்கத்து
வாண்டுகள் தான்! அதில் ஆஷிஷ் அண்ணாவும் இருந்தாரு.
பார்க்கைச் சுற்றி எப்பவும் வாகனங்கள் பிசியா சர் புர்னு போய்கிட்டு
இருக்கும். இதுல வண்டி ஓட்டுறது திறமைதான்.

ஆக்சிடண்ட் ஆக்காம வண்டி ஓட்டறதுக்கு பாராட்டு பத்திரம்
வாசிச்சு, முன் நெத்தியில் ஒரு முத்தம் கொடுத்தப்ப
ஆஷிஷ் முகத்துல தெரிஞ்ச அந்த சந்தோஷம்......

சைக்கிளில் மெயின் ரோடு போய் சாமான் வாங்கி வரும் அளவுக்கு
அண்ணா தில்லான ஆளா சைக்கிள் ஓட்டும்போது, அவரை அடக்கி
வெச்சு வளர்ச்சியைக் கெடுக்க மனசில்லை. ”ஓட்டுடா ராசா”ன்னு
விட்டுட்டேன். ஏன்னா? எனக்கு அன்னபையா மேல இருந்த
பயம் போச்சே!!.. போயிந்தே!!... இட்ஸ் கான்....!!!
:))))

*****************************************************

அம்ருதம்மாவின் பயம் பத்தி முன்னாடியே பதிவு போட்டிருந்தேன்.
அவங்களுக்கு சைக்கிள் வாங்கின போது கடைக்காரர் சைட் வீல்
வைக்க வேண்டாம்னு சொல்லிட்டார். ஆனா அம்மாவுக்கு
சைக்கிள் ஓட்டத் தெரியாது. சரி சொல்லிக்கொடுப்போம்னு
வாங்கி அயித்தான் கொஞ்ச நாள், அண்ணா கொஞ்ச நாள்
சொல்லிக்கொடுத்தாங்க.அயித்தான் செம பிசியாகிவிட, அண்ணாவும் கொஞ்சம்
சொல்லிக்கொடுத்திட்டு தான் வண்டி ஓட்ட போயிடுவார்.

என் கைவலி என்பதால் வண்டியை பிடிக்க முடியாது.
ஆனாலும் பாப்பா பாவமேன்னு பிடிச்சு சொல்லிக்கொடுத்தேன்.

பேலன்ஸ் செய்ய மட்டும்தான் தெரியலை. ஆனா ஒரு நாள்
“அம்மா உனக்கு கைவலிக்கும். விடு ஐ வில் லேர்ன்”
அப்படின்னு சொன்னப்ப தானா எப்படி கத்துக்குவா??
பயம் ஜாஸ்தியாச்சேன்னு யோசிச்சேன்.

நிஜம்மா தானாவே பெடல், பேலன்ஸ் எல்லாம் பக்கத்துல
ஆள் இல்லாம கத்துகிட்டு இன்னைக்கு 4 ஸ்டெப் பெடல்
செஞ்சேன், அப்படின்னு சொல்லிக்கிட்டிருந்த அம்ருதம்மா
ஒரு நாள்,” அம்மா ஐ ஹேவ் லேர்ண்ட், வந்து பாருங்கன்னு!”
சொல்ல போய் பாத்தா!!!....

அம்ருதம்மா ஜோரா வண்டி ஓட்டறாங்க. சூப்பர்ம்மான்னு
ஒரு முத்தம் கொடுத்ததும், ”டர்னிங் தான் வர்லம்மா”
என்றாள். ”இதுவே கத்துக்கிட்ட அதென்ன ப்ரமாதம்!”
என்றதும் மலர்ச்சியா சிரிச்சா எங்கம்மா.

இப்ப அப்பார்ட்மெண்டுக்குள்ளேயே டர்னிங் செஞ்சு
அம்மா டெயில் வண்டி ஓட்டறாங்க.

பயம் போச்சே!!.. போயிந்தே!!... இட்ஸ் கான்....!!!

*********************************************

டிஸ்கி: பின்னாளில் நானும் என் சைக்கிளும்னு
என்னைப்போல எங்கம்மாவும் பதிவும் போடலாம்:)))

17 comments:

Jeeves said...

