Thursday, February 11, 2010

வடக்கு 4ஆம் வீதி ராக்கெட்டு!!!

என்னம்மா, தாத்தா நல்லாயிருக்காங்களா?
ரத்னா டீச்சர் பொண்ணுல்ல நீ?
ரமணி சார் மகப்பா இது? இப்படி என்னை பாக்கறவங்க எல்லாம்
அடையாளம் தெரிஞ்சிக்க கூடிய அளவுல கொஞ்சம் ஊர்ல
எல்லோருக்கும் தெரிஞ்ச குடும்பத்து பொண்ணு நான் இது தான்
என் + இதுவே என் -ம் கூட. :)

அவங்களுக்கு என்னை யாரும்னு தெரியும்! ஆனா எனக்குத்தான்
அவங்களைத் தெரியாது என்பது போல என் நிலமை.

வடக்கு 4ல் சொந்த வீடு வாங்கிகிட்டு போனதும் அம்மாவுக்கு
வயித்தல புளிகரைச்ச மாதிரி ஆகிடுச்சு. வடக்கு 4 ஆம்வீதில
பொண்ணுங்க ஓடிப்போயிடுவாங்க. ஜாக்கிரதைன்னு அம்மாவுக்கு
யாரோ ஓதிவிட எனக்கு பிடிச்சிச்சு சனி.

,” நம்ம வீட்டைப்பத்தி எல்லோருக்கும் தெரியும்.
வீதியில இறங்கினா ரத்னா குனிஞ்ச தல நிமிராம போவான்னு
உங்க அம்மம்மாவுக்கு நல்ல பேரு வாங்கித்தந்திருக்கேன்.
என் பெயரை கெடுக்காம இருக்கணும்.”!! அப்படின்னு சொல்ல
””ரோட்ல தல குனிஞ்சு போனா எதிர்ல யாருவர்றாங்கன்னு தெரியாம
முட்டிகிட்டேன்னா கஷ்டமாச்சேன்னு””!! கேக்க அம்மா குனிய வெச்சு
தனியாவர்த்தனம் முதுகுல வாசிச்சாங்க.

”பாரு தல குனிஞ்சு போய்தான் நான் நல்லவன்னு காட்டனும்னு
அவசியமில்லை. நானும் தல நிமிர்ந்து தான் நடப்பேன். உன்னையும்
அப்பாவையும் தலகுனிய வைக்க மாட்டேன்னு!” வீர சபதம் போட்டேன்.


இந்த மாதிரி நேரத்துல ஆபத்பாந்தவனா வந்து காப்பத்துவது
என் சின்ன மாமாதான். பேரு கணேஷ் குமார். “ரோட்ல
யாராவது பிரச்சனை செஞ்சா வந்து என்கிட்ட சொல்லு நான்
பாத்துக்கறேன்னு!” சொல்லவும் அம்மாவுக்கு நிம்மதி.

ஆனா எனக்கு டபுள் 7 1/2 :(( ஒரு தடவை யாரோ என்னை
கிண்டல் செய்ய நான் கண்டுக்காம வீட்டுக்கு வந்துட்டேன்.அடுத்த நாளே
மாமா வீட்டில் ஆஜர்.சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுட்டு நிறுத்திட்டு வந்த மாமா,
“மாணிக்கம் சார் வீட்டு பக்கம் உன்னை ஒருத்தன் கிண்டல்
செஞ்சானாமே!” ஏன் எனக்குத் தகவல் சொல்லலைன்னு கேக்க
தெரியாதே மாமான்னு சொன்னேன். மாணிக்கம் சார் பையன் சொல்லித்தான்
எனக்குத் தெரியும், உன் மேல ஒரு கண் வெச்சுக்கறதா சொல்லியிருக்கான்னு”
சொன்னாங்க.

கொஞ்ச நாள் கழிச்சு வாசவில டைப் அடிச்சிட்டு வர்றப்ப ஒரு பையன்
சைக்கிளை கிட்ட வர ஓட்டிகிட்டு வந்து ஏதோ சொல்ல பயந்து
ஓடினேன், ஓடினேன். அப்பா ஆபீஸ்(அதான் மெயின் ரோடுல கம்பீரமா
நிக்குதே!) அதுக்குள்ள நுழைஞ்சு கொஞ்ச நேரம் கழிச்சு 2 சந்து தள்ளியிருக்கும்
வீட்டுக்கு ஓடித்தான் நின்னேன். வாசலிலேயே மாமா உக்காந்திருக்கணுமா?
மேட்டரை மாமாகிட்ட சொல்ல உடனே சைக்கிளில் போய் தன் கூட்டாளிகளுக்குச்
சொல்லி பையனை விசாரிக்கச் சொல்லியிருக்காரு.

