Tuesday, February 16, 2010

இது மட்டும் நடக்கவே நடக்காது!!!!

இது மட்டும் நடக்கவே நடக்காது!! நடந்தா எம்புட்டு நல்லாயிருக்கும்னு
எல்லா தங்கமணிகளும் யோசிச்சு பாத்தா..... சுகமோ சுகம்.

ம்ம்ம் கனவுல மட்டும்தான் இது சாத்தியம் அப்படின்னு பலரும்
புலம்பிக்கினு இருக்கும் ஒரு நிறைவேறாத ஆசைன்னு கூட வெச்சுக்கலாம்.
என்ன பீடிகை பலமா இருக்கேன்னு பாக்கறீங்களா?? தங்கமணிகளின்
அல்ப ஆசைதான். ஆனாலும் இந்த அல்ப ஆசை நடக்கவே நடக்காது.

ஆபீஸ்ல வேலை பாக்கறவங்களுக்கு கூட வாரத்துக்கு ஒரு நாள் லீவு
கிடைக்கும். தீபாவளி,கிறிஸ்துமஸ்,இப்படி பண்டிகை நாள், முக்கியமான
அரசு விடுமுறைகள், சனி, ஞாயிறுன்னு வேலை பார்க்கறவங்களுக்கு
ஒரு ஓய்வு உண்டு. ஆனா ஓய்வே இல்லாத வேலை தங்கமணிகளின்
அடுப்படி வேலை.மத்தவங்களுக்கு பண்டிகைநாள்னா லீவு, ஆனா அடுப்படியில் அன்னைக்குத்தான்
அதிக வேலை. சில வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைதான் குடும்பத்தினர்
அனைவரும் சேர்ந்து சாப்பிடலாம்னு டபுள், ட்ரிபிள் வேலை நடக்கும்.
விதம் விதமா சமையல் நடக்கும். திங்கள்கிழமை அதிகாலை எழுந்திருக்ககூட
முடியாமல் அந்த தங்க்ஸ் அவதிப்படுவாங்க!!!


எந்த ஊருக்கு போனாலும் போயிட்டு வந்ததும் பெட்டியை அப்படியே
போட்டுட்டு தங்க்ஸ் உடனடியா ஓடுவது கிச்சனுக்குத்தான். பால் காய்ச்சி
காபி போட்டு, டிபன்னு உடனடியா ஓட ஆரம்பிக்கணும். ”என்ன இருந்தாலும்
நீ போடும் காபி போல வராதுப்பான்னு”! ஐஸ் வெச்சே வேலை வாங்கும்
டெக்னிக் ரங்குகளுக்கு மட்டுமே சாத்தியம்.


லேபர் சட்டப்படி ஞாயிற்றுக்கிழமை விடுப்பு கட்டாயம். ஞாயிற்றுக்கிழமை
வேலை பார்த்தால் வார நாட்களில் அவர் விரும்பும் நாளில் ஓய்வு
எடுத்துக்கணும். தங்கமணிக்கு லேபர் சட்டம் கூட ஒண்ணும் செய்ய
முடியாது.


வீட்டுவேலை செய்யறவங்க கூட வாரத்துக்கு ஒருநாள் லீவு எடுத்துக்கணும்னு
சட்டம் வெளிநாடுகளில் இருக்கு.(நம்ம ஊர்ல சொல்லமா அவங்க அடிக்கற
டும்மாக்கள் 10 நாளாவது ஆகிடுது என்பதால் கவலை இல்லை) தங்கமணிகளுக்கு
எந்த சட்டமும் இல்லை.

மீறி எந்த தங்க்ஸாவது ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்,
வெளியே சாப்பிடலாம்னு சொன்னா”என்ன ஞாயிற்றுக்கிழமை சமைக்காதோர்
சங்கத்துல மெம்பராகிட்டயான்னு?” கேக்கறாங்க. இவங்க மட்டும்
ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகாதோர் சங்கத்து உறுப்பினரா இருக்கலாம்!!

