Friday, January 22, 2010

எம்புட்டு சாப்பிடணும்??!!!

ஆந்திரா மிளகுக் குழம்புன்னு முந்தைய பதிவு போட்டுட்டு
எம்புட்டு சாப்பிடணும்னு பதிவா?? என்ன ஒரு வில்லத்தனம்!!
அப்படின்னு கேட்கப்போற நட்புக்களுக்கு மேட்டர் இருக்கு
அதான் இந்தப் பதிவு. :)))

ஆங்கிலத்துல ஒரு சொலவடை இருக்கு.
YOU WHAT U ARE EATING.நாம நல்ல சாப்பாடு அதாவது
பேலன்ஸ்டா சாப்பிட்டா நல்லா இருப்போம். அளவுக்கு அதிகமாக
சாப்பிட்டா எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ்தான் இருப்போம்.

டயட்டுன்னா இன்னான்னு ஒருபதிவு போட்டிருந்தேன்.
அதைப் படிச்சா டயட் பத்தி ஒருஐடியா கிடைக்கும்.

டயட்டுன்னா சாப்பிடாம இருக்கறது இல்லைன்னு தெரிஞ்சுச்சா!!
அதுலயும் முக்கியம் நம்ம உடம்புக்கு தேவையான அளவு
உணவு நாம சாப்பிடணும். இது தெரியாம ஃபுல் கட்டு கட்டினா
பிரச்சனைதான்.



நம்ம உயரத்துக்கு தகுந்த எடை இருந்தா நாம சரியான அளவுள
இருக்கோம்னு அர்த்தம்.

உயரம் அதிகம் எடை குறைவு, எடை அதிகம் உயரம் குறைவுன்னு
சிலருக்கு பிரச்சனை இருக்கும்.

நாம எம்புட்டு சாப்பிடணும்னு தெரிஞ்சிக்கறதுக்கு முன்னாடி
உங்க உயரம், எடை, வயது எல்லாம் ஒரு பேப்பர்ல குறிச்சு
வெச்சுக்கோங்க.

இப்ப கீழ நான் கொடுத்திருக்கும் லிங்க்ல போனா நம்ம உயரம்,
எடைக்கு நாம ஒரு நாளைக்கு எம்புட்டு கலோரி சாப்பிடணும்னு
கணிச்சு கொடுப்பாங்க. இலவசம் தான்.

அதை வெச்சு நம்ம டயட் ப்ளானை போட்டுகிட்டா ஆரோக்கியமான
உடம்பு ரெடி.


calorie counter your daily protein and calorie needs இருக்கற
இடத்துல உயரம், எடை கொடுத்தீங்கன்னா கணக்கு போட்டு
சொல்லிடும்.

உடல் இளைக்கணும்னா எம்புட்டு கலோரி சாப்பிடணும்,
உடல் பருமனை மெயிண்டென் செய்யணும்னா எம்புட்டு கலோரி
உணவுன்னு எல்லாம் தெரிஞ்சிக்கலாம்.

நமக்கு எடை கிலோவிலதான் தெரியும். பவுண்ட்ஸில் தெரிய இங்கே
போங்க.kilogram to pounds converter


calorie counterக்கு மேலே Burned Calories Calculator இருக்கு. அதில
நாம் செய்யும் வேலையில் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுதுன்னு
தெரிஞ்சிக்கலாம்.

BMI CALCULATOR நம்ம எடையின் அளவு தெரிஞ்சிக்கலாம்.

இங்கேயும்


நம் உடம்புக்குத் தேவையான அளவு சாப்பிட்டு ஆரோக்கியமா
வாழ்வோம்.

HAPPY WEEKEND

18 comments:

நட்புடன் ஜமால் said...

மேட்டர் நல்லது தான் - அத செய்யத்தான் சோம்பேறித்தனமாக இருக்கு.

pudugaithendral said...

:)வருகைக்கு நன்றி. வீக் எண்ட்ல செஞ்சு பாருங்க.

அன்புடன் அருணா said...

ரைட்டு!

ப்ரியமுடன் வசந்த் said...

உடம்புல இருக்குற கொழுப்பு குறைப்பது பற்றி சொல்லிப்புட்டீங்க வார்த்தைகள் வரும் வாய்க்கொழுப்பு எப்படி குறைக்கிறது?

:))

cheena (சீனா) said...

அது சரி - கலோரி கணக்கிட்டு - கிலோ பாத்து - பவுண்டுக்கு மாத்தி ( எதுக்கு ) - செக் பண்ணி - தேவையா - வேணாம் - நல்லா சாப்பிடுவோம் - டாக்டர் கிட்டே போவோம்

நல்லாருக்கு நல்ல பயனுள்ள பதிவுதான்

நல்வாழ்த்துகள் தென்றல்

Ungalranga said...

சூப்பர்..சூப்பர் பதிவு..

Very Informative..!!

இதோ.கால்குலேஷன்ஸ் போட ஆரம்பிச்சுட்டேன்..!!

இனி களத்துல குதிச்சுட வேண்டியதுதான்..

டிஸ்கி : எனக்கு உயரத்திற்கேற்ற எடை இல்லை.. :))

Vidhya Chandrasekaran said...

எவ்வளவு சாப்பிட்டாலும் அதேற்கேத்த உடலுழைப்பு வேண்டும். நல்ல பகிர்வு அக்கா.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அருணா

pudugaithendral said...

வார்த்தைகள் வரும் வாய்க்கொழுப்பு எப்படி குறைக்கிறது?//

இதுக்கெல்லாம் பக்குவம் சொல்லிட முடியுமா வசந்த்??!!!நான் சொன்னா அப்புறம் எனக்கு வாய்க்கொழுப்புன்னு சொல்லிடுவாங்க. :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சீனா சார்

pudugaithendral said...

எனக்கு உயரத்திற்கேற்ற எடை இல்லை.. //

ஏத்துங்க ஏத்துங்க எடையை ஏத்துங்க

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

எவ்வளவு சாப்பிட்டாலும் அதேற்கேத்த உடலுழைப்பு வேண்டும். //

ஆமான்னும் சொல்லலாம்.வருகைக்கு நன்றி வித்யா

சாந்தி மாரியப்பன் said...

நான் இன்னிக்குத்தான் மிளகு குழம்பு சாப்பிடப்போறேன்.எம்புட்டு சாப்பிடணும்கிறதை அப்புறமா யோசிச்சுக்கிறேன் :-)).

Prathap Kumar S. said...

படிக்கும்போது பண்ணணும்னு தோணுது... மூணு வேளையும் ஹோட்டல்ல சாப்பிடற என்னைமாதிரி பேச்சலர் ஆளுங்க இதைபண்றது ரொம்ப கஷ்டம்...

ஹுஸைனம்மா said...

ம்ம்.. இது வேறயா.. நடத்துங்க நடத்துங்க..

ஆனா என்னப் படிச்சாலும் சாப்பாடு பக்கம் போனா எல்லாம் மறந்துடுது!! என் சமையல் அவ்வளவு டேஸ்டாருக்கு போல!! ;-)

(அட, கேள்வி இல்லை!!)

pudugaithendral said...

.எம்புட்டு சாப்பிடணும்கிறதை அப்புறமா யோசிச்சுக்கிறேன் :-))././

ha ha ha

pudugaithendral said...

வாங்க நாஞ்சிலாரே,

கஷ்டம் தான்.

pudugaithendral said...

என் சமையல் அவ்வளவு டேஸ்டாருக்கு போல//

ஆஹா!!!