Monday, January 04, 2010

பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா...

நமக்கு தம்பின்னா அயித்தானுக்கு அண்ணன்.
அட இஷ்ட தெய்வத்தைச் சொன்னேனுங்க. :))
இவரை அயித்தானுக்கு அறிமுகப்படுத்தினதே
நான் தான். திருமணத்துக்கப்புறம் ஒருமுறை
இந்தக் கோவிலுக்கு கூட்டிகிட்டு போனேன். ரொம்ப
பிடிச்சுப்போயி வருஷா வருஷம் ஒருவாட்டியாவது
இங்க போயிட்டு வந்திடுவோம்.

கற்பக விநாயகர் அருள் புரியும் பிள்ளையார் பட்டி
கோவில் தான் அது. கோவிலில் அபிஷேகத்துக்கு
பணம் கட்டி அப்பா ஏற்பாடு செஞ்சு வெச்சிருந்தாரு.
உச்சிகாலம் 11.30 மணிக்குத்தான் அபிஷேகம் அதுக்குள்ள
இன்னொரு இடத்துக்கு கண்டிப்பா போகணும்னு அப்பா
சொன்னாரு. சரிப்பா போகலாம்னு சொன்னேன்.

அப்பா கூட்டிகிட்டு போன இடம் திருப்பத்தூரிலிருந்து
13 கிமீ தொலைவில் இருக்கும் பட்டமங்கலம்.

இங்க அப்படி என்னப்பா விஷேஷம்னு கேட்டேன்.
”சும்மா இல்லமா, அஷ்டமா சித்தி அருளிய குரு
ஸ்தலம் இதுன்னு!” சொன்னார். நாங்க போயிருந்தது
செவ்வாய்க்கிழமை. இதுவே வியாழக்கிழமைன்னா
குறைஞ்சது 5000 பேர் இருப்பாங்களாம்.கோவிலில் நுழைஞ்சதுமே குரு பகவான் அருள் புரிகிறார்.
கார்த்திகை பெண்கள் 6 பேருக்கும் அஷ்டமா சித்திகளை
அருளிய தக்‌ஷிணாமூர்த்திக்கடவுள் இங்கேயே கோவில் கொண்டு
வரும் அன்பர்களுக்கு அருள் புரிகிறார் என தலபுராணம்
கோவில் சுவற்றில் எழுதியிருக்கு. படிச்சுகிட்டே உள்ளே
போனால் சொக்கநாதரும், மீனாட்சி அம்மையும் அருள்
பாலிக்கறாங்க. தரிசனம் முடிஞ்சு நேராக கிளம்பியது
பிள்ளையார் பட்டிக்கு. திருப்பத்தூரிலிருந்து 30 நிமிஷத்துல
பிள்ளையார்பட்டி.

அப்பாவும் அயித்தானும் போய் பணம் அனுப்பியிருந்த
ஜெராக்ஸை காட்ட பேர் எழுதி கார்டு ஒண்ணு
கொடுத்தாங்க. அபிஷேகத்துக்கு பணம் கட்டினால்
4 பேர் சாமி சந்நிதிக்கு முன்னாடி உட்கார்ந்து அபிஷேகம்
பார்க்கலாம்.


கோவிலில் கூட்டம் அதிகம் இருந்தது. என்னன்னு பார்த்தால்
60 சாந்தி, 70 சாந்தி கல்யாணம் நடந்துகிட்டு இருந்துச்சு.
ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகமா இருந்துச்சு. அதனால்
11.30க்கு துவங்க வேண்டிய அபிஷேகம் 12.30 மணிக்கு
ஆரம்பமாச்சு. சாமி தரிசனத்துக்கு வந்த இடத்துல
60/70 சாந்தி கல்யாணம் செஞ்சுகிட்ட பெரியவங்களையும்
தரிசிக்கும் வாய்ப்பு கிடைச்சது சந்தோஷமா இருந்துச்சு.


