ஆண்டனா திருப்பி இவரு தூர்தர்ஷன் பார்த்த காலத்துல
ரூபவாஹிணி பாக்கவே இன்னொரு ஆண்டெனா ஃபிக்ஸ்
செஞ்சு ரூபவாஹிணி பாத்திருக்கோம்ல. கொசுவத்தி
சுத்தாட்டி தப்பாயிடும்.
அது என்ன கொடுமையோ தெரியாது!!! சென்னை தூர்தர்ஷன்
சரியா வந்ததே இல்லை. ஒரே க்ரெயின்ஸா கொட்டும்.
ஆனா கிளியரா தெரிவது ரூபவாஹிணி தான். அதிகம்
சிங்கள நிகழ்ச்சிதான் வரும்னாலும் சில சமயம் தமிழ்
பாடல்கள் வரும். சில சமயம் சனிகிழமைகளில் தமிழ் திரைப்படம்
வரும். பழைய படங்கள் தான் என்றாலும் ரூபவாஹிணில
பாத்தோம்..
லாட்டோன்னு ஒரு சீட்டிழுப்பு நிகழ்ச்சி. அதாவது நம்ம
லாட்டிரி மாதிரி. அந்த bollகள் உருண்டு வந்து விழும்
அழகே அழகு.(இப்பவும் இந்த நிகழ்ச்சி இருக்கு)
இலங்கைக்கு போனதும் சூப்பர் மார்கெட்டில் தேடியது
இந்த ANCHOR பால் பவுடரைத்தான். :))
இன்றளவும் என் பிள்ளைகளுக்கு பால்னா அதுஆங்கர் தான். அங்கேயிருந்து
யார் வந்தாலும் 4 பாக்கெட் கொண்டு வரச்சொல்லி விடுவார்கள்
பிள்ளைகள்.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத் ஸ்தாபனம்- இலங்கை வானொலி
இப்படி சொன்னதும் ஞாபகத்துல ஓடுறது அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது,
கே.எஸ் ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சதானந்தா...
வானொலி பிரியையான எனக்கு இவர்கள் குரல்கள் ரொம்ப
பிடிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு வரும் லலிதாவின்
பாட்டுக்குப்பாட்டை மறக்க முடியுமா???
அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது
இதுதான் எனது அபிமான கே. எஸ். ராஜா. இவரை எப்படியாவது
பார்த்துவிட வேண்டுமென நினைத்ததுண்டு. அவர் இறந்த துயரச்
செய்திதான் இலங்கையில் எனக்கு கிடைத்தது.
இப்பவும் உங்களால் கே. எஸ். ராஜா அவர்களின் குரலைக்
கேட்க முடியும். ஒரு வலைப்பூவையே அவருக்காக உருவாக்கி
வைத்திருக்கிறார்கள்.
ராஜேஸ்வரி சண்முகம் இவங்க தான்.
இந்தக் குரல்களுக்கு நானடிமை.
அசைபோட்டு பார்க்கும் அனுபவங்களை, நிகழ்ச்சிகளை தந்தவங்க
இவங்க. இலங்கையில் இருந்த பொழுது தற்செயலாம் என் வீடு
ரூபவாஹிணிக்கு மிக அருகில். அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம்
ஒரு பிரமிப்பு, பெருமை, கர்வம். இந்த இடத்திலிருந்து வந்த
நிகழ்ச்சிகளை நான் புதுக்கோட்டையில் உட்கார்ந்து கொண்டு
அனுபவித்து ஆனந்தப்பட்டிருக்கிறேன் என்ற சந்தோஷம்.
17 comments:
ஆகா, இக்கரைக்கு அக்கரைப் பச்சை
ஆமா பாஸ்,
தமிழ் திரைப்பாடல்களைப்பற்றி பல தகவல்களோடு அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கும் விதத்தைப் போல எனக்கு வேறெந்த நிகழ்ச்சியும் இல்லை என்பதே எண்ணம்.
ஷார்ட்டா எழுதினாலும் ஸ்வீட்டா எழுதிடுறீங்க தென்றல்!! அதுவும் நிறைய துணைச் செய்திகளோடவே!!