அடுத்த நாள்”என்ன ஆளை வெச்சு மிரட்டறீங்களான்னு” என்ன அந்த
பையன் மிரட்ட பயந்து போய் வாசவிலேயே நுழைஞ்சிடலாமான்னு
பாத்துகிட்டு இருந்த நேரம் மாணிக்கம் சார் பையன் இல்ல அந்த அண்ணா
தன் ஆளுங்களோட வந்து பையனை அள்ளிக்கிட்டு போனாங்க. 10 நிமிஷத்துல
வந்து மன்னிப்பு கேட்டதோட இல்லாம அந்த ஏரியா பசங்களுக்கே
நம்ம கிட்ட வாலாட்டனும்ங்கற நினைப்பு இல்லாம போயிருக்கணும்.


வீட்டுக்கு வந்து மாமாக்கும் அம்மாவுக்கு விட்டேன் பாட்டு. உங்க பேச்சை
கேட்டு பிரச்சனை ஆகிடுச்சு.இனிஎன்னை பாதுகாக்க ஆள் வேண்டாம். நானே பாத்துக்குவேன். உங்க கிட்ட வந்து சொல்லமாட்டேன்னு சொல்லி வாயடைச்சேன்.

எங்க ஊர்ல வீடுங்களில் வராண்டா வெச்சுத்தான் வீடுகள் இருக்கும். திண்ணை,
அதுக்கப்புறம் வராண்டா, ஹால், சமையல்கட்டுன்னு ஒரே மாதிரி இருக்கும்.
சில வீடுகளில் முற்றம் இருக்கும். தினமும் காலேல 3 மணிக்கு பால் கொண்டுவந்து
மோகனம்மா தூக்கத்தை கெடுக்கறாங்க(கொடுக்கச் சொன்னது அவ்வா) சின்ன
பொண்ணு வீட்டுல இருக்க என் தூக்கம் தான் கெடணுமான்னு அம்மா புலம்ப
ஹால்லேர்ந்து எந்திரிச்சி போக கஷ்டமா இருக்கு, நான் வரண்டாவிலேயே
கட்டில் போட்டு படுத்துக்கறேன்னு தைரியமா தனியா படுக்க ஆரம்பிச்சேன்.

என்னன்ன்வோ பயமுறுத்தி பாத்தாங்க. அசரலை என் இடம் இதான்னு
என் டேபிளையும் கொண்டுவந்து அங்கே பக்கத்துல போட்டுகிட்டு
எனக்குன்னு இடம் செட் செஞ்சுகிட்டேன்.

நான் இங்கிலீஷ் மீடியம். வீதியில சில பசங்க என் வகுப்புத்தான் ஆனாலும்
தமிழ் மீடியம். நைட் ஸ்டடிக்கு எங்க வீட்டு வராண்டாவில எல்லோரும்
கூடி படிப்போம். 1 மணி ரெண்டு மணி வரைக்கும் கூட படிச்சு பக்கத்து
வீதி பசங்களுக்கு வடக்கு 4ல பசங்க படிக்குதுங்க, இங்க பாரு எல்லாம்
தூங்குதுங்க உருப்படற வழியா இது!! அப்படின்னுதிட்டி வாங்கி கொடுத்திருக்கோம்.
:)) எங்களால ஆன சின்ன உபயம்.


கரெக்டா யுகாதி சமயத்துல வடக்கு 3 மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
நடக்கும். ரோட்டையே அடைச்சு கோலம் போடறது. மஞ்ச தண்ணி
ஊத்திடுவாங்களோன்னு பயந்து வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தது.
எல்லாமும் சுவாரசியம் தான்.

+1 படிக்கும்போது தான் வீட்டின் முதல் வாகன் உரிமையாளர் ஆனேன்.
அதான் அதைப்பத்தி 4 கொசுவத்தி சுத்தினேனே. சைக்கிளில் சல்லுன்னு
போய் வருவது ரொம்ப பிடிக்கும். இதனால என் பேரு
வடக்கு 4ஆம் வீதி ராக்கெட்டு!!!

உம்பொண்ணு ஒரு ஆள் தாய்யான், சல்லுன்னு சூப்பரா சைக்கிள்ல போகுது!
என்ன வேகம்? அப்படின்னு அப்பா ஆபீஸ்ல பாராட்டு.

