Sunday, February 07, 2010

SAVE OUR TIGERS

சமீபகாலமாக எங்கெங்கும் இந்தக் குரல் ஒலிக்கிறது.
கேட்கும்பொழுது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
வேட்டையாடுவதில் சிறந்த புலி இனத்துக்கே இப்படி ஒரு
நிலையா??
சென்ற நூற்றாண்டின் இறுதியில் 40,000 புலிகள் இருந்த நம்
தாய்த்திருநாட்டில் இப்போது இந்த எண்ணிக்கை எவ்வளவுத்
தெரியுமா?? வெறும் 1411 தான் :((

புலி கம்பீரத்திற்கும் சக்திக்கும் சிறந்த அடையாளம்.

நம் தேசிய விலங்கிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவல நிலையை
போக்க நாம் ஏதானும் செய்ய வேண்டும்.


என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. டீவியில் ஏர்செல்லின்
இந்த விளம்பரத்தை பார்த்த நொடியிலிருந்து அம்ருதாவின் நச்சரிப்பு
தாங்கமுடியவில்லை. அம்மா ப்ளாக்கில் இதைப் பற்றி எழுது என்று
சொல்லிக்கொண்டே இருந்தாள்.

என்னுடைய குரலாக புலிகளைக் காக்க என் வலைப்பூவில் இதைப்
பற்றி எழுதியிருக்கிறேன். நீங்களும் எழுதி ஒரு எழுர்ச்சியை உண்டாக்குங்கள்.


NDTV CHANNEL இந்த தளத்தை பாருங்கள். உங்கள் வாக்கையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நம்மால் ஆனதைச் செய்வோம். நம் தேசிய விலங்கைக் காப்பாற்றுவோம்.

25 comments:

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

ஒட்டு போட்டாச்சு.

நட்புடன் ஜமால் said...

நல்ல இடுக்கை.

மொத்தத்தில் ஒரு உயிரினத்தை காப்போம்.

அதற்காக எமது குரலும்...

தக்குடுபாண்டி said...

correctuthaan madam!

cheena (சீனா) said...

நல்ல செயலுக்கு ஒரு இடுகை - நன்று நன்று -நல்வாழ்த்துகள் தென்றல்

ஸாதிகா said...

இடுகை அருமை!

கண்மணி said...

அதுக்காக வீட்டுக்கொரு புலியா வளர்க்க முடியும் :))))

அரசாங்கம்தான் ஏதாச்சும் செய்யனும்.

அமைதிச்சாரல் said...

பகிர்விற்கு நன்றி தென்றல்,

இப்படி உலகத்துல ஒவ்வொரு இனமா அழிஞ்சுகிட்டு போனா, என்ன மிச்சம் இருக்கப்போவுதுன்னு தெரியலை :-(.

ஓட்டுப்போட்டாச்சுப்பா.

புதுகைத் தென்றல் said...

நன்றி சூர்யா,

நன்றி ஜமால்

நன்றி தக்குடுபாண்டி

நன்றி சீனா சார்

புதுகைத் தென்றல் said...

நன்றி ஸாதிகா,

வாங்க கண்மணி,
1411 தானே இருக்கு வீட்டுக்கு ஒண்ணு இல்லாட்டி ஊருக்கு ஒண்ணு கொடுத்திட்டா காப்பாத்திடலாமே அம்மான்னு ஆஷிஷ் சொன்னான். விட்டா அரசாங்கத்துக்கு அப்ளிகேஷன் போட்டு புலியை வீட்டுல நிப்பாட்டிடுவான் போல இருக்கு.

அரசாங்க ஏதாச்சும் செய்யணும்னா நாம எல்லாரும் சேர்ந்து அவங்க காதுல விழற மாதிரி கத்தணும். ஐ மீ வாய்ஸ் கொடுக்கணும். நன்றி

புதுகைத் தென்றல் said...

அதான் கவலை அமைதிச்சாரல்,

நன்றி

ஹுஸைனம்மா said...