நன்றி ஹுசைனம்மா
சூப்பரு ;) இருவரும் பழைய நாட்களுக்கு கொண்டு போய் என்னை சிறுமியாக்கிட்டீங்க..
சூப்பர் பதிவு போங்க... கேஸ்.எஸ்.ராஜாவை கண்ணில் காண்பித்ததற்கு நன்றிகள்.
5-6 வயசுலேருந்தே இலங்கை வானொலி கேட்டுவளர்ந்தவன் நான்...ரொம்ப நன்றி
என்னை சிறுமியாக்கிட்டீங்க..//
சேம் பளட். கானாவோட பதிவைப் படிச்சதும் பால்ய காலத்துக்கே போய் அதே நினைவுகளை பதிவா போட்டேன்.
வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி
வாங்க பிரதாப்,
நானும் சமீபத்தில் தான் கே.எஸ்.ராஜாவின் புகைப்படத்தைப் பார்த்தேன். இந்த ஒல்லி உருவத்திலிருந்தா அப்படி ஒரு குரல்னு ஆச்சரியப்பட்டிருக்கேன்.
வருகைக்கு நன்றிங்க
நம்மவர்களைப் பற்றிப் பாராட்டிக் கூறியிருப்பது எமக்குச் சந்தோசத்தை அளிக்கிறது.
தென்றல் இலங்கை வானொலி நம்ப ஊர்ல பாப்புலர் ஆனதுக்கு காரணம் நம்ப திருச்சி ரேடியோ அழுது வடிஞ்சதுதான். காலை நேரத்தில் அசத்தல் பாடல்களாக ஒலிபரப்புவதோடு, காமெடிகளை அள்ளிவிடுவார்கள். கல்யாணப்பரிசு காமெடி தலைகீழ்பாடம் உபயம், காலை நேர நகைச்சுவை நேரம். அதுவுமில்லாம மாலை நேரத்தில் 80கள் பாடல் மிதந்து வரும்.. புதுக்குளத்தில் குழாய் ரேடியாவில் போடுவார்கள் :)
அந்த இனிமையை ரசிக்கக்கூட அம்மண்ணின் மைந்தர்களை விட மாட்டேன் என்கிறார்கள். கொடுமை.
//தமிழ் திரைப்பாடல்களைப்பற்றி பல தகவல்களோடு அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கும் விதத்தைப் போல எனக்கு வேறெந்த நிகழ்ச்சியும் இல்லை என்பதே எண்ணம்.//
Double Repeat!
நல்ல கொசுவத்தி...
ரேடியோவே வாழ்க்கை என்ற வாழ்ந்த காலங்களில் இவர்களின் குரல்கள் தாம் காதலர்களுக்கு தாலாட்டு(ம்) இன்ன பிறவும் ...
அந்த நாள் ஞாபகம் ...
வருகைக்கு நன்றி மாதேவி
அந்த இனிமையை ரசிக்கக்கூட அம்மண்ணின் மைந்தர்களை விட மாட்டேன் என்கிறார்கள். கொடுமை.//
எனக்கும் அதில் வருத்தம் தான். அங்கேயிருந்த வரை எனக்கு எப்போதும் சக்தி ரேடியோ, சூரியன் எஃப் எம் தான். சக்தி டீவி நிகழ்ச்சிகளும் பிடிக்கும். இப்ப இல்லையாம் வருத்தம் தான்
வருகைக்கும் டபுள் ரிப்பீட்டுக்கும் நன்றி பரிசலாரே
அந்த நாள் ஞாபகம் ...//
நெஞ்சிலே வந்ததே....
இப்படி சிச்சுவேஷனுக்கு தகுந்த பாட்டை எடுத்து விட வைத்ததில் வானொலியின் பங்கு அதிகம்.
வருகைக்கு நன்றி ஜமால்
//இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத் ஸ்தாபனம்- இலங்கை வானொலி
இப்படி சொன்னதும் ஞாபகத்துல ஓடுறது அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது,
கே.எஸ் ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சதானந்தா...
வானொலி பிரியையான எனக்கு இவர்கள் குரல்கள் ரொம்ப
பிடிக்கும்.//
எனக்கும் எனக்கும்.
Post a Comment