ஆர்டிஸ்ட் மாயா அவர்களின் ஓவியத்தில் உருவாகும் அழகான
அழைப்பிதழ்கள் பற்றி முன்பே சொல்லியிருந்தேன். அவர் வரைந்த
உபநயன பத்திரிகை ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இருந்த
விடயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. அதைத் தொடர்ந்து மேலும்
பல விடயங்களை கற்றதை இங்கே பகிர்கிறேன்.
மத சம்பந்தமான பதிவோ, மத ஆதரவு பதிவோ அல்ல இது.
அப்படி ஏதும் விவகாரமாக புரிந்து கொண்டு பின்னூட்டத்தாக்குதல்கள்
நிகழ்த்த விரும்புபவர்கள் மேலே படிக்க வேண்டாம். அப்படிப்பட்ட
பின்னூட்டங்கள்பிரசுரிக்கப்பட மாட்டாது.
சத்திரியர்கள், பிராமணர்கள்,வைஸ்யர்கள்(நம்மூரில் ஆசாரிகள்)
இவர்களில் மட்டும்தான் பூணூல் அணியும் பழக்கம் இருக்கிறது.
இந்த பூணூல் ஏன் அணிய வேண்டும்? ஏன் கட்டாயம்?
அதற்கும் பதின்ம வயதுக்கும் என்ன சம்பந்தம்? கட்டாயம்
தெரிந்து கொள்வோம்.
பூணூல் அணியும் சடங்கு கல்யாணத்திற்கு இணையாக
விமர்சையாக செய்யும் பழக்கம் இருக்கிறது. ஆனால் பலரோ
திருமணத்திற்கு முதல் நாள் தான் பூணூல் பங்ஷன் செய்வார்கள்.
உண்மையில் பூணூல் சடங்கு செய்ய ஏற்ற வயது 7-11 தான்.
பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று சொல்வார்கள்.
உபநயனம்-அதாவது மூன்றாவது கண்ணை திறக்கும் நிகழ்ச்சி.
ஞானத்திற்கு மூன்றாவது கண் அவசியம். அந்தக் காலத்தில்
குருகுல பாடத்திட்டம் இருந்தது. பூணூல் அணிந்தபிறகே இங்கே
அனுமதி கிடைக்கும். (இப்போதும் வேத பாடசாலைகளில்
இம்முறை இருக்கிறது)
7 வயதில் ஏன் உபநயனம் செய்கிறார்கள் தெரியுமா?
உபநயனத்தை inviting youth என்று சொல்லலாம்.
சிறு குழந்தையிலிருந்து பதின்ம வயதிற்குள் அடி எடுத்து
வைக்கும் நிகழ்ச்சி எனலாம். (பெண்களின் பூப்பெய்துதலை கொண்டாடுவது
போல்) பதின்ம வயதில் ஏற்படும் மாறுதல்கள் உடல், மனம்
இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
பதின்ம வயதுக்குத் தன்னை தயார் செய்து கொள்ள உபநயனம்
பயனாகிறது. அது எப்படி?
உபநயனம் ஆன சிறுவன் தினமும் 3 வேளை சந்தியாவந்தனம்
எனும் பூஜையை செய்ய வேண்டும். காலை, நண்பகல், மாலை
வேளைகளில் இது கண்டிப்பாய் செய்யப்பட வேண்டும். செய்வதால்
என்ன பயன். அங்க தான் இருக்கு மேட்டர்.
இந்த சந்தியாவந்தனம் செய்யும் பொழுது ஆச்சமனியம் செய்வார்கள்.
அதாவது 3ஸ்பூன் தண்ணீரை எடுத்துக்கொள்வது. இது ரெய்கி பாஷையில்
சொன்னால் “cleanising" and helps in the flow of bio-electricity
within the body.
பிராணாயாமம்- யோகக்கலை தெரிந்தவர்கள் சொல்வார்கள் இது
மூச்சுப் பயிற்சி என்று. மூச்சுப்பயிற்சி செய்யக்கற்றவர்களின்
உடலில் இருக்கும் சக்கரங்கள் முறையாக வேலை செய்யும்.