நானும் என் ஃப்ரெண்ட் சுபத்ராவும் கடைவீதிக்கு போனது, போவோமா
ஊர்கோலம்னு பாடிகிட்டே திருவப்பூர் போய் மாரியம்மனை தரிசிச்சிட்டு
சின்ன மாரியம்மனா சாமி ஆடும் என் இன்னொரு ஃப்ரெண்ட் மங்கை
வீட்டுக்கு போயிட்டு அவங்கம்மா கையால காரக்குழம்பு சாப்பிட்டதுன்னு
ஜாலிதான்.

பள்ளத்தூர் சீதாலட்சுமி காலேஜ்ல தான் படிப்பு. தினமும் காலை 8 மணிக்கு
வீட்டிலிருந்து கிளம்பி 10 நிமிஷத்துல பஸ்ஸ்டாண்ட் போய் சைக்கிளை
ஸ்டாண்டில் விட்டுட்டு 8.20 பஸ் பிடிச்சு 9.30க்கு காலேஜ்ல இருப்பேன்.
சாயந்திரம் 4 மணிக்கு காலேஜ் முடிய 4.15 பஸ் பிடிச்சு 5.15 புதுக்கோட்டை,
5.25 வீட்டில். என்னை பார்த்து கடிகாரத்தை சரி பார்த்துக்கலாம்.
இதில் எந்த மாறுதலும் இருந்ததில்லை. எங்க போனாலும் வீட்டுல சொல்லிட்டு
போவேன் அதே மாதிரி இத்தனை மணிக்கு திரும்ப வருவேன்னு
சொன்னமாதிரி இருப்பேன் கூட. இது என் மேல அம்மாவுக்கு நம்பிக்கையை
கொடுத்துச்சு. ஆரம்பத்துல பயப்பட்டவங்க அப்புறம் ரொம்ப சப்போர்ட்டா
இருந்தாங்க.


என் உயிர்த்தோழியுடன் தான் பொழுதுகள் போகும்.

நாடக விழா நாடகங்கள், விவதபாரதி, இலங்கை வானொலி, இவை இல்லாத பதின்ம வயதா? அம்மா அடித்தால் அப்பா திட்டினால் நான் கரைந்தது
கானக்கந்தர்வன் குரலில்.அவர் குரல் என்னை தாலாட்டும்.

இளையராஜாவின் பாடல்கள், அப்புறம் ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள்
கேட்காத நாளே இல்லை.



அப்போதெல்லாம் எனக்கு பாம்பு மாதிரி மிக நீண்ட கூந்தல். அக்கா உன் முடி ரொம்ப
ஸ்ட்ராங்க், அதை வெச்சு பட்டம் விடலாம் என்பான் தம்பி:)

என் முடி மேல் எனக்கு கர்வம் ஜாஸ்தி( என் கை ஒடிந்த பொழுது
அதையும் வெட்ட நேர்ந்தது) அம்மாவும் வேலைக்கு போக
ஒரே தம்பியை வளர்த்தது நான் தான். அவ்வா கிட்ட சண்டை போடுவான்.
என் கையால சோறு உன்பது அவனுக்கு பிடிக்கும். மும்பை போகும் வரை அவனுக்கு வாராவாரம் எண்ணெய் தேய்த்து நான் தான் குளிப்பாட்டுவேன்.

எனக்கும் தம்பிக்கு 8 வருட வித்யாசம் என்பதால் என் பதின்மவயதில்
அவனை தாயாய் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருந்தது.(இல்லாட்டி
டின் கட்டிடுவாங்க)

ஆசைப்பட்ட படிப்பை இழந்தது இந்த பதின்மவயதில்தான்.
19 வயசுல இந்திராகாந்தி மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல டீச்சர் வேலை.
என் பதிவுகளில் பல இடங்களில் கொசுவத்தில் சுத்தியிருப்பேன்.
எல்லாம் பதின்ம வயதுகளில் நிகழ்ந்தது தான். 20ஆவது வயதில்
புதுகைக்கு டாடா சொல்லிவிட்டு மும்பை போனவள் 2 வருடங்களில்
அம்மம்மா பாத்த மாப்பிள்ளையுடன் திருமணம் முடித்து கிளம்பினேன்.


கலாக்கா மாதிரி இருக்கணும்னு வடக்கு 4 வீதி பிள்ளைகளுக்கு
சொல்லும் அளவுக்கு பேரு வீதியில.

தொடர் பதிவுக்கு அழைச்சது அமைதிச்சாரல்.

