Thursday, November 19, 2009

விளம்பரங்கள் பிடித்ததும்... பிடிக்காததும்

சீரியல், சினிமா, மற்ற நிகழ்ச்சிகளுக்கிடையே
வரும் விளம்பரங்களின் போது ம்யூட், செய்து விடுபவர்களை
பார்க்கும் போது ”என்ன மனிதர்களோன்னு!” நினைப்பேன்.

செகண்டுகளில் கதை சொல்லியிருப்பார்கள். நீங்கா
நினைவுகளாக இனிக்கும் அந்த விளம்பரங்கள்.
விளம்பரங்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். அது
ரேடியோ விளம்பரமாகட்டும், தொலைக்காட்சி
விளம்பரமாகட்டும். மிக ரசிப்பேன்.

திருச்சி வானொலியில் சாரதாஸ் திருச்சி கடை
விளம்பரங்களுக்கு அப்போதைய சூப்பர் ஹிட்
பாடல் போல் விளம்பரம் அமைத்திருப்பார்கள்.

அளவான கற்பனையில் அந்த விளம்பரம்
மனதை கொள்ளை கொள்ளும்.

இப்போது சில விளம்பரங்கள் அதீதமாக இருக்கிறது.

எனக்கு பிடித்த... பிடிக்காத தற்போதைய விளம்பரங்கள்
பற்றி சொல்லப்போறென்.






நல்லா மாட்டிகிட்ட ரங்க்ஸ் :))



எல்லா வீட்டிலயும் நடக்கற நிகழ்ச்சியை அழகா
படம்பிடிச்சு காட்டுறது. மகள் புடவை வாங்கி
வைக்கவில்லைன்னாலும் திருமண நாள் கூட
மறந்துவிடும் ரங்க்ஸ்கள் இருக்காங்க தானே:)))))))))



சிண்ட்ரெல்லா தேவதை என் வீட்டிலும்..



தன்னம்பிக்கை மிளிரும் நதியா.



இருகி இருக்கும் உள்ளங்களில் நட்பு பூக்கச் செய்யும்
டாடாடோகோமோ...


பாதையை கடக்க பைனாகுலர் வைத்து இரண்டு பக்கமும்
பார்த்துவிட்டு கடந்து கொண்டிருக்கும்போதே பின்னாலிலிருந்து
போகும் ஸ்விஃட் சரி விளம்பரம். தேடினேன் கிடைக்கவில்லை.




பிடிக்காதது:
ஒரு கப் காபி அதற்காக இப்படியா சிடு சிடுப்பாள்.
சகிக்கலை...:((




parle milano இதன் லேட்டஸ்ட் விளம்பரம்
தடை செய்யப்படணும். இது போன்ற விளம்பரங்களால்தான்
சென்சார் போர்டு வேண்டும்னு சொல்வேன்.

பிரபுதேவா நடனமைச்சிருக்கார்னாலும் என்னவோ
இதுக்கு முந்தைய ஹிரிதிகின் ஆட்டங்கள் போலத்தான்
இருக்கு. :(


garnier colour naturalas விளம்பரமொன்றி
மகளிடம் தாய் தலையை விரித்துப்போடாதே என்றாலும்,
கார்னியர் போட்டிருப்பதால் விரித்துக்கொள்வார்.
தனது ப்ராடக்டை விளம்பர படுத்துவதாக இருந்தாலும்
தாயின் பேச்சை கேட்காமல் இருக்கும் மகள் எனுன்
பொருளில் வரும் விளம்பரம் போல் சின்னவர்களுக்கு
மெசெஜ் போக வாய்ப்பிருப்பதால் இதுவும் பிடிக்கலை.

30 comments:

Anonymous said...

ஹமாம், 3 ரோஸஸ், நதியா, சிண்ட்ரெல்லா எல்லாம் எனக்கும் ரொம்பப்பிடிச்சுது. இப்பதான் முதல்தடவை பாக்கறேன்.

DHANS said...

aircel one paisa add eppadi? enaku sameebathil piditthathu

pudugaithendral said...

இப்பதான் முதல்தடவை பாக்கறேன்.//

அப்படியா....
வருகைக்கு நன்றி

கோபிநாத் said...

ஆகா...அக்கா லேபிள் சும்மான்னு போடமால் கடமைன்னு போடுங்க.

என்னை மாதிரி விளம்பர பிரியர்களுக்கு நீங்கள் இந்த மாதிரி சமீபத்திய விளம்பரங்கள் தொகுத்து வழங்குவது கடமையாகவே செய்ய வேண்டும் ;))

எல்லாமே அட்டகாசம் ;))

pudugaithendral said...

ஏர்செல் ஒருபைசாவா

பாத்ததா ஞாபகமில்லீங்க..

முதல் வருகைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

அக்கா,

சிலது நான் இப்பதான் புதுசா பாக்கிறேன். எல்லாமே நல்லாருக்குது.

டேங்ஸ் அக்கா.

Jayashree said...

suzuki,Tata tocomo நன்றாகவே இருக்கு. இதுக்கு முன்பு பார்த்தது இல்லை!! எனக்கு Peugeot 307 ad முந்தி வருமே அதுகூட பிடிக்கும். ரொம்ப த்ரேதாயுகத்துல இருக்கேனோ?..:-))
ஏங்க பாலிவுட் சமாசார்ல முழங்கற அந்த recent lux ad (அதை அந்த கண்ணில்லா காளியாத்தாதான் பாக்கணூம்னா?!!!) விட்டுவிட்டீங்க?