இன்ஷூயுரன்ஸ் கம்பெனி ஹோம் மேக்கருக்கெல்லாம் பாலிஸி தரமாட்டாங்க.
அவங்க வீட்டுக்காரர் பணம் கட்டுவதாகச் சொல்லி கையெழுத்து போட்டுக்கொடுத்தா
வரிச்சலுகைக்காக போனா போகுதுன்னு பாலிசி கிடைக்கும். சமீபத்துல
ஒரு கோர்ட் வழக்குல சொன்ன தீர்ப்பு சூப்பர் தீர்ப்பு.

ஹோம் மேக்கர்கள் செய்யும் வேலைகளை எழுதி அதுக்குண்டான
பணத்தை அவர்களுக்கு வழங்குவதாக கணக்குப்போட்டு பார்த்தால்
குறைந்தது 20,000 வரை மாதச் சம்பளம் வரும். அவருக்கு ஏதும்
பாதிப்பு ஏற்பட்டால் மொத்த குடும்பமும் பாதிக்கப்படும் என்பதால்
ஹோம்மேக்கர்களுக்கு பாலிசி கொடுக்கலாம்னு தீர்ப்பு.

இதைப் படிச்சப்போ Adivaram Adavallaku Selavu (ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கு
விடுமுறை)
அப்படின்னு
ஒரு தெலுங்கு சினிமா ஞாபகம் வந்துச்சு. இயக்கம் தாசரி நாராயண ராவ். பெண்களின்
செண்டிமெண்ட் அள்ளுவதில் இவர் தெலுங்கில் விசு. தனது தங்கமணிகளை
டைவர்ஸ் செஞ்சிடுவதா 4 ரங்குகள் கோர்ட்ல கேஸ் போடுவாங்க. எந்த
வக்கீலும் அந்த பெண்களுக்கு சாதகமாக வாதாட பொழுது பிரகாஷ் ராஜ்
அவங்க தரப்புல வந்து பேசும் அந்த கிளைமாக்ஸ் சிம்பிளி சூப்பர்ப்.

”இத்தனை வருடம் உங்கள் மனைவி உங்களுக்கு செய்திருக்கும் வேலைகளுக்கு
வருடத்திற்கு 1.50 லட்சம் வீதம் திருமணமாகி எத்தனை ஆண்டுகள்
ஆகியிருக்கிறதோ கணக்கு போட்டு அத்தனை தொகையை நஷ்ட ஈடாக
கொடுத்தால் விவாகரத்து சாத்தியம்னு” பிரகாஷ் ராஜ் பேசும்போது
ஒவ்வொரு ரங்க்ஸும் தலை சுத்தி மயக்கம் போட்டிடுவாங்க.


எந்த தங்கமணியும் தன் குடும்பத்துக்காக தான் ஓடாக உழைப்பது.
ரங்கு தனக்காகவும், பிள்ளைகளுக்காகவும் கஷ்டபடுகிறாரேன்னு தான்
தன் கஷ்டத்தையும் மறைச்சுகிட்டு சேவகம் செய்யறாங்க. கணக்கு
போட்டு பாத்தா தெரியும். ஒவ்வொரு வேலைக்கு இவ்வளவு பணம்
வேலைக்காரம்மாவுக்கு கொடுத்தால் எவ்வளவு ஆகும்னு யோசிச்சு பார்த்தால்
மலைப்பா இருக்கும்.

தங்கமணிகளுக்கு வாரத்துக்கு ஒருநாளாவது ரெஸ்ட் கொடுத்தா அவங்க
உடலும்,மனசும் வாழ்த்தும். ரங்குகள் கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதை
தங்க்ஸ்கள் புரிஞ்சி நடந்துக்கற மாதிரி ரங்குகளும் தங்க்ஸ்களை
புரிஞ்சிப்பது ரொம்ப முக்கியம். அந்தக்கால மாதிரி கைல அரைச்சு,
திரிச்சா சமையல் நடக்குதுன்னு வியாக்கியானம் பேசாம இருந்தா
நல்லது.