நான் அழைப்பது
ஆயில்யன் பாஸ்
அநன்யா மஹாதேவன்

ராமலக்‌ஷ்மி

31 comments:

ஆயில்யன் said...

//திருவப்பூர் போய் மாரியம்மனை//

லீவுக்கு புதுக்கோட்டை போறப்ப நானும் அந்த கோவிலுக்கு ஞாயித்துகிழமை போயிட்டு வருவேன்.- நிறைய கூட்டமா இருக்கும் !

ஆயில்யன் said...

வடக்கு 4 ஆம் வீதியை பொறுத்தவரைக்கும் உங்க காலத்தில, அந்த மாமா செம டெரர்தான் போங்க ! - :))))

pudugaithendral said...

வாங்க பாஸ்,

பதிவு எப்ப போடப்போறீங்கன்னு மீ த வெயிட்டிங்

pudugaithendral said...

வடக்கு 4 மட்டுமல்ல புதுகைக்கே டெர்ரர்தான். மாமா திருச்சி போய் கராத்தே கத்துகிட்டு வந்து எங்கம்மா வேலை பாத்த ஸ்கூல்ல பசங்களுக்கு சொல்லிக்கொடுப்பாங்க.

தியேட்டர்களில் ஸ்லைடா அவங்க பேரு போட்டு விளம்பரம் வரும். அதுக்கப்புறம் எல்லோரும் கப்சிப் தான்

:)))

Paleo God said...

””ரோட்ல தல குனிஞ்சு போனா எதிர்ல யாருவர்றாங்கன்னு தெரியாம
முட்டிகிட்டேன்னா கஷ்டமாச்சேன்னு””!! கேக்க அம்மா குனிய வெச்சு
தனியாவர்த்தனம் முதுகுல வாசிச்சாங்க.//

:))))))

அருமையான நினைவுகள்..:))

ஹுஸைனம்மா said...

கொசுவத்தி சுத்தியாச்சா? குட்.

//புதுகைக்கே டெர்ரர்தான் மாமா//

கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும்போல மருமகள்கிட்டயும்!!

ராமலக்ஷ்மி said...

அழகான பகிர்வு. என்னையும் மாட்டி விட்டாச்சா:))? முடியும்போது எழுத முயற்சிக்கிறேன் தென்றல்:)!

அன்புடன் அருணா said...

நல்லா விட்டுருக்கீங்க ராக்கெட்!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஷங்கர்

pudugaithendral said...

கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும்போல மருமகள்கிட்டயும்//

ஆமாம். நல்லவங்களுக்கு நல்லவள். மத்தவங்களுக்கு பத்ரகாளிதான். அம்மம்மா இப்படித்தான் அடிக்கடி என்னை பாராட்டுவாங்க.:)))

pudugaithendral said...

முடியும்போது எழுத முயற்சிக்கிறேன் தென்றல்//

ஓகே ராமலக்‌ஷ்மி.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அருணா

மாதேவி said...

ரொக்கெட்டு ! :) நல்லா இருக்கே.

Ananya Mahadevan said...

சூப்பர் கொசுவத்தி. என்னை அழைச்சிருக்கீங்களே? நான் ரொம்ப மொக்கை போடுவேனே. பரவாயில்லையா?(வடிவேலு ஸ்டைல்)

Thamira said...

அழகான பதிவு.

என் பதின்மவயதில்
அவனை தாயாய் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருந்தது.//

பெண்களுக்கே உரித்தான வரம். பொறாமை கொள்ளச்செய்யும் வரிகள்.

நன்றி ஃபிரெண்ட்.!

எம்.எம்.அப்துல்லா said...

//கொஞ்சம் ஊர்ல
எல்லோருக்கும் தெரிஞ்ச குடும்பத்து பொண்ணு //

என்னாது...கொஞ்சம் தெரிஞ்ச குடும்பமா?? ஊருல உங்க வீட்டை தெரியாதவங்க பாவம் பண்ணுனவங்க.



//என் சின்ன மாமாதான். பேரு கணேஷ் குமார். //

அக்கா கராத்தே கிளாஸ் எடுப்பாரே அவர் எந்த மாமா?? எனக்கு அவரைத்தான் தெரியும்.

Sanjai Gandhi said...

:)

அண்ணாமலையான் said...

அட இங்க என்னன்னமோ நடந்துக்கிட்டிருக்கு?

சாந்தி மாரியப்பன் said...

ராக்கெட் ஒரே டமால், டுமீல்தான் தென்றல்.