முறையாக பிராணாயாமம் கற்று அதை தினமும் பயிற்சி
செய்வதால் மன அழுத்தம், கோபம் போன்ற உணர்ச்சிகளை
கட்டுக்குள் கொண்டு வர முடியும். சுவாசம் சரியாக இருந்தாலே
எல்லாம் சரியாக வேலை செய்யும்.
அடுத்ததாக காயத்ரி ஜபம்:
அறிவை போதிக்கும் தந்தை தானே குருவாகி தனயனுக்கு
காயத்ரி மந்திரத்தை போதிக்கிறார்.
அன்னை காயத்ரிக்கு மிஞ்சிய சக்தியே கிடையாது. எந்த ஒரு
தெய்வத்திற்கு அதனதன் காயத்ரி மந்திரத்தை சொல்லி பூஜிப்பதால்
பலன் பன்மடங்கு அதிகமாகும்.(காயத்ரி பற்றி விரிவான பதிவும்
வரும்) சந்தியாவந்தனத்தில் மிக முக்கியமாக காயத்ரி ஜபம்
செய்வது தான். எத்தனை முறை காயத்ரியை ஜபிக்கிறார்களோ,
அவ்வளக்களவு சக்தி கிடைக்கும்.
இது ஒரு வகை தியானம். தியானம் செய்தால் மனம் அமைதி
அடையும். தியானம் செய்வதால் மனத்தை ஒருங்கிணைக்க
முடியும். concentration அதிகமாகும். இதனால் நல்ல பலன்
கிடைக்கும்.
மனத்தை ஒருங்கிணைக்க கற்றவனுக்கு பதின்ம வயதை கடப்பது
கஷ்டமாக இருக்காது. சுகமான படகுப்பயணம் போல் அமைந்துவிடும்.
கோபத்தை ஆளக்கற்க முடியும்.
பதின்மவயதில் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு
முக்கியம் மன ஆரோக்கியம்.
முஸ்லீம் சகோதர்களில் கூட 5 வேளை தொழுகை கட்டாயம்.
மதங்கள் மனிதத்தைத்தான் போதிக்கின்றன. இந்து மதத்தில்
பத்மாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது உசிதம் என்றால்
இஸ்லாமில் வஜ்ராசனம்.
வஜ்ராசனம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கருப்பை பிரச்சனைகளுக்கு
அருமருந்து. வஜ்ராசனத்தில் 10 நிமிடம் உட்கார்ந்தால் 4 கிமீ தொலைவு
நடந்ததற்கு சமம். வஜ்ராசனம் ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
சந்தியாவந்தனத்தில் மேற்கொள்ளப்படும் சடங்குகள் பலவற்றிற்கும்
பல அர்த்தம் இருக்கிறது. உதாரணமாக: ஷ்ரயம் ஆவாஹயாமி, பலம் ஆவாஹயாமி,
சரஸ்வதிம் ஆவாஹயாமி என சொல்லி புகழ், பலம், கல்வி ஆகிய்வற்றை
தனக்குள் இருத்துதல் என பல இருக்கிறது. அது முழுதும் எனக்குத்
தெரியாது. அந்த அழைப்பிதழ் தந்த விடயங்களில் ஆச்சரியமாகி
கேட்டு,இண்டர்நெட்டில் கண்டு என நான் தெரிந்து கொண்டவற்றில் மிக
முக்கியமானதை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன்.
பிராம்மணர்கள் பூணூல் போட்டு சந்தியாவந்தனம் செய்யலாம்.
மற்றவர்கள் என்ன செய்வது? ஏங்க அலோபதி,ஹோமியோபதி,ஆயுர்வேதம்,
நேச்சுரோபதி, ரெய்கி, பிரானிக் ஹீலிங்னு வியாதிகளுக்கு விதம் விதமா
வைத்தியம் இருக்கு.
மற்றவர்கள் என்ன செய்யலாம் என்பதுதானே அடுத்த பதிவு.
கண்டிப்பாய் திங்கள்கிழமை வரும்.
