Monday, January 25, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 25-1-10

தெலங்கானா பந்த், போராட்டம் இதனால அதிகமா பாதிப்பு
ஏற்பட்டிருப்பது மாணவர்களுக்குத்தான். முடிக்கப்படாத
பாடங்கள், நெருங்கிவரும் தேர்வு அப்படி இப்படின்னு
டென்ஷனா இருக்கும். 2 மாசத்துல 30க்கும் மேற்பட்ட
பந்த் நடந்திருக்கு. வர்ற 28ஆம் தேதி கூட திரும்ப பந்தாம்.

பாவம் மாணவர்கள். அதிக விடுமுறையை ஈடுகட்ட
சனி, ஞாயிறுகளில் கூட பள்ளி செல்ல வேண்டியிருக்கும்.

*************************************************

சென்ற வாரம் நடந்த பந்தில் அடிதடி, கண்ணீர் புகை குண்டுகளுடன்,
ரப்பர் புல்லட்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு மாணவன்
மரத்தின் மீது ஏறி நின்றுக்கொண்டு தற்கொலை செய்து
கொள்வதாக கூறி போராட்டம் நடத்தினார். எப்படியோ கீழே
இறக்கினார்கள். 40,000 மாணவர்கள் ஒரு வருட படிப்பை
இழக்கப்போகிறார்கள். அந்தோ பரிதாபம்!!!

***********************************************

மருத்துர்கள் தெய்வத்திற்கு சமம் என கொண்டாடப்படும்
வர்க்கம். இங்கே அரசு பொது மருத்துவமனை ஒன்றில்
சிசேரியனின் போது குழ்ந்தையின் கைகளை தவறுதலாக
வெட்டி விட்டார்கள் மருத்துவர்கள். அதற்கு பிறகும்
முறையான சிகிச்சை இல்லததால் குழந்தை இறந்து
விட்டது. :((

******************************************************

மகளின் பிறந்தநாளன்று காலை 4 மணிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வாழ்த்து,
அனுப்பியது கொழும்பில் எங்கள் வீட்டில் வேலை செய்த மேரி.
அவருக்கும் அன்றுதான் பிறந்தநாள் என்பதால் அழைத்து வாழ்த்து சொன்னேன்.

”இப்ப நிலமை நல்லாயிருக்கு மேடம், 26 போலிங்(தேர்தல்) அதுக்கப்புறம்
எப்படியிருக்குன்னு பாத்து கிளம்பிவந்திடுங்க!!! பாசம் ஜாஸ்தியாகிடுச்சு.

2 நாள் முன்னாடி அயித்தானுக்கு ஒரு கனவு. அயித்தானுக்கு கொழும்பில்
வேலை கிடைத்து நாங்கள் முன்பிருந்த வீட்டிற்கே
நாங்கள் திரும்பிப்போய்விடுவதாகவும் கனவாம். மேரி அழைத்தது
பத்தி அயித்தானுக்கு சொல்லவேயில்லை.

ஆஹா, சாமி ரங்கா, இந்த கனவு நனவாச்சுன்னா காலத்துக்கும்
எங்கப்பன் கதிர்காமனை கண்ணார பாத்துகிட்டு சொச்ச ஜீவனத்தை
கழிச்சிடலாம். :))

***************************************************

தேசிய பெண் குழந்தை தினத்தை ஒட்டி விளம்பரம்
ஒன்றை அரசு வெளியிட்டிருக்கிறது.
WHERE WOULD YOU BE IF YOUR MOTHER WAS NOT ALLOWED TO BE BORN??
என்ற ஸ்லோகனுடன் கபில்தேவ், சித்தார் இசைக்கலைஞர் படங்களுடன்
பாக்கிஸ்தான் அதிகாரி தன்வீர் மக்மூத் அஹ்மத் அவர்களின்
படத்தையும் போட்டுவிட்டார்கள். அவசர அவசரமாக
பிரதம மந்திரியின் அலுவலகம் மன்னிப்பு கேட்டிருக்கிறது!!

யோசிச்சு பொறுமையா செய்யுங்க சாமிகளா!
ஏற்கனவே பக்கத்து நாட்டுக்காரங்க இனியும் 26/11
இந்தியாவில் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க
முடியாதுன்னு அறிக்கை விட்டிருக்காங்க.

*****************************************************
2012 படம் பாத்துட்டேன். இதுக்குத் தனியா விமர்சனம்
எழுதணும்னுதான் நினைச்சேன். எதுக்குன்னு எழுதுவேன்.
படைப்பு, கேமிரா, நடிப்பு என எல்லாமே சரியான கலவையில்
இருக்கு. இந்தப் படம் பாக்கும் போது மனசுல ஓடின
ஒரே விஷயம் “ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினவங்க
இப்ப மண்ணுக்குள்ள”.

இப்படி ஒரு ப்ரளயம் வந்தால் பெரியவங்க,சின்னவங்க,
பணக்காரர், ஏழைன்னு எந்தப் பாகுபாடும் இல்லாம
”கூண்டோட கைலாசம்” தான்!! ஆஹ இயற்கையைத்தான்
பாதுகாக்காம ப்ளாஸ்டிக், புகைன்னு மாசுபடுத்தி
இப்ப வெப்பம் அதிகமாகி பனிமலைகள் உருகிகிட்டு வருது.

இனி இதை தடுத்து நிறுத்த ஆவன செய்யப்போற
மாதிரி 2012 படத்தில், வேறொரு பெண்ணை திருமணம்
செய்து கொண்டு வாழும் மகனிடம் மனது மாறி பேச
நினைத்த தந்தை போனில் அழைத்து பேசத்துவங்கும்போது
சுனாமி ஏற்பட்டு அந்த இடமே காலியாகிவிடும்.
என்ன பேசிட்டியா என்று கேட்ட நண்பரிடம்,
“I could have called early, was late"ன்னு சொல்வார்.
நச் மெசெஜ் இது.

