Monday, December 14, 2009

பெட்ஷீட் பராமரிப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அலுத்து, சலுத்து வேலை பார்த்து நாளின் இறுதியில் ஓய்வெடுக்க
நாம் தேடுவது படுக்கை. அதில் சுகந்த மணம் வீசாட்டியும்,
வேர்வை மணம், அழுக்காக இல்லாமல் இருப்பது சுகாதாரம்.


பலருக்கு பெட்ஷீட், தலையனை உறை மாத்துவதுன்னா
மட்டும் கஷ்டம். ஒரு மாசத்துக்கு ஒரு தடவையாவது
மாத்துவாங்களான்னு சந்தேகம் தான்!!

ஆனா இது தவறு இப்படிப்பட்ட படுக்கையில் படுத்து
நமக்கு கிடைப்பது சுகாதரமான ஓய்வில்லை.

வாரத்துக்கு இருமுறை மாற்றணும்னு சொல்வாங்க.
அது சாத்தியமில்லைன்னாலும் வார இறுதியில்
கண்டிப்பாய் மாற்றுவதுன்னு வெச்சுக்கிட்டா
சுத்தமா, சுகமா தூங்கலாம்.

கைவசம் 3 பெட்ஷீட் செட் வெச்சுக்கணும்.(தலையணை
உறையும் தான்)

1 செட் துவைக்க போனால், 1 செட் பெட்டின் மீது,
இன்னொன்று அவசர தேவைக்கு ரெடியாக கப்போர்டில்
இருக்கணும்.

உறவினர் வந்து சென்ற பிறகு வார இறுதிக்காக
காத்திராமல் உடன் மாற்றுவது தான் நல்லது.

இப்படி பெட்கவர் போட்டு மூடி வைத்தாலும் நல்லது.
ஹோட்டல்களில் பெட்கவர் போட்டு அழகாக வைத்திருப்பார்கள்.


செய்யக்கூடாதது:

1. தூங்கும் அறையில் சாப்பாடு, விளையாட்டு ஆகியவைக்கு
பெரிய ”நோ”. இது அறையின் சுகாதாரத்தை பாதிக்கும்.

2. பிள்ளைகளுக்கு இருக்கும் கெட்ட பழக்கம் பெட்டில்
உட்கார்ந்து சாப்பிடுவது, பெட்டின் மேல் நடப்பது ஆகியவை.
இது தவறுன்னு எடுத்து சொல்லி திருத்தனும். காலின்
அழுக்குகள் பரவி அதனால் கிருமி தொற்று ஏற்படலாம்.

3. போதிய வெளிச்சம் அறையில் இருக்கா, காற்றோற்றமா
இருக்கான்னு பாத்துக்கணும். இதுவும் நல்ல தூக்கத்துக்கு
முக்கியம்.


பராமரிப்பு:
மிஷினில் துவைக்கும் பொழுது பெட்ஷிட், தலையணை உறைகளை
மட்டும் தணியாக துவைக்க வேண்டும். மற்ற துணிகளோடு
துவைக்கக்கூடாது.

வெள்ளை நிற பெட்ஷீட்களை உபயோகிப்பவர்கள் அதை
தணியாக துவைக்க வேண்டும்.

கறைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் மாற்றி துவைத்து
விட வேண்டும், காய்ந்த கறைகள் போவது கடினம்.

கலர் பெட்ஷீட்களை ட்ரைக்ளீன் தான் செய்ய வேண்டுமென்பதில்லை.
பெட்ஷீட், தலையணை உறை, போர்வைகளை மிஷினில் போட்டு
delicate cycle என இருக்கும் அந்த முறையில் துவைத்து,
இறுதியில் liquid fabric softener சேர்த்தால் வாசமாக இருக்கும்.

சின்னக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் படுக்கை நனைவது
சாதாரணம். அப்போது அடுத்த நாள் அந்த பெட்ஷீட்டை
தனியாக நீரில் அலசி, அப்புறம் டெட்டால் கொண்டு அலசி,
அதன் பின் மிஷினில் துவைத்தால் வாசனை இருக்காது.