தங்கமணிகளின் அல்ப ஆசையான ஞாயிற்றுக்கிழமை ஒருநேரமாவது
ஓய்வு என்பது நடக்குமா???? வாரத்துக்கு ஒரு நாள் வேண்டாம்
ஒரு நேரம்.... ஞாயிற்றுக்கிழமை தங்கமணி எழுந்திருக்குமுன்
காபி போட்டு கொடுத்துத்தான் பாருங்க ரங்கமணிகளே!!!

இதைப்பத்தி நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சொல்லிகிட்டே போகலாம்.
அப்புறம் ஓவர்டோஸ் ஆகிடும். அதனால் மீ த எஸ்கேப்பு.


37 comments:

அநன்யா மஹாதேவன் said...

ஆஹா ஆஹா, ஆஹாஹா, என்ன ஒரு பதிவு, இத இத இதத்தான் எதிர்ப்பார்த்தேன். வாழ்க தாசரி, நம்ம கஷ்டத்தை புரிஞ்சுண்ட மஹானுபாவன்.. இதெல்லாம் எங்க நடக்கபோகுது? இருந்தாலும் நல்ல தகவல்களுக்கு நன்றிகள்!

அநன்யா மஹாதேவன் said...

என்னோட ஃப்ரெண்டு நாஸியான்னு பேரு, பாவம் ஷார்ஜாவுல இருந்து ஜபலாலி வேலைக்கு வருவா, ரொம்ப தூரம், வாராவாரம் அவளுக்கு விருந்தாளிங்க, சமயல், சுத்தம் பண்ற வேலை தான். கொஞ்சம் கூட ரெஸ்ட் லேது. அவளைப்பார்த்தா பாவமா இருக்கும். ஏனோ இந்தப்பதிவைப்படிச்சுட்டு அவள் நினைவு தான் வருது.

நட்புடன் ஜமால் said...

மத்தவங்களுக்கு பண்டிகைநாள்னா லீவு, ஆனா அடுப்படியில் அன்னைக்குத்தான்
அதிக வேலை]]

உண்மையிலேயே நான் ரொம்ப வருத்தப்படும் விடயம் இது.

வழி தான் தெரியலை இன்னும் ...

புதுகைத் தென்றல் said...

வாங்க அநன்யா,


தாசரியோட பலப்படங்கள் பாடம் கத்துக்கொடுக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சேட்டைக்காரன் said...

ஞாயிற்றுக்கிழமையென்னங்க, வாரம் முழுக்க நானே சமையல் பண்ணி, உட்கார வைச்சு சாப்பாடு பரிமாற ரெடி! மல்லிகா பத்ரிநாத் புஸ்தகம் அல்லாத்தையும் வாங்கி மனப்பாடம் பண்ண ரெடி! ஆனா, என் போட்டோவைப் பார்த்துட்டு யாருமே கல்யாணம் பண்ணிக்க ரெடியா இல்லையே? :-((((((((

துளசி கோபால் said...

லீவு யாருப்பா கொடுக்கறாங்க?

நாமே தான் எடுத்துக்கணும்.

ஐஸுக்கு மசியாதேன்னு மனசுக்குள்ளே உருப்போட்டுக்கிட்டே இருக்கணும்ப்பா.

ஜிஞ்ஜூ அழகாத் தூங்கறான்.

ம்யாவ்............

அமைதிச்சாரல் said...

//தங்கமணிகளின்
அல்ப ஆசைதான். ஆனாலும் இந்த அல்ப ஆசை நடக்கவே நடக்காது.//

இதுக்கு மேல என்னத்தை சொல்றது!!!!
மீறி,ஓய்வு கிடைக்கணும்ன்னா டாக்டர்,'இவங்க கடின வேலை செய்யக்கூடாது'ன்னு சிபாரிசு செய்ற அளவுக்கு உடம்பு முடியாதவங்களா இருக்கணும். :-))

ஆனா, சில ரங்க்ஸ் தங்க்ஸ்களை புரிஞ்சு நடப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.

