Monday, February 15, 2010

வீக் எண்ட் ரவுண்ட் அப் ரிப்போர்ட்

ரொம்ப ஊர் சுத்தி சுத்தி அலுத்துப்போன மனுஷன் ஆபீஸுக்கு
லீவு கொடுத்துட்டு 21/2 நாள் வூட்டுல இருந்தது மகா அதிசயம்.
அந்த அதிசயத்துலயும் அதிசயம் ஞாயிற்றுக்கிழமை ரவுண்ட் அப்
போனது. :))

பொதுவா சனிக்கிழமை சாயந்திரமே வெளியே சுத்திட்டு அடுத்த
நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துக்க்குவோம்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7.30க்கு தம்பி போன் செஞ்சு
ஹேப்பி வேலண்டைன்ஸ்டேன்னு சொல்லியிருக்கான். போன்
எடுத்தது அயித்தான் தான். நல்லவேளை என் தூக்கம் கெடலை. :))

பசங்க வேலண்டைன்ஸ்டே கார்ட் செஞ்சு கொடுத்தாங்க.
வாழ்த்து சொன்னாங்க. அப்பாக்கு என்ன கிஃப்ட் கொடுத்தீங்க,
உங்களுக்கு என்ன கிப்ட் கிடைச்சது போன்ற பேட்டிகளுக்கப்புறம்
இருவருக்கும் கிப்ட்(சின்ன நோட்டிஸ் போர்ட், தன் பணிகளை
ஞாபகமா எழுதி வெச்சுக்க) கொடுத்தோம்.

பொறுமையா எந்திரிச்சு நோ ப்ரெக்பாஸ்ட் என்பதால் டீ, பிஸ்கட்தான்.

மட்டும் சாப்பிட்டு நல்லா தூங்கி எந்திரிச்சு ஃப்ரெஷ்ஷா குளிச்சு
ஸ்கந்தகிரி போய் முருகனுக்கு ஹலோ சொல்லிட்டு அயித்தான்
கூட்டிகிட்டு போனது பேகம்பெட்டில் இருக்கும் பேந்தலூன்ஸ்.

50% தள்ளுபடியாம். தள்ளுபடின்னா என்ன வேலைன்னு நமக்குத்
தெரியும். பசங்களுக்கு எப்படியும் யுகாதிக்கு ட்ரெஸ் எடுக்கணும்
அதுக்காக போனோம். அம்ருதாக்கு எடுத்தக்கப்புறம்
ஆஷிஷுக்கும் அயித்தானுக்கும் by 1 get 1 freeயில பேண்ட்
வாங்கிகிட்டாங்க. எனக்கும் ஒரு டாப்ஸ் வாங்கினாரு.
காற்று வாங்கப்போயி கவிதை வாங்கி வந்தா மாதிரி :))

sales சமயம் என்பதாலும் கடைசி நாள் என்பதாலும் கொஞ்சமே
கொஞ்சம் கூட்டம். பில் போட மட்டும் 45 நிமிடம் நின்றோம்.
பில் போட்டு துணிகளை மடித்து பையில் போடும் பையன்
கண்டிப்பாக துணியை மாற்றி வைத்துவிடுவார் என்று நம்பிக்கை
எல்லோருக்கும் ஏற்பட்டது.

ஆஷிஷும் அம்ருதாவும் அடித்த கமெண்ட்,”இதுவே நம்ம
HOUSE OF FASHIONஆ இருந்தா 10 நிமிஷத்துல பில்லிங்
முடிஞ்சிருக்கும்.என்ன ஒரு பாஸ்டா செய்வாங்க” இவங்களை
அங்கே ட்ரையிங்கிற்கு அனுப்பலாம்னு அயித்தானும் ஆலோசனை
சொன்னாங்க.



அங்கேயிருந்து சாப்பிட வெளியே அழைத்துப்போவதா சொல்லியிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே ரொம்ப கூட்டம் இருக்கும்.
அதுவும் காதலர் தினத்தன்னைக்கு கேக்கணுமா!! பசங்க
பிக்பஜார் மேலே இருக்கும் சாட் பாயிண்ட், செண்ட்ரலில்
இருக்கும் ஓரிஸ் ஹேவ்மோர்னு சொல்ல சொல்ல எனக்கு
பயமா இருந்துச்சு.