துவைத்த துணிகளை உடன் வெயிலில் காயவைத்து
உடனே எடுத்து மடித்து வைத்து விடுவது அவசியம்.
இதனால் கிருமிகள் கொல்லப்படுகின்றன. வெயிலில்
நன்கு காய்வதால் ஈர வாசனை இல்லாமல் இருக்கும்.


பெட்ஷீட் தானே என கண்ட இடத்தில் வைக்காமல்,
கப்போர்டில் அழகாக, நேர்த்தியாக வைப்பதால்
அடுத்த முறை உபயோகத்துக்கு உதவியாய் இருக்கும்.

பெட்ஷீட்களை கைகளால் துவைப்பதாக இருந்தால்
அதிக கவனம் வேண்டும். சோப் முழுதும் போகும்படி
நன்றாக அலச வேண்டும். இல்லையேல் உடலுக்கு
ஒவ்வாமை உண்டாகும்.

உலர்த்தும் பொழுது தரையில், புல்வெளியில் பரப்பி
உலர்த்துவதென்றால் அந்த இடம் சுத்தமாக இருக்கிறதா
என்று பார்த்துக்கொள்ளவும். கொடியில் காய வைப்பது
சுகாதாரம்.



21 comments:

Unknown said...

//தூங்கும் அறையில் சாப்பாடு, விளையாட்டு ஆகியவைக்கு
பெரிய ”நோ”.// :-)

கண்மணி/kanmani said...

குட் குட் அடுத்த முறை தலையணை உறை பராமரிப்பது எப்படின்னு போடுவீங்களோ.
முக்கியமா ஒன்னு சொல்லலையே.
மேட்ரஸ் [மெத்தை]ஐயும் மாதம் ஒருமுறையாவது நல்ல வெயிலில் காய வைக்கனும்+ உறை நீக்கப் பட்ட தலையணைகள்.சரிதானே?

ஹுஸைனம்மா said...

அக்கா, சாரி, மன்னிக்கவும், பழக்க தோஷம்...

தென்றல், என்ன டிப்ஸ் கொடுக்கறதுல இறங்கிட்டீங்க, யார் வீட்டுக்காவது விருந்தாளியா போனீங்களா?

நீங்க சொன்னது அப்படியே நான் செய்யற மாதிரி இருக்கு. வீட்டுக்கு வர்ற சின்னக் குழந்தைங்க பெட் மேலே ஏறி நின்னு விளையாடும்போது, அவங்கம்மாவும் ஒண்ணும் சொல்லாமப் பாத்துகிட்டிருக்கும்போது கோவம் கோவமா வரும்.

ராமலக்ஷ்மி said...

உபயோகமான குறிப்புகள். சுகாதாரம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்பதை அழகாய் வலியுறுத்தும் பதிவு.

புது டெம்ப்ளேட் அழகு. கீழே அந்த சோஃபாவில் காஃபி வித் தென்றல்னு அமர்ந்து பேசலாம் போல.. நல்லாயிருக்கு.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி வினிதா

pudugaithendral said...

வாங்க கண்மணி,

தலையணை உறையும் இந்த பதிவுலேயே வந்திருச்சே.

மேட்ரஸ் மேட்டர் சேர்க்க மறந்துட்டேன். அதான் இப்ப நீங்க சொல்லிட்டீங்களே

pudugaithendral said...

பழக்க தோஷம்...

:)))ஆமாம்பா, இந்தமாதிரி பசங்களை
பாக்கும்போது கோவமாத்தான் வருது.
அதே மாதிரி சுவத்துல கைய வெச்சு தேச்சுகிட்டே நடப்பது, சோபால படுத்துகிட்டு சுவத்துல கால் வைப்பது இதெல்லாம் செய்யும் பொழுது ஒரு பெயிண்ட் விளம்பரத்துக்கு வரும் சயிஃப் அலிகான் மாதிரி டென்ஷனா இருக்கும்.

இத்தனை அந்த பிள்ளைங்க செஞ்சும் அவங்கம்மா சும்மா இருப்பாங்க பாரு அப்ப அந்த அம்மாவை அடிக்கணும்னு தோணும்.

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

வீட்டுக்கு வர்றவங்களை கால்கடுக்க நிக்க வைக்காம உக்காந்து பேசலாமேன்னு தான் சோபா. அதை கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க
:))

காற்றில் எந்தன் கீதம் said...