ஆமா.. நீங்க கராத்தே கத்துக்கலையா.இன்னும் டெரரா இருந்திருக்கலாமே!! :-)))

அழைப்பை ஏத்துகிட்டதுக்கு நன்றிப்பா.

settaikkaran said...

நல்ல பகிர்வு! பழைய நினைவுகளா இருந்தாலும் சுவாரசியமா எழுதியிருக்கீங்க! அப்புறம், உங்க மாமா மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருந்தா போதும், எங்க பொழப்புல மண்.....! :-)))

pudugaithendral said...

நன்றி மாதவி

pudugaithendral said...

நான் ரொம்ப மொக்கை போடுவேனே. பரவாயில்லையா?(வடிவேலு ஸ்டைல்)//

விதி வலியதுன்னா வேற என்ன செய்ய முடியும். போடுங்க அதையும் படிக்கறோம். வருகைக்கு நன்றி அநன்யா

pudugaithendral said...

பெண்களுக்கே உரித்தான வரம். பொறாமை கொள்ளச்செய்யும் வரிகள்.

ஆமாம், இப்போதும் எனக்கும் அயித்தானுக்கும் தம்பி கார்த்திதான் மூத்த மகன்.


வருகைக்கும் நன்றி ஃப்ரெண்ட்.

pudugaithendral said...

என்னாது...கொஞ்சம் தெரிஞ்ச குடும்பமா?? ஊருல உங்க வீட்டை தெரியாதவங்க பாவம் பண்ணுனவங்க.//

அது அப்ப. இப்ப அப்பாவும் ரிடையர் ஆகியாச்சு, அம்மாவும் வீ ஆர் எஸ் வாங்கிட்டாங்க. தாத்தா மும்பைக்கு போயி 20 வருஷம் ஆச்சு. இப்ப ரொம்ப குறைவான அந்தக்கால ஆளுங்களுக்குத்தான் எங்க குடும்பத்தை தெரியும் அப்துல்லா.


//அக்கா கராத்தே கிளாஸ் எடுப்பாரே அவர் எந்த மாமா?? எனக்கு அவரைத்தான் தெரியும்.//

அவர் தான் குமார் மாமா,(மாரியப்பன் மார்ஷியல் ஆர்ட்ஸ்)இப்ப மும்பைல இருக்காங்க.

இன்னொரு சேதி தெரியுமா அம்பிகா பிரசாத் மாமாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம்.

pudugaithendral said...

ஆஹா சஞ்சய் தம்பியா,

வாங்க வாங்க

pudugaithendral said...

அட இங்க என்னன்னமோ நடந்துக்கிட்டிருக்கு?//

ஹலோ நடந்து முடிஞ்சிருச்சு. இப்ப என் மகனே பதின்ம வயசுல அடி எடுத்து வெச்சிட்டாரு. :))

pudugaithendral said...

ஆமா.. நீங்க கராத்தே கத்துக்கலையா.இன்னும் டெரரா இருந்திருக்கலாமே!! :-)))//

அந்த கூத்தும் கொஞ்ச நாள் நடந்துச்சு. மும்பையில் இருக்கும்போது சின்னமாமா சொல்லிக்கொடுத்தாங்க. கல்யாணம் நிச்சயம் ஆனதும் அயித்தானை காப்பாத்த அம்மம்மா கராத்தே கத்துக்க வேணாம்னு சொல்லிட்டாங்க. :)

(கராத்தே கத்துகிட்டது அப்பப்போ உதவியா இருக்கு. என் தம்பி அடிக்கடி சொல்லும் டயலாம்,”பாவம்கா பாவா, உன் கிட்ட மாட்டிகிட்டாரு” ) :))))

pudugaithendral said...

அப்புறம், உங்க மாமா மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருந்தா போதும், எங்க பொழப்புல மண்.....! //

வாங்க சேட்டைத் தம்பி,

என்ன செய்ய? எங்க ஊரு சின்ன ஊரு பாருங்க அதனால இதெல்லாம் சாத்தியம். சென்னை மாதிரி பெரிய நகரங்களில் முடியாதுல்ல.

Pandian R said...

ithu oru alambal pathivu. vadakku 4 pasangalukku simma soppanamaai thigazhndha thanga thalaivi avarkalukku . . . aneha mariyathaigal. :)

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஃபண்டூ :))

Ananya Mahadevan said...

யக்கோவ் தொடர் பதிவு போட்டாச்சு.. வந்து போணி பண்ணுங்க - நானும் பாலாமணித்துவமும்
http://ananyathinks.blogspot.com/2010/02/blog-post_16.html