பேந்தலூனிலிருந்து காரை வெளியே எடுக்கும்போது எதிரில்
Onions Multi Cusine Restaurant பேரு வித்யாசமா இருக்க
ட்ரை செஞ்சு பாக்கலாமேன்னு போனோம். தூரத்தை மிச்சப்
படுத்தவும் கூட்டமான இடத்தை தவிர்க்கலாமேன்னும் திட்டம். :))





எதிர் பாராத விதமா ரெஸ்டாரண்ட் அமைப்பு நல்லா இருந்துச்சு.
மெனுகார்டை பாத்து ஆச்சரியம் தான். விலைகள் நம்ம பட்ஜட்டுக்குள்
வரும். சூப் வகைகள் :50 ரூபாய்தான். நார்த் இண்டியன் கறிவகைகள்
80 லிருந்து 120க்குள் முடிஞ்சிடுது. ரொட்டி 19 ரூபாய்தான். ஆலுபராத்தா-35,
பனீர் பராத்தா-45,இப்படி இருக்கிறது.

எனக்கும் அவருக்கு ஹார்ட் அண்ட் சவர் சூப்பும் பிள்ளைகளுக்கு
டொமாட்டோ சூப்பும் ஆர்டர் செய்தோம். ருசி மிக நல்லாயிருந்தது.

மஞ்சூரியன், பராத்தக்களும் அருமை. தால்மக்கனி மட்டும்
வித்யாசமா இருந்தது. சுவை, தரம், எல்லாம் நல்லாவே இருக்கு.
ட்ரை செஞ்சு பாக்கலாம். அதிகம் கூட்டமில்லாமல் இருக்கு.
டைனிங் டேபிளில் இருக்கும் டேபிள் மேட் கூட வெங்காயம்
படம் போட்டிருக்கும். ஏஸி ஹால், தரமான சேவைன்னு
ONION RESTAURANT அட போட வைக்குது.

ஹோம் டெலிவரியும் உண்டு.

ONION RESTAURANT
ADJACENT TO PANTALOONS, BEGAMPET,
HYDERABAD

6 comments:

Vidhya Chandrasekaran said...

கலக்குங்கோ:)

நட்புடன் ஜமால் said...

காற்றைவிட கவிதை தான் அழகுன்னு சொல்றீக

(ஏதோ நம்மால ...)

வல்லிசிம்ஹன் said...

நல்ல ரவுண்ட் அப் தான். எங்க ஊரு டிவில ,ஹைதைல பந்துனு சொன்னாங்க.
சரியாப் போச்சுனு நினைச்சேன்.
நல்ல வேளை வீகெண்ட் நல்ல படியாகப் போனது சந்தோஷம்.
உங்களுக்கும் எங்கள் அன்புதின வாழ்த்துகள் மா.

pudugaithendral said...

பந்த் நடக்கவிடாம அரசாங்கம் முறியடிச்சிடுச்சி வல்லிம்மா.

பந்த்னா என்ன சும்மா கடை அடைப்புத்தான். யுனிவர்சிட்டியில மட்டும் அடிதடி. இப்பல்லாம் போலிஸ் யுனிவர்சிட்டி வாசலிலேயே காத்திருந்து போட்டுத் தாக்குது.

போரடிச்சு போச்சு. கவலைப்படாதீங்க. ஸ்கந்தகிரி கந்தன் இருக்க கவலையேன்.

வருகைக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

Ananya Mahadevan said...

மன்ச்சி ரவுண்டப்பு, டெம்ப்ளேட் மாத்தினீங்களா? bg colour, font color ரெண்டுமே டார்க்கா இருக்கு, செலக்டால் பண்ணித்தான் படிக்க முடிஞ்சது. கொஞ்சம் பாருங்களேன். இல்லே, என் கம்பியூட்டர்ல ஏதாவது பிரச்சினையோ?

pudugaithendral said...

நன்றி வித்யா

நன்றி ஜமால்

அநன்யா எதுவும் மாறலை. நல்லாத்தான் இருக்கு. உங்க கம்ப்யூட்டரை செக் பண்ணி பாருங்க