குழந்தைகள் குழந்தைகள் :) நேத்து மெட்ரோ ஷாப்பிங் மால் க்கு போனோம். அங்க ஒரு குழந்தை காது தோடை கழட்டி வெயிட் மெஷின்ல எவ்வளவு வெயிட்டுன்னு பாத்துட்டு இருந்தது. சோ க்யூட் :) சீக்கிறம் நானும் சைக்கிள் பதிவு போடுவேனாக்கும்

மங்களூர் சிவா said...

wow nice.

all the best for kutties.

Mangalore Siva

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஜீவ்ஸ்,

அம்ருதம்மா கூட ஒருமுறை ஸ்ரீராமின் கழுத்துச் செயினை பிடித்துக்கொண்டு “இது எனக்குத் தானேன்னு” கேட்டா பாருங்க. அயித்தான் ஷாக் ஆகிட்டார்.

:))))

சீக்கிறம் நானும் சைக்கிள் பதிவு போடுவேனாக்கும்//

நீங்களா இல்ல என் மருமகளா??!!

புதுகைத் தென்றல் said...

நன்றி சிவா,

எல்லோரும் நலம் தானே??

புகழன் said...

அதெப்படி ஒரு சின்ன மேட்டரையும் இவ்வளவு அழகா எழுதி பதிவா போட முடியுது?

பதிவு நல்லா இருந்துச்சி

ஆதிமூலகிருஷ்ணன் said...

இவ்வளவு பில்ட் அப் பண்ணி லேட்டாக்கி அவங்களுக்கு நீங்கள் சைக்கிள் வாங்கித் தருவதற்குள் ஆஷிஷ் பிளேனே ஓட்டிவிடுவாரோ என்று நினைத்தேன்.

ஆஷிஷ், அம்ருதாவுக்கு என் அன்பு.

கிரேட் ஃபீல்.!

புதுகைத் தென்றல் said...

ஒரு சின்ன மேட்டரையும் இவ்வளவு அழகா எழுதி பதிவா போட முடியுது?//

என் மனசுல பட்டதை கோர்த்து எழுதறேன். அழகா வந்திருக்குன்னு நீங்கல்லாம் சொல்லும்போதுதான் தெரியும்.

நன்றி புகழன்

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஃப்ரெண்ட்,
ஆஷிஷ் எரோநாடிகல் எஞ்சினியரிக்குத்தான் படிக்க ஆசப்படறாப்ல. என்னதான் பைக், கார், ஃபளைட் ஓட்டினாலும் ஒவ்வொருத்தர் மனசுலயும் நீங்காம இருக்கறது சைக்கிள் அனுபவம் தானே.

வருகைக்கு நன்றி. அன்பைச் சொல்லிட்டேன்.

thenammailakshmanan said...

பயம் போச்சே!!.. போயிந்தே!!... இட்ஸ் கான்....!!!

superb issue and superb words

i like this issue PUDUKAI THENDRAL

cheena (சீனா) said...

அன்பின் தென்றல்

ஆஷிஷ் அம்ருதாவிற்கு அன்பு வாழ்த்துகள்

சைக்கிள் ஓட்ற கத நல்லாவே இருக்கு

மணிநரேன் said...

குழந்தைகளுக்கு நினைவில் நிற்கும் தருணங்கள்..:)

புதுகைத் தென்றல் said...

நன்றி தேனம்மை

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி சீனா சார்

புதுகைத் தென்றல் said...

ஆமாம் மணி நரேன்.

கேட்டதும் கொடுத்துவிட்டால் காத்திருத்தலின் சுகம் தெரியாமலேயே போய்விடுமே... அதனாலும் சில சமயம்
வெயிட்ட விடறது.

வருகைக்கு நன்றி

நிஜமா நல்லவன் said...

/மங்களூர் சிவா said...

wow nice.

all the best for kutties./


ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

fundoo said...

அசத்துங்க பிள்ளைகளா! இந்த அம்மாக்களே இப்படித்தான். அனியாயத்துக்கு பயப்புடுவாங்க. நாளைப்பின்ன நீங்களும் ஒரு சைக்கிள் பதிவு போடனும்ல!

புதுகைத் தென்றல் said...

சைக்கிள் கத்துகிட்டது பத்தி 3 பதிவு ஏற்கனவே போட்டிருக்கு பாருங்க ஃபண்டூ