24 comments:
நல்ல பகிர்வு தென்றல். :)
நன்றி வித்யா
அருமையான தகவல்கள்!
நன்றி அநன்யா
நல்ல பகிர்வு தென்றல் வித்யாசமாய்
அருமையான பதிவு... தென்றல் அக்கா.. :)
முறையாக பிராணயமம் செய்தால், இடா, பிங்களா என்று கூறும் இட மற்றும் வலப்புறம் சீராகிறது...
ஒவ்வொரு உடலிலும் இடப்புற நாசி சந்திரனையும், வலப்புற நாசி சூரியனையும் குறிக்கும்...
இது இரண்டும் சீராக இருந்தால் நமது உடலின் அனைத்து ஓட்டங்களும் சீராக இருக்கும்.
நீங்க தலை வலி, டென்ஷன் வரும்போது, வலப்புற நாசி மூலம் அதிகமாக ஸ்வாசிபீர்கள். எனவே அதை அடைத்து சிறிது நேரம் இடப்புற நாசி அதாவது சந்திர
நாசியில் மட்டும் சுவாசித்தல் நமது டென்ஷன் குறையும் தலைவலி குறையும்... இது நானே முயற்சி செய்துள்ளேன்...
அதைவிட நமது http://vediceye.blogspot.com வலைப்பதிவில் சுவாமி ஓம்கார் காசி பற்றி பதிவு போடுகிறார்.
அதில் ஒரு பதிவில், தண்ணீரின் முன்னின்று நாம் நல்ல விஷயங்களை சொன்னாலோ நினைத்தாலோ தண்ணீரில் உள்ள
அணுக்களின் orientation நல்ல விதமாகவும், கேட்ட எண்ணங்களை கொண்டால் அணுக்களின் orientation முற்றிலும் சிதைந்து விடுவதாயும்
ஆராய்ச்சியில் நிரூபித்து இருப்பதாக சொல்கிறார்... அதன்படி பார்த்தால்...
ஆசமனம் செய்கையில் ஒவ்வொரு மந்திரத்தை சொல்லி நாம் தண்ணீர் உட்கொள்ளும்போதும் நமது உடலுக்கும் மனதிற்கும் வலு தருவதாக
தண்ணீரின் அணுக்கள் அமைகிறது. அதனால்தானோ என்னவோ தண்ணீரை முன் வைத்து நாம் சந்தியாவந்தனம் செய்கிறோம். இது எனது எண்ணம்...
தவறாக கூட இருக்கலாம்.
யப்பா ஓவர் மொக்க போட்டாச்சு...
அருமையாக இருக்கு தென்றல் அடுத்த பதிவினை படிக்க ஆவலாக இருக்கு
வாங்க தேனம்மை,
இதுதான் நிஜம் இது தெரியாமலேயே பலர் இருக்கிறார்க்ள்.
வாங்க ஜிகிர்தண்டா,
விரிவான விளக்கம். நல்ல கருத்தைச் சொல்லியிருக்கீங்க. நான் யோகா, பிராணாயமம், தியானம் தினமும் செய்பவள்.
வருகைக்கு நன்றி
வாங்க ஃபாயிஷா,
திங்கள்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.
வருகைக்கு நன்றி சிநேகிதின்னு புது பேரு சொல்ல வித்யாசமா இருக்கு. ஃபாயிஷான்னு அன்பா கூப்பிடற மாதிரி வரலை. அப்படியே கூப்பிட்டுக்கவா?
நல்ல பகிர்வு தென்றல். :)
கூடுதல் தகவல்கள் தெரிந்துகொண்டேன். ஓ, அப்ப உபநயனம் செஞ்சா, அதுக்கப்புறம் பொறுப்பா சில விஷயங்கள் செய்யணுமா? நான் சும்மா ஒரு ஃபங்ஷன்னு நினைச்சுகிட்டிருந்தேன்.
/மதங்கள் மனிதத்தைத்தான் போதிக்கின்றன. இந்து மதத்தில்
பத்மாசனத்தில் ... இஸ்லாமில் வஜ்ராசனம்.//
ஆமா!!
very informative.