//என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை.//

கொஞ்ச நாள் புலிக்கறி சாப்பிடறதை நிறுத்தலாம்னு இருக்கேன், நீங்க சொன்னதுனால!! ;-)

/விட்டா அரசாங்கத்துக்கு அப்ளிகேஷன் போட்டு புலியை வீட்டுல நிப்பாட்டிடுவான் போல இருக்கு. //

உங்களால முடியலன்னா நாங்க பாத்துக்கறோம்னு சொல்றார் போல!!

புதுகைத் தென்றல் said...

வாங்க வீரமங்கையே வாங்க.

உங்களால முடியலன்னா நாங்க பாத்துக்கறோம்னு சொல்றார் போல!!//

ஆமாம். அப்படித்தானே நடக்குது

Sangkavi said...

நல்ல இடுக்கை.

கண்மணி said...

தென்றல் வியூ பேஜ் சோர்ஸில் site: என்று போட்டு hilight all குடுங்க.
நீங்க பார்த்த19 இலக்கம் கமெண்ட் பாக்ஸ் நெம்பர்,[7315921531438321935,இது இல்லை]

கீழே உள்ளது தான் 20 இலக்க பிரண்ட் கனெக்ட் நெம்பர்

14202301004300095131


போட்டுப் பாருங்க

ஷாகுல் said...

MGR வீட்ல சிங்கம் வளர்த்தாராம் நீங்க புலி வளர்க்கலாம்.

ராமலக்ஷ்மி said...

காணொளியும் இடுகையும் நல்ல பகிர்வு.

புதுகைத் தென்றல் said...

நன்றி சங்க்வி

அதையும் போட்டுப்பார்த்துட்டேன். வர்ல :(( கண்மணி

ஏன் இந்த மர்டர் வெறி ஷாகுல்

நன்றி ராமலக்‌ஷ்மி

புதுகைத் தென்றல் said...

http://www.saveourtigers.com/JoinTheRoar.php#

u can roar hear also

முத்துலெட்சுமி/muthuletchumi said...

செய்கிறேன் தென்றல் ,

இப்பல்லாம் உங்களுக்கு குட்டீஸ் வேற பதிவு போடச்சொல்லி ஆர்டர் போடறாங்களா.. :)

அமைதிச்சாரல் said...

//புலியை வீட்டுல நிப்பாட்டிடுவான் போல இருக்கு.//

எதுக்கும் புலி பசிச்சா, புல்லைத்தின்னுமான்னு விசாரிச்சு வெச்சிக்கங்க :-)).

எந்த புண்ணாக்கு திங்குமின்னும், கேட்டு வெச்சிக்கங்க.

புதுகைத் தென்றல் said...

இப்பல்லாம் உங்களுக்கு குட்டீஸ் வேற பதிவு போடச்சொல்லி ஆர்டர் போடறாங்களா//

ஆமாம் கயல். u have to write it will reach to so many people nu பக்கத்துலேயே உக்கார்ந்து நான் டைப் செய்ய செய்ய படிச்சு கிட்டு உக்காந்திருந்தான்னா பாத்துக்கோங்க.

புதுகைத் தென்றல் said...

எதுக்கும் புலி பசிச்சா, புல்லைத்தின்னுமான்னு விசாரிச்சு வெச்சிக்கங்க :-)).

எந்த புண்ணாக்கு திங்குமின்னும், கேட்டு வெச்சிக்கங்க.//

நம்ம வீட்டுக்கு புலி வந்தா அப்படின்னு அடுத்த ரவுண்ட் பதிவு போட ஆரம்பிக்கலாம் போல இருக்கே!!

VIKNESHWARAN said...

புலி பூனை வகையைச் சேர்ந்ததென அறிவோம். இவ்வினத்தில் சில அழிந்து போய் இருப்பதாகவும் தகவல் உண்டு.

குசும்பன் said...

//நம் தேசிய விலங்கிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவல நிலையை
போக்க நாம் ஏதானும் செய்ய வேண்டும்.
//

வீட்டுக்கு ஒரு புலி குட்டி வளர்த்துடலாம்:)

கானா பிரபா said...

புலியைக் காக்க வேண்டியது நம் கடமை