Wednesday, December 16, 2009

2010ஆம் வருடத்தின் நிறம்!!

ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு நிறத்தை வழங்குவது
Pantone எனும் நிறுவனம்.

வரும் 2010ஆம் வருடத்திற்கான நிறம் Turquoise.
நீலமும் பச்சையும் கலந்த நிறம்.

ஒரு மாதிரியான இதமான நிறம் இது. பீச்களில்
இருக்கும் கடல்நீரின் நிறம் இந்த நிறம். பீச்களில்
ஓய்வெடுக்கும்போது அந்த நிறத்தை பார்த்தே
மனதுக்கு சாந்தமாக இருக்கும். புத்துணர்ச்சி
கிடைக்கும்.






சில நிறங்கள் குறித்து மக்களுக்கு நெகட்டிவான
எண்ணங்கள் உண்டு. Turquoise குறித்து எல்லோருக்கும்
பாசிட்டாவான எண்ணம்தான் வரும்.

பிறக்க இருக்கும் புத்தாண்டு மனதுக்கு இதத்தையும்,
புத்துணர்ச்சியையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும்.

21 comments:

துளசி கோபால் said...

ஆஹா.......... நீச்சல்குளம் கூட இந்த நிறம்தான்.

எனக்கும் பிடிக்கும்.

பாவம் கோபால்...........:-)

ராமலக்ஷ்மி said...

//பிறக்க இருக்கும் புத்தாண்டு மனதுக்கு இதத்தையும்,
புத்துணர்ச்சியையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும்.//

இதமான நிறம். இதமான பதிவு.

pudugaithendral said...

பாவம் கோபால்.//

ஆஹா :))

இந்த வருட திருமண நாளுக்கு என் ட்ரெஸின் கலர் இதுதான். அதனால இன்னொரு ட்ரஸ் எடுக்கறது போச்சேன்னு இருக்கேன். :((

ஸ்ரீராம் தப்பிச்சிட்டாருன்னு நினைக்க வேண்டாம். :))

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி

butterfly Surya said...

தகவலுக்கு நன்றி.

இந்த கலர் கொஞ்சம் dull feeling..

எம்.எம்.அப்துல்லா said...

இந்த ஆண்டு புதுவருடம் சிங்கையில்

:)

வல்லிசிம்ஹன் said...

டர்காய்ஸ் வர்ணம் அமைதி,சாந்தம்,சமாதானத்துக்கு எடுத்துக்காட்டு. பைத்தியம் பிடிச்சு ,மாலை,மோதிரம்,வளையல் என்று
வாங்கினேன்:)

நல்லதொரு வர்ணம் நல்லதே நடக்கட்டும்.

Thenammai Lakshmanan said...

டர்கஸ் நிறத்துக்காக நன்றி புதுகைத்தென்றல்

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் தென்றல்

அழகான் நிறம் நீலம் - பச்சையும் சேர்ந்து விட்டால் - கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் - இன்னொரு டிரஸுக்கு எல்லாமா ஸ்ரீராம் பயப்படுவாரு - நீங்க வேற

நல்வாழ்த்துகள்

Anonymous said...

என‌க்கு இந்த‌ நிற‌ம் ரொம்ப‌ புடிக்கும்.

Ungalranga said...

வால்பேப்பரை இதே நிறத்துக்கு மாற்றிவிட்டேன்..நன்றி..!!

மனதுக்கு உண்மையிலேயே இதமாய் இருக்கிறது..!!

pudugaithendral said...

வாங்க சூர்யா,

உடைகளில், பர்ஸாக, நகையாக பார்க்கும்போது லுக் நல்லா இருக்கும்.

pudugaithendral said...

புது வருடம் சிங்கையிலா சரி சரி.

போன் பண்ணுவீங்கன்னு மீ த வெயிட்டிங்

pudugaithendral said...

நல்லதொரு வர்ணம் நல்லதே நடக்கட்டும்.
ஆமாம் வல்லிம்மா,
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நன்றிக்கு நன்றி தேனம்மை

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

இன்னொரு ட்ரஸ் வாங்க அயித்தான் பயப்பட மாட்டாரு, இன்னொன்னு வாங்கப் போக வேற ஏதுவும் கூடவே வாங்கிடுவேனோன்னு சின்ன டென்ஷன் படுவாரு. அம்புட்டுதேன். :))
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

அப்படியா சந்தோஷம் மஹா

pudugaithendral said...

ஆஹா சந்தோஷம் ரங்கா.

Anonymous said...

இதை மயில் கழுத்துப் பச்சை [peacock green]யில் சேர்க்கலாம்.எனக்கும் பிடிக்கும்.
கொஞ்சம் சுமாரான கலர் உள்ளவங்களை அழகாகக் காட்டும் என்பது இதன் இரகசியம்

நானானி said...

இந்நிறத்தை மயில் கழுத்து நிறம் என்றும் சொல்லலாமா....தென்றல்?

மயிலிறகால் வருடிவிட்டது போலிருந்தது பதிவு.

pudugaithendral said...

மயில் கழுத்து நிறத்துக்கு கொஞ்சம் நீலம் கூட இருக்கணும்ல நானானி. டிஸ்டம்பர் கலர்னு சொல்லலாம்னு நினைக்கறேன். அழகு கலர்