நன்றி அருணா
அப்ப உபநயனம் செஞ்சா, அதுக்கப்புறம் பொறுப்பா சில விஷயங்கள் செய்யணுமா? நான் சும்மா ஒரு ஃபங்ஷன்னு நினைச்சுகிட்டிருந்தேன்.//
பிரம்மச்சரியத்தை ஒழுங்கா கடைபிடிச்சு 3 வேளை சந்தியாவந்தனம் செய்து கல்வி கற்று தேரணும்.
அப்பத்தான் அடுத்த ஸ்டேஷான கல்யாணம். வருகைக்கு நன்றி ஹுசைனம்மா
thanks vidya
தென்றல் என் பதிவில் தான் பெயர் மாற்றம் செய்தேன்.. ஆனால் எல்லோரும் என்னை பாயிஷானு தான் சொல்கிறார்கள்.. அப்படியே கூப்பிடுங்கள் பிரச்சனையில்லை.
//மத சம்பந்தமான பதிவோ, மத ஆதரவு பதிவோ அல்ல இது.
அப்படி ஏதும் விவகாரமாக புரிந்து கொண்டு பின்னூட்டத்தாக்குதல்கள்
நிகழ்த்த விரும்புபவர்கள் மேலே படிக்க வேண்டாம். அப்படிப்பட்ட
பின்னூட்டங்கள்பிரசுரிக்கப்பட மாட்டாது.//
நீங்கள் என் பின்னூட்டத்தை அனுமதிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அஃது உங்கள் உரிமை.
எனினும் சொல்வது ஏனென்றால், என் கருத்துக்கள் என மனசாட்சியின் குரலே. வெளிப்படுத்தித்தான் தீரவேண்டும். அதற்காகவே வலைபதிவுகளைப்படித்துப் பின்னூட்டங்கலிட்டு வருகிறேன்.
நிற்க.
இது மதசம்பந்தமான அல்லது மத ஆதரவு பதிவல்ல என்பது ஒரு பொய்யாகும்.
இது மதச்சடங்கு ஒன்றைப்பற்றி எழுதுவதால் இது மத சம்பந்தமானதாகும்.
‘பின்னூட்டங்களை அனுமதிக்க மாட்டேன்’ என்று எழுதி, தமிழ்மணம் போன்ற திரட்டியில் பொதுப்பார்வைக்கு வைக்கிறீர்கள்.
மற்றவர்கள் படிக்க்லாம. ஆனால் தங்கள் கருத்துக்களைச்சொல்லாமல் போய்விட வேண்டும்!
இதற்கு ஒரு உபாயம் நீங்கள் செய்யலாம்.
அதாவது,
‘பிராமணாளுக்கு மட்டும்’ என்று போட்டிருந்தால், மற்றவர்கள் எட்டிக்கூடப் பார்க்கமாட்டார்கள், சரிதானே!
அக்காலத்தில், ‘பிராமணாள் கபே’ என்று உணவுச்சாலைகள் உண்டு.
அதைக்கண்டவுடன் மற்றவர்கள் நுழைய மாட்டார்கள்.
நான் பூணுலைப்பற்றி எழுதிய பதிவை இங்கு பார்க்கவும்:
யாரும் படிக்கலாம். பின்னூட்டமிடலாம்.
www.myownquiver.blogspot.com
வாங்க sword fish,
இந்த பதிவு மட்டுமல்ல நான் எழுதும் எந்தப் பதிவும் பிராம்மணர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு என கிடையாது.
பர்சானலிட்டி டெவலப்மெண்ட் தொடர் பதிவில் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.
பின்னூட்டம் இடக்கூடாது என சொல்லவில்லை. காட்டமான, மட்டமான, தாக்குதல்கள் நிறைந்த பின்னூட்டங்களை பிரசூரிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறேன்.
எந்த சமூகத்தையும் உயர்த்த இந்தப் பதிவு எழுதப் படவில்லை. இப்படி ஒரு காரணத்திற்காக போடப்படுகிறது என்று சொல்ல முனைந்திருக்கிறேன்.