புதுகைத் தென்றல் said...

வழி தான் தெரியலை இன்னும்//

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்.

எங்க வூட்டுல நடப்பது இன்னா தெரியுமா ஜமால்,

பண்டிகை பெருநாட்களின் போது அடுப்படி வேலை அதிகம் என்பதால் துணியை மிஷினில் போடுதல், காயப்போடுதல் போன்றவற்றை அயித்தானும் பிள்ளைகளும் பாத்துப்பாங்க. மதியம் டீ போடும்பொழுதே 4வரும் சேர்ந்து பாத்திரங்களை எடுத்து கவுத்துவிடுவோம்.

வேலைக்காரம் டும்மான்னா ஆளுக்கொரு வேலைன்னு பகிர்தல்தான்.

சில பெண்மணிக்கு இந்த கொடுப்பினை இல்லை என்பதனால் தான் பதிவு

புதுகைத் தென்றல் said...

என் போட்டோவைப் பார்த்துட்டு யாருமே கல்யாணம் பண்ணிக்க ரெடியா இல்லையே? //

வருத்தம்தான். நான் வேனா பொண்ணு பாத்துதரட்டா? ஏதோ என்னாலான உதவி(1 மாசம் ஹஸ்பண்டாலஜி ட்ரெயினிங் உங்க வருங்காலத்துக்கு இலவசம்)

:))

புதுகைத் தென்றல் said...

நாமே தான் எடுத்துக்கணும்.//

அந்த உரிமை கூட இருக்குதா துளசியக்கா. நாமே லீவு எடுத்துக்கிட்டா என் பொண்டாட்டி சமைப்பதே இல்லை, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் மனுஷன் வீட்டுல இருக்கறது அப்படி இப்படின்னு திட்டிகிட்டு, ஞாயிற்றுக்கிழமை சமைக்காதோர் சங்கம்னு கிண்டலடிச்சுகிட்டு இருக்காங்க சிலர்.

ஐஸுக்கு மசியாதேன்னு மனசுக்குள்ளே உருப்போட்டுக்கிட்டே இருக்கணும்ப்பா.//

ஆமாம் மிக முக்கியமான பாடம். ஆரம்பத்துல விட்டுட்டா பின்னாடி தும்பை விட்டு வாலைப்பிடிச்ச கதைதான். :))
வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

'இவங்க கடின வேலை செய்யக்கூடாது'ன்னு சிபாரிசு செய்ற அளவுக்கு உடம்பு முடியாதவங்களா இருக்கணும்.//

அப்படி முடியாம போனாத்தான் ரெஸ்ட் எடுக்கணும். இல்லாட்டி மாங்கு மாங்குன்னு வேலை நான்ஸ்டாப்பா செஞ்சுகிட்டே இருக்கணும்னு நீங்களே ஏத்திகொடுப்பீங்க போலிருக்கே!! நடுவுல ஒரு ப்ரேக் வேணாமா??//சில //ரங்க்ஸ் தங்க்ஸ்களை புரிஞ்சு நடப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.-

சில என்பதை ரொம்ப பெரிசாக்கி வெச்சு படிக்கணும். புரிதல் ரொம்ப அவசியம். புரியாத ரங்குகளுக்குத்தான் இந்தப் பதிவு.

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

நாஸியா said...

வேலைக்கு போற பெண்கள் எப்படி சமாளிக்கிறாங்களோ...அவங்களும் இதுல இருந்து தப்பிக்கிறதில்லைன்னு நினைக்கிறேன்..

இப்பதைக்கு நாங்க ரெண்டு பேர் தான் என்கிறதால ஒண்ணும் தெரியல.. ஆனாலும் என் கணவர் எனக்கு உதவி செய்வார். இறைவனின் அருளால். இன்ஷா அல்லாஹ் பிள்ளைங்கல்லாம் வந்த பிறகுதான் நானும் இதை அனுபவிக்கனும்.. ஹிஹி..