வாழும் வரை போராட வேண்டாம், வாழும் வரை
சந்தோஷமா யார் கூடயும் பகைமை இல்லாம,
அன்பா வாழ்ந்திட்டு போயிடனும். இல்லாட்டி அந்த
பெரியவர் மாதிரி மனசு வருத்தப்படணும்.

உலகம் அழியற வரைக்கும் காத்திருப்பானேன்.

TRAILOR


***************************************************
காலம் காலமாக குடியரசு தினம், சுதந்திர தினம்
இரண்டிற்கும் தூர்தர்ஷனில் வரும் “நன்னே முன்னே பச்சே
தேரி முட்டி மே க்யா ஹை” பாட்டு.



அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

14 comments:

நட்புடன் ஜமால் said...

40,000 மாணவர்கள் ஒரு வருட படிப்பை
இழக்கப்போகிறார்கள். அந்தோ பரிதாபம்!!!]]

வருத்தம் தான்

2012 சரியா சொன்னீங்க

மேரிக்கும் எமது வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

நேற்று ஹைதையில் இருக்கும் அண்ணன் மகளுடன் பேசும் போது, (10 வது வகுப்பு படிக்கின்றார்) அவரும் வகுப்புகள் சரியாக நடப்பதில்லை, ப்ராக்டிகல் எக்சாம் 3 தடவை மாற்றி இரண்டு நாள் முன்புதான் முடிந்தது என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார். மாணவர்களை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கின்றது.

SK said...

மாணவர்கள் :(

2012 , :)

கானா பிரபா said...

ஹை ஆவக்காய் பிரியாணி சூப்பர்

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஜமால்

pudugaithendral said...

ரொம்ப கஷ்டம் இராகவன், மார்ச் 3ஆம் தேதி போர்ட் எக்ஸாம். என் அட்வான்ஸ் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி எஸ் கே

ஹுஸைனம்மா said...

என்ன போராட்டம், பந்த் வந்தாலும் பள்ளிமாணவர்கள் பாடுதான் கஷ்டம்.

கல்லூரி மாணவர்களும் கணக்குவழக்கில்லாம போராடப் போயிடறாங்க!!

அய்யோ, சிஸேரியன்ல இப்படிலாம் கூட நடக்குமா? என் பிரசவத்தின்போது இந்த மாதிரி ஏதோ டாக்டரிடம் கேட்டேன், அதெல்லாம் ரொம்ப கவனமா இருப்போம்னு சொன்னாங்க.

அந்த பாக் அதிகாரி ஃபோட்டோ எப்படி கிடச்சிதாம்? அப்புறம் எப்படி கண்டுபிடிச்சாங்களாம்?

KarthigaVasudevan said...

//இங்கே அரசு பொது மருத்துவமனை ஒன்றில்
சிசேரியனின் போது குழ்ந்தையின் கைகளை தவறுதலாக
வெட்டி விட்டார்கள் மருத்துவர்கள். அதற்கு பிறகும்
முறையான சிகிச்சை இல்லததால் குழந்தை இறந்து
விட்டது. :((//

கடவுளே ...என்னங்க இது!!! :(((

நேசமித்ரன் said...

பொறுப்பான அலசல் இடுகை .
வாழ்த்துக்கள்

pudugaithendral said...

மருத்துவர்கள் கவனக்குறைவா இருந்தா எதுவேனாலும் நடக்கும்.

ஆஷிஷின் பிரசவத்தின் போது தனது புது மருத்துவமனையின் தியேட்டரில் முதல் குழந்தை ஆண்குழந்தைதான் பிறக்க வேண்டும், என்பதற்காகவும், விஜயதசமிக்குள் ஆஸ்பத்திரி திறக்க வேண்டும் என்பதற்காகவும் கடைசி நிமிடத்தில் பிரச்சனையாகி சேரியன் செய்ய வேண்டியதை என்னைக் கஷ்டப்படுத்தி நார்மல் டெலிவரி மாதிரி செய்த மருத்துவர் இருக்காங்க ஹுசைனம்மா!!

பாக் முன்னாள் அதிகாரியாம். புகைப்படம் எப்படி கிடைச்சிருக்கும்னு தெரியலை. indian icon கள் லிஸ்ட்ல அவர் போட்டோவும் வந்தது தான் காமெடி

pudugaithendral said...

கடவுளே ...என்னங்க இது//

படிச்சு நானும் பதறித்தான் போனேன் கார்த்திகா. அரசு மருத்துவமனைக்கு படிக்காத மக்கள்தான் அதிகம் செல்வாங்க என்பதால் அரசு மருத்துவர்கள், ஆயாக்கள்,நர்ஸுகள் அனைவருமே கவனக்குறைவாகவேதான் இருப்பாங்க.

பதிவு போட்ட கொஞ்ச நேரத்துக்கு கிடைச்ச தகவல் 3 நாளா தன் பக்கத்துல ஆஸ்பத்திரியில இருந்த ஆண்குழந்தை ஒண்ணு அதிகாலை 3 மணிக்கு கண் அசந்த நேரத்துல காணாம போயிடிச்சின்னு ஒரு தாய் பேட்டி கொடுத்திருந்தாங்க :((

pudugaithendral said...

நன்றி நேசமித்ரன்

pudugaithendral said...

பாஸ் நீங்களா???

வருகைக்கு நன்றி பாஸ்