இதுவும் என் மனசாட்சியின் குரல். இது அனைவருக்கும் புரிய வேண்டும் என்பது அவசியமில்லை.
பதிவை புரிந்து கொள்ளாமல் உங்களைப்போல் பின்னூட்டமிடுபவர்கள் இருக்கிறார்கள். என்ன செய்ய??
நல்ல பதிவு அருமையான கருத்துக்கள். உங்களைக் கேக்காமல் படத்தை சுட்டு விட்டேன் மன்னிக்கவும். எனது பதிவுக்கு தேவைப் படுகின்றது. நன்றி தென்றல்.
வாங்க பித்தனின் வாக்கு,
நானே நெட்டுல சுட்ட படம் தான். இதுக்கு எதுக்கு பர்மிஷன் கேட்டுகிட்டு.
வருகைக்கு நன்றி
//இந்த பதிவு மட்டுமல்ல நான் எழுதும் எந்தப் பதிவும் பிராம்மணர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு என கிடையாது.
பர்சானலிட்டி டெவலப்மெண்ட் தொடர் பதிவில் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.
பின்னூட்டம் இடக்கூடாது என சொல்லவில்லை. காட்டமான, மட்டமான, தாக்குதல்கள் நிறைந்த பின்னூட்டங்களை பிரசூரிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறேன்.
எந்த சமூகத்தையும் உயர்த்த இந்தப் பதிவு எழுதப் படவில்லை. இப்படி ஒரு காரணத்திற்காக போடப்படுகிறது என்று சொல்ல முனைந்திருக்கிறேன்.
இதுவும் என் மனசாட்சியின் குரல். இது அனைவருக்கும் புரிய வேண்டும் என்பது அவசியமில்லை.
பதிவை புரிந்து கொள்ளாமல் உங்களைப்போல் பின்னூட்டமிடுபவர்கள் இருக்கிறார்கள். என்ன செய்ய??
//
Dear Ma'm!
We are talking only about this post. Lets not look before and after.
You put up a warning first 'I wont allow indecent comments'.
What made you fear that such comments will come in? There lies the core. Has your conscience pricked you, so you put up the warning?
Leaving the personal element aside, the big question that faces us is - Why such an issue invariably draws some comments which make the writer fear or recoil in disgust? If you will, you can go deeper into the question. To examine such questions need, IMHO, some social conscience. To run away from it evidences lack of conscience.
It is not your intention to glorify brahmins. It is not your intention to disparage other non-brahmin Hindus.
But our intentions dont decide the side effects of such a sensitive social issue. Side effects there are and will be, or collateral damage, for which you hve to share the blame, who else madam?
The usurpation or manipulation of a ceremony from Hindu religion for a single community, to make them feel 'holier than others' or 'different and exclusive' - is one of the adverse reasons for bringing the fair name of your religion into sharp criticism and giving heart-buring to so millions, during the past millennia.
Whatever good reasons there may be for such a ceremony, all of them are seen and judged in the context of today only, not that of 2 or 3 millennia when it was designed.
I dont mind if you dont allow my sharp comments again - no matter. They are meant for persons like you. Whether you read them and tear them, or make them as food for thought and introspection, all is your delight.
Read my post on poonul and you will understand the feelings behind the dastardly act of manipulation of Hindu religion for the advantage of a single community in the religion.
You live in a world of castes. Thank God, the number of persons like you is dwindling and soon will be extinct leaving the world a new place of no castes and perfect equality!
My conscience is clear. What about yours?
Yours sincerely
Sword Fish
Revered Sward fish,
thanks for your comments.
i did't wanted get into ugly arguments. hence only i gave a warning and not because of "FEAR" as told by u.
your are expressing your views. i am not ready to reply as a think its not necessary.
regarding your blog: i saw 2 posts in that you have found fault of other peoples view or other words v can say that u have shown u r views.
peoples view differs. I can't force u to understand my view nor u can't force me the same.
just leave it.
dear jayasree,
i am very sorry to say that i have wrongly rejected your comments.
very sorry about that
Post a Comment