இராகவன் நைஜிரியா said...

விளம்பரங்களை கூட இவ்வளவு உன்னிப்பாக கவனித்து இருக்கீங்க..

டிவி பார்ப்பதே அரிது.. (வலைப்பூ படிக்கவே நேரம் போதலை.. அப்புறம் எங்க டிவி பார்ப்பது..)

பெரிய விஷயம்தாங்க...

ஹாட்ஸ் ஆஃப்

Thamira said...

விடியோக்களா? ஒண்ணும் தெரியலை, வீட்ல போய் பாத்துக்கறேன்.

நட்புடன் ஜமால் said...

நதியா - சூப்பருக்கோவ் ...

pudugaithendral said...

அக்கா லேபிள் சும்மான்னு போடமால் கடமைன்னு போடுங்க.//

தம்பியும் என் கட்சியா வெரி குட்.

pudugaithendral said...

சிலது நான் இப்பதான் புதுசா பாக்கிறேன். எல்லாமே நல்லாருக்குது.//

அப்படியா ஹுசைனம்மா,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

பாலிவுட் சமாசார்ல முழங்கற அந்த recent lux ad //

பாக்கலியே ஜெயஸ்ரீ,

பாத்திட்டு பதிவு போடறேன்

pudugaithendral said...

விளம்பரங்களை கூட இவ்வளவு உன்னிப்பாக கவனித்து இருக்கீங்க..//

டீவில நான் அதிகமா பார்ப்பது விளம்பரங்கள், நியூஸ், எண்டிடீவ் குட் டைம்ஸ் சேனல், இசைச்சரம். இதுவும் நேரம் கிடைத்தால் தான். கொஞ்ச நேரமே பார்ப்பதால் பார்ப்பதை ரசித்து மனதுக்குள் பதிந்து வெச்சுப்பேன்.

pudugaithendral said...

வீட்ல போய் பாத்துக்கறேன்.//

கண்டிப்பா பாருங்க ஃப்ரெண்ட், உங்களுக்கும் பிடிக்கும்

pudugaithendral said...

அட யாரு அது ஜமாலா???

ஆளையே காணோமேன்னு பாத்துக்கினு இருந்தேன்.

அன்புடன் அருணா said...

ஒண்ணு ரெண்டு நான் இதுவரைக்கும் பார்த்ததேயில்லை!....பார்த்துட்டேன்!

Thamira said...

நல்ல ரசனை ஃபிரெண்ட்.!

குறிப்பாக ஹமாம் பட்டுச்சேலை நான் டிவியில் மிஸ் பண்ணிட்டனே.. அதிலும் அந்தச் சிறுமி ரொம்ப அழகு, பர்ஃபெக்ட், ஃபெண்டாஸ்டிக்.!

மங்களூர் சிவா said...

விடியோக்களா? ஒண்ணும் தெரியலை, வீட்ல போய் பாத்துக்கறேன்.

மணிநரேன் said...

ரசனையான விளம்பரங்கள். முதல்முறையாக காண்கிறேன்.
பகிர்விற்கு நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் தென்றல்

தொலைக்காட்சி பார்க்க நேரமில்லை - இங்கு பார்த்து ரசித்தேன் - மகிழ்ந்தேன் - நன்றி நல்வாழ்த்துகள் தென்றல்

தாரணி பிரியா said...

வாவ் எல்லாமே எனக்கும் பிடிக்கும். அப்புறம் அந்த ப்ரூ விளம்பரம் அதுவும் பிடிக்கும். இப்ப ஒரு வாரமா வர்ற வோல்ஸ்வேகன் விளம்ப்ரம் பார்த்திங்களா அந்த குட்டிபையன் சூப்பர் :)

தாரணி பிரியா said...

அப்புறம் விர்ஜின் மொபைல் விளம்பரம் எதுவுமே பிடிக்காது

pudugaithendral said...

வீட்ல போய் பாத்துக்கறேன்.//

பாத்தாச்சா???

pudugaithendral said...

ரசனையான விளம்பரங்கள். //

நன்றி மணிநரேன்

pudugaithendral said...

நன்றி சீனா சார்

pudugaithendral said...

ஆமாம் தாரணி எனக்கும் வெரிஜின் மொபைல் விளம்பரம் பிடிக்காது.

//இப்ப ஒரு வாரமா வர்ற வோல்ஸ்வேகன் விளம்ப்ரம் பார்த்திங்களா அந்த குட்டிபையன் சூப்பர்//

இல்லியே பாக்கணும். நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அருணா

pudugaithendral said...

நல்ல ரசனை ஃபிரெண்ட்.!//

தாங்க்ஸ் ஃப்ரெண்ட். ஆமா நீங்க என்ன சுந்தர். சி விசிறியா. புது ஹேர்ஸ்டைல் அவர மாதிரியே இருக்கவும் கேட்டேன். :))

T Senthil Durai said...

உங்கள் வலை பூ மிகவும் அருமை.
எனக்கும் விளம்பரங்கள் ரொம்ப பிடிக்கும்.

பாருங்க !

tamiladvt.blogspot.com

நன்றி
த. செந்தில் துரை