நல்ல உபயோகமான பதிவு......... அக்கா
அப்புறம் ஒரு விஷயம் "நன்றி சுபாஷினி" "நன்றி சுபாஷினி" அப்பிடின்னு பின்னஊட்டதில போடுறிங்களே யாருக்கா அது.......
ஒரு வேளை என்னைத்தானா? அவ்வ்வ்வவ்....... :( என் பேரு சுதர்ஷினி. (அப்பாடா )

Pandian R said...

அறுமை. இதுக்கு கண்டிப்பா நன்றி சொல்லியே ஆகணும்.

எம்.எம்.அப்துல்லா said...

//அப்ப அந்த அம்மாவை அடிக்கணும்னு தோணும் //

சாரிக்கா.. நான் தீவிரவாத எதிர்ப்பாளன் :)))

cheena (சீனா) said...

அன்பின் தென்றல்

இவ்ளோ வேலை இருக்கா - இதல்லாம் யார் செய்யணும் - அதச் சொல்லலியே

நல்வாழ்த்துகள் தென்றல்

நட்புடன் ஜமால் said...

நல்ல டிப்ஸுங்கோ

pudugaithendral said...

மன்னிக்கவும் சுதர்ஷிணி,

ஞாபக மறதியாயிடுச்சு.

:)

pudugaithendral said...

அருமையை, அறுமையா ஆக்கிட்டீங்களே, ரொம்ப ரம்பமா இருந்துச்சோ ஃபண்டூ பதிவு.

:)

pudugaithendral said...

//அப்ப அந்த அம்மாவை அடிக்கணும்னு தோணும் //

சாரிக்கா.. நான் தீவிரவாத எதிர்ப்பாளன்//

அவ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

இவ்ளோ வேலை இருக்கா - இதல்லாம் யார் செய்யணும் - அதச் சொல்லலியே//

சொன்னாலும் ரங்க்ஸ்கள் செய்யவா போறாங்க சீனா சார்!!:))) பெட் மேல போட்ட ஈர டவலையே எடுத்து காயப்போடமாட்டாதவங்க ரங்க்ஸ்கள்

pudugaithendral said...

நன்றி ஜமால்

ஹுஸைனம்மா said...

//பெட் மேல போட்ட ஈர டவலையே எடுத்து காயப்போடமாட்டாதவங்க ரங்க்ஸ்கள்//

அய்யோ தென்றல், எல்லா வீட்டிலயும் இதே கதைதானா? காலைல சண்டை ஆரம்பிக்கிறதே அதிலத்தான்!!

நானானி said...

மிக உபயோகமான பதிவு, தென்றல்!
அதிலும் இந்த டபுள்பெட்ஷீட்...என்னதான் மிஷின் செய்தாலும் காயவைத்து எடுப்பதுக்குள் தாவு தீந்திடும்.

//இவ்ளோ வேலை இருக்கா - இதல்லாம் யார் செய்யணும் - அதச் சொல்லலியே//

சீனா சார்! உங்க பதிலைப் பாத்தா வீட்டில் ஒரு துரும்பைக்கூட எடுத்து போடமாட்டீகள் போலிருக்கே!!

//சொன்னாலும் ரங்க்ஸ்கள் செய்யவா போறாங்க சீனா சார்!!:))) பெட் மேல போட்ட ஈர டவலையே எடுத்து காயப்போடமாட்டாதவங்க ரங்க்ஸ்கள்//

எனக்கு எரிச்சல் வருவதே இதனால்தான்.

pudugaithendral said...

இந்த டபுள்பெட்ஷீட்...என்னதான் மிஷின் செய்தாலும் காயவைத்து எடுப்பதுக்குள் தாவு தீந்திடும்.//

ஆமாம் நானானி,
வாரத்துக்கு ஒருமுறை செய்வதே கஷ்டமா இருக்கு.

//சொன்னாலும் ரங்க்ஸ்கள் செய்யவா போறாங்க சீனா சார்!!:))) பெட் மேல போட்ட ஈர டவலையே எடுத்து காயப்போடமாட்டாதவங்க ரங்க்ஸ்கள்//

எனக்கு எரிச்சல் வருவதே இதனால்தான்.//

:)) என்ன செய்ய?