ஆனா எங்கும்மாவை அடிக்கடி நினைசுப்பேன்.. அவங்களுக்கு ஏது லீவு? எங்க பாட்டி வீட்டுக்கு போனாலுமே அவங்க வேலை செய்வாங்க.. கல்யாணம் முடிய முன்ன டம்ளர கூட எடுத்து வைக்க மாட்டேன்.. இப்ப வருத்தமா இருக்கு.. இன்ஷா அல்லாஹ் ஊருக்கு போய் ம்மாக்கு ரெஸ்ட் குடுத்து சமைச்சு போடனும்

புதுகைத் தென்றல் said...

அவங்களும் இதுல இருந்து தப்பிக்கிறதில்லைன்னு நினைக்கிறேன்..//

வேலைக்குப் போகும் பெண் தானும் சம்பாதிப்பதால் ஹோட்டலில் ஆர்டர் செஞ்சாலும் ரங்க்ஸ்கள் வாய்பேசமுடியாமல் முனகிகிட்டே சாப்பிடுவாங்க. வேலைக்குப் போகும் பெண்களுக்கு கஷ்டமே இல்லைன்னு சொல்லவில்லை. ஆனாலும் வீட்டிலேயே இருக்கும் பெண்களும் சுகவாசிகள் இல்லை.

புதுகைத் தென்றல் said...

ஆனா எங்கும்மாவை அடிக்கடி நினைசுப்பேன்.. அவங்களுக்கு ஏது லீவு? எங்க பாட்டி வீட்டுக்கு போனாலுமே அவங்க வேலை செய்வாங்க.//

இதுதான் பல பெண்களின் நிலை.

வருகைக்கு நன்றி நாஸியா

Jeeves said...

அப்படியா ?

எங்க அம்மா எல்லாம் செஞ்ச வேலைக்கு ஒருவருஷத்துக்கு 10 லட்சமாவது குடுத்திருக்கனுமே... யார் தருவா? குடும்பம் என்பது காசு வச்சு சுழலுதா?


அதெல்லாம் கிடக்கட்டும் நீங்க சொல்ற மாதிரி எல்லாம் கூட தங்கமணிங்க இருக்காங்களா இன்னமும் ?

Vidhoosh said...

நினைச்சு பாக்க இனிமையாத்தான் இருக்கு :)

ஹுஸைனம்மா said...

ம்ம்.. நம்ம ஒரு வீட்டுக்கு நிர்வாகப் பொறுப்பு செய்யும்போதுதான் நம்ம அம்மாவுக்கெல்லாம் இப்படி லீவு கிடைக்கலையேன்னு வருத்தமா இருக்கு. இதுக்காகத்தான் அப்பல்லாம் சின்னச் சின்ன விசேஷங்களைக் கூடப் பெரிசாக் கொண்டாடினாங்க போல!!

எங்க வீட்ல லீவுநாள்ல தலைகீழ்தான்: நான் லீவு நாளாவது சூடா, ஃப்ரெஷ்ஷா சாப்பிடுவோம்னு சொன்னா, அவர் லீவு நாள்லயாவது நல்ல சாப்பாடு சாப்பிடறோம், சமைக்காதேங்கிறார்! ;-))

Anonymous said...

//என்ன இருந்தாலும்
நீ போடும் காபி போல வராதுப்பான்னு”! ஐஸ் வெச்சே வேலை வாங்கும்
டெக்னிக் ரங்குகளுக்கு மட்டுமே சாத்தியம். //

எங்க வீட்டுக்கு வந்து கேட்டுட்டு எழுதின மாதிரி இருக்கு.

புதுகைத் தென்றல் said...

