தை மாதம் தைக்கிருத்திகை, தைப்பூசம் கந்தனுக்கு
உகந்த நாட்கள். இன்று தைப்பூசம். ஹைதராபாத்தில்,
(செகந்திராபாத்) பத்மாராவ்நகரில் முருகன் அருள்பாலிக்கும்
திருத்தலம் ஸ்கந்தகிரி.
நான் சென்ற நேரம் அய்யனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் முருகனுக்கு அரோகரா!! குரலுடன் பால் குடங்கள்,
காவடிகள் கோவிலிலிருந்து புறப்பட்டு கோவிலைச் சுற்றி
வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தி பரவசத்துடன் கூட்டம், அரோகரா போட்ட படி.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் என்பது போல்,
கோவில் சின்ன குன்றின் மேல்தான் அமைந்திருக்கிறது.
கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன், பிள்ளையார்,
திருமால், நவக்கிரகங்கள்,லிங்க வடிவல் சிவன், அம்பாள் கோவில்களுடன்
துர்கை மிக அழகாக வீற்றிருக்கிறாள். துர்க்கை கோவிலின் வாயிலேயே
சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
நவராத்திரியில் தேவிக்கு ஒவ்வொரு விதமாக அலங்காரம்.
அதுவும் பின்னல் ஜடை முன் விழ அலங்காரம் பிரமாதமாக
இருக்கும்.
வெள்ளி, செவ்வாய் ராகுகால நேரங்களில் அம்மன் முன்
எலுமிச்சை விளக்கேற்றி ராகு கால பூஜை நடக்கும்.
கோவில் படி ஏறுவதற்கு முன் வலது பக்கம் பெரிய ஆஞ்சநேயர்
சந்நிதி. இந்த இடம் காஞ்சி மடத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது.
காஞ்சி மகா பெரியவரின் பாதுகை இருக்கும் இடத்தில் தினமும்
லலிதா, விஷ்ணு சஹஸர்நாமங்கள், ஹனுமான் சாலிசா
பாடப்படும். நவராத்திரியின் போது ப்ரம்மாண்ட கொலு, பாட்டுக்
கச்சேரி நடக்கும்.
கிரி ட்ரேடிங் ஏஜென்சியின் ஹைதைக்கிளை ஸ்கந்தகிரி
கோவிலில் தான் இருக்கிறது. பூஜை சாமான்கள், சீடிக்கள்,
ஸ்லோக புத்தகங்கள் வாங்கலாம்.
மொத்தத்தில் ஸ்கந்தகிரி போய் வந்தால் முருகனை தரிசித்த
திருப்தியுடன் தமிழ்நாட்டுக்கு ஒரு விசிட் அடித்து வந்தது போலிருக்கும்.
அர்ச்சகர்களிலிருந்து அனைவரும் தமிழர்கள் தான். லோக்கல் மனிதர்களும்
விரும்பும் தெய்வம்.
அனைவருக்கும் அருள் பாலிக்கிறான் ஸ்கந்தகிரி முருகன்

3 comments:
ஆஹா, சூப்பர் பதிவு. ஒண்ணு ரெண்டு படங்களும் போட்டிருக்ந்தா அசத்தலா இருந்திருக்கும். வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா.
படங்கள் போட்டிருக்கலாம்..
:-)
வாங்க அநன்யா, ஹுசைனம்மா
போட்டோ எடுக்க அனுமதியில்லை
அதான் போடலை.
Post a Comment