12.15 மணி வாக்கில் பணம் கட்டின ஒவ்வொருத்தரையா
கூப்பிட்டு சங்கல்பம் செஞ்சாங்க. எங்களுக்கு முன்னாடி
சங்கல்பம் செஞ்சுகிட்டவரை அப்பா பாத்துகிட்டே இருந்தாரு.
யாருன்னு நமக்குத் தெரியாது அதனால பேசாம இருந்துட்டேன்.
(அவருதான் யதார்த்த ஜோதிடர் ஷெல்வின்னு அப்பா
சொன்னார்)

சங்கல்பம் முடிஞ்சதும் சந்நிதிக்கு முன்னாடி உட்கார்ந்து
கிட்டோம். தங்க காப்பு அலங்காரத்திலிருந்த பகவானை
அபிஷேகத்துக்கு ரெடி செஞ்சாங்க. தேன், பால், கந்தம்,
வீபூதின்னு அபிஷேகம். ஒவ்வொரு அபிஷேகம் முடிஞ்சதும்
கற்பூரம் காட்டினாங்க. ஸ்லோகங்கள் சொல்லிகிட்டே
இருந்தோம். கடைசியா தங்க காப்பு அலங்காரமா? இல்லை
ப்ளையினா விட்டுடுவாங்களான்னு ஒரு சின்ன டென்ஷன்.
(எனக்கு பிள்ளையாரை தங்க காப்பு அலங்காரத்தில் பார்ப்பது
ரொம்ப பிடிக்கும். எப்பவும் தங்க காப்பில் தான் தரிசனம்
தரணும்னு சண்டை போட்டுகிட்டே கோவிலுக்கு போவேன்)இந்த பிள்ளையார்பட்டி ஹீரோவைப்பத்தி கவியரசர் கண்ணதாசன்
எழுதிய பாடல் சொல்லும் இவரது புகழை.

அற்புத கீர்த்தி வேண்டின்,
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக் களஞ்சியத்
திருக்கைச் சென்று பொற்பதம்
பணிந்து பாரீர் பொய்யிலை கண்ட உண்மை.அலங்காரம் முடிந்து திரைவிலக்கியதும் தங்க காப்பில்
ஜொலி ஜொலித்தார் பெரியவர். அடுக்கு தீபாரதனையில்
இன்னகும் பிரகாசமாக தெரிந்தார். மனதார தரிசித்து
பிரஹாரம் சுத்தி வந்து பிரசாதமாக அப்பமும், கொழுக்கட்டையும்
வாங்கிக்கொண்டோம்.

5 கிமீ தொலைவில் தான் குன்னக்குடி முருகன் கோவில்.
பிள்ளையார்பட்டியிலேயே 1.30 மணிஆகிவிட்டதால்
குன்னக்குடி கோவில் சாத்தியிருக்கும் என்பதால்
நேரே புதுகைக்கே போய்விட்டோம்.

அடுத்த ரவுண்ட் அப் புதுகை.

10 comments:

Covai Ravee said...

பதிவு மனதிற்க்கு அமைதியை ஏற்படுத்தியது. நன்றி.

துளசி கோபால் said...

அருமையான கோவில். படு சுத்தமா வச்சுருக்காங்க. உண்டியல் கிடையாது:-)

தொடர்ந்து வந்துக்கிட்டுத்தான் இருக்கேன்

புதுகைத் தென்றல் said...

வாங்க ரவி,

மீ த பர்ஸ்டா வந்திருக்கீங்க. வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி டீச்சர்,


அருமையான கோவில். படு சுத்தமா வச்சுருக்காங்க. உண்டியல் கிடையாது//

நகரத்தார் கோவிலாச்சே அதான் அப்படி ஒரு சுத்தம்.
//தொடர்ந்து வந்துக்கிட்டுத்தான் இருக்கேன்//

புதுகைத் தென்றல் said...

பட்டமங்கலம் குருபகவான் கோவிலைப்பற்றி பதிவில் கூறமறந்த விடயம் இது:

தமிழக அரசின் இந்து சமயத்துறையிடமிருந்து விளக்களிக்ப்பட்டு நகரத்தாருக்கு மட்டுமே சொந்தம் எனும் கோவில் இது ஒன்று தான்

மங்களூர் சிவா said...

அருமை. கண்டிப்பாக ஒரு விசிட் அடிக்கணும்.

KaveriGanesh said...

சென்னை புத்தகக்கண்காட்சி EXCLUSIVE புகைப்படங்கள்

http://kaveriganesh.blogspot.com

வித்யா said...

பக்தி வாசனை தூக்கலா இருக்கே..

fundoo said...

நகரத்தார் பங்களிப்புகளுக்கு பிள்ளையார்பட்டி நல்ல உதாரணம்.
பட்டமங்களம் கோயில் பற்றிய தங்கள் தகவலுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

பிள்ளையார்பட்டி கோவிலை நான் எடுத்த படம் இங்கே:)! நல்ல தரிசனம் கிடைத்தது நாங்கள் சென்றிருந்த போதும்.