குடும்பம் என்பது காசு வச்சு சுழலுதா?//

வாங்க ஜீவ்ஸ்,

இல்லை என்பதாலேயே பெண்கள் கரைகிறார்கள்.

புதுகைத் தென்றல் said...

நினைச்சுபாத்து சந்தோஷபட்டுக்க வேண்டியதுதான் வித்யா,

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நான் லீவு நாளாவது சூடா, ஃப்ரெஷ்ஷா சாப்பிடுவோம்னு சொன்னா, அவர் லீவு நாள்லயாவது நல்ல சாப்பாடு சாப்பிடறோம், சமைக்காதேங்கிறார்!//

நீங்களே ஸ்மைலியும் போட்டுட்டீங்க ஹுசைனம்மா,

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

எங்க வீட்டுக்கு வந்து கேட்டுட்டு எழுதின மாதிரி இருக்கு.//

வீட்டுக்கு வீடு வாசப்படிதான். இங்க அயித்தான் அடிக்கடி ஊர் சுத்திகிட்டு(அதான்பா டூர்) இருப்பதால உள்ளை நுழையும்போதே உன் கையால மசால் டீ குடிச்சாதான் நல்லா இருக்கு. எந்த 5 ஸ்டார் ஹோட்டல்லையும் இந்த டேஸ்ட் வராதுன்னு ஐஸ் வெப்பாங்க. :)))

வித்யா said...

ஹூம்ம்ம்ம்..

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி வித்யா

thenammailakshmanan said...

// ஞாயிற்றுக்கிழமை தங்கமணி எழுந்திருக்குமுன்
காபி போட்டு கொடுத்துத்தான் பாருங்க ரங்கமணிகளே//

நன்றி தென்றல் இப்படி எல்லாம் சப்போர்ட் பண்ணுரதுக்கு வீட்டுல ரங்ஸ் மட்டுமில்ல கிட்ஸ்க்கும் இப்படி ஏதாவது எழுதுங்கப்பா

அமைதிச்சாரல் said...

//அப்படி முடியாம போனாத்தான் ரெஸ்ட் எடுக்கணும். இல்லாட்டி மாங்கு மாங்குன்னு வேலை நான்ஸ்டாப்பா செஞ்சுகிட்டே இருக்கணும்னு நீங்களே ஏத்திகொடுப்பீங்க போலிருக்கே!! நடுவுல ஒரு ப்ரேக் வேணாமா??/

சில தங்கமணிகளும் அப்படித்தான் இருக்கிறாங்கப்பா... ரங்க்ஸ் ரெஸ்ட் எடுத்துக்க சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இவர்களை என்ன செய்வது!!!

புதுகைத் தென்றல் said...

கிட்ஸ்க்கும் இப்படி ஏதாவது எழுதுங்கப்பா//

பேரண்ட்ஸ் கிளப்ல எழுதியிருக்கேனே.

வருகைக்கு நன்றி தேனம்மை

புதுகைத் தென்றல் said...

சில தங்கமணிகளும் அப்படித்தான் இருக்கிறாங்கப்பா... ரங்க்ஸ் ரெஸ்ட் எடுத்துக்க சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இவர்களை என்ன செய்வது!!!//

சில பேருக்கு இழுத்து போட்டுகிட்டு வேலை செஞ்சாதான் பிடிக்கும். மாத்த முடியாது.

அன்புடன் அருணா said...

:)) :((

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி அருணா

கண்ணகி said...

ஆமாங்க..ஆமாம். பெருமூச்சுதான் வருது....

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி கண்ணகி

கண்மணி/kanmani said...

தென்றல் இந்தப் பதிவு வேஸ்ட்டுதான்.ஏன் தெரியுமா?ச்சும்மா லுலூயிக்காச்சும் இது போல குரல் கொடுக்கும் தங்ஸ்கள் உண்மையில் இதை மனப்பூர்வமா ஆத்மார்த்தமாதான் செய்வாங்க.என் வீடு பிள்ளைகள் னு விழுந்து விழுந்து செய்வாங்க.

வேனும்னா கூட்டுக் குடும்பத்து மகராசிகள் சலிச்சிக்கிடலாம்.

ஒரு நாள் இந்த ரங்க்ஸ்களை சின்ன வேலை செய்ய விட்டாலும் நமக்கு டென்ஷன் தான்.ஒத்தைக்கு ரெட்டை வேலை. சோ.........என் வீடு என் ராஜ்ஜியம் னு இருப்பீங்களா? அதை விட்டுட்டு.....

புதுகைத் தென்றல் said...

இது போல குரல் கொடுக்கும் தங்ஸ்கள் உண்மையில் இதை மனப்பூர்வமா ஆத்மார்த்தமாதான் செய்வாங்க.என் வீடு பிள்ளைகள் னு விழுந்து விழுந்து செய்வாங்க//

வாங்க கண்மணி அப்படி இருப்பதுதான்
பெண்கள் இயல்பு.

அவங்க ஆத்மார்த்தமா செய்யறாங்கன்னு ஓய்வே இல்லாம இருப்பது பயங்கர மன அழுத்தத்தை தருது. இது என் கூற்று அல்ல, மருத்துவர்கள் சொன்னது.

புதுகைத் தென்றல் said...

ஒரு நாள் இந்த ரங்க்ஸ்களை சின்ன வேலை செய்ய விட்டாலும் நமக்கு டென்ஷன் தான்.ஒத்தைக்கு ரெட்டை வேலை. சோ.........என் வீடு என் ராஜ்ஜியம் னு இருப்பீங்களா? அதை விட்டுட்டு.....//

இப்படிச் சொல்லி சொல்லித்தான் கெட்டுப்போவது. உங்க கருத்து மாறுபட்டு இருக்கு என்பதால் என் பதிவே வேஸ்டாகி விடாது டீச்சர்.

நீங்க ஆயிரம் சொன்னாலும், பெண்களே ஆத்மார்த்தமா செஞ்சாலும் அவங்களும் ஒரு மனுஷின்னு ஆண்கள் நினைக்கணும்.

தன்னலமற்ற அந்த பெண்ணிற்கு ஓய்வு அவசியம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கண்மணி/kanmani said...

தென்றல் பதிவு வேஸ்ட்டுன்னு சொன்னது பதிவுக்காக சொன்னதில்லை.எத்தனை ரங்கமணிகள் இப்படி நினைத்துப் பார்த்து அனுசரணையாக இருப்பார்கள் என்பதைத்தான்.மனைவிக்கு
உடம்பு சுகமில்லைனாலும் மனைவியே எல்லாம் செய்யனும் என நினைக்கும் ஆண்கள் தான் 90%.மீதி பேர் வேனும்னா கொஞ்சம் ஒத்தாசையா இருப்பவர்களாக இருக்கலாம்.பெண்களும் அதை விட்டுக் கொடுப்பதில்லை

புதுகையின் பதிவு வேஸ்ட்டாகுமா.சிரிப்பான் போட்டிருக்கனும்.இதோ:))))))))))))))))))

புதுகைத் தென்றல் said...

வாங்க கண்மணி,

நீங்க சொன்னதை நான் மட்டுமல்ல மத்தவங்களும் தப்பா புரிஞ்சிகிட்டாங்க.
ரங்க்ஸ்கள் கூட்டத்துல ஒரே சிரிப்பு மழைதான். :( :)

எத்தனை ரங்கமணிகள் இப்படி நினைத்துப் பார்த்து அனுசரணையாக இருப்பார்கள் என்பதைத்தான்.மனைவிக்கு
உடம்பு சுகமில்லைனாலும் மனைவியே எல்லாம் செய்யனும் என நினைக்கும் ஆண்கள் தான் 90%.மீதி பேர் வேனும்னா கொஞ்சம் ஒத்தாசையா இருப்பவர்களாக இருக்கலாம்.

அதே அதே சபா பதே